Monday, July 27, 2026

விலகிய

 

கல்வி முறையும் 

சரியில்லை !

கலவி முறையும் 

சரியில்லை 

மையம் 

 விலகிய 

வாழ்க்கை





Sunday, July 19, 2026

'சதம் இல்லை '


 'சதம் இல்லை.' யாருமே சதம் இல்லை! என்பார் அம்மா.

பேச்சிலே, அவர் மூச்சிலே,மிக இலகுவாய் வந்து விழும் சலிப்புக் கோர்வை.

உதவி இல்லை! ஒத்தாசை இல்லை! ஓரியாய் வாழும் நிலை ! 

நலிவுற்ற வாழ்வில் , ஒண்டி குடித்தனம். ஓட்டாண்டியாய்! 

கொண்டவன் கொட்டம் அடிக்க , கொழுமதி கண்ணை மறைக்க.



Thursday, July 16, 2026

புரிதல்

 

தனி வாழ்க்கை!

பொது வாழ்க்கை !

போக்கில் வாழ்க்கை 

முன்னது சரிவாய் 

பின் அது 

செறி வாய் 

மண் அது 

மறந்தாய் !

மனம் இதில்

தொ லைந்தாய்!




Wednesday, July 15, 2026

செப்படி !

 


என்னவோ 

நினைக்க

எப்படியோ நடக்க

இப்படியா ?

அப்படியா?

தப்படி

தவறி

இப்படி

செப்படி !

Thursday, July 2, 2026

பிடியில்



 ஒட்டி இருந்தோம் 

ஓராயிரம் இரவுகள்

எட்டி இருந்தோம்

ஈராயிரம் இரவுகள்

கட்டி இருந்தோம்

காலத்தின் மடியில்

கழன்று போவோம் 

தாயின் மடியில் 

தா ளத்தின் பிடியில் 

Friday, June 26, 2026

தாயம்

 


அடுத்தவன் பணம் எள்ளு !

தம் பணம் கொள்ளு !

என்ன? இதில் நியாயம் 

எல்லாமே இங்கு 

தாயம்!

Sunday, June 21, 2026

நம் அளவு!

 


உன் இடம் 

உன்னிடம் 

என் இடம் 

என்னிடம் 

அவன் இடம் 

அவனிடம் 

நில அளவா?

நீர் அளவா?

எவ்வளவு?

நம் அளவு!

Saturday, June 20, 2026

ஏற்றும்!

 

நகரத்தின் ஓரம்.நெடுஞ்சாலையை ஏகடியம் செய்யும் வாகனங்கள்.எவ் விதியும் ஏற்க மாட்டோம் என்ற கதியில் விரைந்திடும், இரைந்திடும்,  நாள் தோறும், ஓய்வு, ஒ ழிச்சல் இன்றி

பொருந்திய இல்லம் கழன்று பெயர்ச்சியில் , அயர்ச்சி நீக்கி, ஆழ்ந்த இல்லில் பொழுதுகள் கரையும்.

வடக்கில், தானாக முளைத்து , கிளைத்து  நிழற் பரப்பிடும் மரங்கள். தேன் சிட்டு, சிர்ப், சிர்ப் என்ற அசை, மரங் கொத்தியின் டக் டக்...தாளவரிசை, கோகிலத்தின், ஓயாமல், சாயாமல் தொண்டை வற்றி, வரண்டு போகுமோ? என்று எண்ண தோன்றும் குரல் சூழல்.  திடீரென தென்படும் மயிலும்,பிற உயிரினங்களின் வதிவிடமாகவும் நிலவும், நீளும்........

தார்ச்சாலை உமிழும் வெப்பம், வாகனங்கள் வெளியிடும் மாசு, செவிப்பறைக்கு கேடு கூட்டும் ஒலி மாசு, தூசு , தும்புகளை வடி கட்டி, சுத்திகரிப்பு சுருதியில், நொடிப்பொழுதும் சலிப்பின்றி வாழும் செடி, கொடிகள், மரங்கள் இயல்பாய் தம் வினையில் ...

இது எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும், 'பொலிவுறு பேரிடரில்', ' சுற்றுலா கிறக்கத்தில் '. மர‌ மட்டைகள், செடி, செட்டுகள் வளர்ச்சி யின் எதிரியாய் கான்கிரீட் கட்டமைப்புகள், தார் உருகும் சாலையில், வெப்பம் கூட்டும், வேதனை சேர்க்கும்  ' முன்னேற்ற பதாகை'   ஏற்றும்.....

Thursday, June 18, 2026

பாழ் வெளி

 


தற்கொலை மனம் 

வன்ம குணம் 

வகை அறியா

 வாழ்க்கை 

தொகை அறியா

சினம் 

மற்கொலை 

உணர்ச்சி 

மிகை எழுச்சி 

பகை கூட்டும் 

பகடை உருட்டும் 

பாழ் வெளியாகும் 

Sunday, June 14, 2026

இருக்கத்தான் செய்கின்றன!!




இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய துறைகள் என்ன செய்கின்றன? விடியற்காலையில் ஒரு லாரியில்
 ஏற்றப்பட்டு, எவருக்கும் தெரியாமல், 
அறுவை சிகிச்சையின், 'மிச்ச சொச்ச' 
மனித உறுப்புகள், கொடுமையான மருத்துவக் கழிவுகள், உபயோகிக்கப்பட்ட ஊசிகள் போன்ற சராசரி மனிதனுக்கு புலப்படாத , பல நோய்களை பரப்பக்கூடிய மோசமான கழிவுளை, பல ஆண்டுகாலமாக நீர் நிலைகளுக்கு அருகிலும், நிலத்தடியிலும் கொட்டி  வருகின்றனர்.

மாட்டுக் கழிவுகளைக்கொட்டுவது.  மரங்களில் வைக்கோல் பிரியில் கட்டிவைப்பது ,போன்ற இன்ன பிற ஒவ்வா செயல்களயும் செய்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் துறை, மாசு தடுப்புக்குழு , நலவழித்துறை போன்ற எண்ணற்ற அரசாங்க அமைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன? 

Saturday, June 13, 2026

ஆட்டம்!

 

அங்கே தொலைவு என்றேன்

இங்கே தொலைவில் தொலைவு

என்கிறேன்

ஆட்டோவின் ஆட்டம் 

இருப்பைக் கரைக்கும்

தொலைவைக் குறைக்கும்

பேருந்து பயணம் 

யாத்திரை போல் 

பத்து ரூபாயில்

அகவை முதிர்வில்

ஆட்டம் காட்டும் 

நெடுஞ்சாலைகள்

நடைப்பயணம் 

சாத்தியம் இழந்து

குடிமைச் சமூகம் 

சுற்றுலா போதையில்

Thursday, June 11, 2026

வேடிக்கை



பகத் சிங்கின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் சூழலில், லாலா லசபதி ராய் ,ஆங்கிலேய காவல் துறையின் அடக்குமுறைக்கு ஆளாகி, தியாகி ஆனா சூழலில், மகாத்மா காந்தி, சைமன் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து'பந்த்' திற்கு அழைப்பு விட்ட வரலாற்று  நிலை மற்றும் பகத் சிங் தியாகி ஆனா வரலாற்று தியாக நினைவு கூறும் காலக்கட்டத்தில் 'பந்த்' 'அழைப்பு ' என்பது   அரசியல் அரங்கில், அரசாங்கத்தால் தடை செய்யப்படும் பொருளாக தற்போது  மாறியுள்ளது, விந்தையாக, வேடிக்கையாக உள்ளது.

