Sunday, July 30, 2023

தினுசு

 இப்படியே கழியுமா?

பொழுது

அப்படியே ஒழியுமா?

உணர்வு 

எப்படியே இருந்த மனசு

இப்படி ஆனதென்ன?

புதுசு

எப்படியும் வாழ்வது ஒரு

தினுசு 

Thursday, July 27, 2023

மாண்புகள்

 எண்ணற்ற நூல்கள்

எண்ணத்தின் கால்கள்

ஏற்றிடும் கருத்துகள்

மாற்றி டும் மருந்துகள்

மண  நலத்தின் வேர்கள்

மனிதத்தின் மாண்பு கள் 

"ஆயுத எழுத்து"

 குண்டுகள் 

வண்டுகள் அல்ல

மகரந்தம் சேர்க்க

உயிரினங்கள் தழைக்க

அமைதிக்காக 

அளிப்பவர் அர்த்தம்

இலாபத் தில் 


கெத் தில் 

கொத்து 

எவர் அளித்தாலும்

எவர் பாவித்தாலும் 

உயிர் வதை

 வியாபாரிக்கு அல்ல 

உனக்கும், எனக்கும் தான்

உண்மை அறிவாய்

"ஆயுத எழுத்தை"


பச்சைக் குதிரை

 கொடுத்தவன் நீ

எடுத்தவன் நீ

முடிவை 

பிறர்  மீது

திணிப்பு 

உமது தீனிப் பை

உள்ளீடு உலகத்தில்

உம் பயணம் 

உள் நோக்கில்

பச்சைக் குதிரை

உம்   இச்சை

 குதிரை 


Monday, July 24, 2023

இல்லை

 காயும் இல்லை

கறியும் இல்லை

கவலை இல்லை

உனக்கு

கவலை இல்லை 

காசும் இல்லை

பணமும் இல்லை

கவனம் இல்லை 

உனக்கு 

கவனம் இல்லை

கவளம் தொல்லை

உனக்கு  விசனம் இல்லை 

கை வைப்பான்

 உன்னிடம் ஒன்று!

அவனிடம் ஒன்று!

இதில் எது 

நன்று ?

அவரவருக்கு ஏற்றாற்போல்

ஆக்கினை சேர்த்திட 

புளுகும் 

கெட்டியாகும்

இதில் என்ன ?

பகுத்தறிவு !

மார்க்சிய அறிவு !

நம்பி கை வைப்பான்

யோசித்தாள்

 நடக்கும் காலத்தில்

ஓடினேன்

ஓடும் காலத்தில்

நடக்கிறேன்

ஓடும் காலத்தில்

நடந்தேன் 

நடக்கும் காலத்தில்

ஓடுகிறேன்

இப்படியா?

அப்படியா?

எப்படி

தெரியவில்லை?

செப்படி

என்றேன்

 அவள் யோசித்தாள்!


Sunday, July 23, 2023

சாயவில்லை

 எங்கே ?

உம்மை காணவில்லை

கண்டபோது கேட்டார் ,

காணாத போது !

தற்பெருமை

ஓயவில்லை

தனிப்பெருமை 

சாயவில்லை 


Wednesday, July 19, 2023

 வசதியான சூழலுக்கு அழைப்பில் செல்லும் போது ,உனக்கும் அது போன்ற நிலைக்கு செல்ல ,ஆர்வம் கூடும்.

ஆர, அமர யோசித்தால் புரியும்.உள்ள நிலையே , நல்ல நிலை, உணரும் நிலை. வாய்த்த வசதியை வசப்படுத்தி, இருக்கும் நிலையை செப்பம் செய்தாலே போதும் என்ற வெளிச்சம் கிடைக்கும் .ஆழ்ந்து யோசனை செய்தால் அதனதன் அருமை, பெருமை விளங்கும்.

Tuesday, July 18, 2023

கடக்கும்

 நண்பர் ஒருவர், அவருக்கு வேண்டிய மனை வணிகர் குறித்து, " அவன் எல்லாம் அலசிப் பார்த்து, ஆய்ந்து பார்த்து செய்வான் " என்று பெருமைாகச் சொல்லியிருந்தார். அளவற்ற நம்பிக்கை உடையவராக இருந்தார்.

ஆவணத்தில் பிழை உள்ளது என்பதை சுட்டியும் ஏற்க மனம் இல்லை. பிற தரப்பின் கருத்தினை உள் வாங்கிட ஊக்கம் இல்லை.ஒரு அமைப்பின் தலைவராகவும் இருக்கும் அவர் நடுநிலை நோக்கில் நிற்க தடுமாற்றம்.

எது காரணம்? 

சொத்து மீ தான பற்றா? 

அதிகார ஆளுமையா?


அலசிப் பார்ப்பான்

ஆய்ந்து பார்ப்பான்

நுழைந்து வருவான்

மீண்டு வருவான் 

பணத்தை போட்டு

பணத்தை எடுப்பான்

கொடுப்பவரும் எடுப்பார்

கணிசமாக

வாங்கியவர்

 கண் வீங்கியவராய் 

காலம் கடக்கும் 


ஆயுதக் கூட்டம்

 அணி சேர்க்கையில் 

 'ஆயுதக் கூட்டம்'

 அறிவிழக்கும் 

அடி பணி கோட்டம் 

வளமிக்க பூமி 

வாழ்வளிக்கும்

சாமி 

அண்டை வீட்டார்

சண்டை

அகலப் படுத்தும் சந்தை

இவர், அவர் ,

பேதம் அதற்கில்லை 

'சமம் யாவரும் '

அதன் வேதம் 

சந்தை நிதி பெருகிட 

யாவும் -

நீரும், ஊரும் 

மண்ணும் , மலையும்

மரஞ்செடி, கொடியும்

விண்ணும் .......    

இருப்பான்

 அங்கேயும் இருப்பான் 

இங்கேயும் இருப்பான்

எங்கே யும்  இருப்பான் 

எதிலும் பார்ப்பான் 

எப்படியும் சேர்ப்பான் 

கொள்கை முழங்கி

கோட்பாடு வழங்கி

Thursday, July 13, 2023

ஏதிலி

 எவன் செத்தால் என்ன?

எவை அழிந்தால் என்ன?

எங்கள் வியாபாரம் 

செழித்தால் போதும் 

எங்கள் கருவூலம் 

நிறை ந்தால் போதும்

கொல்லும் வணிகம்

வன்மம் கொண்டு

வெறி யாட்டு 

ஒற்றைத் துருவ அதிகாரம்

சுரண்டிய தேசங்களின் கூட்டில்

வளங்களை கொள்ளை கொள்ளும்

அறியாமையில் அடுத்த வீட்டுக்காரன்

எதிரியாய், பகைவனாய்

வீ ழ்ந்திடும் 

ஆயுதங்களின் அரசியலில்

அமைதியும்  அச்சத்தில் 

அச்சு கழன்று 

மச்சி நாடுகளின் 

எடு பிடியாய் 

ஏதிலியாய்

பிறந்தகம் துறந்து 

பட்டான்

 எ வரை மதித்தான்

உம்மை மதிக்க

எவரையும் மிதித்தான் 

விருப்பப்படி 

தொட்டால்

தோ ண்டுவான் 

விட்டால் 

சீண்டுவான்

பட்டால்

வாடுவான்

பட்டாம் பூச்சியாய் 

Wednesday, July 12, 2023

நின்றதால்!

 உணர்ந்தேன் 

உழைத்தேன்  

 நலிவிலும்

 சோர்ந்தே ன் 

அல்லன்

சன்மானம் பெரிதென்று

எண்ணவில்லை

தன் மான உயரத்தில்

நின்றதால் 


Monday, July 10, 2023

வெள்ளையப்பன்

 ஏமாற்ற தெரியாது

ஏமாற்றம் தெரியாது

உன் மாற்றம் அறியாது

உள் மாற்றம் புரியாது 

புறம் அறிந்தேன்

அகமும் அப்படியே 

என்றிருந்தேன் 

இரு வேறு உலகம் 

வாசித்தேன் 

யோசித்தேன் அல்ல 

அல்லல் நீக்கும் 

எல்லப்பன் அன்று

வெள்ளையப்பன் 

குவிக்கும் 

எல்லையப்பன் 

கப்பி

 உரித்த கோழி

உண்மையைத் தேடு!

கருத்த மனிதா

உப்பிய இறைச்சி 

எடை போடு 

கப்பி மனிதா!

பகுத்தறிவு

 குறுகிய சிந்தனை

குவலய நிந்தனை 

பிடித்ததே பெரிசு

அடுத்தது 

அக்கறையில்லை

எல்லாம் சொல்லிட்டார்

அன்றே

எந்நாளும்

அது நன்றே

புதுசா ஏதும்

சொல்ல வேண்டாம்

பெரிசா எதுவும் 

கேட்க வேண்டாம்


Sunday, July 9, 2023

கெட்ட போரிடும்........

 போர் இல்லாத நாள் உண்டா? நாடு உண்டா?

எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். வணிக வரையறைக்குள் வந்திறங்கிய போர், வளம் கொழிக்கும் பண்டமாக, மனித உயிர்களை கொஞ்சம் கூட மதிப்பு மிக்கதாக கருதாத, பண்டத்திலு ம்  பண்டமாக , நுகர்வு பொருளாய் பாவிக்கும்.

சோறு இல்லா நாள் உண்டு

நாடு உண்டு

போர் இல்லா நாள் இல்லை

நாடு இல்லை

சரிவில் பிற வணிகம்

சரியா வணிகம் ஆயுதம்

அடிக்கடி பூசை 

காயலாங்கடைச் சரக்கும் 

நடை சேரும்

நாசம் கோரும்

உதவி வரிசையில் 

உலா வரும்

எல்லைகள் இல்லை

கொள்ளையில் 

மனிதம் 

செத்து பிழைக்கும் 

நொடி தோறும்

நுடங்கி  , முடங்கி


Friday, July 7, 2023

சுத்திகரிப்பு

 குடி நீர் இல்லையடி!

குழாய் நீர் 

தொல்லையடி!

வரி உண்மையடி !

வாய்தா இல்லையடி !

சுத்திகரிப்பு நீரடி

சுத்தம் அதன் 

பே ரடி! 

சுகம் தொலை 

ஊரடி!


உலகமயம்

 சமமற்ற வாழ்வு

சமத்துவம் கேட்க

தனி மனித முயற்சி

தணி யா அயர்ச்சி 

சந்தை சுழற்சி

கந்தை கழலும் 

சிந்தை விலகி

விந்தை 

உலகமயம்


கதி மோட்சம்

 ஒரே பாதையில், சுற்று வட்டத்தில் தினசரி வாழ்க்கை! பல எண்ண ஓட்டங்கள். மைதானத்தின் பந்தாக ஓய்வின்றி கால் விசையில் , கை விசையில் , இந்த பக்கம், அந்த பக்கம். ஆட்ட வே ளை  முடிவில் அக்கறை பார்வையில் பந்து, கழித்து கட்டப்படுமா? கதி மோட்சம் கிடைக்குமா?