உடன் பிறந்தாய்
ஒன்றாக வளர்ந்தாய்
ஒரே தட்டில் உண்டாய்
உறங்கி னாய்
ஒரே பாயில்
ஓயாமல் கேட்பாய்
கதை
பறந்தாய் பிழைக்க
அயன் மனை
அரவணைப்பில்
மறந்தாய்
பிறந்தகம்
தேடி வந்த உறவை
நிற்க வைத்தாய்
தெருவில்
உருவில் மாற்றமில்லை
உள்ளத்தில்?
உடன் பிறந்தாய்
ஒன்றாக வளர்ந்தாய்
ஒரே தட்டில் உண்டாய்
உறங்கி னாய்
ஒரே பாயில்
ஓயாமல் கேட்பாய்
கதை
பறந்தாய் பிழைக்க
அயன் மனை
அரவணைப்பில்
மறந்தாய்
பிறந்தகம்
தேடி வந்த உறவை
நிற்க வைத்தாய்
தெருவில்
உருவில் மாற்றமில்லை
உள்ளத்தில்?
கண்ணீர் வரவழைக்கும்
தண்ணீர் பஞ்சம்
தலைநகரில்
தவித்த வாய்க்கு
தகிக்கும் மெய்க்கு
நீர் தருவார்
யார்?
நீர் லாரிகள்
பிடிக்க
முட்டி மோதும்
மக்கள்
இயற்கையின் கொடை
எட்டிடும் நடை
எவர் பொறுப்பு
இதுவெல்லாம்
உயிர் பிரச்னை அன்று
உயர் பிரச்னை அல்ல
இன்று
ஆளும் வர்க்கம்
மேட்டுக்குடி மேய்ச்சலுக்கு
தாரை வார்க்கும்
நீர், நிலம், வளம்
யாவும்
நிர்க்கதியாய்
வயதான காலத்தில், மகன் வீடோ, மகள் வீடோ சென்று, தங்கி ஒத்தாசையாக இருக்க முடிவு செய்து புறப்புடும் பெற்றோர். அழைப்பின் பேரில் அனுமதி கிடைக்க மகிழ்ச்சியுடன் பயணம்.
ஆரம்பம் உற்சாகம், வரவேற்பு. பே ரக் குழந்தைகள் பிரியம் ஈர்த்திட பொழுதுகள் விரையும். பெரியவர்களின் பேறு கால ஒத்துழைப்பு தனிக் குடும்ப சூழ் நிலையில் , அனைவருக்கும் வாய்க்கும் என்று கூற முடியாது.
அயல் தேசத்தில், எந்த சேவைக்கும் விலை உண்டு. பெறும் சம்பளத்தில் வரி, வாய்தா செலவுகள் போக, இழுத்து பிடித்து வாழ்க்கை, வசதி யாவும்.
இதில் காலஞ் செல்ல, செல்ல முதுமையின் காரணமாக நலிவுற்ற பெற்றோர் நோய்,வாய் பட்டால் உதவிக்கு வந்தவர்களுக்கு, மருத்துவ உதவி அளிப்பது கூடுதல், பெருஞ் சுமையாகி விடுகிறது.
பொருளாதார சக்தி வாய்ப்பு உடையவர்கள் ஆயின் சமாளிக்க இயலும். இதில் கூட நாணய மதிப்பு வித்தியாசத்தில் அனைவராலும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்வதில் சிரமம் இருக்கும்.
அயல் நாட்டு குடி மக்களுக்கு காப்பீடு, அரசாங்கத்தின் சமூக பாதுகாப்பு சலுகைகள் போதிய அளவில் கை கொடுக்கின்றன. ஆகவே அவர்களுக்கு இதில் சிரமம் இல்லை.
வருகை தரும் உறவுகளுக்கு கூடுதல் துயரம் இவ்வகையில் என்று கூறினால் அது மிகையாகாது.