நீர் வளம்

12 வது நீர் வள மாநாடு புதுவையில் மூன்று நாள் நடை பெற்றது. தேசிய நீர் வள வளர்ச்சி முகவாண்மை, புதுவை அரசுடன் சேர்ந்து நடத்தியது.கோதவரி ஆறு, கிருசுணா ஆறு ஆகியவற்றை தமிழ்நாட்டு பாலாறு, பெண்ணையாறு ஆகியவற்றுடன் இணைப்பது வழியாக் நீர் ஆதார கட்டமைப்பை வலுவூட்டுவது,மாநிலங்களில் உபரியாக உள்ள நீரை, பற்றாக்குறை மாநிலங்களுக்கு பயனுள்ள வகையில் அளிப்பது ஆகிய திட்டமிடுதலுக்கான, செயல்படுத்துவதற்கான வழி வகைகளை பகிர்ந்து கொள்வதற்கான பேரவையாக இது அமைந்தது.
மாநாட்டில் மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சர், மாநில முதல்வர் , மத்திய அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்த அளவில்,செஞ்சியாற்று நீரை பெரிதும் நம்பி உள்ளது புதுவையின் வராக நதி எனும் சங்கராபரணி ஆறு. தமிழ் நாட்டு பங்காரு வாய்க்காலை முழுமையாகச் சார்ந்து நிற்கிறது பாகூர் கடம்பை ஏரி

பஞ்சமில்லை

 


சிந்தனைக்கு 

பஞ்சமில்லை 

பஞ்சமும் சிந்தைக்கு 

 இல்லை 

எல்லை முடிவு 

இல்லை 

முடிவு ம் இறுதி 

இல்லை 

Monday, June 8, 2026

எங்கு செல்கிறது

 

பிரதிநிதித்துவ மக்களாட்சி எங்கே செல்கிறது? எப்படி செல்கிறது?

பண பலம், ஆள் பலம், குறிப்பாக சாதிய பின்புல வலிமை, ஆகிய கூறுகள், கட்சியில், தேர்தல் அரசியலில் தீர்மானிக்கும் காரணிகளாக, இன்றைய சமூகச் சூழ்நிலை இருக்கிறது.

கட்சிகள், போட்டியாளரை தேர்வு செய்யும் விதமும் இந்த தகுதிகள் அடிப்படையில்தான்.

நேற்று மனை வியாபாரம், இன்று அரசியல் வியாபாரம்.அறக்கட்டளை பதாகை, மதிய இலவச உணவு. பிற உதவிகள், " நல உதவி" அடையாளத்தில். சர்க்கரை தொடங்கி, சட்டை துணி வரையில். அ ச்சார  உடன்படிக்கை அக்கறையுடன்!

முதுமை

 

முதுமை பயணத்தில் பொழுது, காலம்அதன் ஒழுங்கில், அதன் விசையில், தளர்வின்றி, தொய்வின்றி நகர்கிறது. அதன் உலகில் ஒன்றிய ஒரு சமயம் , ஓய்வில், இப்படியாக எண்ணம், எழுத்தில் நிலை கொண்டது.

"எப்படியோ கழிகிறது காலம்.

இப்படித்தான் என்றில்லாமல். திட்டமிடாத திட்டமாக, தெவிட்டாத கட்டமாக. ....

பட்டமாய் இருந்தால் பறந்திருப்பேன்.வானில் திரிந்திருப்பேன் .  நூல் பிடித்தவன் திறமையில் வாலு டன், வண்ணத்தில் மிதந்து மின்னியிருப்பேன்.என்னை மறந்திருப்பேன்.

எண்ண ஓட்டத்தில், நீல வானத்தில், காற்றின் கலகலப் பில் கரைந்திருப்பேன். உன்னத உயரத்தில் ஏறி இருப்பேன்.அசைந்து, அசைந்து ஆட்டம் போட்டு, ஆனந்த இராகம் இசைத்து, அலுப்பு நீங்கி, சலிப்பு போக்கி.....

Friday, June 5, 2026

வழக்கு

 


பந்தாடுகிறார்

இரு பக்கமும் 

வந்தாடுகிறார்

பொழுது

 

ஒரு பொழுது போல்

மறு பொழுது இல்லை 

ஒரு நாள் போல்

மறு நாள் இல்லை 

திரு நாள் என்பதும் 

தனியே இல்லை 

Wednesday, April 29, 2026

துப்புரவு



 கட்டி

கொட்டி


கொட்டி

 கட்டி


செப்பம் 


சாக்கில் 

போக்கில் 

Wednesday, April 22, 2026

ஞானப் பால்

 


எனக்கும் கிடைத்தது 

எவர்க்கும் 

இன்று 

தேக்கரண்டி 

உமையின் 

வடிவில் 

பக்தர்கள் 

நேர்த்தி

ஞானம் 

அடைந்தேன்!

நான்?

 


பேசுவது 

பிடிக்கவில்லை !

நீ பேசுவதும் 

அவன் பேசுவதும் 

அதற்குள் 

இல்லை 

எல்லை!

நான்?

Saturday, April 18, 2026

தடம்

 


அப்பா அப்பா

நான்

சொன்னது

தப்பா தப்பா

உப்பா சப்பா 

உணவே

இல்லாத போது 

தனியே நின்ற போது 

தவிப்பே நின்ற போது 

காயம் பட்ட முதுகு 

மாயமான கனவு 

தாயம் போட்ட 

உணர்வு 

தடம் புரண்ட 

நினைவு 

Saturday, April 11, 2026

நெகிழ்ச்சி

 


நீ

 இழுக்க 

அவன்

 இழுக்க 

இறுகிய 

இழுவை 

பின்னிழுக்க 





Friday, April 10, 2026

அகம்

 



முதுகும் அழகே

முகத்தை

 மறப்போமா?

அகத்தின் அழகு 

முகம் 

முதுகின் அகம் ?

Thursday, March 19, 2026

யுத்த வெறி

 


யுத்த வெறி 

ரத்த வெறி 

உயிர் பலி 

கேட்கும்

ஈழமாயினும்

ஈரான் ஆயினும் 

போர்க் குதிரைகள் 

குழந்தைகள் 

கொலை 

கொண்டாட்டம்!

வல்லாதிக்க 

வெறி

பெருகிடும் 

ஆயுத வணிகம் 

கல்லறை கதறும்

சில்லறை குவிக்கும் 

உலக அரசியல் 

ஊமையாய்!

செவிடாய்!

குருடாய்!



நோர்

 

புறம் கூறும் 

பொழுது போக்கும் 

பிறன் வாழ்க்கை

விளையாட்டாய்

நோர் நொட்டும் 

நொடிப் பொழுதும்

நோகாமல் 

இழுவை வாய் 

இளைப்பின்றி 

Tuesday, February 3, 2026

நிற்கும்!

 

'ஒழுங்கு ஊர் ஆளும் '

உன்னை ஆண்டதா?


அமைதியைத் தேடி 

போர் 

அல்லல் உறும் 


ஆயுதங்கள் ஓய்வு

கேட்கும் 


சவப் பெட்டிகள் 

சந்தையில்


விலை ஏற்றத்தில் 

வீங்கி நிற்கும் 

Saturday, January 31, 2026

ஆட்சி!

 


உள்ளது அறிய 

உயரத்தில் 

நல்லது 

சொன்னது சோர்ந்தது  

சோர்ந்தது சேர்ந்தது

எண்ணத்தில் உயர்வு 

என்றும் இல்லை 

அயர்வு 

கள்ளத்தில் காட் சி

காலத்தின் மாட்சி

கரையேறும் ஆட்சி 

இல்லை

 


எனக்கு தந்தார் 

இல்லை 

உனக்கு தந்தேன்

 வில்லை 

அன்றலர்ந்தேன் 


அற்றைத் திங்கள் 

அவா

இற்றைத் திங்கள் ?