Thursday, February 28, 2019

போரும் அமைதியும்


டாக்டர்.மதன் காந்தி

போர், 
மனிதனின் படைப்பு
கலவரம், போர்......
 யாவும்
மனிதன் ஊன்றிய விதைகள்
அறுவடை ?
இறப்பு

இக் காலம்,
அமைதி பாலங்கள்
கட்டி எழுப்பும்
முதலீட்டுக் காலம்!
போர் ஆயுதங்கள் வடிக்க
 அன்று !
அமைதிப் புன்னகை 
பரவல் 
ஆக்கும் காலமே!


போர், 
மனித இரத்த வெள்ளத்தை
கட்டவிழ்க்கும்
அமைதி, பாரிய
 நன்றாற்றல்
வெளிக் கொணரும்

போர், மனதில் தோன்றும்,
 நிலத்தில் முடியும்

அமைதி, 
நெஞ்சத்தில் தோன்றும்,
சுற்றிலும் அன்பை 
விதைத்திடும்

போர், 
வெறுப்பு நெடி விளை
மரண நஞ்சாம்
அமைதி, 
உமது தலைவிதி மாற்றும்
சஞ்சீவி
போர், மனிதனின் மிகப் பெரிய
முட்டாள்தனம்
அமைதி, மனிதனின் மிக உயர்
 வாழ்நலம்,

ஆம்.

(மொழியாக்கம்)

Tuesday, February 26, 2019

வஞ்சித்தல்




கவிஞர்.ரோஜர் மெக்கெள. இவர் பிரித்தானியக் கவிஞர்.அதிகம் விரும்பப்படும் கவிஞர். 'எளிமையாக தோன்றினாலும், இவர் அசாதாரண ஆற்றல் மிக்கவர்', என 'கார்டியன்' பத்திரிக்கை மதிப்புரை வழங்கியுள்ளது.கவிதை உலகில் நன்கு அறியப்படுபவர். நிறைய இலக்கியங்கள் படைத்துள்ளார். அவர் கவிதையில் ஒன்று, மொழியாக்க முனைப்பில்.



ஒருவித வஞ்சிப்பில் அவள்
ஊமைச் சைகை அளிப்பில்
கடப்பேன் கல் தொலை நான்
இருபது நொடிகளில்.

Sunday, February 24, 2019

ஐம்புலன்கள்



கவிஞர்.ஜீடித் ரயிட், ஆசுத்திரேலிய பெண் கவிஞர். பூர்விகக் குடிகள் மீது கரிசனம் கொண்டு பல கவிதைகளை இயற்றியவர்.இயற்கை, வாழ்க்கை என பல வடிவங்கள் குறித்தும், ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படித்தி; புலம் ஏறி பழங்குடிகளை விளிம்பிற்குத் தள்ளிய சோகம்; அவலங்கள் பற்றியும் எழுதி, மற்றவரை திரும்பிப் பார்க்க வைத்த, ஆளுமை.

மறைந்தாலும், தம் படைப்பிலக்கிய ஆன்மாவில் வாழ்ந்து வருகிறார்.
அவர் கவிதையில் ஒன்று ,எமது மொழியாக்க முயற்சியில்.

ஐம்புலன்களும் இக்கணம் 
அர்த்தம் சேர்த்திடும்
அனைத்து செய்கையும், வருகையும்:
அல்லி சேகரிப்பைப் போல்
கூறுகள் ஒன்றாக என்னுள்
இருளும், ஒளியுமாக,
அந்த அமைதியும்
அந்த காலைப் பொழுதும்,
இவ் வடிவங்கள் அற்றதில் தோன்றி,
ஓர் இலயமாகி ஆட்டங்களில்,
கபடமற்ற அடவில்.

