Wednesday, January 2, 2019

நான் சோமாலி


சோமாலிய நாட்டுக் கவிஞர். அப்துல் காதிர் எர்சி
சோமாலி-ஆங்கில கவிதை தொகுப்பினர் மொழிபெயர்ப்பில்

அயராத இந்நாட்களில்,
நீ மெய்யாக உயிருடன் இருப்பின்.
கடந்த காலங்கள் எதிரொளிப்பாய்.
சுவடுகளைத் தேடு.
உம்மிடம் கேள்:
யார் சோமாலி?

உயிருடன் இருப்பவர் எவரும்
எம்மை ஒடுக்கவில்லை.
அனைவரும் சமம் நான் நம்புகிறேன்.
எம்மைக் காண வருகை தருகையில்
அரை மன விருந்தோம்பல் இல்லை,
காண்பாய்:
நான் சோமாலி

அக்கறை உள்ளவர் என்போரே
சங்கிலியால்  எம்மை அச்சுறுத்தும் சமயம்,
ஓட்டைகள் நிரம்பிய கலமாக நீங்கள்.
உமது இருமுக துரோகம் ஒழுகிக் கொண்டிருக்க.
என்னைக் காட்டிக் கொடுக்கும் முயற்சிகள்
தாக்கம் உண்டாக்காது,
நான் சோமாலி.

எம்மிடம் ஏதும் இல்லை என்றாலும்,
என் தலை நிமிர்ந்து நிற்கிறது,
நான் பிச்சை எடுக்கவில்லை,
அகத்தில்
நான் செல்வந்தன், சுயமரியாதை,
கண்ணியம் மற்றும் பெருமையில்.
நீ என் எதிரியாயின்,
என்னை வெல்ல முடியாது,
நீ என் நண்பனாயின்,
எனது இதயம் முழுதும் உனக்காக.
நான் சோமாலி.

நம் முன்னால்  உள்ள பாதை
கடுமையானது,
ஆனால் தெளிவானது,
எனது பயணம் வேதனை மிக்கது
எனது எல்லைகள் மிகத் தெளிவாயினும்
எனது வாள் இடர், துயர் தரும்,
என் ஆன்மா முன்பே மரத்தில் தொங்கிடும்.
நான் சோமாலி.

எனக்கு  தீங்கிழைக்க கூடியவர்
எவரும் இல்லை,
என்னிடம் நெருங்கினால்,
நான் எதிர்ப்பேன் என்றறிவார்.
வெற்றி என்னுடையதாயினும்,
நான் ஒடுக்க மாட்டேன்
தவறிழைப்பேற்றவர் எவரும்
தம் உரிமைகள் மீண்டும் அடைவார்,
எனது எதிரிகள் கூட நியாயமாக நடத்தினர்.
நான் சோமாலி.

போர் அச்சத்தில் நான்,
எப்போதும் அமைதியைத் தேடி,
எதிரிகளிடம் நான் பின்வாங்க மாட்டேன்,
அவர்கள் நெருங்கினால்,
என்னை தற்காத்துக் கொள்வேன்,
பகையிடமிருந்து என் முகத்தை திருப்பிடேன்,
கோழையல்ல நான்-
நான் சோமாலி.

காற்றுபோல் விசையாக ஆயினும்
உந்துணர்வு மனிதன் அல்ல,
நஞ்சு போல் வெறி ஆயினும்
சகிப்பில் போர்த்தி,
எங்கெங்கு தேவைப் படினும்
நல்லதைக் கொணர விருப்பமிக்கேன்.
நான் சோமாலி.

என் கண்ணோட்டம் எண்ணாத மனிதனிடம்,
நான் ஒத்துப்போக வலியுறுத்தம்
ஏற்க மாட்டேன்,
உலகின் பிறரிடம் இணைந்து
எனது ஒடுக்கு முறையாளர்களின்
பிணை சங்கிலிகளை அறுத்தெறிவேன்.
எவருக்கும் ஊழியன் அல்லன்,
சுமை அகன்று, சுதந்திரமாய்,
நான் சோமாலி.

என்னை விட மிகுதியான செல்வம்
உடையவனாய் இருப்பினும்,
ஆதரித்து தொண்டாற்ற வராதே,
 உமது பொய் புகழ் எமக்கு விழைவன்று,
அடங்கா ஆசையன்று,
நான் உறங்கேன், நான் பெருவிழிப்பில்.
உமது ஆழமற்ற வாக்குறுதிகள்
இணங்கச் செய்யாது.
நான் சோமாலி.

என் கால் நடைகளை மேய்க்கும்போது,
சமயத்தில் நீ பிரித்திட வந்தாய்,
வீட்டு விலங்குகளை விரட்டுவதுபோல்
என்னை தொலைவாக, பரந்த வெளியில்
பிரித்து விட்டாய்,
ஆனால் எனது இலச்சினையை
நீ மறைத்திட இயலாது;
எனது பணி தற்போது-
எது சரியோ அதைச் செய்வது
எனது கடமை தெளிவாய்-
மீண்டும் எழுதுவது
நான் சோமாலி.

(தமிழ் வடிவத்தில்)


No comments: