Sunday, December 28, 2008

ஆட்டுக் குட்டி

( கப்பிரியேலா மிச்டரல்- மொழி பெயர்ப்பு)

மென்மையான என் ஆட்டுக்குட்டி
உன் குகை போன்ற
பாசி மெத்தை
போர்த்தியுள்ள தோற்றம்,
என் நெஞ்சகம் ஆகும்.

வெண்மை நிற உன் மேனி
நிலவொளிக் கீற்றின்
வெண்மையை ஒக்கும்,
இன்றிரவு உம் தூளியாக நான்,
அனைத்தும் மறந்து.

உலகை மறக்கிறேன்
உம்மைச் சார்ந்து
எம் பசித் தீ தணிய
உடற்கட்டு மட்டும் பெரிதாக.

என் மகனே, உன் விருந்து,
பிற விருந்துக்கு விடை அளிக்க-
நான் அறிகிறேன்
நீ என்னைச் சார்ந்தே.

Thursday, December 25, 2008

கண்டறிந்தேன்

சிற்றூர்ப் பயணத்தில்
இக் குழவியை
ஆழ்ந்த உறக்கத்தில் கண்டறிந்தேன்
சிறுமணி கிளைகளுக்கிடையில்.....

கொடிமுந்திரி தோட்டத்தின்
ஊடே கிளைகளின் தேடலில்
அவன் கன்னம் தென்பட்டது.

ஆழ் துயிலில் அஞ்சுகிறேன்,
அவன் கொடிமுந்திரி தோட்டத்தில்
கவிந்துள்ள மூடு பனி போல்
கரைந்திடக்கூடும்...

(கப்பிரியேல் மிச்ட்ரல் கவிதை- 4
மொழிபெயர்ப்பு)

Tuesday, December 23, 2008

நற்பண்புகள்

உம்மிடம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் பொழுதில்
உலகின் தீங்கிழைப்பு முடிவுறும்:
யாவும் இனிமையே உன் ஆலயத்தில்:
சிற்றோடையும் முட்பரப்பும்.

உம்மிடம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் பொழுதில்,
மேலான உம் இமைகள்
அரிமாவாக நரியாக அமைந்திலங்க,
தீமையாவும் அனைவரிடம் அகலும்.


(கப்பிரியேலா மிச்ட்ரல் கவிதை- மொழி பெயர்ப்பு-3)

Sunday, December 21, 2008

'தொழில் சங்கம்'

திறக்க வேண்டுமாம்,
மீண்டும் தொழிற்சாலை,
திருவண்டார் கோவிலில்.

வேலை வேண்டுமாம்,
தொழிற்சங்க,
வேலை வேண்டுமாம்.

கழிவுகள் எரிந்தது,
கரவு என்றறிந்தும்,
உறவு சேர்த்திடும்,
கூட்டம்.

ஊர் உரிமை ஒழித்திட,
உலா வரும்,
விஞ்ஞான சமதர்மம்,
விலை பேசிடும்,
அஞ்ஞான அரசியல்
தாங்கிடும்
தொழிற்சங்க மையம்.

மண்ணும், மரமும்,
ஊரும், உயிர்களும்,
மாய்த்திட திட்டமிட்ட
தீ வைப்பு.

கொட்டிக் குவித்திட்ட
கழிவுகள் எரியூட்டி
நேர்ச்சி பழியூட்டி,
கொடுமை.

காற்றாடி வாழ்க்கை,
மக்கள்
நூலும் போச்சு,
இறக்கை கழிவுகள்
எரிப்பில்,

பறந்த வாழ்க்கை,
பறி போன நிலம்,
பாழ்பட்ட வெளி,
ஊழ் வலி அன்று,
உலுத்தர் சதி
இன்று.

கொளுத்திய சதி,
வெளுத்த சங்கம்
'தொழில் சங்கம்'
தோற்கும்!

இரவு

நீ உறங்குவதால்,என் குழந்தையே,
விழு ஞாயிறும் தகிக்கவில்லை:
பனித்துளி தவிர எவையும் மின்னவில்லை
நீ அறிந்த என் முகம் தவிர எவையும் வெளிச்சம் இல்லை.

நீ உறங்குவதால்,என் குழந்தையே,
நெடுஞ்சாலையில் எவையும் தென்படவில்லை,
ஆற்றை தவிர எவையும் ஏக்கம் தீர்க்கவில்லை,
எவையும் இல்லை என்னைத் தவிர.

சமவெளியாவும் பனி மூடியுள்ளது,
வான் நீல மூச்சு சலனமற்று.
உலக இயக்கம் ஒரு கைக்குள் அடங்கி
அமைதி அதன் விழைவை ஆள்கிறது.

என் இசை, குழந்தையை மட்டும்
உறங்க வைக்கவில்லை,
உலகம் முழுவதும்
தூளியின் தாலாட்டில்,
உறக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறது.

கப்பிரியேலா மிச்ட்ரல்- மொழி பெயர்ப்பு- 2

Friday, December 19, 2008

உன் வசம் நான்

கப்பிரியேலா மிச்ட்ரல்-நோபல் பரிசு பெற்ற இலத்தின் அமெரிக்க கவிஞர்

கண்ணுறங்கு என் குழவியே,
புன்னகையுடன்,
இமைகளை மூடு,
இரவின் தாரகை
தாலாட்டில்.

விழித்தெழு பகல்
பொழுதை உள்வாங்கு,
மகிழ்வுடன் வாழு,
நலம் அனைத்தும்
எம் வழி நீ கொண்டதால்.

கண்ணுறங்கு என் குழவியே,
புன்னைகையுடன்,
இமைகளை மூடு,
நிலமகள் பாச
தூளி அசைப்பில்.

ஒளி வீசும் செந்நிற ரோசாவை
கண்ணுறு,
என்னிடம் அடைவதைப்போல்,
உலகிடம் உம் எல்லையை
விரிவுபடுத்துவாய்.

கண்ணுறங்கு, என் குழவியே,
புன்னகையுடன்,
இமைகளை மூடு,
இறை நிழல் உம்மை தாலாட்ட.

மறந்தாச்சு!

பண்டிகை வரும்
போகும்,
பொந்திகை,பூரிப்பு
நெஞ்சில் தேக்கி!

மழை வரும்,போகும்,
வெள்ளம் வேதனை,
அழிவு வீதியெங்கும்
நிறுத்தி!

ஆண்டுதோறும் அவலம்!
மாண்டவர்,
இழந்தவர்,
நிவாரணம் கோரி!

அங்குல வயிறும்
நிரம்பாத,
அளிப்புகள் சலிப்புடன்!
வேதனை!

நிவாரணக் குழு
வரும், போகும்,
வாடிக்கையாக!
வேடிக்கை செய்திகள்
உலா வரும்,

தாள்களில்!
காட்சிகளில்!
போட்டிகள்!
பேட்டிகள்!

அடுத்த பிரச்சினை வந்தாச்சு!
ஆறுதல் அளிக்க தேர்தல்!
அனத்தும் சரி்!
ஆட்சி மாறினால்!

ஆண்டுகள் அறுபதும் கடந்தாச்சு!
அனைத்தும் இப்ப,
மறந்தாச்சு!

Friday, December 5, 2008

நாளாகுமா?

மனிதத்தின் வீழ்ச்சி நாள்!
மண்ணின் எழுச்சி நாளாகுமா?
சார்பின்மையை சவக்குழிக்குள்
தள்ளிய நாள்!
சாதனை என்றாகுமா?

இடிப்பு நாள்!
இந்தியாவின்
இழிவு நாள் அன்றோ!
இதயத் துடிப்பு நாள்
ஆகுமோ?

அந்நியன் சின்னம்!
அத்துடன் நிற்குமா?
அழிக்கும் ஆர்வம்!
அடங்கவில்லையா?

தொடர்கதை அதுவானால்!
தொல் பொருளும் மிஞ்சுமா?
தொன்மைதான் எஞ்சுமா?

Tuesday, December 2, 2008

வெளிச்சம்!

கிழக்கில் வந்தால்தானா?
மேற்கில் வந்தால்!
வேண்டாம் என்பேனா?

நாம்!

ஓய்ந்த சூறை!
புலர்ந்த பொழுது!
உலர்ந்த மக்கள்!

ஓரங்களில்!
ஈரங்களில்!
சகதிகளில்!

சலனமின்றி
சவாரியில்!

Sunday, November 30, 2008

மார்கழி....

நிர்வாணம் தந்தே
பழக்கப்பட்ட எங்களுக்கு
நிவாரணம்
எவ்வாறு ?

மழை, வெள்ளம்,
மின் விநியோகம்,
குடி தண்ணீர் இன்மை,
வீடு இழப்பு,

வேலை இழப்பு,
காலியான கிராமம்,
கால் நடை பாதிப்பு,
மக்கள் பாதிப்பு.

ஆண்டுதோறும்
வருவது தான்,
இவ்வாண்டும்,
ஆய்வுக்குழு

வழக்கம் போல்
பத்திரிக்கைச் செய்தி,
படச்செய்தி,
வண்ணச்செய்தி.

நாள்தோறும் கட்சிகள்
கருத்துரை,
ஆட்சியின் மறுப்புரை
வழக்கம் போல்

கிலோ அரிசி,
மண்ணெண்ணய்,
மருத்துவ முகாம்
பெட்டிச் செய்தி,

பிறகென்ன
மார்கழி....

பாவி!

மண்ணை புரிந்து கொள்ளவில்லை!
தன்னை அறிந்து கொள்ளவில்லை!
திண்ணை ஒழிந்தும் அதன்
திசைவழி மாறவில்லை!

ஏறு மாறாய் வாழும்!
ஏற்றமில்லாத் தமிழன்!
தோற்றத்தை தாங்கி!
தொய் தமிழன்!

கூவித் திரியும் காவி!
கூன் முதுகு நிமிரா பாவி!

Friday, November 28, 2008

மழை மரம்!

தங்க வைக்க இடம் பள்ளி!
சமுதாயக் கூடம்!
பாதித்தவருக்கு!
உணவுப் பொட்டலம்!

துணி மணி!
இழப்பீடு!
துக்கம் தீர்க்க
ரொக்கம்!

விழுந்த எம்மை!
தூக்கி நிறுத்த!
ஆள் இல்லை!
ஆதரவும் இல்லை!

அறுத்து!
அடக்கம் செய்யும்
வேலை!
அமர்க்களம்!

இடையூறு எங்களால்!
பயணம் தடை
எங்களால்!

வீடு இடிந்தது எம்மால்!
விடுதி இடிந்தது எம்மால்!
கெடுதி நேர்ந்தது எம்மால்!

நிவாரணம் எமக்கு இல்லையா?

Monday, November 24, 2008

புரிவாய்!

மட்டி மனிதனுக்கு!
கொட்டி
தீர்க்கிறது!

வெட்டி குளத்தில்
தேக்கிட!

தூர்வாரி!
நீர் நிறையச் சேர்த்திட
துப்பு இல்லை!

சாலைகள் வீண்!
பாதைகள் பள்ளம்!
குண்டும்! குழியும்!
பழிச்சொல்!

ஊடகங்களில் நாடகம்!
நாள்தோறும் அலறல்!
அலசல்!

மனிதம் தர மறுப்பது!
மாநிலங்கள்
தடை விதிப்பது!

இயற்கைக்கு
என்றும் இல்லை!

அளிப்பது
ஏராளம்!
தாராளம்!

எல்லைக்கோடு!
காவல் கல்!
என்னுடையது!
உன்னுடையது!
என்னும் வண்ணத் திரை!

நமக்கே உரிமை!
அனைவருக்கும் இல்லை!

அரசியல் புரிவாய்!

Friday, November 21, 2008

உலகுக்கு வழி காட்டும்!

வல்லரசு ஆக வேண்டும்!
படை பலம் கூட வேண்டும்!
கருவி பல வாங்க வேண்டும்!
காசு பணம் சேர்க்க வேண்டும்!

வாங்கிய ஆயுதம்
தூங்கியே இருக்கலாமா?
சாங்கியத்துக்கு பாவிக்க
வேண்டாமா?

உள் நாட்டில் வேலை
அதிகம் இல்லை!
அண்டை
அடுக்களைக்கு அனுப்பி
வைக்கலாமா!

சோதனை முயற்சி!
சாதனை கூட்டலாமா!
வெளி நாட்டு
வேதனை தீர்க்கலாமா?

சீவ காருண்யம் பேசும்
' சிவகாசி'
'சிந்து நதி'
நாகரீகம்
'ஆசிய சோதி'

உலகுக்கு வழி
காட்டும்!
தமிழா!
உனக்கு?

Thursday, November 20, 2008

எச்சரிக்கை!

மாடுகளுக்கு எச்சரிக்கை!
கடற்கரை எங்களுக்கு!
அந்த பக்கம் போகாதே!
அழகைக் கெடுக்காதே!

மாடுகளுக்கு எச்சரிக்கை!
கடை வீதி பக்கம் வராதே!
கடை அழகைக் கெடுக்காதே!

மாடுகளுக்கு எச்சரிக்கை!
கழனிப் பக்கம் வராதே!
உழவை நீ கெடுக்காதே!


மாடுகளுக்கு எச்சரிக்கை!
தெருக்களில் நீ திரியாதே!
போக்கு வரத்தை குலைக்காதே!

சரி!

பால் உமக்கு வேண்டாமா?
சாணம் உமக்கு வேண்டாமா?
கோமியம் உமக்கு வேண்டாமா?
வேளாண்மை எமக்கு அயன்மையா?

Wednesday, November 19, 2008

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி !

உருசிய நாட்டுத் தலைமை அமைச்சர் இந்தியாவிற்கு வருகிறார். மேலும், இரண்டு அணு உலைகள் தருகிறார். ஏற்கனவே, தமிழ்நாட்டில், கூடங்குளத்தில் விரைவு ஈணுலைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இவை வழங்கப்படவுள்ளது. உலக நாடுகளில், அணு உலைகள் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அண்மையில், மிகவும் பாதுகாப்பான அணு ஆற்றல் தொழில்நுட்பம் உள்ள நாடான பிரான்சு நாட்டு அணு உலைக் கழிவுகள், செர்மனி நாட்டில் கமுக்கமாக கொட்டப்படுவதைஎதிர்த்து, செர்மனியர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டதை, நாம் அறிவோம்.

இந்திய போன்ற நாட்டில், மண்ணையும், மக்களையும் வெகுவாக பாதிக்கின்ற சீர் கேடுகள் குறித்து பேசுவது, எழுதுவது என்பது பெரிய அளவில் இல்லை. அவ்வாறு, முனைப்பாக செயல்பட்டாலும், எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஒன்றை சொல்வது, ஆளும் கட்சியாக மாறிய போது, எதிர் நிலை எடுப்பது, கண்கூடாகும்.

கூடங்குளத்தில் அணு உலைகள் அமைத்திட, முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் கை கோர்த்து, இந்திய அரசு செயல்பட்டபோது, அதனை எதிர்த்து, ஊடகவியலாளர் ஞானி, அந்தன் கோம்சு போன்றவர்கள் தமிழ் நாட்டில் குரல் தந்தனர். அப்போது, எதிர் கட்சி வரிசையில் வீற்றிருந்த கலைஞர் அவர்களை, தமிழ் நாட்டில் அமைக்கவிருக்கும் அணு உலைகளுக்கு எதிராக, மனித சங்கிலி போராட்டம் நடத்திட ஆலோசனை வழங்கினர். அவரும், அணு உலைகளின் கொடுமையை எதிர்த்து, தமது கட்சியினரிடையே சிறந்த பரப்புரை மேற்கொண்டார் என்பது வரலாறு ஆகும்.

முன்னாள் சோவியத் நாட்டு செர்னோபில், அமெரிக்க ரோடு தீவு பேரழிவுகளின் வாயிலாகவும், சப்பான் போன்ற நாட்டில் அணு உலைகளில் தொடர்ந்து நிகழும் விபத்துகளினாலும், அந் நாட்டு மக்களிடையே, அணு ஆற்றல் குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.தற்போது நிலவும் சூழலில், இது பற்றி அரசியல் கட்சிகளிடையே,குறிப்பாக, மக்கள் நலன் சார்ந்த, நீண்ட கால பயன்கள் தொடர்பான சிந்தனை, அறவே இல்லை என்றே சொல்லலாம்.

காக்க!

சட்டம் ஒழுங்கு
காக்க!
கையில் தடியும்!
இடுப்பில் துமிக்கியும்!
உம் வசம்!

அமுக்கி வாசிக்க!
அதிகாரம்!
அளித்திட்ட
கவசம்!

நீதி வழங்குவது!
உம் வசம்
இல்லை!

நீதி மன்றமும்
நின் அவதாரம்
இல்லை!

வீதியில் நீதி!
விதி என்றாவதில்லை!

மோதல் போக்கு!
தவிர்!

காதல் கொள்!
கடமையில்!

அணு உலை!

உலக நாடுகள்!
விரிக்கும் வலை!
ஆளும் வர்க்கம்!
ஆராயாது!
எடுக்கும் நிலை!
மக்கள் ஆயுளுக்கு
வைத்திடும் விலை!

அம்போ!

கடை மடைக்கு
விடை இல்லை!
விடிவும் இல்லை!
இப்போதும்!

சம்பா பயிர்!
அம்போ!
சிவ சம்போ!
எப்போதும்!

ஆண்டுதோறும்
மாண்டு போகும்
மகசூல்!


தண்ணீருக்கு வழி இல்லை!
கழனி உழவன்!
கண்ணீருக்கு வழி உண்டு!
காலங் காலமாக!

காவிரி உனக்கு
இல்லை!
கட்சிகளுக்குத்தான்!

அப்பயிர்!
கருகக் கூடாது !
அல்லவா!

Tuesday, November 18, 2008

.........சரணம் கச்சாமி!

நீ என்ன சொல்ல!
நான் என்ன கேட்க!
அலட்சியம்!
என் இலட்சியம்!
ஆங்கிலேயனிடம்
கேள்!

என்னிடம் கொடுத்துச்
சென்றான்!
ஏற்றுக் கொண்டேன்!
உன்னையும் சேர்த்து!
அடிமையாக!

அதிகாரம்! ஆட்சி!
அனைத்தும்!
என்னிடம்!
கிருமமாய்!
நடந்து கொள்!

தருமத்தின் ஆட்சி!
தாமரைப்பூ
மாட்சி!
சரண் அடைந்து விடு!

Sunday, November 16, 2008

செம்மொழி!

எங்க ஊரு தாண்டி!
பெங்களூரு!
அதையும் தாண்டி!
ஆந்திரம்!
வரிசையில்!
வங்காளம்!

எனக்கும் தா!
பீடம்!

அய்க்கியம் காக்க!
அனைவருக்கும்
உண்டு!

Friday, November 14, 2008

ஆசு

எதற்கும் சமைவு!
களவுக்கும்!
உளவுக்கும்!

காசு என்றால்!
ஆசு இல்லை!

காத தூரம்!
கடக்கும் தூரம்!

எரியூட்டு!

முடிந்ததை முணகாதே!
இறக்கி வைத்ததை
ஏற்றாதே!

மீண்டும் தொடங்கு!
மீண்டும் ஏற்று!
எரியூட்டு!

பதம் பார்!
இறக்கி வை!

பகிர்ந்துண்ண
பரிமாறு!

பசிப் பிணி
வேரறு!

பதை மாற்று!

இயற்கை!

நண்பர் எனக்கில்லை!
அன்பர் அவருக்கில்லை!

நெருங்கிப் பழகி
நெருடல்!

விலகிப் பழகி
விரோதம்!

நெருங்கியும்!
நெருங்காமல்!
பழக்கம்!

பட்டும்!
படாமலும்!
என்பார்!

இரு வேறு உலகத்து
இயற்கை!

காவு கேட்கிறார்!

சட்டத்தை எடுத்தேன்!
கைகளில்!
சாத்து! சாத்தினேன்!
சட்டை செய்யாமல்!

சந்தடி அடங்கும்
வரை!
காக்கி காவலுடன்!
பாக்கி வைக்காமல்!

நெஞ்சில்!
பகமை தேக்கி!

சட்டத்தை
ஆள வேண்டியவர்!
சட்டத்தரணி!

சாவுமணி
அடிக்கிறார்!
காவு கேட்கிறார்!

நட்பை மறந்து!
கல்வியை மறந்து!

Wednesday, November 12, 2008

'ஆண்ட பரம்பரை'

மீண்டும்.......

மீட்சி!
ஆதிக்க சாட்சி!
அரங்கேற
மாட்சி!

மாண்ட பரம்பரை
மீண்டும்........
'மடி'யுடன்!
படியிறக்கம்!

ஆண்டவனின்
சுட்டு விரலில்!
காலச் சக்கரம்!

மாண்டவர்
உயிர்த்தெழார்!

Saturday, November 8, 2008

கல்லறை கலக்கம்

வாழ்ந்த போது
வாய்க்காத
அமைதி!

வீழ்ந்தபோதும்
நீடிக்கவில்லை!
நீள் துயில்!

துயரம் எம்மை
துரத்தியது!

தோண்டியது!
விமர்சனங்கள்
அல்ல!

பயிலிடம் தொடங்கிய
தாழ்வு!
இறப்புக்குப் பின்னும்!
இன்பம் தேடியது!

கூட்டுவாய்!

கல்லறை உடை
சில்லரை கிட்டும்!

சிலைகளை உடை!
தலைமை பாராட்டும்!

மனிதரை கொளுத்து!
தியாகி ஆவாய்!

எதிர்காலத்தில்
ஓய்வூதியம்!

அரசு மரியாதை!
ஆனந்த மார்க்கம்!

களப்பிரர் காலத்தை
எழுப்புதல் செய்கிறாய்!

பண்டைய இழிவை!
பகடையில் உருட்டுகிறாய்!

பசை உணர்வை!
திசை திருப்புகிறாய்!

நசையாகாது!
நாய் வால்
போக்கு!

நோய் போக்குவாய்!
நலம் கூட்டுவாய்!

Thursday, November 6, 2008

அற்புதம்!

எம் இனம் அழிகிறது!
தமிழன் அல்ல!
மனிதன்!

இந்தியனுக்குத்தான்!
என்
இறக்கம்!
உனக்கு அல்ல!

தமிழனுக்கு
அல்ல!
மனிதனுக்கும்
அல்ல!

அப்படித்தானே!
எம் தேசியம்!
சர்வ தேசியம்!
கற்பிதம்!

காலம்! காலமாக!

Tuesday, November 4, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்- 5

1982ல், 'அடிப்படை மனித நேய' மாத இதழ் தலையங்கத்தில், மக்கள் சிவில் உரிமைக் கழக உறுப்பினர்களிடையே அடிப்படை மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு சில மாதங்களுக்கு முன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் சி.எப்.டி. இந்திய அளவில் மாநாடு ஒன்றை, அய்தராபாத் நகரில் நடத்தினர்.

இது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. சிக்கலில் இது போன்ற சிவில் உரிமைக் குழுக்களுடன் இணந்து செயல்படுவது, சமூக மட்டத்திலும், அமைப்புகளின் சிவில் உரிமை ஆகியவற்றைக் காத்திட, மிகவும் அவசியம் ஆகிறது என்று தலைவர்களிடையே, உணரப்பட்டது.


இவை போன்றதொரு மாநாடு, மாநில அளவில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சில மாநாடுகளில் தார்குண்டே அவர்களும் கலந்து கொண்டது குறிப்பானது ஆகும்.

1982ல் மகாராட்டிர மாநிலம் துலியாவில், உடமைகள் இழந்து, பொருளாதார நிலையில் நலிவுற்ற மக்களுக்காக பாடுபடும் ஒரு குழு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், நானும் அவரும் கலந்து கொண்டோம். தமது 75 அகவையிலும் அவர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Sunday, November 2, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி 4

அக்டோபர், 1980ல், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பு மாநாடு, புதுதில்லியில் நடைபெற்றது. மேற்குவங்கத்தை ஆண்டு வந்த இடதுசாரி அரசு, மாநில அமைப்பின் பொறுப்பு, தங்கள் வசம் இருக்க வேண்டும் என கோரினர். இக் கோரிக்கையை எந்த சிவில் உரிமைக் குழுவும் ஏற்க இயலாதது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு மக்கள் சிவில் உரிமைக் கழகம் சுயேச்சையாக செயல்பட முடியாது.

இதற்கிடையில், சோவியத் ஒன்றியம் ஆப்கானிசுத்தான் நாட்டின் மீது மேற்கொண்ட ஆக்ரமிப்பை எதிர்த்து, தார்குண்டே அவர்கள் தலைமையில் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இந் நிகழ்ச்சி மார்க்சிசுடு கட்சியினர் மத்தியில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது.

இப் பிரச்சினையை தீர்த்திட சமதர்ம கட்சியின் மூத்த தலைவர் மதுலிமாய் அவர்கள் நடத்திய கூட்டத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர்கள் மற்றும் மார்க்சிசுடு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். எனினும், மார்க்சிசுடு கட்சியினர் சனநாநாயக மற்ற நிலையில் இருந்து வளைந்து கொடுக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பிற மாநிலங்கள் ஆன மகாராட்டிரம், பஞ்சாப் அகிய இடங்களிலும் மேற்கு வங்கத்தில் உள்ளது போல், இதர சிவில் உரிமை அமைப்புகள் செயல்பட்டு வந்தன. தார்குண்டே அவர்களின் முடிவின்படி, இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

அவரின் முடிவின்படி, நான், சனதாக் கட்சியில் செயல்பட்டு வந்த டாக்டர்.ஒய்.பி.சிப்பர் அவர்களை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் வேலையை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன்.

அவர், அமைப்பின் நிர்வாக செயலாளராக தமது இல்லத்தில் அமைந்துள்ள அலுவகத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறார். 1985ல், சபல்பூரில் நடைபெற்ற மாநாட்டில், அவர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளராக, பேராசிரியர்.திலீப் சாமியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Thursday, October 30, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி 3

மக்கள் சிவில் உரிமை மற்றும் சனநாயக கழக அமைப்பின் தோற்றத்திற்கு காராணமான, லோக் தளம், காங்கிரசு(பழையது), சன சங் மற்றும் சமதர்மக் கட்சி ஆகியவை மத்திய சனதா அரசாங்கத்தில் சேர்ந்த காரணத்தினாலும்; மாநில அரசுகளில் பங்கு கொண்டதினாலும்; மேற்கு வங்க இடதுசாரி அரசில் இடம் பெற்றதாலும், அமைப்பு செயல்படாத நிலையிலேயே இருந்தது.

இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சனதாக் கட்சி எதிர்க் கட்சி வரிசையில் இடம் பெற்ற சூழலில், புதிய மத்திய அரசாங்கம் சிவில் உரிமைகளை ஒடுக்கும் என்கின்ற அச்சத்தின் காரணமாக, தார்குண்டே, குல்தீப் நய்யார், ரசனி கோத்தாரி மற்றும் கிருசண காந்த் ஆகியோர், அமைப்பிற்கு புத்துயிர் ஊட்டினர்.

இதற்கிடையில், சிவில் உரிமைக் கழகத்தை இந்திய கம்யூனிசுடு( மார்க்சிசுடு-லெனினிசுடு) கட்சியினர் நடத்தி வந்தனர். இது குறித்து தார்குண்டே அவர்கள் ஒவ்வாமை கொள்ளவில்லை. மாறாக, 1973 மற்றும் 1977ல், அவர்கள் மீது ஆந்திர வெங்கல் ராவ் அரசாங்கம் நிகழ்த்திய அடக்குமுறைகள் பற்றி உண்மை அறியும் ஆய்வுக் குழுவை அமைத்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

என்றாலும், அரசியல் கட்சிகள், புதிய சிவில் உரிமை அமைப்பினை கைப்பற்றிக் கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை ஒரு விதியாக உருவாக்கினார். அப்போது தான், மக்கள் சிவில் உரிமைக் கழகம் உருவாகியது.

இச்சமயத்தில், புகழ் பெற்ற வழக்குரைஞர் கோவிந்த் முகோத்தி அவர்கள், மக்கள் சனநாயக உரிமைக் கழகம் என்னும் ஒரு அமைப்பை தோற்றுவித்தார்.

அன்றோ!

கரை வேட்டித் தமிழன்!
கதர் வேட்டித் தமிழன்!

குல்லா தமிழன்!
துண்டு தமிழன்!

பச்சைத் தமிழன்!
பதாகைத் தமிழன்!

யாவரும் ஓர் நிறை
அன்றோ!

Tuesday, October 28, 2008

உள் வெளி!

கனவிலும்!
நினைவிலும்!
காட்சிகள்!

காலங் காலமாய்
கரைந்திடும்
உள் வெளியில்!


கனத்த இதயத்துடன்!
களித்த தடயத்துடன்!

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி - 2

டேராடூனை விட்டு, தில்லிக்கு சென்ற சமயத்தில், 'மறுமலர்ச்சி நிறுவன அமைப்பு' விழாவில், அவரை நான் சந்தித்தேன். இச் சமயத்தில், ஒரு சிலர் அவரிடம், நான் கட்சி அரசியலில் ஈடுபட்டதாக கூறிய போது, தார்குண்டே அவர்கள் சிரித்துக் கொண்டே, நான் 50% விழுக்காடு அவர்கள் பக்கம் உள்ளதாக கூறினார்.

எங்கள் நட்பு, நெருக்கடி நிலை நாட்டில் நடைமுறையில் இருந்த போது, மேலும் வளர்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் குறித்து, அவரின் உறுதியான அச்சமற்ற நடவடிக்கைகள், சனநாயகவாதிகள் மத்தியில், அவரை ஒரு தலைவராக வெளிப்படுத்தியது.

இக் காலக்கட்டத்தில் தோன்றியதுதான், 'மக்கள் சிவில் உரிமை மற்றும் சனநாயக உரிமைக் கழகம்' ஆகும். நாங்கள் ஒன்றுபட்டு உழைத்தோம். கடந்த கால எமது தொடர்புகள் மட்டுமின்றி, செயபிரகாசு நாராயணன் மற்றும் எசு.எம்.சோசி அவர்களுடன் ஆன நெருங்கிய தொடர்பும், எங்கள் பிணைப்பிற்கு காரணமாக அமைந்தது.

Monday, October 27, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்!

சுரேந்திர மோகன் -மொழியாக்கம், பகுதி- 1

நான் டி.ஏ.வி. கல்லூரி மாணவராக இருந்தபோது, 1950ல் எனக்கு தார்குண்டேவைத் தெரியும். எம்.என்.ராய் அவர்களை அடிக்கடி சந்திக்க
அல்லது மனிதநேய அடிப்படைக் கட்சியின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வரும்போது அவரை எனக்குத் தெரியும்.

இக் குழுவின் சிறந்த தலைவர்களில் போராசிரியர்.பரேக் அவர்களும் அடங்குவர்.சமசவாடி இளைஞர் அவையினருடன் சேர்ந்து கம்யூனிசுடுகள் மற்றும் சன சங் காரர்களின் கொள்கைகளை எதிர்த்து பொதுச்சொற்பொழிவு நிகழ்த்த அவர்களை அழைப்பது வழக்கம்.

சமதர்மவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லாத தலைப்புகளான, கூட்டுறவு பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் பெருவது அகியவை இந் நிகழ்ச்சியில் அடங்கும்.

1956, 1957 ஆம் ஆண்டுகளில் முசோரியில் நடந்த கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டபோதும் அவரை சந்தித்து இருக்கிறேன்.பேராசிரியர் பரேக் அவர்களுக்கும், மீரட் பேராசிரியர் ஆர்.எசு.யாதவ் அவர்களுக்கும் இடையில் கட்சி சார்பற்ற அரசியல் குறித்து கடுமையான வாதங்கள் நடைபெற்றன.

குறிப்பாக, பேராசிரியர் யாதவ் அவர்கள், மனித நேய அடிப்படைக் கட்சி அமைப்பதில் உறுதியாய் இருந்தார். இது குறித்து, எனக்கும் தார்குண்டே அவர்களுக்கும் இடையில், தீர்க்கப்படாத சிக்கல் , அவர் இறக்கும் வரையிலும் நட்பு முரண் ஆக நீடித்தது.

Sunday, October 26, 2008

தேரோட்டம்!

எங்கிருந்தேன்!

எதற்கிருந்தேன்!

உமக்குத் தெரியாது!


இன்று இருப்பது!

தெரிய வேண்டும்!


நாடாளும் வேளை!

வந்து விட்டது!

நரக வேதனை

தந்து விட்டது!


நாட்டின் நலனே!

எம் வீட்டின்

நலன்!


வீட்டிற்குள் நாட்ட!

நலம் கூட்ட!

நான்!

நாள்தோறும்!

அன்றும்! இன்றும்!

சட்டத்தின் ஆட்சி

அன்று!

சட்டம் தன் கடமையைச்

செய்யும்

இன்று!


Friday, October 24, 2008

என்றாய்!

நிலை குலைந்தாய்!

கலை இழந்தாய்!

காலம் போக்கினாய்!

கவலை கூட்டி!


வாழ்வை சுருக்கினாய்!

வளம் இழந்து!

தாழ்வைப் பெருக்கினாய்!


பண்டைப் பெருமை!

கொண்டு சென்றாய்!

ஆவணம் அனைத்தும் இழந்து!

கோவணம் ஆனாய்!

கேவலம் என்றறிந்தும்!

ஏவல் செய்தாய்!


சார்ந்து நின்று!

சரித்திரம் படைத்தாய்!

சாதனை அடைந்தாய்!

தரித்திரம் புதுக்கி!


அய்க்கியம் சேர் அணி!

சேர்ந்து!

ஆக்கினை கூட்டினாய்!

சொந்த நலம்!

சோர்ந்திடாமல்!

வந்த நலம்!

வாழ் நாள்

என்றாய்!

முதல் மரியாதை!

வேளாண்மைக்கு விடைகொடுத்தோம்!


முதல் மரியாதை!


உணவுப் பயிர்களுக்குசிறிது காலம்!


பணப் பயிர்களுக்குபாதை வகுத்தோம்!


சிறு தொழில்வரவேற்று!


பேட்டைகள் அமைத்தோம்!


தொழிற்பேட்டை!தோதாக!


விளைநிலங்கள் நிலை உயர்த்தி!


நீரின்வழி மறித்து!


பெருந்தொழில்கள்!வரவேற்றம்!


பெட்டிகளுடன்!


கழிவுத்தொட்டிகள்ஆயின!


வாழ்வும்! வளமும்!


நிலத்தடியும்!நீரும்!


காற்றும்!வளர்ச்சிக்காயின!


வாழ்வுக்கில்லை!


நிறுவனங்கள்!


எல்லைக் கடந்து!


விளைவு தேவையில்லை!


நிலம் தேவையில்லை!


தொழிலும் ஆலையும் போதும்!


எழிலும் சோலையும்!


எதற்கு?


நிலக் கடலை வணிகம் போல்!


எண்ணெய் பிழிசெக்குபோல்!


ஆட்டி அசைத்து!


சக்கையும் பிழியும்!சாகசம்!


செக்கும் தோற்கும்!


பணக் குவிப்பு!


வளர்ச்சி!

Wednesday, October 22, 2008

உணர்வுகள்!

'நினைக்க மறக்காதே'!

'மறக்க நினைக்காதே'!

'தானி' கவிதை!

ஏக்கம் !

எதிர்பார்ப்பு!

தோல்வி ! வெற்றி!

காதல் ! கடமை!

உரிமை! அருமை!

உணர்வுகள்!

களம் இறங்கும்!

தளம் அமைக்கும்!

கருத்து தூளி!

கவிதைக்கேணி!

Friday, October 17, 2008

எங்கே!

மரம் எங்கே!
மனிதர் இங்கே!

குளம் எங்கே!
குழாய் இங்கே!

ஏரி எங்கே!
நிறுத்தம்
இங்கே!

மண் எங்கே!
வண்டிகள்
இங்கே!

ஆறு எங்கே!
'லாரிகள்'
இங்கே!

கழனி எங்கே!
கட்டிடம் இங்கே!

நீர் எங்கே!
கடல் இங்கே!

வானம் எங்கே!
வாழ்க்கை எங்கே!

பட்டிப்பூ

சாவுக்கா பூத்தோம்!
எம்மை எப்படி!
அப்படி அழைப்பீர்!

கடற்கரை சாலைகளில்!
சன்னியாசித் தோப்பில்!
பாப்பம்மா இடுகாட்டில்!

வெண்மை நிறத்தில்!
வெளிர்,
முளரி நிறத்தில்!
அலை, அலையாக!

அது சாவுப் பூ!
பறிக்காதே!
என்பார்

கல்லறை
வாணரப் பேட்டையில்!
காட்சிப் பொருளாக!
எட்டிப் போய்!

எம்மை !
தொட்டியில் கூட
வைக்கவில்லை!

வாழ வைக்கும்
எம்மை!
விலக்கி வைத்தீர்!

எசமானுக்கு புரிகிறது!
'வேப்பிலையை
தம் மாப்பிள்ளை'
என்றவர்!

இரத்தப் புற்றுக்கு
எம்மிடம் !
சாரம் இருக்கிறது
என்று!

Thursday, October 16, 2008

உழைப்பு!

இரவில் உழைப்பு!
பகலில் ஓய்வு!
இன்னொரு உலகம்!
இருண்ட உலகம்!

முழங்குவாய்!

தனித் தனியே
அணி அமைத்து
தவிக்காதே
தமிழா!

தரணி சுட்டும்!
அவலத்தைக் கொட்டி
குவிக்காதே!
தமிழா!

'ஒன்றே செய்'
'இன்றே செய்'

உன் பகை!
உள் பகை!

உணர்ந்த
செய்கை!
ஒழிப்பாய்!

இன மானம் காக்க
ஒன்றிணைவாய்!

உன் சுகம்,
போகம் மறந்து!

உன் தோழன்
உரிமைக்கு!

ஒரே குரலாய்
முழங்குவாய்!

ஓராயிரம் ஆண்டுகள் !
இழிவைத்
துடைப்பாய்!

முறையா?

'அண்டை வீட்டுச் சிக்கல்!
நுழைவது மீறல்!

உந்தன் உறவு
அடுத்த வீட்டில்!

அடி, உதை உண்டு
அடி மாட்டு
நிலையில்!

உடமை இழந்து!
உரிமை இழந்து!
உருக்குலைந்து !

ஊசலாடி,
ஓய்ந்தும், ஓயாத!
ஓலக்குரல்!

உம் செவிகளில்
விழவில்லையா!

அடுத்த வீட்டுக்கு
அறியாமல் உதவினாயே!
தெரியாமல் அளித்தாயே!
உறவுக்கு எதிராக!

அனைத்தும்
தெரிந்த பின்!

ஆட்டத்தை மாற்று!
தோற்றத்தைக் கூட்டு!

வணிகம் செய்வதற்கும்
நியாயம் உண்டு!

உறவுக்கு பகையாக
வணிகம்!
அறம் ஆகுமா!
'அசோகன்'
செய்திருப்பானா?

உம் அணுகுமுறை!
அடுத்தவர்
திருப்பிச் செய்தால்!

உலக அறமன்றம் வரை!
உம் குரல்
ஓங்கி ஒலித்திருக்காதா?


பெரும்பான்மை
ஒடுக்கு முறைக்கு!
அழிப்பு முறைக்கு!
கருவிகள் அளிப்பது!

உலக முறையா?
உணர்வு சரியா?

Wednesday, October 15, 2008

பாதை

பாரதி புதுவை வந்து!
நூறாண்டு!
பெருமை எமக்கு!

வந்தான்! வாழ்ந்தான்!
ஊரில்!
விழா!

வல்லாண்மை கொடுமை!
வல்லூறுகளை!
வாழ்விலும்! தாழ்விலும்!
விழிப்பிலும்! உறக்கத்திலும்!
விசையுடன் எதிர்த்தவன்!

தமிழன் நிலை!
தரணியில் உயர்த்திட!
விடுதலை முழக்கி!

பறையருக்கும்!புலையருக்கும்!
ஆனந்த சுதந்திரம்!
அறிவிப்பு செய்தான்!
ஆண்டவனைத் தேடிஅலையும்
அறிவிலிகாள்!
என்றான்!

தேமதுரத் தமிழ்!
உலகெலாம்!
பரவும்வகை செய்தல்!

சேமமுற!
தெருவல்லாம்!
தமிழ் முழக்கம்!
வாள்வலியும்!
தோள்வலியும்!
போச்சே!
என்றான்!

கானல் நீராக்கிய
கண்ணிய மைந்தர்!
புண்ணிய புதுவையினர்!

இன்னும்
பல நூறாண்டுகள்!
கொண்டாட வேண்டும்!
சாங்கியம் எமக்கு!

தேங்காய்க்குள்!

தீபமாம்! தீபமாம்!
தெருவெங்கும்
தீபமாம்!

தேங்காய்க்குள்!
நெய் விளக்கு!
நேர்த்திக் கடன்
தீபமாம்!

பரிகார தீபமாம்!
ஆம்பிள்ளைக்காக
தீபமாம்!
அணிவகுத்த
தீபமாம்!

காணிக்கை தீபமாம்!
காரணம் கூறும்
தீபமாம்!
ஏரணம் களைந்திடும்
தீபமாம்!

ஏன் என்றிடா
தீபமாம்!
கூன் உணர்வு
நீக்கிடா
தீபமாம்!

கும்பல் சேர்த்திடும்
தீபமாம்!
தேங்காய் மூடி
தீபமாம்!
மாங்காய் அறிவு
தீபமாம்!

Tuesday, October 14, 2008

கிருமாம்பாக்கம்!

கிருவிகள் !
கருவிகளுடன் !
களம் இறங்கி !
பாத்திகள் கட்டி!
பள்ளாங்குழி ஆடி!

நீர் ஆதார
ஊருணி!
ஊரின் அச்சாணி!
கழட்டினார்!
இரால் பண்ணை!
ஏரி மறித்து!

என்றும் போல்!
இன்றும்!
எமது அரசு!
கிருமமாய்!

எமக்காக!

சம்பங்குட்டை கதை
முடிப்பு !
அருகன் நகரில் !


மனை வணிகம்
மீறல் !
அரசு நிலம் !
புறத்தில்
வெளி !


மழை நீர் வாங்கி!
ஆற்றில் செலுத்தும்!
ஆராவரமின்றி!
ஆண்டாண்டு ஆட்சி!
இயற்கையின் மாட்சி!


விட்டு வைக்க மாட்டோம்!
பாதை அமைத்து1
பாலம் அமைத்து!
மண்ணைக் கொட்டி
தூர்த்து விடுவோம்!


ஆட்டைக் கடித்து!
மாட்டைக் கடித்து
அரசு நிலம் !
பொதுப் பயன்!
இயற்கை ஏற்பாடு!
எமக்காக!

Sunday, October 12, 2008

சாட்டைகள்!

பாரம் சுமக்கும்!
பாதை கடக்கும்!
வழி நடத்தும்!
உம்மையும் சேர்த்து!

உருளும் கால்களில்
லாடம் தாங்கி!
கண்களில் சோகம்
ஏங்கி!

கழு நீரும்
காலையில் இன்றி!
வழி நெடுக
வெந்து! வீங்கி!

இழுக்கும் மாடுகளையே!
இம்சிக்கும்
சாட்டைகள்!
கொழுக்கும் மாடுகளிடம்!
கொஞ்சும்!

மாற்றம் சேர்த்திட!

எல்லாம் இன்பமயம்
அப்போ!

எல்லாம் உலகமயம்
இப்போ!

உறவும் வணிகம்!
கரவும் தரவும்!
கை கோர்த்து!

காலம் தோற்கும்!

தடையேதும் இல்லை!
தாராள வாதம்!

எல்லை கடந்து!
தொல்லை!

தொகை! தொகையாக!
துளிர்த்திடும் நம்பிக்கை!

துயரம் விரட்டிட!
தூளிகளை விட்டிறங்கி!

ஆளிகள் போல்!
உறுதியுடன்!

ஆற்றல் திரட்டுவோம்!
மாற்றம் சேர்த்திட!

சாதிப்போம்!

பாலில்லை !
மாடு இல்லை!

மாடு பிடிப்போம்!
மாநிலம் சென்று !

சந்தைகள் கண்டு!
மந்தைகள் வென்று!

பால் அளிப்போம்!

தீவனம் உங்கள்
பாடு!

புல் வளர்ப்போம்!
விற்போம்!
மேய்ச்சல் நிலம்?

சாடிக்குள் புல்!
விதைப்போம்!

வீட்டிற்குள்!
தோட்டம்!

வீதிக்குள்
மரம்!

மான்யம் அளிப்போம்!


அவரை! வெண்டை!
மொச்சை! கீரை!
நெற்பயிர்!
கரும்பும்! கேழ்வரகும்!
நொடியில்!
மொட்டை மாடியில்!

மாடும் அங்கே
கட்டிக்கொள்!
தீவனம் அங்கே
ஒட்டிக்கொள்!

