Thursday, August 30, 2007

"இசுலாமியன்"

"பாக்கி சட்டைகள்"
பதம் பார்த்து பஞ்சாக்க,
காக்கிச்சட்டையும்
களம் இறங்கியது
இரக்கமும் ஏங்கிட,

பகல் பொழுதில்,
பகல்பூரில்
விரட்டி விரட்டி,
புரட்டி புரட்டி,
போவோர், வருவோர்,
கடை வீதியில்.

வாகனத்தில் அமர்ந்து,
உருட்டியது தெருவெங்கும்,
"காவல் நாய்",
ஆவலுடன்,
"சனாதன சரக்குடன்",
"மிடுக்குடன்",

உடல் தேய்ந்து,
உருக்குலைந்து,
உயிருக்கு போராடும்,
"திருடன்"
-இந்தியன் அல்ல?

3 comments:

╬அதி. அழகு╬ said...

பகல்பூரின் பெயர் வரலாற்றில் நிலைத்து விட்டது - இரண்டாவது முறையாக!

படம் போட்டிருந்தால் கவிதையின் கனம் கூடியிருக்கும்.

நன்றி!

பிறைநதிபுரத்தான் said...

மனிதநேயம் கொண்ட தங்களின் கவிதைக்கு மனமார்ந்த பாராட்டு!

முத்துக்கண்ணு said...

தங்களின் கருத்துரைக்கு நன்றி. ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறை அவலம், மனித உரிமை மீறல் தடையில்லாமல், சிறுபான்மையினர் மீது, திட்டமிட்டு மனத்தளவில் தொடங்கி, களத்தளவில் நிகழ்த்தப்படுகிறது,
கறாராக.

முத்துக்கண்ணு