சொன்னேன் மறந்தாய்
பதில்
சொல்லாமல் கிடந்தாய்
மீண்டும்
நினைவுப்படுத்த
விருப்பில்லை
நீண்ட இருப்பில்
கசந்தாய்
மீண்ட இருப்பின் உணர்வாய்
இருந்தேன் விருந்தாய்
கள்ள சாராயம்
நச்சு சாராயம்
யாவும் நாசம்
விளைவிக்கும்
நாசகாரிகள்
எதிலும் பணம் பார்க்கும்
வியாபாரம்
இவர், அவர் என்ற பேதமில்லை
அனைத்து வண்ணங்களும்
அடித்தள மக்களை
இலக்கு வைக்கும்
உழைத்து,உழைத்து
உருக்குலையும்
வாழ்க்கை
ஊதியம் போதாமை
மயக்கத்தில் ஆழ்த்தும்
ஆளும் வர்க்கம்
கள்ளக்குறிச்சி தரும்
பாடம்
உடன் மதுவிலக்கு
கட்சி அரசியல் தாண்டி
மக்கள் அரசாய்
அரசியல் பிழை அகற்றி
அறம் காத்திட வேணும்
கொடுஞ்செயல் இழைத்த
கொடி யவர் கொடி
அறுத்து
கோ லோ ச்ச வேண்டும்
இருப்புப் பாதை விலகி
இடித்து ஏறி
அந்தரத்தில் தொங்கும்
பெட்டிகள்
உயிர் களுடன்
சமிக்ஞை மறந்தார்
சனங்களை யும் மறந்தார்
மேற்கு வங்கத்தில்
உயிர்கள் பலி
இயல்பாய்
அடுத்தடுத்து மாநிலங்களில்
சிக்கன பயணம்
நாட்டை இணைக்கும்
நெடிய போக்குவரத்து
பாதுகாப்பு அம்சத்தில்
கும்ப கர்ண பருவம்
இதில் புதுமை என்ன?
சாதனை என்ன?
சரிந்த வாழ்க்கை
பிரிந்த உயிர்கள்
பொறுப்பு ஏற்பு
எவர்?
இழப்பீடு ஈடாகுமா ?
இனியொரு விதி செய்வோமா?
விபத்தில்லா தொடர் வண்டி
விளங்க வைப்போமா?
ஏன் அடித்தாய். ?
கேட்க முடியவில்லை !
உன் பிள்ளை என்பதால்
உரிமை
உண்மைதான்
சண்டிக்கு
கண்டிப்பு தேவைதான்
அடியும், இடியும்
அவசியமா?
எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்!
பதிலுக்காக அல்ல
பதிவுக்காக
இறுக்கத்தை தளர்த்தி விட்டேன்
நெருக்கத்தைக் குறைத்து விட்டேன்
புழுக்கம் போகவில்லை
புன் சிரிப்பும் ஏறவில்லை
உள் சிரிப்பும் கூடவில்லை
உண்மை விளங்கவில்லை
ரொம்பவும் சிந்திக்காதே
ரொம்பவும் நிந்திக்காதே
வருந்தாதே
வருத்தாதே
தள்ளாதே
மகிழ்வை கொல் லாதே
முறிவு கொள்ளாதே
செறிவு நில்லாதே
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.பல பத்தாண்டுகள் கடந்த பிறகும். அனுபவம் கூடுதல் என்று மிதப்பில் நடந்து கொண்டாலும், சிறிய சம்பவம் கூட நம்மை இடர வைக்கிறது, இடைஞ்சல் தருகிறது.
மனைவி, மக்களை, நாம் ஒன்று சொல்ல, அவர் ஒன்று சொல்ல, இடைவெளி,மோதல் திடீரென உருவாகிறது.
காதல் மணம் தொடங்கி, ஏ ற்பாடு திருமணம் வரை. ஏ ன்? 'ஒன்றாக வாழ்வது' என்னும் தற்கால வாழ்க்கை முறைகள் வரை. முரண்கள் எழுவது இயல்பு என்றாலும் , சில சிக்கல்கள் திவீரமாகி, மன/மண முறிவில் முடியும் போக்கு ம் பரவலாக, பட்டியலில் தினசரி நிகழ்வாய் இடம் பெறுகிறது.
