Friday, May 24, 2019

அதிகாரப் போட்டியில் அழியும் புதுச்சேரி



போட்டியில் பலவகை கண்டீர்!
புதுவையில் இது புதுவகை என்பீர்!
உன்னைக் காட்டி
என்னைக் காட்டி
ஒடுங்கிடும் சனநாயகம்
வலிவிழந்த பட்டமாய்
அரசியல் வானில்

ஓட்டுரிமை அளித்தார்
ஒதுங்கி நிற்பார்
ஒய்யார அரசியல்
ஓங்கி விற்பார்
எதிரும் புதிருமாய் அதிகார
காட்சிகள்
எட்டிப் போகும் நிர்வாக மாட்சிகள்
இழுபறி அதிகாரக் கயிற்றில்
இடுப்பு சுற்றி இறுகிட: மக்கள்

கல்விக்கு கால்வாசி
நலத்திற்கு காலரை
உழவுக்கு அரைக்கால்
உருப்படா ஆட்சியில்
விலைவாசி
ஓங்கிடும் அன்றாடம்
உடன் யோசி

நொறுக்கிடும் வரிகள்
நெறி பிறழ்ந்து
வேலை வாய்ப்புகள்
சுரம் இழந்து
கூடிடும் கடன்கள்
தலை இறங்கும்
இடியாய்
கருகும் வாழ்வாதாரம்

வகுத்தான் வல்லான்
அதிகார வெறி
அழித்திடும் நலம்
தலைவிதி
ஏற்றத்தாழ்வின் இடைவெளி
இணைகோடாய்
தொடரும்
நிர்வாக மொழி


தன்னழுத்த தற்பெருமை துருவங்களாய்
அகமும், பாவமும் விசைக் கூட்டி
அரசியல் சொக்கட்டான் அலுப்பின்றி
அதிகாரப் போட்டி ஆட்சியில்
அடையாளம் இழந்திடும் வாக்கு வங்கி

("புதிய உறவு" இலக்கிய இதழ் கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை)

No comments: