எர்மன் எசி ,
" In Secret We Thirst"
கவிதையின் மொழியாக்கம்
மென் சித்திர பின்னல்
அழகிய, ஆன்மீக
இலயப் போக்கில்
இன்மையைச் சுற்றி
சுழலும் வாழ்க்கை
இழக்கிறோம்
இங்கே, இப்போதே
அழகின் கனவுகள்
இளைய மகிழ்ச்சி
சுவாசக் காற்றாய்
மாசற்ற இசைவில்
உம் இளைய மேற்பரப்பின்
சுடரிடும் ஆழத்தில்
இரவின் ஏக்கம்
விலங்கியல் வேட்பில்
வெறுமை நூற்கும் குறிக்கோள்கள்
அன்றி தேவைகள் அற்று ஆட்டம்
வாழ்க்கையை விடுவிக்கும்
என்றும் விளையாட்டு அணியமாய்
ஆயினும், இரகசியமாய்
மெய்மை வேட்கையில்
கருத்தரிப்பு, பிறப்பிற்காய்
கவலைகள் , இறப்பின் , வேட் கையில்
No comments:
Post a Comment