நிதானம் , போதவில்லை.மேலும் கூடுதலாக அவசியம் என்று மீண்டும் நமக்கு, அனுபவம் பலமாக பாடம் கற்றுக் கொடுக்கிறது. ஏற்க வேண்டும் , ஏ ற்று அடுத்த நடை எடுக்க பழக வேண்டும் .
பதிவு செய்
உள்ளதை
உண்மையை
அடுத்த கட்டம்
தன்னை
சார்ந்த அமைப்பை
நிறுத்து
தவறில்லை
முன்னோடி யை
முடக்கி
முக்காடு இடும்
வரலாறு
முழுமையா ?
அவனுக்காக
ஏன் நீ
வருந்த வேண்டும்?
உனக்காக நீ
வருந்தாத போது!
அவனுக்காக ஏன் நீ
அழ வேண்டும்?
உனக்கே நீ
அழாதபோது !
புது சூழல்
பொல்லாத சுழல்
எதுவும் ஏற்கும்
மனம்
இரைகிறது
எரிச்சல் கூடுகிறது
கரிசல் மண் அன்று
கரிசன மண் இன்று
என்றாலும் தடுமாற்றம்
எண்ணற்ற உருமாற்றம்
முதிர்ச்சி
தளர்ச்சி
வளர்ச்சி
மலர்ச்சி
அகவை கூடும்
முதுமை சேரும்
பெருமை தேடும்
பொறுமை வாடும்
அருமை அறியும்
வெறுமை விலகும்
ஒருமை விளங்கும்
புரியாமல் வளர்த்தேன்
புரிதல் வேறாக
முந்துரிமை
அறியாமல் நழுவினேன்
முந்திய நாளில்
இந்நாளில் செய்தேன்
ஈடு
தடுமாற்றம் , தடைகள்
தாண்டி
பயிலக வாழ்க்கை
அயலக செலவில்
கேட்கிறதா?
காது
திறக்கிற தா?
கதவு
கேட்கிறது
காது
திறக்கவில்லை
கதவு
இனிக்கிறதா வரவு ?
கசக்கிறதா செலவு?
இனிப்பும், கசப்பும்
இரண்டும் ஏற்போம்
அறு சுவை
உறுப்பாய்
காதலை தொலைப்போம்
கனவில் மிதப்போம்
கனவை உணவாக்கு
உணவை கனவாக்கு
கவலை மறப்போம்
இலகுவாகும்
மனம்
மனிதம் தழைக் கச் செய்வோம்
விலகியும் அன்பு செய்வோம்
வீண் பழி விலகி நிற்போம்
விதிக்கொரு
விதி செய்வோம்
வீண் மதி வெல்வோம்
கஞ்சன் அல்ல
சிக்கனம் பிடிக்க
சிக்கென பிடித்தேன்
இக் கணம்
தலைக் கனம்
அல்ல
தனிக் குணம்
தன்னம்பிக்கை மனம்
நெருக் கடி
தெளி
நெஞ்சன்
புரியவில்லை!
தெரியவில்லை!
புரிந்தது போலவும்
தெரிந்தது போலவும்
பல காலம்
பாவனையில்
சில காலம்
சோதனையில்
சகிப்பு
நலிவில்
பொறுப்பு
சரிவில்
புறம் கூறும்
அறம் !
குதிப்பில்
என்ன எழுதுவது?
எப்படி எழுதுவது?
அப்படி எழுதிய படி
இப்படி எழுதலாமா?
இப்படி
எப்படி?
இதர படி
எப்படி ?
பிறப்பித்தாய்
பிறந்தேன்
சிறப்பித்தாயா?
நான் என்ன செய்வேன்?
முயற்சி செய்தேனா?