 ஐம்புலன்களில் நானாக
அவை எம்மை சுழற்றிட
அனைத்து ஒலிகளும், மெளனங்களும்,
வடிவங்களும், வண்ணங்களும் அந்த
நெசவாளியின் நூலாக,
அவர் வலை என்னுள் வளர்ந்திட,
நான்அறியாது என்னைக் கடந்து 
தொடர்ந்து செல்ல
சில வடிவம், இல்லாததிலிருந்து 
தோன்றி-
ஆடிடும் ஓர் இலயம்
அது எம்முடையதன்று
  

Tuesday, February 12, 2019

தலைக் கவசம்



போடு என்பார் நாளை முதல்
தேடு என்பார் இன்று முதல்
கோடு போடுவார் ஒருவர்
போடலாம் பிறகென்பார் மற்றொருவர்

தலைக் கவசம் தடுமாறும்
ஓராண்டுக்கு மேல் இடம் மாறும்
இங்கே அங்கே என்று

விபத்து கூடுது தடுக்க வேண்டும்
என்பார்
கவசம் அவசியம் என்பார்
விழிப்புணர்வு அளித்து அணிவிப்போம்
என்பார்

 அதுவரை இருந்தால் ஆதாயம்
அல்லாது போனால் அனுதாபம்
மக்கள் தொகை அதிகம் இல்லையா?

எதைச் செய்வது காவல்!
எதை விடுவது காவல்!
அதைச் செய்வதா?
இதைச் செய்வதா?
அலட்சியம் கொள்வதா?

தடுமாறும் அதிகாரம்
இழு கயிறு போட்டியில்
இடுப்பு இறுக்கும்

தானாகக் கனியும் என்பார்!
தடிகொண்டு அடிப்பேன் என்பார்!


ஈடுபாடு






கவிஞர். ராபர்ட் பிரோஸ்ட்

நெஞ்சம் வேறேந்த ஈடுபாடும்
கொள்ளாது
கடலுக்கு கரையாய் இருப்பதைக்
காட்டிலும்
பெரிதொன்றும் இல்லை-
ஒரு நிலை வலைவைப் பற்றி,
அறா மறுநிலை எண்ணி.

(மொழியாக்கம்)


Saturday, February 9, 2019

'அமில மனிதன்'.

புதுச்சேரி, குயவர்பாளையம், லெனின் வீதியில், போக்குவரத்து சமிக்ஞை அருகில், இடது பக்கத்தில் சாலையோரம். ஓங்கி நின்று, உயிர்வளி அளித்த அரச மரம், இன்று உயிர் இழந்து. பார்த்ததும் பதைத்த உள்ளம், இப்படி வடிகால் தேடியது.


நீ பிறக்கும் முன்
 பிறந்த மரம்
நீ உதிக்கும் முன்
உயர்ந்த மரம்
எவர் வைத்தார் என்றறியேன்
எவர் உடைத்தார்
என்றறிவேன்.

கிளைகள் கழித்த
மின் துறை அறிவேன்.
ஒழிப்பதற்கு முன்னோட்டம்
என்றறியேன்.
செழிப்பை,
கழிப்பில் வைத்த அரசியல்,
மின்மாற்றிக்கு வாழ்வளித்து,

தலைமுறைகள் தழைத்திட,
 ஓங்கி, உயர்ந்து,
ஓய்வின்றி,உயிர்வளி அளித்த
 'அரசின்'
கதை முடித்தான்,
'அமில மனிதன்'.

'சந்தேக மரணம்'
 சட்டம்
 'முதல் தகவல் அறிக்கை'?

குறும்பாடல்




கவிஞர். டொரோதி பார்கர்

ஒரு காலத்தில் நான் இளமையாக உண்மையாய் இருந்தபோது,
யாரோ என்னை சோகத்தில் ஆழ்த்தினர்-
நொறுங்குமை எம் நெஞ்சம் இரண்டாக்கி;
அது, மிகவும் மோசமானது.

பொசுப்பற்றவருக்கு காதல்,
காதல் ஒரு சாபம்.
ஒரு காலத்தில் உடைத்தேன் ஓர் இதயத்தை;
அது, எண்ணுகிறேன், மிக மோசமானது.

(மொழியாக்கம்)