Saturday, August 30, 2025

உலகம் இல்லை!



நியாயம் கேட்கும் உலகம் இல்லை 

நியாயப் படுத்தும் உலகம் 

பகை நீக்கும் உலகம் இல்லை 

புகை மூட்டும் உலகம் 

வலி தீர்க்கும் உலகம் இல்லை 

கிலி சேர்க்கும் உலகம் 

சினம் தணிக்கும் உலகம் இல்லை 

சீற்றம் கூட்டும் உலகம் 

Tuesday, August 26, 2025

உபரி

 

ஒரு பழம் கூட இல்ல 

உறு பசி தீரவில்லை

பல நாட்கள் 

பட்டினியில்

சாக்கு மூட்டை 

பிதுங்கும் சரக்கு 

விழாவிற்கு விருந்தாகி 

"மீண்ட சொர்க்கம்"

புழுங்கியது உள்வாங்கி 

ஒவ்வொன்றாய் 

தீனி ப் பை தாண்டி

கோணிப்பைக்குள்

எருவாய் 

மறு நாள் 

சேகரிப்பில்

மரியாதை

 

கேட்டு வாங்கு

மரியாதை 

போட்டு வாங்கு

வரி

நீட்டி  முழக். கு 

வாட்டி வதை

வம்பு அள 

வணிகம் பல 

Monday, August 25, 2025

வெடிப்பர்

 

நடிப்பவர் உலகம்

இது

படிப்பவர் உலகம் 

அன்று 

துடிப்பவர் உண்மை 

உணர்ந்து

வெடிப்பர் 

Friday, August 22, 2025

குறையில்லை

 

வருவார் என்றேன் 

வரவில்லை

வாரார் என்றேன் 

வந்தார் 


தருவார் என்றேன்

தரவில்லை 


வருகையும்

இன் மையும் 

குறையில்லை



Tuesday, August 19, 2025

தெரிவு

 

அப்படி பேசியது தவறு 

இப்படி பேசியது உறவு 

எப்படி பேசுவது 

அறிவு 

என்றறிவது 

தெரிவு


Sunday, August 10, 2025

நானே தான்

 

என்ன சொன்னாலும்

நான்

நானே தான் 

மாற்றம் எனக்கில்லை

ஏமாற்றம் உன் 

எல்லை 

எனக்கு அதில் பஞ்சம்

இல்லை

Monday, August 4, 2025

இல்லை

 


கவலை இல்லை 

க வடு இல்லை 

சுவடு தொல்லை

முகடு எல்லை 

முடிவும் இல்லை