Wednesday, August 15, 2007

குர்சார் இன மக்கள் மீது மே மற்றும் சூன் மாதங்களில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூடு-1

குர்சார் இன மக்கள் மீது மே மற்றும் சூன் மாதங்களில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூடு---சிவில் உரிமைக் கழகங்கள் நடத்திய ஆய்வு.


மக்கள் சிவில் உரிமைக்கழகம், இராசசுத்தான், தில்லி மக்கள் சனநாயக உரிமைகள் கழகம், பஞ்சாப் சனநாயக உரிமைகளுக்கான சங்கங்கள் மற்றும் தேசிய சட்ட பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து, ஒரு வார காலமாக, இராசசுத்தான் மாநிலத்தைக் குலுக்கிய சாதிக்கலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காவல் துறையினர் 5 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரத்தில் 2 காவல் துறையினர் உட்பட 25 பேர் இறந்தனர்.

உண்மை அறியும் குழுவினர், கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட படொலி, பீப்பல் கேரா, பந்தி, கட்டா லால்சோட், பமன்வாச், போன்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் பேசினர். லால்சோட் காவல் நிலையங்கள், காவல் துறை கண்காணிப்பாளர், ஆட்சியர், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், சாதி அமைப்புகள் ஆகியோரையும் சந்தித்தனர்.

வன்முறை நிகழ்ந்த இடங்களையும், துப்பாக்கிசூடு நடந்த பகுதிகளையும் சூறையாடப்பட்ட பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள், ஆகியவற்றையும் பார்வையிட்டனர். குறிப்பாக குர்சார் மற்றும் மீனா வகுப்பினர் இடையே மோதல் நடந்த பமன்வாச் பகுதியையும் பார்வையிட்டனர்.

உண்மை அறியும் குழுவினர் தமது ஆய்வின் முடிவில் கீழ்க்காணும் முக்கிய முடிவுகளை வெளியிட்டனர்.

1.காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூடு அவசியமற்றது, அதிகப் படியானது, மனிதத் தன்மையற்றது.

28 மே இரவில் காவல்துறையினர் படோலி-பீப்பல் கேரா கிராமத்தில் இரவு வேளையில் புகுந்து குழந்தைகள், மகளிர், மற்றும் ஆடவர்களை அடித்து துன்புறுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வீட்டிற்குள் நுழைந்து பெண்களை இழுத்து, அடித்து இழிவாகப்பேசி, மானபங்கம் செய்தனர்

2 comments:

மாசிலா said...

இராஜஸ்தான் காவல் துறையினருக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஒரு பொதுத்துறை இப்படிப்பட்ட இழிவான செயல்களில் ஈடுபட்டதை இந்திய அரசாங்கம் அதன் பொறுப்பாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கவேண்டும்.

விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி முத்துக்கண்ணன்.

முத்துக்கண்ணு said...

நன்றி. அடுத்த பகுதியும், பதிவில் வரும்.

அன்புள்ள
முத்து