"The Admirers of the Little Box",
வசுகோ பப்பா, கவிதையின் ,
மொழியாக்கம்
சின்னப் பெட்டியே பாடு
உறக்கம் உம்மைக் கடந்திடாமல்
உம்முள் உலகம் விழித்து நிற்க
நான்கு பக்க வெற்றிடம்
நம் தொலைவை அருகில் மாற்றிட
மறதியை
நினைவாக்குவோம்
ஆணிகள் தளர்ச்சி கொள்ள
செய்யாதே
முதன் முதலில்
இவ்வுலகை த் தாண்டியும்
காட்சிகள்
காண்கிறோம்
திறவுகோல் துளை ஊடே
உம் திறவுகோல்
எம் வாய்களைத்
திறந்திட
பாடல் வரிகள்,
எண்கள்
எம் வாய்களில்
முணு, முணுக்க
உம் மூடியை விரிந்து
திறந்திட ,
தாழ்ந்த பகுதி
விழுந்திட,
இசையாதே
சின்னப் பெட்டியே பாடு