Saturday, February 9, 2019

'அமில மனிதன்'.

புதுச்சேரி, குயவர்பாளையம், லெனின் வீதியில், போக்குவரத்து சமிக்ஞை அருகில், இடது பக்கத்தில் சாலையோரம். ஓங்கி நின்று, உயிர்வளி அளித்த அரச மரம், இன்று உயிர் இழந்து. பார்த்ததும் பதைத்த உள்ளம், இப்படி வடிகால் தேடியது.


நீ பிறக்கும் முன்
 பிறந்த மரம்
நீ உதிக்கும் முன்
உயர்ந்த மரம்
எவர் வைத்தார் என்றறியேன்
எவர் உடைத்தார்
என்றறிவேன்.

கிளைகள் கழித்த
மின் துறை அறிவேன்.
ஒழிப்பதற்கு முன்னோட்டம்
என்றறியேன்.
செழிப்பை,
கழிப்பில் வைத்த அரசியல்,
மின்மாற்றிக்கு வாழ்வளித்து,

தலைமுறைகள் தழைத்திட,
 ஓங்கி, உயர்ந்து,
ஓய்வின்றி,உயிர்வளி அளித்த
 'அரசின்'
கதை முடித்தான்,
'அமில மனிதன்'.

'சந்தேக மரணம்'
 சட்டம்
 'முதல் தகவல் அறிக்கை'?

No comments: