Sunday, October 30, 2022

இன்றைய காதல்


கண்டேன்  உண்டேன்

சென்றேன் 

அளவீட்டில் 

விரைவு ணா  

இன்றைய காதல்


உலா வேகம் உந்திட 

சொல்லன்பு ஓங்கிட

 உள்ளன்பு ஒதுங்கிடும் 

இன்றைய காதல் 


உடல்மொழி 

முந்தி நிற்க

உள மொழி 

பிந்தி நிற்கும் 

இன்றைய காதல் 


பெரு வணிக உளவியல்

 தனி மனித

 தாராளமயம் 

அன்பும் பண்டமாய் 

பரிமாற்ற மதிப்பீட்டில். 

இன்றைய காதல் 

                                                                                 காதல்   கொள்முதல்

உள்ளீடு உலகமயம் 

இன்றைய காதல் 


சாளரங்கள் ஏராளம் 

இணையம் , கைப்பேசி 

 தாராளம் 

இன்றைய காதல் 


வாழ்ந்து பார்ப்போம் 

சில காலம் 

பரிசோதனை

ஒப்பந்த பந்தம் 

ஏற்றி 

இன்றைய காதல் 


அன்பும், அறனும் 

அந்நிய மாய் 

மண முறிவே

 விதியாக  

இன்றைய காதல் 

(இலக்கியச் சோலை கவியரங்கில்( 31.10.22, )




Thursday, October 27, 2022

கூடி னாயா ?

 சொன்னதைக் கே ட்டாயா ?

சொல்வதை க் கேட்பா யா ?


சொன்னதில் நின்றாயா ?

சொல்வதில் சென்றாயா ?


உள்ளது உணர்ந்தாயா ?

உண்மை அறிந்தாயா  ?


நல்லது நாடினாயா ?

நலம் பெற கூடினாயா ?

Wednesday, October 26, 2022

மனம்

 எது வரவு என்றறியும்

எது உறவு என்றறியா! 


எது தரவு என்றறியும் 

எது கரவு என்றறியா!


எது சரிவு என்றறி யும் 

எது செறிவு என்றறியா!

Sunday, October 23, 2022

பேத்தி

 வதங்கிய முகம் 

வாட்டம் தேங்கிய

உளம் 

விசும்பின் துளி காண்

பயிர் போல் 

உம்மைக் கண்டபின்

துளிர்த்தது!

துடித்தது  !

உயிர்த்தது!


Saturday, October 22, 2022

நெடி....

 ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வீசிய பழமைவாத நெடி.

மரபில்லாமல் புனையும் பாடலை ,கவிதை என்றோ!, படைப் ப வரை கவிஞர் என்றோ! தம்மால் ஏ ற்க முடியாது என்று மிகக் கடுமையாக சாடி, மேடையின் காலத்தை தம் வசப்படுத்தி, ஓய்ந்தார்.

அதைக் கண்ட பின் , கொண்ட கருத்து. 

இதோ


தவிப்பா! தகிப்பா !

தகுதியின் குதிப்பா !

விடுப்பா கடுப்பை

விரும்பி படிப்பா !

ஏறாதே மேடை கடுப்பா !

பொறுப்பா! விருப்பை குறிப்பா!

சொல் எடுப்பா! விடுப்பா.......

வாசிப்பு

 புரிந்தது போல் இருக்கும்

புரியாதது போலும் கடக்கும் 

அறிந்தது போல் இருக்கும்

அறியாதது போலும் கிடக்கும் 

தெரிந்தது போல் இருக்கும்

தெரியாதது போலும் கடக்கும் 

இப்படியாக ...........

Monday, October 17, 2022

மன ஊர்தி

 உல்லாசத்திற்கான பயணம் அன்று!

உலகம் அறியும் முயற்சியின் தொடக்கம்

 இன்று! 

உள்ளூர் செலவு என்றாலே , ஓராயிரம்

 விவரம் கேட்கும் மனம். நூறா யிரம்

 கேள்விகள் சுமந்தது இறக்கியது விடைகள்

 தேடி.

அவளும், என்னுடன் ஆச்சரியத்தில். கூடிடும்

 ஆவல் , மிகுதியில்

 புதுவையிலிருந்து.சென்னை தொட்டு

 விமான பயணம், விநோ த

 அனுபவம்.உணர்ந்து ஏற்றிடும் பட்டறிவு .

எல்லைகள் தொலைவில் இல்லை!

 எண்ணங்களின் விசையில், பயண

 முனைப்பில்.

எந்த ஊர்தியும் தோ ற்கு ம் மன ஊர்தி. மன

 உறுதி. மட்டற்ற  மகிழ்ச்சி யில், பெற்ற மகள்,

 பெறாத மருகன். 

உற்ற உறவின் உசாவல், வரவேற்பில்,

 விமான நிலையத்தில்.

அசதியும் தோற்கு ம் அற்புத மகிழ்ச்சி! 

பயணித்த ' மணி '

 அரிசி அரித்து, உலையிலிட்டு , ஆவலுடன்

 பசி தீர சாப்பிட முனைந்த சமயம், 

நெல் மணி ஒன்று கண்டாள்!

உணவைத் தாண்டியது ஆய்வுணர்வு.

எண்ணாயிரம் மைல் களைக் கடந்து

 பயணித்தோம்.உறவைக் காண, ஓய்வு ஏற்க! 

எம்மையும் தாண்டி வணிகத்தில்

 பயணித்த ' மணி ' .

'உம்முடைய , பசிப்பிணி தீர்க்கும் நீண்ட

 பயணம், தியாகம். '

எல்லைகளைக் கடந்து, 

அதிகார மையங்க ளைத்  தாண்டி.ஐயங்கள்

 நீக்கி!

மக்கள் பசி, பட்டினி போக்குவதில் . 

மட்டில்லா மகிழ்வில்,பொறுப்புடன் பூத்து

 பூரிப்புடன்.....

Sunday, October 16, 2022

அயலகம்

 பொழுதுகளின் போக்கு

 அறியும் 


காலச் சக்கர சுழற்சியின்

 திசை வேகம் 


நிதான நிலையில் 

நின்று விளங்கும் 


மரம், செடி, கொடிகள்

 மாண்பறி 


பறவைகள் 

பக்குவ ஒலி கேட்கும் 


மழை, இருட்டு, வெய்யில் 

மாறிடும் 


வாடைக் காற்று 

கூடிடும் 


சில்லிடும்  சூழல் 

சிவந்திடும் மேனி 


உண்பதற்கு ஒரு நூறு

 வகைகள் 


அடுக்களையில் 

அடுக்கம் காணும் 


முடுக்காய் உண்ணும்

 வேளை சேர்க்கும் 


அணி அணியாய் 

பணியாற்ற விரைந்திடும் 


வாகன மனிதர் அதிகாலை

 தொடங்கி 


நடுநிசி வரை அக்கறை(ரை)

 உழைப் பில் 


ஆற்றலுடன்  அன்றாடம் 


கிழமை நாள்களில் 

ஒன்றிரண்டு  ஒழிவில் 


துப்புரவு பணி சேர்த்திடுவர் 

ஒப்புரவு சிரமேற் கொள்வர்.........



Saturday, October 15, 2022

செலவு

 பரந்த சிந்தனை

திரண்ட எண்ணங்கள் 

வரலாற்று ஆர்வம் 

வகை வகையாய் சேரும்


உருண்ட உலகின் உன்னதம் 

உணர்ந்திட ஓடிய செலவு 


தரை மீது கடந்த நாள்கள் 

சலிப்பில் 

வின்ணிடை கடக்கும் 

வாய்ப்பு 


பகல் இரவு கலந்து 

கலம் 

நாடுகளைக் கடந்து 


உறவிட ம் சேர்ந்து

ஓய்வு கொள்ளும்

மனம்


இரைச்சல் குறைந்து 

இறுக்கம் தளர்ந்து ......

விளக்கம் சேர்க்கும் 



(2018 சூன் பிரா ன்சு பயண அனுபவம்)



Friday, October 14, 2022

வாழ்க்கை ஆட்டம்

 வாழ்க்கையின் பல பக்கங்கள்.

ஓடியது, ஆடியது.உல்லாசம் கூட்டியது. 

ஒழிவின்றி உத்தியோகம் பார்த்தது.

இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.......

மண வாழ்க்கை, குழந்தைகள் வளர்ப்பு என்ற வரிசையில் பல பத்தாண்டுகள். 

உதை பந்து  ஒப்பில் .இப்படியும், அப்படியும் ' கோல் ' நுழைவு ஆட்டம்.

ஆடும் களம்.அனைவரின் ஒத்துழைப்பும் அலாதியானது. 

என்றாலும், பரிசு, சிறப்பு, முன்னணி ஆட்டக்காரருக்கே! 

ஊடகப் பெருமையும் சேர. 

ஆயினும், எதிர் வரும் ஆட்டங்களில் தனியனாய் விளையாட இயலுமா?

ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லா அணி.

ஒன்றிரண்டு ,'  கோல் ', போட்டாலும் வெற்றி வசமாகுமா?

இவ்வாறே, பல குடும்பங்கள் விளையாட்டில் வெகு காலமாக......


கரையவில்லை

 பட்டும் விளங்கவில்லை 

பாடம் தெளிவில்லை 


விட்டும் விலகவில்லை 

விடிவும் தோன்றவில்லை 


கெட்டும் அறிவில்லை 

கேடும் புரியவில்லை 


தொட்டும் துலங்கவில்லை 

தோல்வியும் நிலையில்லை


கட்டும் பிரியவில்லை 

காலமும் கரையவில்லை 


கூட்டும்

 பதார்த்த உலகில் 

பரவசம் கூட்டும்

யதார்த்த உலகம் 


Thursday, October 13, 2022

முடியவில்லை

 தினம் எழுத முடியவில்லை. ஏதோ

 வேலைகள் பின்னிழுக்க, கட்டிப்போட,

 உந்தன் பக்கம் திரும்பவில்லை ! திருப்பம் 

 இல்லை! அலைமோதும்

 உள்ளம்.எண்ணங்கள் ஏ ராளம் . 

அவ்வளவும் நாட் குறிப்பில் இறக்கிட ஆவல்

 மிகவே!

ஆயினும், அது சல்லிசு இல்லை என்று எமக்கு

 தெரியும்.  

நிறை பார்க்க, நிறுத்துப் பார்க்க, சலித்துப்

 பார்க்க வேண்டியவை, தொகையாய் உம்முன்

 தோற்றமளிக்கும்.

சில நேர்வில் முந்தி நிற்கும்.முட்டிப்

 பார்க்கும்.எட்டிப் போகும்.சில வேளை  தட்டிப்

 பார்க்கும், திறக்காத கதவுகள், தாழ் க் கோல் 

தொலைந்து.

பாய்

 படிப்பாய் துடிப்பாய் 

முடிப்பாய் எடுப்பாய் 

களிப்பாய் சிரிப்பாய் 

கல்வியில் கரைவாய் 

உழைப் பாய்  உயர்வாய் 

உள்ளது சிறப்பாய்



தைரியசாலி

 என்றோ ஒரு நாள் , பேச்சு வாக்கில் பழமொழியை, புரட்டிப் போட்டேன் இப்படி.

பானை பிடித்தவள் பாக்கிய சாலி 

பானை உடைத்தவள் ?

தைரியசாலி

Sunday, October 9, 2022

பால்

 பால் வழங்கும் பாட்டி இன்றும் காலதாமதம்.காலை மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அதன் விசையில் அலு ப்பின்றி. அமைதியாய்.

எரியும் வயிறு தேநீர் வாசம் தேடியது. எச்சில் ஊற எட்டிப் பார்த்தது.விளைவாய் சுறு, சுறுப்பான மூளையும், கற்பனையில் களம் நிறைத்தது. இப்படியாக.........

எட்டு மணி ஆகிறது

எட்டி ஏ ன் போகிறது 

இதைச் சற்று நீடிக்கலாமா ! 

ஓசித்தென் .உருண்டோடி விழுந்த சீர் கள் 

பத்து மணி ஆகிறது

பத்தாமல் போகிறது.




Saturday, October 8, 2022

நம்பு

 கம்பு உடம்புக்கு

தெம்பு 

கண்டது உண்பது

வம்பு 

கண்டறிந் தேன்

நம்பு 


துலாபாரம்

 எதுவும் வியாபாரம் 

எட்டிடும் துலாபாரம் 


வேண்டும்

 அழ வேண்டும் அழ வேண்டும்

அழுக்கு கரைய 

அழுத்தம் குறைய 


சிரிக்க வேண்டும் சிரிக்க வேண்டும்

சிந்தனை விரிய

நிந்தனை சரிய 

புதிராக

 எனக்கே நான் புதிராக

புதிருக்கு எதிராக 

இல்லை

 என்னை மாற்றிக் கொள்ளவில்லை

 ஏன் என்றும்  தெரியவில்லை 

முன்னே வந்தது நினைவில்லை 

பின்னே வருவது புரியவில்லை 

முதலும் முடிவும் பிடியில்லை

மூன்று காலமும் நிலையில்லை 

கரைய கரைய

 எழுத வேண்டும் எழுத வேண்டும்

நிறைய நிறைய

பக்கங்கள்  

தூக்கங்கள் களைய களைய 

துக்கங் கள் கரைய கரைய

களை

 களை எடுத்தேன்

களைப்பாய் 

நீயும் வந்தாய் 

வெறுப்பாய் 

சிலை எடுக்கும் மாந்தர் 

களை எடுத்தால்

விருப்பாய் 

சமூகக் கழனி வளரும் 

செழிப்பாய்

ஓடினாள்

 ஓடினாள் ஓடினாள்

 ஓய்வின்றி

உழைப்பில் கூடினா ள்  

ஒத்தாசை தேடி 

பத்தாசை மூ டி 

ஓய்ந்தாள் 

ஓர் இரவு

ஓய்வின் உதவி நாடி 

சுரம் இழந்த கணம்

திடம் தடம் மாறி

படுக்கைத் துணை யாய் 

மறு நாளும் 

துன்பம்  தொடர .....



கற்க நிற்க

 கற்றுக் கொடுக்கவில்லை என்றாய்

கற்கவில்லை   என்றார் 

நிற்கவில்லை என்றார் 

நிற்க முடியவில்லை என்றாய் 

கற்பதும் நிற்பதும் 

கன வாமோ ?



Friday, October 7, 2022

முக்கு

 முக்க வேண்டாம். 

முக்கி

 சிக்க வேண்டாம் 

 சிக்கி

முணக வேண்டாம் 

இள க வேண்டும் 

இயல்பு வேண்டும் 

இறங்க வேண்டும்


மாற்றமா ?

 சாக்கடை அள்ளு வார்

 பூ க்கடை வாசம் போல்

' சந்தனக் குழம்பென '

 சகதியில் 

ஆள் உயர புதை குழியில்

ஆரவார  இரை ச் சலில் 

ஆயுட்கால இழப்பில் 

ஆதவன் ஆவேசத்தில் 

கையுறை, கால் உறை 

யாவும் மெய்யுறை 

75ன் ஏ ற்றல் தேசத்தில் 

மாற்றம் இலா 

மனிதம் 



எப்படி

 அது எப்படி? 

சொல்வது அப்படி

 செப்படி தப்படி

 சேர்வது உருப்படி

புதிர்

 எனக்கே நான்

 புதிராக 

புரிதலுக்கு 

எதிராக

விதை

 எண்ணத்தின் விதை

 எழுத்தின் திசை 

எம்பிடும் விசை

 ஏக்கத்தின் கசை 


வலி

எங்கும் சப்தம் ஏங்கிடும் நிசப்தம் எங்கும் ஒலி எக்கிடும் வலி

விருப்பா

அகவல் எனக்கு
 தகவல். 

 வெண்பா எனக்கு 
வெளிப்பா.

 கலிப்பா எனக்கு 
புளிப்பா.

 பொருட்பா எனக்கு
 விருப்பா