பால் உற்பத்தி
பன் மடங்கு
பெருகும்!
குறைந்தால்
கவலை இல்லை!

குழாய் நீர்!
கவலை தீர்க்கும்!

கிராமங்கள்
வழி காட்டுகின்றன !
குருமாம்பேட்டைக்கு
கூடுதல் இல்லை!
தேடுதல் வேலை!

தேடிவரும்!
வீடு நாடி!

விழா எடுப்போம்!
மன்யம் அளித்து!
மாநிலம் முழுவதும்
மகளிர் சேர்த்து!

நாள் உற்பத்தி!
நாளும் தாண்டும்!
விடமாட்டோம்!

குடிக்காத பிள்ளைகள்!
மூக்கைப் பிடித்து!
ஊற்றுவோம்!
ஊட்டம் ஓங்க!

ஊதிப் பெருக்க!
சாதிப்போம்!

மாணவர்கள்!
பட்டினி கிடக்கத்
தேவையில்லை!

கண் திறக்க
வேண்டும்!
கவலை மறக்க
வேண்டும்!

தருக!

எல்லார்க்கும் பெய்யும் மழை!
அன்று!
எல்லார்க்கும் சேர்க்கும் 'சுனாமி'
இன்று!

இன்னொரு 'சுனாமி'
வருக!
இனாம் அனைவருக்கும்
தருக!

Saturday, October 4, 2008

புரியும்!

உள்ளிருந்து
கேட்டேன்!
வெளியே
உணர்ந்தேன்!

வெளியிருந்த
முரண்
சரியென்றது!

சரிந்தது!

அகன்று
நோக்கின்!

அளவு,
தன்மை,
ஆழம் புரியும்!

வெறி!

ஒரிசாவை மையம்
கொண்ட வெறி!
எங்களூரில்!
பெங்களூரில்!

கூறுகிறார்!
மதமாற்றம்
எதிர்த்து!

பரவுகிறது தீ!
பெரும்பான்மை
உணர்வு!

விரும்பிய மார்க்கம்!
எம் உரிமை!
திரும்பிய நோக்கம்!
உம் வறுமை!

சமணம், புத்தம்,
பார்சி, இசுலாம்,
பழங்குடி மார்க்கம்!

அனைத்தும்,
அரசியல் சட்டம்!
எமக்களித்துள்ள
உரிமை!

உம்மை நான்
இழுக்கவில்லை!
எம்மையும் நீ
இழுக்காதே!

ஏற்காத
இந்துத்துவா!
ஒழியாத வர்ணம்!
அழியாத சாதியம்!

பழியாக
நாம் கூற
ஏற்குமா ?
பெரும்பான்மை!

உணவில்லை!
தண்ணீர் இல்லை!
உழைப்பும் உரிமை
இல்லை!

நிலம் இல்லை!
களம் இல்லை!
நிழலுக்கும்
பொசுப்பில்லை!


நம்பிக்கை அளிக்கும்
மார்க்கம்!
எம் விருப்பம்!
உரிமை!

உணர்வுடன்
இணைந்தோம்!
உருக்குலைக்க
நீ யார்?

Sunday, September 21, 2008

"இருளர்"!

வெட்டி!
நிலம் பிளந்து!
கொணர்வார்!
"இருளர்"!

நீலம்! பச்சை!
நீண்ட பட்டியல்!
இயற்கையின்
வயிற்றைப் பிளந்து!
கூலித் தொழிலாய்!
கூனிக் குருகி!

தம் மக்கள்
வாழ்வைச் சிதைத்து!
அடையாளம் அழித்து!
அடிமைத் தளை நீட்டி!
ஆயுதம் ஏந்தி!
அக்கிரமம்
செய்திடுவார்!

புதிய சனநாயக
புரட்சி என்பார்!
தோழமை அழித்து!
தோள் வலி உடைத்து!

அனைத்தும் நிகழும்
அங்கோலாவில்!
சியரோ லயோனில்!
ஆப்பிரிக்காவில்!

அன்னியர் அடிவருடி!
புண்ணியம் பல தேடி!

நளினம்!

எட்டி இருப்பவரிலும்
மோசம்!
கிட்டே இருப்பவர்!
கொட்டிக் கொடுத்தாலும்!
கோணல் மாறா!
நாணல் தோற்கும்
நளினம்!

பிடிக்காது!

உன்னை எனக்கு
பிடிக்காது!

என்னை உனக்கு
பிடிக்காது!

உன்னுள்ளிருந்தும்!
என்னுள்ளிருந்தும்!
உதித்த
தொடர்ச்சி!

பிடிக்கும்!

மோதல்!

வாழ்க்கையே சதுரங்கம்!
வெள்ளையும்!
கறுப்பும்!

முன்னணி வெள்ளையாயினும்!
வெற்றி!
எவருக்கு?

Wednesday, September 3, 2008

"தேசிய பொருளியல் ரீதியில் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம்"

கடந்த மாதம், 23 சூலை, 2008ல் புதுச்சேரி மாநிலத்திற்கு, "தேசிய பொருளியல் ரீதியில் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம்", வருகை புரிந்தது. இவ்வாணையம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய அரசால் அமைக்கப்பட்டது. இதன் தலைவர், திருவாளர்.எசு.ஆர்.சின்கோ,ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஆகும். திருவாளர்கள். நரேந்திர குமார் மற்றும் மகேந்திர சிங் ஆணையத்தின் உறுப்பினர்கள். டாக்டர்.பி.என்.இராம், முதுநிலை ஆராய்ச்சியாளர் அவர்களும் உடன் வருகை தந்தார்.

தற்போது, நடைமுறையில் நிலவும், இட ஒதுக்கீடு சலுகை பெறாத, பெருளாதார ரீதியில் பிற்படுத்த நிலையில் உள்ளவர்களுக்கு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, பரிந்துரை செய்திட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ,கருத்து கேட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரிக்கும் வந்திருந்தனர்.

இவர்கள் வருகை சம்பந்தமாக, புதுவையின் பல்வேறு அமைப்புகள், சரிவர விளங்கிக் கொள்ளாமல், ஏற்கனவே உள்ள," தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்"தான் வருகின்றது என நினத்து, அதற்கேற்ப தமது கருத்துகளை தயார் செய்து, கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் "திட்டத்துறை கருத்தரங்க வளாகத்திற்கு" வந்திருந்தனர்.

முன்னர் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சமூக. கல்வி அடிப்படையில் பின் தங்கியுள்ள வகுப்பினரை மதிப்பெண் அடிப்படையில் ஆய்ந்தறிந்து இறுதி செய்தது.சமூக ரீதியில், கல்விரீதியில் உயர்வு என்பது பொருளாதார ரீதியில் உயர்வுக்கு வழி வகுக்கும் என்பது அனைவரும் உணர்ந்தது.

பொருளாதரத்தில் மட்டும் பின் தங்கிய நிலை, சமூக நிலையில், கல்வி நிலையில் உயர்வு உள்ள மக்கள் பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஏற்படுத்தி தருவது, முன்பு ஏற்பாட்டில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கைய சிதைத்து விடும் என்பதில் ஐயமில்லை!

சாதிய கட்டமைப்பு உயிருடன் இருக்கும் வரை, ஏற்றத் தாழ்வுகள் சமூக ரீதியில் இருகிப்போன சூழலில், இட ஒதுக்கிடூ என்பது சாதிய ரீதியில் அளித்திட வேண்டியது கட்டாயம்!

பொருளாதார ரீதியில் தாழ் நிலையில் உள்ளவர்கள் என்பது கூட, சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும். அவர்கள்தான் இட ஒதுக்கீடு வரம்பிற்குள் ஏற்கனவே உள்ளனர்.

உயர் சாதியினருக்கு முன்பே உள்ள 'சமூக மதிப்பு', 'உயர் நிலை'-ஒதுக்கீடு-, குறிப்பாக கோவில் கருவறைக்குள் வழிபாடு செய்வது போன்ற முந்துரிமை, அனைத்து சமூகத்திற்கும் பொருந்துமா?

இந்தியக் குடிமகன் என்ற நிலையில் அனைவருக்கும் சமமான சமூக மதிப்பு, வாய்ப்பு கிடைக்காத நிலையில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதே கோரிக்கை.

அதிலே கூட ,பொருளாதார அளவுகோல் வைக்கப் பட வேண்டும் என நீதி மன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், இது போன்ற புது இட ஒதுக்கீடு முயற்சிகள் தேவையில்லை!

இப் பிரிவினர்க்கு, அரசாங்கங்கள் சலுகைகள், பல நலத்திட்டங்கள் அளிப்பதில் யாருக்கும் கருத்து முரண் இல்லை. எனினும் தனியாக இட ஒதுக்கீடு ஏற்பாடு ஏற்புடையது இல்லை!

Thursday, July 31, 2008

"சகிப்புத் தன்மை"

உண்ணா நிலை!
ஊரெங்கும்!
வெள்ளிக்கிழமை விரதம்
போல்!

உழைக்கும் மீனவர்!
தொடரும் துயரம்!
துண்டில் மீன் போல்!
துமிக்கியின் பிடியில்!

இலங்கைக் கடற்படை!
இடைவிடாது!
இழைக்கும் இன்னல்!
சொல்லி மாளாது!

என்றும் ஏந்தும்
கை!
இன்றும்
ஏந்தும்!
ஏதிலி போல்!

சுரந்த சோகம்!
பறந்து சென்றது!
பந்தலின் கீழ்!

காந்திய வழி!

"ஆசிய சோதி"

வேட்டை! நல்ல வேட்டை!
நாட்டில்! நம் காட்டில்!
நல்ல மழை!

பேரம்! நல்ல பேரம்!
நேரம்! நல்ல நேரம்!
"குதிரை பேரம்"

அரேபியாவை விஞ்சும்!
வேகம்!
எம்மிடம்! தாழ்வாரத்தை
தாண்டி!

உள் அரங்கில்!
ஓயாத வேட்டை!
சாயாது பொழுது!

ஆற்றல்! அணு தேவை!
எமக்கு! அட நமக்கு!

யார் சொல்வது!
ஏழை நாம் என்று!

கோடியில் புரளும்!
மக்கள் நாயகம்!
இரண்டாவது நாயகம்!

அழியா சேதி!

பார்வை வேண்டும்!

"கல்விக்கு கண்" தந்தாய்!
வயதாகி விட்டது!
அறுவை செய்!
"ஆடி" தா!

Wednesday, July 16, 2008

"தேவை உண்மை அறியும் ஆணையம்" (மொழி பெயர்ப்பு) தொடர்ச்சி....

100க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் ஆப்கானிசுத்தான், ஈராக் மற்றும் கெளந்த்தானமோ(கியூபாவிற்கு அருகில் உள்ள சிறை கொட்டடி) போன்ற பகுதிகளில்,அமெரிக்க காவலில் கொல்லப்பட்டனர் என்பது ந‌மது நாட்டின் புகழுக்கு,களங்கம் சேர்க்கக் கூடிய நிகழ்வுகள் ஆகும்.

நம்மால் வதைக்கு ஆளானவர்கள்,பெரும்பாலும் யாதும் அறியா அப்பாவிகள்.தார்மீக நெறி இழந்த,திறமையற்ற நிர்வாகத்திற்கு இச் செயல்கள் அழுத்தமான‌ சான்றாகும் என்பதே உண்மையாகும். 'மெக்கிலாட்சி' செய்தி இதழ் நிறுவன குழுமம் வெளியிட்டுள்ள, வதை மற்றும் இதர மீறல்கள் குறித்த,மிக மோசமான தொடர்களில், தாமசு ஒயிட் எனும் முன்னாள் இராணுவத்துறை செயலர் கூறியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகளில், கெளந்த்தானமோ சிறை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே,அதில் அடைக்கப்பட்ட சிறைவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினர், குற்ற நடவடிக்கைக்கு ஏதும் தொடர்பு இல்லாத‌வர்கள் ஆகும், என்பதாகும்.

மேலும், முகம்மது அக்தியார் என்கின்ற சிறைவாசி, அமெரிக்காவிற்கு சார்பானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.எனினும், அமெரிக்க இராணுவத்தினர் அவரை மிகவும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்,என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய மீறல்கள்,செப்டம்பர்,11க்கு பிறகு,பல ஆண்டுகளாக தொடர்ந்தன.காரணம், பெரும்பான்மையான நமது தேசிய நிறுவனங்கள் தங்களது கட‌மையை சரிவர ஆற்றவில்லை என்பதே பகுதி உண்மையாகும்.

சனநாயகக் கட்சி நாட்களை கடத்தியது, விசுவாசமான எதிர்க் கட்சியாக த‌மது கடமையை ஆற்றவில்லை. ஊடகத்துறையில் உள்ள நாங்களும் கட்டுப்பட்ட நாயாகத்தான் இருந்தோம், மாறாக காவல் நாயாக செயல்படவில்லை.நாட்டை, இது போன்ற சூழலில் கைவிட்டு விட்டோம் என்பதே உண்மையாகும்.

இருப்பினும்,சிறைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக சிவில் உரிமைக் குழுக்களும், வழக்குரைஞர்களும் தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டனர்.ஆயினும் சில நீதிபதிகள் நிலைமைகளை அமைதியாக சலனமின்றி கவனித்து வந்தனர். நிர்வாகத்தின் உள்ளே சில பழமைவாதிகள் வெளிப்படையாகப் பேசினர்.

டைம்சு இதழ் எரிக் லிசட்பிலா,"புஷ்ஷின் சட்டங்கள்" எனும் தனது அருமையான நூலில்,"வெளிநாட்டினர் மற்றும் குடியுரிமைச் சேவை ஆணையர்",சேம்சு சிக்லர், அரேபிய‍‍‍‍ அமெரிக்க அண்டை அயலவரை, வீடு வீடாக சென்று சோதனையிட வேண்டும் எனும் திட்டத்திலிருந்து பின் வாங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.இப் புத்தகத்தில், ஒரு கட்டத்தில்,"நம்மிடத்தில் நமக்கென்று அளிக்கப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம் உள்ளது" என்பதைச் சுட்டி, வீடு வீடான சோதனை முறை சட்ட விரோதம் என்று குறிப்பால் உணர்த்தினார்.

நான் மிகவும் போற்றக்கூடிய நிலையில், இராணுவ வழக்குரைஞர்கள் உள்ளனர்.தங்கள் பதவிக்கு ஆபத்து என்கின்ற போதிலும், பெண்டகன் இராணுவத் தலைமையை மறுத்து செயல்பட்டனர்.இதன் காரணமாக, குடிப் பழக்கம் உள்ள தங்கள் நண்பர்களையும் பகைத்துக் கொண்டனர்.பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இசுலாமியர்களுக்காக, இவர்களுக்கு எதிராக சான்றுகள் பெரும்பாலும் தெளிவில்லாமல் உள்ள சூழ்நிலையில், இவர்களுக்காக பரிந்து பேசியவர்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளில் புலனாய்வு செய்திடும் உண்மை அறியும் ஆணையம் என்பது, பாரபட்சமற்ற,மதிப்பு மிக்க இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட உயர் பதவிகளில் உள்ள, இராணுவப் படைப்பிரிவுத் தலைவர்கள்,உயர் நிலையில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டதாக அமைந்திட வேண்டும். இதுபோன்ற பின்னணி உடையவர்களின் கண்டறிதல் அறிக்கை,அரசியலில் அரங்கில் மிகுந்த நம்பகத் தன்மையை நமக்கு ஏற்படுத்தும்.

நான் அறிந்த இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றெந்தப் பிரிவினரைப் போலவும்,நமது மீறல்கள் குறித்து அதிர்ச்சி அடைந்தவர்களாக உள்ளனர்.

Wednesday, July 9, 2008

அமெரிக்காவின் தேவை: உண்மை அறியும் ஆணையம்!

குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர்,
அமெரிக்காவும் போர் குற்றங்கள் புரிந்துள்ள நாடுகளில் ஒன்றுதான் என்று குற்றம் சுமத்திய போதுதான் நமக்கு ந‌ன்கு தெரிய வந்தது, நமது நாட்டிற்கு தேவை, நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது ஒரு புதிய வழி என்பது.

"தற்போதைய அமெரிக்க நிர்வாகம், போர்க் குற்றங்கள் ஏதும் புரியவில்லை எனும் சந்தேகம் நமக்கு எழவேண்டிய அவசியமே இல்லை"

அமெரிக்க மீறல்கள் குறித்து ஈராக்கில் விசாரணை நடத்திய அமெரிக்க இராணுவத்தின் உயர் அதிகாரி, அந்தோணீயோ தகூபா, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் எனும் அமைப்பின் செய்தி அறிக்கையில், அமெரிக்க இராணுவம் நிகழ்த்திய வதை குறித்து,
"வதை செய்யுங்கள் என உத்தரவிட்டவர்கள் மீது, எவ்விதமான நடவடிக்கை எடுத்திட முடியும் என்பதே தற்போது எழும் கேள்வியாகும்"

பொறுப்பேற்பு உணர்ச்சியின் முதல் கட்டம் வழக்குகள் தொடுப்பது என்பதல்ல.ஆன்ம தேடல் வழி, ஒரு தேசிய தூய்மைப்படுத்துதல் பணிக்குத் தலைமை ஏற்றிடும் வாய்ப்பு உள்ள, ஒரு தேசிய உண்மை அறியும் ஆணையம் அமைத்திடுதல் நமக்கு இன்றியமையாத தேவையாகும்.

இதுதான் தென்னாப்பிரிக்க அரசாங்கம் நிறவெறிக் கொள்கைக்குப் பின் உண்மை அறிதல் மற்றும் இணக்க உணர்வு ஆணையம் அமைத்து செயல்பட்ட விதம் ஆகும்.

ஐக்கிய அமெரிக்க நாடும் இனவெறித் தொடர்பாக கெர்னர் ஆணையம் அமைத்து செயல்பட்டது. 1980ல் அமைக்கப்பட்ட ஆணையமும், இரண்டாம் உலகப்போரில் சிறை வைக்கப்பட்ட சப்பானிய அமெரிக்கர்கள் குறித்து ஆராய்ந்தது.

தற்போது, செப்டம்பர் 11 நிகழ்விற்கு பிறகு, நிகழ்ந்தேறிய மீறல்கள் குறித்து புலனாய்வு செய்திட, இதேபோன்ற ஒரு உண்மை அறியும் ஆணையம் அமைத்திட வேண்டிய தேவை உள்ளது.

நம‌க்கு முன்பே தெரியும் ஐக்கிய அமெரிக்க நாடு,நெல்சன் மண்டேலாவை கண்காணிக்கப் படுபவர்கள் பட்டியலில் வைத்திருந்தது. சீன‌ இராணுவ‌ம், கொரியப் போரில் அமெரிக்க‌ கைதிகள் மன உறுதியை குலைப்பதற்கு, பயன்படுத்திய புலனாய்வு உத்திகளை பதிவேடுகள் வழி அறிந்து, அமெரிக்க இராணுவமும் பயன்படுத்தி்யது என்றும் அறிய வருகிறது.

எனினும், இப்படிப்பட்ட வதை உத்திகள் மூலம் பொய்யான வாக்குமூலங்கள்தான் பெற முடிந்தது ,என நாம் அறிந்த செய்தியாகும்.

Sunday, July 6, 2008

எரித்துக் கொள்!

அணு ஒப்பந்தம்
அவசியம் எமக்கு!
'சம்சாரம் போல்'

விலைவாசி உயர்வு!
அனைவருக்கும் பொது!
பொறுத்துக்கொள்!
தோழா!

அடுத்தமுறை,
ஆட்சிப் பொறுப்பு தா!
மின்சாரம் தருவேன்!
அடுப்பு எரித்துக் கொள்!
அடி வயிற்றையும்!
தடையில்லாமல்!

Saturday, June 28, 2008

நாட்டுக்குத் தேவை!

வெகு நாட்களாக மூடிக் கிடந்த,'சீவா ருக்மணி திரையரங்கம்' புதுச்சேரி வழுதாவூர் சாலையில்,பழைய 'செயராம்' திரையரங்கத்திற்கு எதிரில்,தற்போது'அட்லேப்'எனும் பெயரில், ரிலையன்சு நிறுவனம் வாங்கி, புதிப்பித்து, 'தசவதாரம்' திரைப்படம் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த திரையரங்கம் அமைக்க,1977ல், அரசாங்கத்திடம் தடையில்லா சான்று கோரியபோது,அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் ஆக, புதுதில்லியிலிருந்து புதுவைக்கு மாற்றலில் வந்திருந்த, திரு.காந்த்,இ.கா.ப.அவர்கள்,பெருகிவரும் புதுவையின் போக்குவரத்தை காரணம் சுட்டி,எதிரெதிரெ இரண்டு திரையரங்கள் அமைத்திட அனுமதி அளிக்க முடியாது என உறுதியான முடிவினை அறிவித்தார்.

எனினும், அரசியல் அழுத்தத்தின் காரணமாக,இரண்டு திரையரங்குகளுக்கும் சொந்தக்காரர்கள்,உயர்சாதி பேராயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக, மக்கள் நலனுக்கு எதிராக, இவ்விரண்டு திரையரங்குகளும் அமைக்கப்பட்டன.

அதில் ஒன்று, உணவகமாகவும், விடுதியாகவும், சுற்றுலா மேம்பாட்டு அரசு மான்யங்களை விழுங்கி, கடன் தொகைகளை சாப்பிட்டு செம்மாந்து நிற்கிறது, தோப்பு துரவுகள் இருந்த இடத்தில்.

புதுச்சேரியின் போக்குவரத்து சிக்கலை, பிரெஞ்சு ஆட்சி வரலாற்றில் இருந்து, அறிவியல் பூர்வமாக பரிசீலனை செய்த முதல் காவல்துறை அதிகாரி‍, திரு. காந்த் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

தாகூர் கலைக்கல்லூரி் பொருளாதாரப் பேரவையின்,ஆண்டு விழாவில்,அவர் பேசியபோது,புதுச்சேரியின் நகரம் திட்டமிட்டு் அமைக்கப்பட்டது.'புல்வார் சாலைகள்',சாலையின் இரு மருங்குகளிலும் மரங்கள் நடப்பட்டு, ஒரு கோழி முட்டை வடிவில், அன்றிருந்த கட்டைவண்டி,இழுவை ரிக்சா, மிதிவண்டி, குறைந்த எண்ணிக்கையிலான மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட போக்குவரத்து நகரம் ஆகும் என்றார்.

1980களில் அவர், மாறிவரும் போக்குவரத்து தேவைகளை கணக்கில் கொண்டு, கருத்தில் இருத்தி, புதுவையின் எதிர்கால போக்குவரத்து பிரச்சனையை, ஆட்சியாளர்கள் அறிவு பூர்வமாக திட்டமிட்டு, கையாள வேண்டும் என்றார்.

ஆனால்,தற்போது மீண்டும் 'அட்லேப்' பெயரில், திரையரங்கம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியை, மக்கள் மீது திணித்துள்ள‌து. நிறைய சலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில்,தேசிய புள்ளி விவரங்கள், புதுச்சேரிக்கு முக்கிய இடத்தை அளித்துள்ளது.

புதுவையின் நகர வளர்ச்சி குறித்து, போக்கு வரத்து நெருக்கடி உள்ளடக்கி, நீண்டகால அடிப்படையில் திட்டமிடுதல் என்பது ஏட்டளவில் மட்டும் உள்ளது.கண்ட இடங்களில் தொழிற்சாலைகள் அமைப்பது; குடியிருப்பு பகுதிகளில் அனுமதிப்பது;நீர் போக்குவரத்து பாதைகளை மறித்து கட்டிடங்கள்; பொழுதுபோக்கு அம்சங்களை அமைப்பது; குளங்களை தூர்ப்பது; ஏரிகளில் அத்து மீறுவது ஆகிய போக்குகள் மிக விரைவாக கட்டுமீறி, புதுவையைச் சுற்றிலும் தன்னல ஆர்வத்தில், பொது நலன்களுக்கு விரோதமாக, தங்கு் தடையின்றி நடைபெறுகிறது.

இத்தகைய மீறல்களை ஒழுங்கு படுத்த‌ வேண்டிய, நீண்ட‌ நெடிய செயல் பொறுப்பு மிக்க,கடமை உள்ள அரசாங்கமே, இப்போது நாட்டுக்குத் தேவை!

வீட்டணி இல்லை!

நீ செய்தால் விமர்சனம்!
நான் செய்தால்?
நீ பேசினால் ஆக்கம்!
நான் பேசினால்?

ஆதரவு என்பதால்!
அனைத்திற்கும்,
ஆமாம்!ஆமாம்!
சாமி ,
என்றாகுமா?

கூட்டணி தானே,
அன்றி!
வீட்டணி இல்லை!

கூட்டணி
ஏக தலைவன்,
பூட்டணி கொள்!
ஏற்குமா?

தளையில்!

உடற்கட்டு குலைந்த‌
மடற்கட்டு தமிழா!
எழுதியே,
நாளும் சாதிக்கிறாய்!

எழுத்தறிந்தவன் சோர்ந்தான்!
அறியாதவன்,
உம் மகுடிப் பேச்சில்!
மணிக்கணக்கில்,
மனம் இழந்து!

மாயையில்
மாமாங்கமாய்!
அடிவருடியாய்!
அடிமைத் தளையில்!

Friday, June 27, 2008

அவித்தார்!

கல்விக் கண் அளிப்பவர்!
அவித்தார்!
குலவிளக்கின்
ஒளியை!
குவளை வீசி!

ஆசு உரியர்!

ஆநிறை மேய்ப்பன்!
கட்டுப்பாடு இழந்து!
கடப்பாடு மறந்து!

Thursday, June 19, 2008

மனசாட்சி!

உலகிற்கு அகிம்சை!
உள்ளூரில்!
உன் ஆட்சிப் பரப்பில்!
ஓர் இனம்!
உன் காலடியில்!

பல பத்தாண்டுகள்!
உரிமைகள் இழந்து!
உடமைகள் தொலைந்து!

அடி உதை உண்டு!
உயிர் வதை கண்டு!
உறங்கிடும் மனசாட்சி!
உலகத்தின் அரசாட்சி!

சுற்றுலா !

முன்னேற்பாடு செய்யா
முடங்கிய நிர்வாகம்!
முடக்கத்தானையும்
தோற்கடிக்கும்!

தூர்வாரும் பணி
தொலைவில் வைத்து!
கற்கள் கொட்டும்!
காசுகள் புரளும்
'கவின் மிகு கடல்'

ஈச்ச மரம் இளிக்கும்!
குடை விரிக்கும்!
பகலில்!

நீர் ஊற்று!
கடலின் உள்!
இலட்சங்கள்!
ஏப்பம்!

அழகு!

நெற்குவியல் புதுவை!
சொற் குவியல்
பாவலர்!

அழகின் சிரிப்பு!
அணில் ஆட்டம்!
தீர்த்த யாத்திரை!
குயில்கள் கோட்டம்!
கடற்பரப்பு !

கடல் உண்டு!
பரப்பு!
கற்குவியல்!
சிரிப்பாய்! சிரிக்கும்!


பாரதியை, தாசனை,
பரம்பரையை
நாம்
மறந்திலோம்!

ஆண்டுக்கு ஒரு முறை!
ஆராதனை!
ஆதனுக்கு
ஆறுதல்!
மற்றவர்க்கு
தேறுதல்!

Saturday, May 31, 2008

சந்தர்ப்ப வாதம்!

சூழ்ந்திடும்
மரியாதை
இழந்து!
இளித்து!
ஏற்றம்!


எத்தரப்பும்!
எச்சூழலிலும்
நிலவும் !
'சுப்ரபாதம்'

எமக்கு !

வருமானம்!

மொழி மானம்!
இன மானம்!

அடுத்து!
இவையாவும்!

Friday, May 30, 2008

கொள்ளை!

ஆற்று மணல் கொள்ளை!
சேற்று மணல் கொள்ளை!
செம்புலம் செதுக்கி!
நம் புலமா!
ஐயுறவு கொள்ளும்
நிலை!

ஆழம் அகலம்
ஆற்றின் பரப்பை
ஒக்கும்!

இயற்கை மீது
ஆதிக்கம்!
இடைவிடாது
கொள்ளை!

தடை இன்றி
வியாபாரம்!
தண்ணீர் மட்டம்
கீழிறங்கும்!

ஆட்சியர்
எவரும் அலட்சியம்!
காட்சியர் கோலம்!
காலம் போக்கும்!

'பஞ்ச சீலம் '

திபெத்தில் மீறல்!
மீண்டும்!
மாய்த்தனர்!

புத்த பிக்குகள்!
சுய ஆட்சி கோரி
இழந்தனர்!
இன்னுயிரை!

மண்ணுயிர்
மகிமை!
உலக அரங்கில்!

இங்கிருப்போர்
'இச்',' இச்'
அனுதாபம்!
அக்கறை!

குரல் வளை
நெரிக்கும் கொள்கை!
இன வெறி!
காலடியில்!
கவலை இல்லை!

தலைக்கு மேல்!
முரிப்பு தெரிகிறது!

Thursday, May 29, 2008

நீ ஏன்?

தொழுகிறாய்! அழுகிறாய்!
தொலைந்தான் என்றாய்!
எடுத்துக் கொண்டான்
அப்போது!
பறித்துக்கொண்டான்
அப்போது!
செரித்துக் கொண்டாய்!

போட்டான் அவிழ்த்தான்!
மீண்டும் அழைப்பு!
அந்திமக் காலத்தில்!
அங்கீகாரம் கோரி!
அகங்காரம் அகன்ற
நிலை!

ஏற்றுக் கொண்டாய்!
கழற்றியதை
இறக்கினார்!
நள்ளிரவில்!
இரங்குகின்றார்!
ஏக்கத்துடன்!

தேம்புகிறாய்! புலம்புகிறாய்!
புதிதாக இழந்ததைப் போல்!

அவளே அழவில்லை!
நீ ஏன்?

அவளே கலங்கவில்லை!
நீ ஏன்?

அவளே விழையவில்லை!
நீ ஏன்?

அவளே விழித்திருக்கவில்லை!
நீ ஏன்?

அவளே உறங்கி விட்டாள்!
நீ ஏன்?

அவளே இயல்பாய்!
நீ ஏன்?

Tuesday, May 27, 2008

பரிதாபம் பழங்குடி!

போராடும் குச்சார்
உரிமை கோரி!
மீண்டும் உயிர் கொடுக்கிறார்!
துப்பாக்கி குண்டுகளுக்கு
இரையாகி!
துணிவை மட்டும் முன் நிறுத்தி!

காவி அரசியல்
களம் இறங்கி!
படை பலத்துடன்
பழங்குடி இன உரிமை மறுத்து!
பலி கொள்கிறது!
பதவி சுகத்திற்காக!

வாக்குறுதியைக் காப்பாற்றாத
வாக்கு வங்கி அரசியலில்!
அடுத்த கட்ட அரசியலுக்கு
அணி வகுத்து!
தில்லியில் ஆலோசனை!
இராணுவத்தை வரவழைக்க!
சுற்றி வளைக்க!

சொன்னதைச் செய்யாதவர்!
குட்டை அரசியலில்
ஊறும் மட்டை அரசியல்!

குச்சார் இன மக்களுக்கு
மீண்டும் மொட்டை!
அடுத்த தேர்தலைக்
காட்டி!

ஒதுக்கீடு ஒதுக்கி வைப்பு!
பதுங்கி கூட்டம்!
பற்றி எரியும் பிரச்சனை!
பரிதாபம் பழங்குடி!
இராசசுத்தானில்!

Saturday, May 24, 2008

"அமைதிப் பூங்கா"

எவர் இல்லை
என்பது!
நாளுக்கு ரெண்டு
கொலை!

நடுத்தெருவில்!
கடைத்தெருவில்!
அச்சம்!

போவோர் வருவோர்
யாரும் இல்லை!
போக்கு வரத்தும்!
காவல் துறையும்!

அதிகாரம் யாரிடம்?

கற்பழித்தான் !
கொலை செய்தான்!
காவல்துறை!
நீதி மன்றம்!
வழக்கு!
விசாரணை!
வாதம் !
எதிர்வாதம்!
தீர்ப்பு
ஆயுள் தண்டனை!
சிறை !
நீதி வென்றது!
சிறைக்குள்!
கழுத்தறுப்பு!
கருவறுப்பு!
நீதி மன்றத்தையும்
தாண்டி!

சீர் அழித்து வருகின்றனர்.....

ஏரிகளில் தண்ணீர் குடி நீர் பயன்பாட்டுக்கு". உலக நீர் நாளில் உரை. செய்தித் தாள்களில் வண்ணப் படத்துடன் செய்தி, சென்ற ஆண்டு மார்ச் 21ல்.

"ஊசுட்டேரியில் மீன் பிடிக்க ஏலம், கோர்க்காடு ஏரியில் மீன் பிடிக்க ஏலம்", "கிருமாம்பாக்கம் ஏரியில் இறால் வளர்ப்பு, தனியார் முயற்சி". இதுவும் செய்தி. ஊடகங்களில் வலம்.

புதுச்சேரி இயற்கை சூழல், மழை நீரை மட்டுமே நம்பி வாழக்கூடிய அடிப்படை, வடகிழக்கு பருவமழை; தென் மேற்கு பருவமழை; இவை இரண்டுமே நீர் ஆதாரம். தமிழ் நாட்டில் ஓடும் பெண்ணை ஆறு, செஞ்சி ஆறு ஆகியவை நீர் பிடிப்பு பகுதிகளாக, புதுவையில் அமைந்துள்ள ஏரிகளுக்கு, காலங் காலமாக ஊட்டம் அளித்து வருகிறது.

பருவ மழை என்பது நிச்சயமற்றத் தன்மை உடையது. மேல் தண்ணீரைத் தரும் ஏரிகள், குளங்கள், கிணறுகள், மக்களுக்கு வேளாண்மைக்கும், குடி நீருக்கும் வாழ்வளித்து வருகிறது.

எனினும் அரசாங்கம், 1968- 69ல் வறட்சி ஏற்பட்டு, புதுவை மக்கள் அல்லல் பட்டதை மறந்து விட்டதாக தெரிகிறது, 1972ல் மத்திய நிலத்தடி நீர் வாரியம் புதுவையில் பெருகி வரும் நீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஆழ் குழாய் கிணறுகளை அமைத்தது.

அதிக அளவில் நீர் தேவை பெருகியதற்கு ஏற்ப, நீர் மேலாண்மைத் திட்டங்கள் இதய பூர்வ முயற்சியாக, நடவடிக்கையாக, புதுவை அரசு மேற் கொள்ள வில்லை. மாறாக, நீர் அதிக அளவில் உறிஞ்சும், நீர்த் தேவை அதிகம் உள்ள தொழிற்சாலகள், எடுத்துக்காட்டாக, காகித தொழிற்சாலைகள்; அல்கலித் தொழிற்சாலைகள்; குளேரைட் தொழிற்சாலைகள்; வேதியற் தொழிற்சாலைகள் ஆகியவைகள் நல்ல விளை நிலங்களுக்கு அருகில்; ஆற்றங்கரைகளில்; செம்மண் நீர் பிடுப்பு பகுதிகளில்; கடற்கரைக்கு அருகில் அமைத்து ,அதன் கழிவுகளை அரவமின்றி கடலிலும் , ஆற்றிலும், நிலத்தடி நீரிலும், தொடர்ச்சியாக விட்டு, புதுவையின் நீர் ஆதாரத்தை பெரிதும் சீர் அழித்து வருகின்றனர்.

Saturday, May 17, 2008

தேடி!

வெப்பமிகு சூழல்!
வேக வைக்கும்
அறை!

வெறுப்புக்கு வேள்வி!
வேறேதும்
எழவில்லை!
கேள்வி
ஒன்றைத் தவிர!

உன்னை மட்டும்
உணர்ந்தேன்!
ஒன்றிற்காக!

ஓயாத இரைச்சல்!
மன வெளியில்!

ஓராயிரம் இரவுகள்!
பகல் பொழுதைத் தாண்டி!
சாயாத பொழுது

சாங்கியம் தேடி!

இருத்தலியல்!

அடைமொழி அரசியல்!
வெறுப்பு!

நடைமொழி
அதன் வழி!

நான்!
என்ன செய்ய!

'இரு வேறு'
உலகம்!

திருத்தம்!

முத்துக் குளித்தேன்!
எடுத்தேன்!
பித்துக்குளி ஆனதேன்!
பின் பாதி!
உணர்ந்தேன்!
பிழை திருத்தம்!
பெரும்பாடானதே!

Thursday, May 8, 2008

ஆழமானது!

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது!
செர்மன் இணைந்தது!
உத்தபுரம் தடுப்பு சுவர்
இடிக்கப்பட்டது!
பிரிவினை ஆழமானது!

சுவர்களை விட
மனத் திரைகள்!
வள்ளலார் நீக்கச் சொன்னது!
அழுக்கேறியுள்ளது!

மனச் சிறைகளிலிருந்து
விடுபடுவோம்!
சிறார்களையாவது
காப்போம்!

சாதியத் தீயை
சந்ததிகளுக்கு
இனிமேலும்!
உரிமையாய் அளிக்கமாட்டோம்!
தமிழன் எனும் அடையாளம்
உறுதி செய்வோம்!

Monday, April 14, 2008

"காக்கா பூன் வித்தை காட்டறியா"?

"காக்கா பூன் வித்தை காட்டறியா"? வெகு காலத்திற்கு முன் அம்மா பேச்சில் வெளிப்படும் எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக, வீட்டிற்குள் விளையாடிய சொற்றொடர்கள். தற்போது முதுமையின் போட்டியில், பயன்பாடு குறைந்த சொல்லாடல்கள்.

"மரமூஞ்சி,சிங்கிளி,போக்கத்தவன்,", "ஒரு ரூபா குடுத்துட்டு ஓயாம அடிப்பான்", வேலைக்காரன் திறமையை வெயிலில் பாரு" போன்ற எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் மற்றும் மரபுச் சொற்கள் பயன்பாடு இல்லாமல் வழக்கழிந்து போய் உள்ளன.

அப்பா, ஓயாமல் சிகரெட் பிடித்த காலத்தில், சார்மினார் பிரியர், காட்டமான புகை.அனைவரின் வற்புறுத்தல் இவற்றிற்கிடையே 'கத்தரிக்கோல் பிராண்டுக்கு மாறியவர். புகைப்புக்கு பின் தூக்கி எறியப்படும் பக்கைகளின் உள்ளே இருக்கும் "காக்கா பூன்" தாள், சல சல என சத்தம் எழுப்பும் 'சிகினா தாள்'

இவ்வாறு, சல சலப்பு செய்யும் செயலைக் குறிக்கும், பயன்பாடாக குறிக்கப்பட்டது. ஆங்கிலேய மொழி பயன்பாட்டில் "காக்கபோனி" ஒத்தது ஆகும் எனலாம்.

Saturday, March 22, 2008

சிறைக் கைதிகள்

மனித உரிமை மீறல்

சிறைக் கைதிகள் இந்தியர் ஆனாலும், பாக்கிசுத்தானியர் ஆனாலும் கொட்டடிகளில் ஆண்டுக் கணக்கில் வாடுவது, இறப்பது என்பது வெகு காலமாக வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் கொடுமை ஆகும்.சில காலமாக, அதுவும் இந்திய மனித உரிமைக் குழுக்கள், பாக்கிசுத்தான் மனித உரிமைக் குழுக்கள், இரு நாட்டு நண்பர்கள் கழகம் ஆகியவைகள் முன் முயற்சியில் குறிப்பாக, அசுமா சகாங்கீர் போன்ற, உலக நாடுகள் அறியப்பட்ட பாக்கிசுத்தான் மனித உரிமைப் போராளி ஆகியோரின் தொடர் அணுகு முறையினால் பலர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆயினும் இரு நாடுகளும் கைதிகள் பரிமாற்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய அடிகள் ஏராளம்.அங்கொன்றும் இங்கொன்றும் ஆக விடுவிக்கப்படும் கைதிகள் போக, அரச தந்திர மட்டத்தில் அக்கறையாக அமர்ந்து பேசி, கைதிகள், மீனவர்கள் ஆக இருந்தாலும் , எல்லை தாண்டி சென்றவர்கள் ஆக இருந்தாலும் கால க் கிரமத்தில், படை வீரர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே விடுதலை செய்யப்பட வேண்டும்

மனம் குழம்பிய நிலையில் சிறைகளில் வாடும் நோயாளிகள் சம்பந்தமாக மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகம் உண்டு.

Friday, March 21, 2008

நீளும்!

பெட்டி மாறும் இங்கே!
அங்கே!
கொட்டிக் குவிப்பார் இங்கே!
அங்கே!

குப்பை மேடுகள்
கூனிக் குறுகும்!
குறைகள்!

அணி சேர்க்கை!
இப்பக்கம்!
அப்பக்கம்!
காவடி சுமந்து!

பார்வையாளர்
சமரசம்!
இரு தரப்பும்
இருப்பைக் கொட்டி!

பாதாளம் வரை!
பாய்ந்தும்!
வேதாளம் மீண்டும்
முருங்கை மரம்!

கதை நீளும்!
காவியம் தோற்கும்!
பாவியம்!

நாயகம்!
சனங்களுக்கில்லை!

Thursday, March 13, 2008

வடுக்கள்!

புரிந்தேன் இல்லை!
உள்ளம்!

திறந்தேன் இல்லை!
நீ ஆயினும்!

மறந்தேன்!
மாயம்!

உள் வடுக்கள்!
உலகம் அறியா!

ஒளிர்ந்திடும்!
கண் சிமிட்டி!

அம்பலம்!

நாதியற்றாய்! நடுத்தெருவானாய்!
வீதியுற்றாய்! விதியை எண்ணி!
ஆதி காலந்தொட்டே!

அன்னியர் வருடியாய்!
புண்ணியர் பாதங்களில்!
பண்ணிய பாவங்களை
மறந்து!

போன பெருமையைப்
பேசிக் களித்தாய்!

எட்டி நின்று!
எழுந்து நிற்கும்
எம் தோழர்!

உமக்கு எட்டியாய்!
பெட்டி பாம்பானாய்!

மகுடியைத்தேடி
உம் ஆட்டம்!
பகடியைப் பாராது
பகடானாய்!

வல்லூறுகளின் வதையில்!
வாள் வலி தேடி!
நாடி நரம்புகளில்

சூடு ஏற்றி!
நம்பிகை அளித்து!

தும்பிகையானை
தொலைவில் வைத்து!
துமிக்கியின் முன்
எந்திரக் கூட்டங்களின்
முன்!

தந்திரம் பயின்று!
திறம் கூட்டி!
தமிழ் நிலம் காட்டி!

தன்னை இழந்து
மண்ணை மீட்கும்!
மாட்சிமைப் போரில்!

தன் பெருமை கூறி!
தன் நிலைக் காட்டாது
கவனமாக!
தமிழ் அடையாளம்
என்பாய்!

அடுத்தவன் சிரிக்க!
அம்பலம்!
உன் பெருமை!

Sunday, March 2, 2008

ஒத்தாசை !

எண்ண ஓட்டம்!
எந்திரத்தை தாண்டி!
மந்திரத்தை வேண்டி!

விசை அமுக்கினேன்!
வேகமாக!
நிமையங்கள்!
அவை செல்லும்!
விசையிலே!
திசையிலே!

எமக்காக ஒத்தாசை இல்லை!
எவருக்காகவும் !
சார்பு இல்லை!

அதன் வழிப் பயணம்!
அணு அளவும்!
பிசகாமல்!

உறுதியுடன்!

எல்லாம் இன்பமயம் அப்போது!
எல்லாம் உலகமயம் இப்போது!
உறவும் கூட வியாபாரம்!
கரவும் தரவும் கைகோர்த்து!
காலம் தோற்கும் வேகம்!

தடையேதும் இல்லை!
தாராளவாதம்!
எல்லைகளைக் கடந்து
தொல்லைகள்!

தொகை தொகையாக!
அறிந்திலோம் ஆயினும்!
துளிர்த்திடும் நம்பிக்கை!

துயரம் விரட்டிட!
தூளிகளை விட்டு!
இறங்குவோம்!
ஆளிகள் போல்
உறுதியுடன்!

உளவு செயற்கை கோள்!

குப்பைத் தொட்டி ஆக்கினாய்
பூவுலகை!
போதாது என்று
வெப்பம் சேர்த்தாய்!
வேகமாய்!

உலகைக் கெடுத்தது
போதாது என்று !
வெளியைக் கெடுத்து
வருகிறாய்!
யாருக்கும் தெரியாமல்!
ஊருக்கும் புரியாமல்!

உளவுக்காக விண்ணில்!
எண்ணிலா
செயற்கை கோள்கள்!
அடுத்த நாட்டின்
அந்தரங்கத்தை
அரவமின்றி
ஆயும் உணர்ச்சி!
காணும் கிளர்ச்சி!

குட்டு பட்டு விட்டால்!
குண்டு விட்டு!
கண்டம் பாய்ந்து !
தீக்கிரையாக்கும் வித்தை!


விண்வெளியைப் பாழ்படுத்தும்
தன்னதிகார வெறி !
அறிவியல் முதிர்ச்சி!
ஆராவரம்!
தொழில்நுட்பம்!

மண்பதை மாசு முடிந்தது!
விண்பதை மாசு ஆரம்பம்!
எதிலும் குப்பை சேர்க்கும்!
எம் திறமை!
வெளியிலும்!
கொடியேற்றம்!

Monday, February 25, 2008

"வழக்கறிஞர்"

கறுப்பு அங்கி மாட்டியதால்!
வெறுப்பும் கூடியதோ!
கொன்ற மதிப்புடன்!
சென்றது!
மன்ற மதிப்பும்!
நின்ற பெருமையும்!

தொழிலுக்கும்!

வழக்குத் தொழிலுக்கு
இழுக்கு சேர்த்தாய்!
செல்லும் போக்கு
வெளிப்படுத்தினாய்!

சட்டத்தை மீறும்
சக்திகளுடன் கூடினாய்!
குலவினாய்!
சகதிகள் வாழ்க்கையாய்!
கைதிகளுடன் !
கை கோர்த்து!

வீதி மன்றம் தொடங்கி
நீதி மன்றம் வரை!
நீட்டி நடந்தாய்!
அறிவை இழந்து!
வாளுடன் கோலுடன்!

வம்பு வழக்கு
செய்பவர் கூடி!
தெம்பு வழக்காடினாய்!
அன்பு இழந்தாய்!
அடிமை புத்தியாய்!
அய்ந்தாம் படையுடன்!

ஆயுதம் சுமந்தாய்!
ஆக்கம் சேர்த்தாய்!
போக்கை மாற்றி!
போய் விழுந்தாய்!

மாண்பு இழந்து!
மரியாதை தொலைத்து!
கூன் முதுகுடன்
கூண்டில் நின்றாய்!

வான் பழிக்கும்
வீண் பழி ஏற்றாய்!
வீதியில் நின்றாய்!
சாதி சனங்களை
தொலைத்து!

பாதை மாறி
பாதியானாய்!
பாழ்பட்டு நின்றாய்!

உம் தொழிலுக்கும்!
ஊறு விளைவித்தாய்!
நேயம் மறந்து!
தேய்ந்தாய்!

Sunday, February 17, 2008

அமைதியாக அழிந்து வரும் மொழிகள்

சான் நோபல் வில்போர்ட்

மொழியாக்கம்.மு.முத்துக்கண்ணு

தற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது.

சில மொழிகள், எஞ்சியுள்ள அம்மொழி பேசும் ஒருவரின் இறப்புடன், உடனடியாக மறைந்து போகின்றன. இதர மொழிகள், இரு மொழி கலாச்சார சூழலில் படிப்படியாக ,அழிந்து போகின்றன. குறிப்பாக, பூர்வீக மொழிகள், பள்ளியில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, சந்தையில் செல்வாக்கு செலுத்தும் மொழி, தொலைக் காட்சியில் ஆட்சி செய்யும் மொழிகளால், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

மிக விரைவாக மொழிகள் அழிந்து போகும் ஐந்து பகுதிகளாக, அண்மையில் ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. வடக்கு ஆசுத்திரேலியா, மத்திய தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் உயர் பசிபிக் கடற்கரை மண்டலம், கிழக்கு சைபீரியா, ஒக்லகோமா மற்றும் தென் மேற்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் அனைத்திலும், பலவகையான மொழிகள் பேசும் பூர்வீகக் குடிகள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

இவ்வாய்வு, தேசிய நிலநூல் கழகம் மற்றும் அழியும் நிலையில் உள்ள வாழும் மொழிகள் ஆய்வு நிறுவனத்தின், கள ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இக் கண்டுபிடிப்புகள், தேசிய நிலம் மற்றும் மொழி குறித்த வலைப் பதிவில் விவரிக்கப் பட்டுள்ளது.

ஒழுங்காகுமோ?

இனம் அழிகிறது!
இன்றும் அன்றும்!
இலங்கையில்!

ஏன்? என்று கேட்பார்
இல்லை!
இங்கே!

நீ யார்?
உமக்கு அவர்
சொந்தம் இல்லையா?
பந்தம் தொல்லையா?

அடுத்தவர் உரிமைக்கு
விழா எடுக்கும்!
உம் முகம்!
பார்த்துக் கொள்
பளிங்கில்!

உலகத்திற்கு
உன் ஆதரவு!
உன் உறவுக்கு!
முகம் காட்ட,
தயக்கம் ஏன்?

தடை ஆயிரமாயிரம்!
சமாதானம்
ஆகாது!

உன் தடை!
உள் தடை!
உணர்ந்து கொள்!

நாம் அடித்தால் அநியாயம்!
அவன் அடித்தால் நியாயம் !
எப்படி?

உம்மவர் குழந்தைகள் உயர்ந்தவர்!
எம்மவர் குழந்தைகள் தாழ்ந்தவர்!
சமமற்ற போராட்டம்!
யார் பக்கம் நீ?

மனசாட்சியே!
உலக சாட்சியே!
உறங்கலாமா?

ஒரு கண் பார்வை
ஒழுங்காகுமோ?

Wednesday, February 13, 2008

"யானையைக் காப்போம்"

எலிகளாய் இருந்திருந்தால்
வலைகளில் தங்கியிருப்போம்!
நாய்களாய் இருந்திருந்தால்
தெருக்களில் திரிந்திருப்போம் !
பருக்கைகள் கிடைத்திருக்கும் !

எச்ச உணவு நிலைத்திருக்கும்
வாழ்க்கை ஓடியிருக்கும் !
கோவிலில் இருந்திருந்தால்
கோரம் நிகழ்ந்திருக்காது !

இயற்கையை நேசித்தோம் !
சூழலை சுவாசித்தோம் !
எம் இருப்பிடம்
எம்மை விட்டு
நீங்கியது !
தண்ணீரும் இல்லை!
உணவும் இல்லை !

தேடித் திரிந்தோம்!
விரட்டி அடித்தார்!
வேறு கதியில்லை!
குழவியைச் சுமந்தேன்!

சூழ்ந்த கதி!
தொடர்ந்த வாழ்க்கையை!
முற்றுப் புள்ளி வைத்தது !
தொடர் வண்டி!

எம்மைச் சிதைத்தது கூட
எமக்கு வலியில்லை!
எம் சந்ததியை,
கருவறையிலிருந்து
பிய்த்து எடுத்து ,
எம் கண் முன்னே ,
வெடித்து சிதைத்த,
உம் வெறி!
வெடிகுண்டும் தோற்கும்!

Friday, February 8, 2008

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை: தொடர்ச்சி

மூர்க்கத்தனமான கொலை பாதக செயல் அரங்கேறிய போது 4, 5 மணி நேரத்திற்கு, மாநிலத்தின் அரசியல் நிர்வாக அதிகார மையத்தின் பகுதியான கவுகாத்தியில், அரசாங்கத்தின் அதிகாரிகள், குறிப்பிடத்தக்க அளவில் வருகையில் இல்லை.

மாநில அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கொடூரமான 'கொலை பாதகச் சடங்கு' மலைவாழ் மக்கள் மீது நிறைவேற இடமளித்தது.வாக்கு வாங்கி அரசியலின் மிக மோசமான நிகழ்வாக இது அமைந்தது.

கோரிக்கை ஊர்வலம் வன்முறையில் ஈடுபடும் நோக்கம் ஏதும் இன்றி சென்றதாகவும், உறுப்பினர்கள் சிலரால் நிகழ்ந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினர்.

அரசாங்கம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வன்முறைக்கு துணை போனது பின்வருமாறு :

1. மலைவாழ் மக்கள் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டது அரசங்கத்தால் மறுக்கப்பட்டது.

2. கூட்டம் நடத்தும் போது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை

3. ஆர்ப்பாட்டம் செய்து ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, காவல்துறை அதனை கட்டுப்படுத்த, அனுப்பி வைக்கப்படவில்லை.

4. பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையை குறைத்து காண்பித்து, வன்முறையாளர்களை அரசாங்கம் காப்பாற்றியது.

5. காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட, சரியான மருத்துவம் செய்திடாமல், அவர்களை மருதுவமனைகளில் இருந்து வெளியேற்றியது.

6. ஆரம்பத்தில் கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.சி.பி.ஐ விசாரணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

7.அதிக எண்ணிக்கையிலான வழக்குகள், ஆர்ப்பாட்டக்காரர்களான, மலைவாழ் மக்கள் மீது மட்டும் போடப்பட்டது. உள்ளூர்வாசிகள் மீது குறைவான வழக்குகளே போடப்பட்டன.

Thursday, February 7, 2008

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை:

24, நவம்பர், 2007- கவுகாத்தியில் கற்பழிக்கப்பட்ட மனித சமுதாயம்

20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 3 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், ஒரு பெண் பலவந்தமாக நெடுஞ்சாலையில் ஆடை அவிழ்க்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார். சுமார் முன்னூறு பேர் காயம் அடைந்தனர். அதில் 10பேர் நிலை கவலைக்கு இடமாக உள்ளது.45 போராட்டக்காரர்கள் காணாமல் போயினர்.
இவை யாவும் குல், சந்தால், முண்டா ஆகிய பழங்குடியினர்-அசாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வரும் ஆதிவாசிகள் சமுதாயம் ஆகும்.

இவர்கள் 24, நவம்பர், 2007ல் திச்பூர், கவுகாத்தி பகுதியில் அரசு செயலகத்தை நோக்கி தமது நீண்ட நாள் கோரிக்கையான, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை ஊர்வலம் சென்றனர்.வழியில் ஊர்வலத்தினர் சிலர் வன்முறையில் ஈடுபட்டு, சட்டமன்ற விடுதியின் கடைசி வாயில் அருகே உள்ள கடைகள், வாகனங்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர்.பாத சாரிகள் சிலரும் தாக்குதலுக்கு உள்ளானார்.

சில உள்ளூர்வாசிகள் பழிக்கு பழியாக, ஆதிவாசிகளுக்கு பாடம் புகட்டும் முறையிலே, மனிதாபிமானம் மறந்து, வெறி கொண்டு, உள்ளே உறையும் மிருகம் , மிருகத்தனமாக, அப்பாவி மக்களை கொன்று குவித்தனர், அவர்கள் உடல்களை எட்டி உதைத்து மகிழ்ந்தனர்.

Monday, February 4, 2008

பொதிகளை மாற்றி!

கழட்டினேன் ,
கடினமாயினும்
மீண்டும்!
சுழலவில்லை!
சுழல் விதி
புரியவில்லை!

சுட்டினேன்,
சுறு சுறுப்பும்
கூடவில்லை!

சீர் செய் என்றேன்!
சீராக்கிட!
மீண்டும் நிறுத்திட!
நிலை மாற்றம்
இல்லை!

விலை கேட்கிறார்!
விடியாது!
முடியாது!

விதிகளை மாற்று!
சுதிகளை ஏற்று!
பொதிகளை மாற்றி!

போலி மோதல் வழக்கில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெற்றி - 2

தண்டனை அடைந்தவர்களில், மோதல் கொலை சிறப்பு தேர்ச்சியாளார் என்றழைக்கப்படும், சட்டிசுகர் பிரிசேழ் திவாரி மற்றும் நாசர் சித்திக் ஆகிய இருவரும், குடியரசுத் தலைவர் விருதும், சிறப்பு பதவி உயர்வும் அளிக்கப்பட்டவர்கள், என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம், சட்டிசுகார் கிளை அமைத்த, இந்த உண்மை அறியும் குழுவிற்கு, டாக்டர்.பினாய்க் சென் மற்றும் வழக்கறிஞர் அமர்நாத் பாண்டே உறுபினர்களாக இருந்தனர்.சர்குசா மாவட்டத்தில் முதல் போலி மோதல் வழக்கில், உண்மை அறியும் குழு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் பலியானவர்கள் சாதரண கிராமவாசிகள், தமது கைகளை மேலே தூக்கிய பிறகு, கொடூரமாக திவாரி மற்றும் சித்திக் தலைமையிலான காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதை, தெளிவாக எண்பித்தது.

அமர்நாத் பாண்டே , மூத்த வழக்கறிஞரும் இந்திய கம்யூனிசுடு கட்சியைச் சேர்ந்தவரும் ஆவார். இவர், மோதல் கொலை தொடர்பாக நடவடிக்கை எடுத்திட அரசாங்கத்திடம் முறையிட்டு பலன் ஏதும் இல்லாத காரணத்தினால், சம்பந்தப்பட்ட வழக்கு மன்றத்தில் புகார் பதிவு செய்தார். எதிர் நிலையாக அரசாங்கம் ஆனது, குற்றவாளிகளான காவல் துறையினருக்கு பதக்கங்கள் அளித்து, மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நம்பிக்கை உணர்வு இழப்பு ஏற்படுத்தியது.

Saturday, February 2, 2008

போலி மோதல் வழக்கில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்திற்கு வெற்றி -1

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சட்டிசுகார் கிளை, தார்மீக சட்டரீதியிலான வெற்றியை, இன்று அம்பிகாபூர், முதல் குற்றவியல் நீதி மன்ற தீர்ப்பின் வழியாக பெற்றது. 5 அப்பாவி கிராமவாசிகள் "நக்சலைட்கள்" என்ற பேரில், கோத்தாரி காவல் நிலைய வரம்பில், சங்கெர்கர்க் பகுதியில், 05.03.2004ல் போலி மோதல் போர்வையில் கொல்லப்பட்டனர். இவ் வழக்கில் எட்டு காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 201 மற்றும் 34ன் கீழ் தண்டிக்கப்பட்டனர்.

Friday, January 25, 2008

பித்தன்

கிழிந்த ஆடை!
கிழியாத உள்ளம்!
மெலிந்த உடல் !
மெலியாத எண்ணம் !
தெளிந்த செயல் !
தெளியாத மனம் !
அறியாத உலகம் !

Wednesday, January 23, 2008

வேகத் தடை

தடைகள் உடைபடும்
வீதிகளில்!
மேடும் சமமாகும்
மேதகு சவாரியில்!
மூன்றாம்
எழுச்சி ,
எமக்கு?

Sunday, January 20, 2008

காவல் துறை ஊழல்- 4

மும்பாய்: மரின் டிரைவ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர், சுனில் மொரே, பதின் பருவ பெண்ணை, 21, ஏப்ரல், 2005ல், மேற்படி காவல் நிலையத்தில் கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக, 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டார்.உருவாய் 26,500 அபராத தொகையாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.


சண்டிகார்: போதை மருந்துகள் கடத்தும் கும்பலிடம் இலஞ்சம் வாங்கிய காவல்துறையினர் குறித்து , செய்தி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டதை தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தொடர்புடைய நான்கு காவலர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிந்தனர்.இரு காவலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.


நாட்டு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த, பிரபல குற்ற வழக்குகள்,நமது நாட்டின் நீதித்துறை அமைப்பு பற்றியும், தொடரும் ஊழல் நிலைமை குறித்தும் பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

Saturday, January 19, 2008

காவல் துறை ஊழல்- 3

இனிவரும் பக்கங்களில் காவல் துறை ஊழல் தொடர்பான வழக்குகள் சிலவற்றை பார்ப்போம்:


மும்பாய்: 5 காவலர்கள் ராய்காட் பகுதியில் இருந்து மும்பாய்க்கு ஆயுதங்கள் கடத்த உதவியதின் காரணமாக, 1993ல் மும்பாய் 12 தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமாயிருந்தார்கள். என இப் பயங்கரவாத செயலுக்கு, 7 இலட்சம் இலஞ்சம் பெற்றுள்ளனர் 'தடா' வழக்கு மன்றம் என நிரூபித்தது


தில்லி: சராய் கலே கான் காவல் நிலையப் பொறுப்பு உதவி ஆய்வாளார், இலஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. காவலர்களால் கைது செய்யப்பட்டார். உருவாய் 20000 த்துடன் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரது அலுவலக மேசையில் இருந்து உருவாய் 50000 மற்றும் 100 கிராம் போதை மருந்து கண்டுபிடுத்து எடுக்கப்பட்டது .மற்றொரு திருட்டு வழக்கில் பிணையல் அளிப்பதற்காக, உருவாய் 2 இலட்சம் இலஞ்சம் , கைது செய்யப்பட்டவரின் தாயாரிடம் காவல் உதவியாளர், கோரி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இலஞ்சத் தொகை, தவணை முறையில் அளித்திட ஒப்புக்கொள்ளப்பட்டது.


உத்தரப்பிரதேசம்: 3 காவலர்கள் வழிப் போக்கரான கணவன் மனைவியை, 'பெரிய நொய்டா பகுதியில்' வழி மறித்து துன்புறுத்திய வழக்கில், சிறை தண்டனை அளிக்கப்பட்டனர். இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 323ன் கீழ் காயம் ஏற்படுத்துதல், 354- குற்றம் ஏற்படுத்தி பெண் ஒருவரை மானபங்கப் படுத்த முயற்சி செய்வது, 504-அமைதியை குலைக்கும் நோக்கில் அவதூறு செய்வது, 506- அச்சுறுத்தல், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Thursday, January 17, 2008

காவல் துறை ஊழல்- 2

தமது நலன்களுக்காக அரசியல் தலைமை தவறான அதிகாரிகளை உயர்ந்த காவல் துறை பதவிகளில் அமர்த்தி காரியம் சாதித்துக் கொள்கிறது.பொதுவாக ஊழல் என்பது, இலஞ்சம் வாங்குவது,பண பரிவர்த்தனை அல்லது தப்பு செய்பவர்களுக்கும் காவல்துறை அகிகாரிகளுக்கும் இடையில் நிகழும் மதிப்பு மிக்க பொருள் கை மாறுவது ஆகிய செயல்களை உள்ளடக்கியது ஆகும்.


இதர குற்றங்கள் போலி மோதல் கொலைகள்,பாலியல் துன்புறுத்தல்,காவல் குற்றங்கள்,வதை செய்தல் தொடங்கி கள்ளத் தனமாக ஆயுதங்கள் பயன்படுதுவது முதலியனவாகும்.


அதிகப்படியான ஊதியம்,மேம்படுத்தப்பட்ட பயிற்சி, போன்ற ஊழலை போக்கும் வளர்ச்சித் திட்டக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தியும் ஊழல் ஒழிந்த பாடில்லை.உள்துறை அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 67% சத வீதத்திற்கு மேல் காவல் துறைக்கு செலவு செய்யப்பட்டாலும், அவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க நடத்தையியல் மற்றும் மனப்போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.


இத்தொகை அல்லாமல் கடந்த மூன்றாண்டுகளாக காவல்துறை நவீன மயத்திற்காக உரு. 800 கோடிக்கு மேல் மாநிலங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும் காவல் அணிகளில் எந்த மட்டத்திலும், நடத்தையியல் முன்னேற்றமும் அரிதாகவே உள்ளது.


ஒரு வகையில் காவல் துறை ஊழலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதால்,அதன் செயல் மனித உரிமைகள் மீறலே ஆகும். தற்பாதுகாப்பு என்பது பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. மேலும், காவல் பாதுகாப்புகள் அதிகரிப்பு, தவறான காவல் துறை வழக்குகள் என்பது அரசியல் சட்டம் பிரிவு 21ன் கீழ் உறுதி செய்துள்ள குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது ஆகவும் அமைகிறது.


போலி மோதல் குற்றங்கள் அதிகரிப்பு, அதிகரித்து வரும் சிறைச்சாலை மரணங்கள் தேவையற்ற, காலதாமதமாகும் புலனாய்வுகள்,குடிமக்களிடையே பாதுகாப்பற்ற சுழலையும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழலையும் மிகவும் அதிகரித்து உள்ளது.


Tuesday, January 15, 2008

காவல் துறை ஊழல் - அர்சிரிகா சிங் -1

ஊழல் என்றால் என்ன?
காவல் அதிகாரத்தை தனிப் பட்ட அல்லது காவல் துறை அமைப்பின் நலனுக்கு அலுவல் ரீதியாக ஒரு காவல் துறை அதிகாரி பயன்படுத்தும் போக்கு, ஊழல் என்று வரையறை செய்து கொள்ளலாம். எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய செய்தி அல்ல இது. பல சிக்கலான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு அம்சத்தில் அனைவருக்கும் புலப்படக் கூடியது, உலக நாடுகளின் பல பகுதிகளிலும் 'விரிவடைந்து சிறக்கிறது'.
எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக,

1.அக நிலையில் நடக்கும் ஊழல்
2.புற நிலையில் நடக்கும் ஊழல்

என பிரித்து ஆராயலாம்.

முதலாவதாக, காவல்துறையின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்குள் செய்து கொள்ளப்படும் சட்ட விரோத ஒப்பந்தங்கள் மற்றும் செயல்கள் ,அக நிலையில் நடக்கும் ஊழல் ஆகும்.

அடுத்து, காவல் துறையின் அதிகாரி ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பொதுமக்களிடம் செய்து கொள்ளப்படும் சட்ட விரோத ஒப்பந்தங்கள் மற்றும் செயல்கள் ,புற நிலையில் நடக்கும் ஊழல் ஆகும்.

காவல்துறை ஊழலில் மிக முக்கிய கூறாக, அதிகார மீறல் அமைகிறது. தன் இலக்கிலிருந்து வழுவி குற்றங்களை தடுப்பதற்கு பதிலாக, ஊக்குவிக்கச் செய்கிறது. துறை நிர்வாகத்தின் ஒவ்வொரு அடுக்கு நிலையிலும், ஊழல் மலிந்து திறமையான, வலிமையான செயல்பாட்டிற்கு தடையாக விளங்குகிறது.

முகாமையான காரணங்களில் ஒன்றாக, தொழில்சார்ந்த திறமையுடன் செயல்படாது , பெரும்பாலும் காவல்துறையினர் அரசியல்மயமாகி நிற்பது ஆகும். அரசியல்வாதிகளால் ஈர்க்கப்பட்டு, பலகீனமான, ஊழலில் திளைத்த அதிகாரிகள், ப தவி அமர்த்தம், மாற்றல் ஆகியவற்றிற்கு உடன் பட்டு, தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொது நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

- தமிழ் வடிவம் -

Monday, January 14, 2008

மோதல் சாவு கலாச்சாரம்- 4

துறை சார்ந்த குற்றங்கள், குறிப்பாக கோழைத்தனம், உத்தரவுளை மதிக்காத போக்கு, கீழ்ப்படியாமை ஆகியவைகள், குடி மக்கள் உரிமைகள் மீறப்படும் பெரிய குற்றங்களிலிருந்து வேறு படுத்தி கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மீதான கடுமையான புகார்கள் குறித்து, குறிப்பாக, மோதல் கொலைகள் தொடர்பாக, ஒரு சுயேச்சையான, காலக் கிரமத்திற்குள் விசாரணை நடத்தக் கூடிய, அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் உள்ள அமைப்பிடம், அளிக்கப்பட வேண்டும்.

செப்டம்பர் 2006 ல், காவல்துறை சீர்திருத்தம் பற்றி உச்ச நீதி மன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில், காவலர் மீது எழும் புகார்கள் குறித்து விசாரிக்கும் சுயேச்சையான அதிகார அமைப்பு அரசாங்கங்கள் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.வெளிப்படையான நடைமுறையில் காவலர்கள் மீதான தீவிரமான புகார்களை விசாரித்திடக்கூடிய, 'காவலர் புகார்கள் விசாரணைக்குழு உறுப்பினர்களை' தேர்வு செய்து அமைத்திட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இவ் வழிகாட்டு முறைகள், நேர்மையான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டால், 'வளர்ந்து வரும் மோதல் கொலை' கலாச்சார அலைப் பெருக்கத்தை கட்டுப்படுத்திட முடியும். தமது எட்டாவது அறிக்கையில், தேசிய காவல் ஆணையம்,"காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 132 மற்றும் 197ன் கீழ் அளிக்கப்படும் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்" என்று பரிந்துரை செய்துள்ளது.


இயற்றப்படும் எந்த ஒரு புதிய காவல் சட்டத்தின் பிரிவுகளிலும், காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் போட முன் அனுமதி பெறுவது என்பது ,இடம் பெறக்கூடாது. விரைவான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வதற்கு இது பெருந்தடையாக உள்ளது. காவல்துறை நிகழ்த்தும் கொலைகள் தொடர்பாக வழங்கப்படும் வீரப்பதங்கங்கள், விரைவான பதவி உயர்வுகள் போன்ற கண்ணியமற்ற, இகழ்ச்சிக்குரிய நடைமுறை, நிறுத்தப்பட வேண்டும்.


எந்த ஒரு காவல்துறை நடவடிக்கையும்,சுயேச்சையான, நம்பகத்தன்மையுள்ள துறை விசாரணை செய்யப்பட்டு ,மோதல் கொலைகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட அதிகாரம், சட்ட ரீதியிலானாதா மற்றும் நியாயமானதா என்றால் ஒழிய அதனை பாராட்ட இயலாது.இறுதியாக, சனநாயக அமைப்பு என்ற அடிப்படையில் பார்க்கும் போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் குறித்துள்ளவாறு, மக்களின் வாழ்க்கை மற்றும் கண்ணியம் ஆகிய பண்புகளில் மிக உயர்ந்த தரத்தை உறுதி உத்தரவு செய்ய வேண்டிய தலையாய பொறுப்புணர்ச்சி ,அரசியல் தலைமைக்கு உண்டு என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்

இவ்வாறு செய்வதின் வாயிலாக, விதிமுறைகளை சமமாக மதிக்கும் சமுதாயத்திற்கு, நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாத விழுமியங்களை காக்கும் சமுதாயத்திற்கு, ஒரு பெரிய சேவை செய்வது போல் ஆகும்

Sunday, January 13, 2008

சுருங்கிய வாழ்க்கை!

ஒதுங்கினேன்
ஈரத்துடன்!
கொட்டும் மழையில்
கட்டிடம் அருகே!

கால் போன போக்கில்
கடந்தேன்!
கழனியில்லாமல் !
வாய்க்கால் வரப்பு காணாமல் !

நெல் வெளியும் புல் வெளியும்
சுருங்கியது!
சுவடில்லாமல்!

கவடு மாந்தர் கவர்ந்தனர்!
'காலனிகள்' எழுப்பி
எம்மை மறந்தனர்!

தீவனந்தேடி தினந்தோறும்
அலையும்
கோவண வாழ்க்கை!

சுற்று வழி விலகி -2

நன்கு அறிந்த எம் இல்
படுக்கை அறை
கதவு மூடல்
அனுபவ அறிவை
உறுதிப்படுத்தும்.
மூடிய விழிகளில் சந்தேகம்
வெள்ளமென மீளும்,

படுக்கையில் முகம் பதிய
வீழ்ந்து,
படுக்கை அறையில்
மெல்ல நிகழ்ந்திடும்
தலை கீழ் மாற்றம்.

அவன் குரல்,
சினந்த சொற்கள்
மீண்டும் மீண்டும்
என்னை நிந்திக்கிறது.

கூரையில் தெளித்திடும்
மென் மழைத்துளிகள்
கூடிக் கரைந்திடும்
குருவியின் கீதம்.

வெளி விளக்கொன்று
அணைகிறது
மரக்கிளை நிழல்
திட்டு திட்டாக:
திரைச் சீலையில்,
சுவர்களில்
மேற் கூரையில்
மீண்டும் மெல்ல
ஒரு தலை கீழ் மாற்றம்,

அடுத்து:
விசையுடன் வீசும்
காற்று
ஒவ்வொரு முறையும்
தம் பதிவை
பலகணியில் பதித்து
செல்லும்

நினைவுகள்
எம் நனவு நிலையைத்
தட்டி எழுப்பும்
இளமையின் விருப்பு
வெறுப்பற்ற நிலையும்
கற்றலில் கிளர்ச்சியும்,
ஒரு காலத்தில்
கை அளவு அறிவுக்கு
பசியுடன்
ஒருவருக்கொருவர்
அங்கீகாரம் தேடி

அடங்கா வேட்கை
காரின் கதவு
இரைச்சலுடன்
மூடல்,
விசையுடன் கணத்த
காலடி
ஓசைகள் கடக்கின்றன
தாழ்வாரம் கடந்து
மங்கிய ஒளியில்.

பளிச்சிடும் மஞ்சள் ஒளியின்
வெள்ளிக்கீற்று
அடுத்த அறையின்
கதவின் கீழ் வழி
நுழைகிறது
இது போழ்து
உறங்குவது போல் பாசாங்கு
என்னால் செய்ய இயலுமா?
சூடான அவர் சொற்கள்
மறப்பேனா நான்?
மறப்பேனா நான்?

அவரின் உடல் எடை
நெருங்குகிறது
கத கதப்பு அளித்து
படுக்கையில்

- மொழி பெயர்ப்பு

Saturday, January 12, 2008

சுற்று வழி விலகி -1

இலையுதிர் காலம்.
குறுகிடும் பொழுதுகள்
கோடையின் நீட்டிப்பை
குறிப்புணர்த்தும்,

நினைவூட்டல்.
எவையும் எப்போதும்
கடந்து விடவில்லை
உண்மையில்,
நாம் எண்ணுவதைப் போல்.

நம் காலத்து உறவு
நிறைவானதாக முதிர்ச்சியானதாக
அமைந்திட வேண்டும்.

முரட்டு அன்பும்
ஆழ்ந்த உடன்பாட்டின்மையும்
நாம் பட்டறிவது
நமக்கு தேவையில்லை.

நிறமற்ற விழு ஞாயிறு
மலைப் பகுதியில்,
மேலும் குளிர்ந்து சய்ந்திடும்
மாலைப் பொழுதில்.

சேனிசு போசுடாக்-
- ஆசுத்திரேலியா- மொழி பெயர்ப்பு