Sunday, February 24, 2019

ஐம்புலன்கள்



கவிஞர்.ஜீடித் ரயிட், ஆசுத்திரேலிய பெண் கவிஞர். பூர்விகக் குடிகள் மீது கரிசனம் கொண்டு பல கவிதைகளை இயற்றியவர்.இயற்கை, வாழ்க்கை என பல வடிவங்கள் குறித்தும், ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படித்தி; புலம் ஏறி பழங்குடிகளை விளிம்பிற்குத் தள்ளிய சோகம்; அவலங்கள் பற்றியும் எழுதி, மற்றவரை திரும்பிப் பார்க்க வைத்த, ஆளுமை.

மறைந்தாலும், தம் படைப்பிலக்கிய ஆன்மாவில் வாழ்ந்து வருகிறார்.
அவர் கவிதையில் ஒன்று ,எமது மொழியாக்க முயற்சியில்.

ஐம்புலன்களும் இக்கணம் 
அர்த்தம் சேர்த்திடும்
அனைத்து செய்கையும், வருகையும்:
அல்லி சேகரிப்பைப் போல்
கூறுகள் ஒன்றாக என்னுள்
இருளும், ஒளியுமாக,
அந்த அமைதியும்
அந்த காலைப் பொழுதும்,
இவ் வடிவங்கள் அற்றதில் தோன்றி,
ஓர் இலயமாகி ஆட்டங்களில்,
கபடமற்ற அடவில்.

 ஐம்புலன்களில் நானாக
அவை எம்மை சுழற்றிட
அனைத்து ஒலிகளும், மெளனங்களும்,
வடிவங்களும், வண்ணங்களும் அந்த
நெசவாளியின் நூலாக,
அவர் வலை என்னுள் வளர்ந்திட,
நான்அறியாது என்னைக் கடந்து 
தொடர்ந்து செல்ல
சில வடிவம், இல்லாததிலிருந்து 
தோன்றி-
ஆடிடும் ஓர் இலயம்
அது எம்முடையதன்று
  

No comments: