Sunday, April 22, 2018

கோபமில்லை!




 
ஆண்டவனிடம் கோபமில்லை,
ஆள்பவனிடம்.

மாண்டவனிடம் கோபமில்லை,
மாள்பவனிடம்.

தூண்டியவனிடம் கோபமில்லை,
துவண்டவனிடம்.

வேண்டியவனிடம் கோபமில்லை,
தாண்டியவனிடம்.

தடுத்தவன் மீது கோபமில்லை,
தடுக்கியவனிடம்.

ஒடுக்கியவன் மீது கோபமில்லை,
முடுக்கியவனிடம்.

விலக்கியவன் மீது கோபமில்லை,
விழுந்தவனிடம்.

2 comments:

ரமேஷ்/ Ramesh said...

கவிதை நன்றாக இருக்கிறது.

"வேண்டியவனிடம் கோபமில்லை....தடுத்தவன் மீது கோபமில்லை"
வாக்கிய அமைப்பு வேறுபாட்டில் ஏதும் காரணம் உள்ளதா?

முத்துக்கண்ணு said...

நன்றி