Wednesday, March 27, 2019

இரவின் அமைதி






கவிஞர்..ஆர்தர் பேல்டன்

அமைதி தாரகைகள் பெரிதாக, தெளிவாக மின்னிடும்,
பிறை நிலா, கவிழ் கிண்ணம் போல் தொங்கி;
அலைவற்று, அசைவற்று,
என்னால்  கேட்டிட இயலும்
கிளர்ந்திடும் சிந்தனைகளை
என் ஆன்ம அறைகளில்.

(மொழியாக்கம்)

Saturday, March 23, 2019

உண்ட பின்



கவிஞர்.பை ஜீயி

உண்ட பின் உறக்க உணர்வு எமக்குக் கூடிடும்,
காலம் கடந்து விழித்து இரு குவளைத் தேநீர் பருகி,

பின் அறிவேன் சாய் நிழல்கள், சூரியன்
தென்மேற்கில்  கீழ் மீண்டும் செல்ல.

மகிழ்வுறு மக்கள் கடந்திடும் நாட்கள் எண்ணி சினத்தில்.
துயருறுவர் மெல்லக் கடந்திடும் ஆண்டுகள் பொறுத்திலர்.


துன்பமும் மகிழ்ச்சியும் கொள்ளாத எவரும்
எதையும் அளித்திடும்   இவ் வாழ்க்கையை நம்பி.

(மொழியாக்கம்)

Wednesday, March 13, 2019

செல், காதலே


கவிஞர்.ராபர்ட் செளதே

செல், காதலே,
அந்த அழகிய பணிப்பெண்ணிடம் கூறு,
அவள் அழகின் நயம் என் பார்வையில்
இன்னும் சித்தரிக்கும் படமாய்,
சோக நிழலில் நான் நீடித்து இங்கே, எப்படி?,
மந்த துறவு- இரவின் இந்த இருண்ட
மனச்சோர்வு;
சொல்,வாழ்வின் மகிழ்ச்சி யாவும்
தொலைவில் விலகி
வீழும் மாலைப் பொழுதில் நான்,
கூட்டத்தை விட்டுச் செல்ல,
மோதிர-குவிமாட பாடல்
தனிமையில் கேட்டு,
என்னைப் போல் அவள்
தனிமைப் பா பொழிந்து;
சொல்,அவள் இன்மை ,
துயரக்காட்சி அழைப்பில்;
சொல்,அவள் வசீகரிப்பு அனைத்தும் பேசிட,
நான் விழைகிறேன்,
நயத்தில், அவள் மந்திரக்கண் உணர்வேன்
நயத்தில், நகை ஒளியூட்டும்
அவள் கன்னத்தை காண்பேன்,
மெளனம் அசைவற்ற நிலைப்பாய்
தோப்பில் தனித்தியானத்தில்,
காதல், நினைவின் பெருமூச்சு பிளவில்

(மொழியாக்கம்)

Sunday, March 10, 2019

ஓ காதலே! நீ அனைத்தையும் சமமாக்குகிறாய்




கவிஞர். சாரா பிளவர் ஆடம்ஸ்

ஓ காதலே! நீ அனைத்தையும் சமமாக்குகிறாய்
பூமியிலும் அன்றி சுவர்க்கத்திலும்:
சிறைக்கம்பிகள் ஊடாய்  விண்மீன்கள் வரை
உமது வழி காண்கிறேன்;
அன்றி, சர்வ வல்லமை பொருந்தியவன்
திட்டத்திற்கு உண்மையாய்,
தூசியிலிருந்து படைத்தான் மனிதனை,
இடுகாட்டைப் பார்க்கிறாய் நீ,-உமது
இறவாத்தன்மை கண்டிட!

(மொழியாக்கம்)

வண்ணம் தொடக்கமாக










அமெரிக்க கவிஞர்.ரிச்சார்ட் பிராட்டிகன்

காதலை மறந்திடு
நான் இறக்க விழைகிறேன்
உன் மஞ்சள் கூந்தலில்

(மொழியாக்கம்)

உலக மகளிர் உரிமை

உலக மகளிர் உரிமை நாள் விழா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை இயக்கம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி, 09.03.2019ல் கொண்டாடியது. அப்போது வாசித்த கவிதை.


அமெரிக்க சமதர்மக் கட்சி அளித்த
கொண்டாட்டம்,
ஒரு நூற்றுப் பத்து ஆண்டுகள் கடந்தும்- அவர் உரிமை
திண்டாட்டம்.

"வன்முறை முடிவுக்கு வரும் காலம்"
ஐக்கிய நாடுகள் அவை அறைந்திடும்
"சத்தியம், இது சத்தியம்"

தரவுகள் தரும் பாடம்:16 அகவைக் கீழ்
பாலியல் வன்முறை
50 விழுக்காடு;
குடும்ப வன்முறை
603 மில்லியன்;
ஒருகட்ட வன்முறைக்கு பலி
70 விழுக்காடு;
18 அகவைக் கீழ் மணம்,
60 மில்லியனுக்கு மேல்

ஒடுக்குமுறையின் தொடக்க வடிவம்,
குடும்பம்,
அதன் உச்ச வடிவம் அரசாங்கம்.

உடல் மீதான வன்மம்,
ஒருக்கலித்த பார்வை
பண்பாட்டு மெருகில்,
பட்டியல் பெருமையில்.

கொட்டி முழக்கும் சமூகம், சாங்கியமாய்
பரிகாரப் பார்வையில்.,
அங்கொன்றும் இங்கொன்றும்
ஒதுக்கீடுகள் உலா

தடி, உதை உண்டு, தாழ்நிலை மொண்டு
தவிப்பினில் மகளிர்,
தரணியெங்கும்
ஒடுக்கிடும் ஆணாதிக்கம், ஒய்யாரமாய்
ஓங்கிடும் ஒவ்வொரு நாளும்.

மகளே! தலைமை ஏற்றிடு!
மானிடப் பெருமை கூட்டிடு!
சரித்திரத்தின் சக்கரங்களை
சுழற்றிடு!
சரிநிகர் உரிமை மீட்டிடு!
மிடுக்குடன் மின்னலாய்!
கேள்பகை வென்றிடு!

Thursday, March 7, 2019

நான் வாழ்கிறேன், நான் இறக்கிறேன், நான் எரிகிறேன், நான் மூழ்குகிறேன்






கவிஞர்.டெல்மிட்ரா அகஸ்ட்டினி

நான் வாழ்கிறேன், நான் இறக்கிறேன்,
நான் எரிகிறேன், நான் மூழ்குகிறேன்
கடுங்குளிர், சிலுசிலுப்பைத் தாங்குகிறேன்
வாழ்க்கை மிக மென்மையாக,மிக வன்மையாக
வலி தொல்லை, இன்பங்களில் சங்கமித்து,
நான்.

எதிர்பாரா  நகையில், அதே வேளை அழுகையில்
பிரியத்தில், பல துயரங்கள் சகிப்பேன்
என் மகிழ்ச்சி தேயும், எனினும் அது மாறாமல் நீடிக்கும்
ஒரே தருணம் நான் முழுமையாய் உலர்வேன்,
பசுமையாய் வளர்வேன்

இவ்வாறு, அன்பின் நிலையற்றவைகளில்
பாடாய்ப் படுகிறேன்
 மிகக் கடுமையான வலி  என,
 நான் எண்ணும் சமயம்
அறியாது அது கடந்து விட்டிருக்கும்,
மீண்டும்.

பிறகு , என் மகிழ்ச்சி நிச்சயம்
எனது பெருமகிழ்ச்சி நேரம் வாய்த்தது
என உணரும்சமயம்
காண்கிறேன் நான்,  எனது வலி திரும்பிடும்
மறுபடியும்.

(மொழியாக்கம்)






Sunday, March 3, 2019

ஒரு பண்ணை- காட்சி







கவிஞர். வால்ட் விட்மன்
போதிய திறந்த கதவின் ஊடாக 
அமைதியான கிராமப்புற களஞ்சியம்,
கதிர் ஒளி ஏற்கும் பசும்புல் நிலம்,
கால்நடைகள், குதிரைகள் மேய்ச்சலில்;
மூடுபனி, காட்சி வரிசை, தொலை அடிவானம்
யாவும் மங்கலாய் தேய்வுறும்.

(மொழியாக்கம்)