உயிரியல்
நேர்ச்சியில்
தரித்தே ன்
என் பிழை இல்லை
அவன் பிழையும் இல்லை
உணர்ச்சியின் தொல்லை
உள்ளபடி சொன்னேன்
தள்ளுபடி அன்று
உதித்தாய்
பிறரைப் போ ல்
இதில் ஏ து
இழிவு
பிழிந்து கொள்ளாதே
கசந்து மெல்லாதே
எண்ணத்தைப் பிளந்து
செல்லா தே
தூக்கத்தை
தொலைத்த
இரவுகள்
ஏக்கத்தை
சுமந்த
கனவுகள்
பக்கத்தை
இழந்த
நூலாய்
துக்கம் சேர்
வாழ் வாய்
அகம் அகன்று
அயலகம் செல்வார்
குண்டி நனைய
உண்டி நிறைய
உடையவன் உதாசீனம்
உதவியவன்
உறிஞ்சி ட
உழைப்பை விற்பார்
ஒரு கோடிக்கு மேல்
பெட்ரோலிய நாடுகளில்
பெற்றோர், மற்றோர்
பிரிந்து
முகவர் கொழிக்கும்
உழைப்பு ச் சுரண்டல்
கால்வாசி கையில்
அந்நிய செலாவணி ஆக
கிடை விலங்குகள் போல்
கொட்டடி வாழ்க்கை
விபத்தில் கருகினர்
குவைத்தில்
உடலைப் பெறுவதில்
உயிர்க்கும் வேகம்
உள்ளம் கருகிய
வேளையில்
உதவிக்கு இல்லை
பக்ரயின் ஆனாலும்
பரிதாபத்தில்
உழைக்கும் வர்க்கம்
பல பத்தாண்டுகளாக
ஊடகச் செய்தியாய்
உலா வரும்
உச்சு கொட்டும்
இரங்கற்பா இசைக்கும்
ஆளும் வர்க்கம்.
இயற்கை உபாதையை கூட பாதுகாப்பாக கழிக்க முடியாத நிலை புதுச்சேரியில். மீத்தேன் வாயு வீட்டிற்குள் புகுந்து உயிர்பலி. ஆன்மீக பூமி, சுற்றுலா வளர்ச்சி, பல துறைகளில் முன்னேற்றம் என்ற பாராட்டு, பதாகைகள் மேடை ஏறும் நாள்தோறும்
உள்ளாட்சி நிர்வாகம், மற்றும் பொதுப்பணித்துறை கழிவு அகற்றும் பணி முறையாக செயல்படாத நிலையில் , அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள ,மக்களின் வாழ்வுரிமை பறிப்பு ,நிகழ்ந்துள்ளது. இத்தகைய கொடுமைக்கு ,எவ்வித சமாதானமும் ஏற்பு உடையதல்ல.
இந்த சம்பவம் ஒரு கொலைக் குற்றத்திற்கு உரியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் , ,அதிகார அடுக்கின் மேல் நிலையில் இருந்து, கீழ் நிலை வரை , தண்டனைக்கு உரியவர்கள் ஆகும்.
பாதாள சாக்கடைத் திட்டத்தின் தரம், மற்றும் பாதுகாப்பு முறைமைகள் குறித்தும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், புதுச்சேரி அரசு இத் தருணம் , உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
பல பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரி ப்பு கிணறுகள், நிலையங்கள் அமைக்காமல், ஒப்பந்ததாரர் நலனுக்காக பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாய்கள் பதிப்பது, பத்தாண்டுகளுக்கு மேலாக ,அப்படியே அலட்சியமாக விட்டு விடுவது, " பொலிவு நகர திட்டத்தின்" இலட்சணம் அல்ல.
அதிக தாவர உயிர்களும், பிற உயிரினங்களும் வாழும் கடல், தாய்க்கு சமமாக,போற்றப்பட வேண்டியது, பாதுகாப்புடன் பேணப் பட வேண்டும். ஆனால், வேதியல் தொழிற்சாலை கழிவுகள்,சாக்கடைத் திட்டக் கழிவுகள் என நாள்தோறும் கடலில் பெருமளவில் கலக்கிறது.
இது யார் குற்றம் ?
சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அரசு நிர்வாகம் ,அதனை சீர்குலைக்கும் வகையில் பல பரிமாணங்களில் எதிர்மறையாக செயல்படுவது ,நல்லது அன்று.
ஊர் முழுக்க திறந்த சாக்கடைகள், குப்பைகள் மிதக்கும் வாய்க்கால்கள் , கொசு கும்மாளமிடும் கோட்டமாய், விளங்கும் கோலம், புதுச்சேரிக்கு அழகு சேர்க்குமா?
போர்க் கால அடிப்படையில் இவற்றை தீர்க்க களத்தில் இறங்கி , இதய சுத்தியுடன் வேலை செய்ய வேண்டும். அதிகாரம், ஆஸ்தி இவைதான் வாழ்க்கை என்ற கோணல் அரசியல் ஒரு பேரழிவை படிப்படியாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் என்கின்ற இயற்கை நியதியை நாம் மறந்து விடக்கூடாது.
இருக்கும் இடத்தில் கரைந்திடு
இறுக்கம் நீக்கி தளர்ந்திடு
நெருக்கம் உணர்ந்து திருந்திடு
நேரிய வழியில் நடந்திடு
நேர்மை எது என்று அறிந்திடு
நேற்றைய வாழ்வை மறந்திடு
இறக்கிய சுமை ஏற்றாதே
இன்னொரு சுமை தாளாதே
எல்லாம் தெரியும் எனக்கு
எதுவும் தெரியாது உனக்கு
எக்கிடும் தப்பு கணக்கு
ஏங்கிடும் மனக் கணக்கு
எல்லாரிடமும் இருக்கு
ஏ ன் இந்த கிறுக்கு
இற ங்கிடு. மீசை முறுக்கு
"வேலைக்காரன் திறமையை வெய்யிலில் பாரு"
எதற்கு இப்படி சொல்கிறார்? என்ன?
இது கொ ச்சையா? அன்றி
பச்சையா?
இந்த சொல்லாடல் சூ ட்சுமம் புரியாமல் தவித்த வயது. படிப்பறிவு இல்லாத காரணத்தினால் அம்மா இப்படி , கொச்சையாக, அல்லது அசிங்கமா பேசுகிறார் என்று கூட எனக்கு நானே சுய விளக்கம் கொண்டு ,வெட்கப்பட்டு , விலகியது உண்டு.
எங்கள் வீட்டு எதிரில் மண்ணாங்கட்டி ஐயா , அப்பாவின் பால்ய நண்பர்.சலவையாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாயா, பிள்ளையா குடும்ப பழக்கம் உடையவர். வன்னியர் தெரு மருவி, வண்ணார் வீதி ஆகி இருந்தது. மூன்று வீடுகள், பூர்வீ க சொத்து உரிமையாக இருந்த காலம்.
இதில், எங்கள் குடியிருப்புக்கு எதிர் புறத்தில் அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். சிமெண்ட் உபோயோகம் அரிதான காலத்தில், கரசூர், தொண்டமாந த்தம் கிராமங்களின் சுண்ணாம்பு சூலையில் இருந்து , கட்டை வண்டியில் ஏற்றி வரப்படும் சுண்ணாம்பு. புளிக்க வைத்து,இடித்து, பக்குவப் படுத்தி எடுக்கும் பெண்கள் ,பாட்டுப்பாடி பூசு வேலைக்கு ஆயத்தம் செய்வார்கள்.
சுமார் ஓராண்டுக்கு மேலாக , அவசர கதி தவிர்த்து, கட்டு வேலை , பூசு வேலை , மெல்ல,மெல்ல, உறுதியாக நடந்து கொண்டிருந்தது.
கிராமத்தில் வயல், வரப்பு வேலைகள் இல்லா சமயத்தில் கொத்தனார் வேலை. அது தருணம்,நாட்டுப் புற பாடல்கள் நளினமாக வந்து விழும். உலக் கைகள் தாளத்தில். சிறுவர்கள் வேடிக்கைப் பார்க்க ,சிரமமின்றி அரங்கேறும்.
பொன்னி ஆயா , கூரை வேயப்பட்ட ,எதிர் வீட்டு வாசற்படியில் குத்தங் காலிட்டு அமர்ந்து உற்சாகமாய் வேலை வாங்கிக் கொண்டு, அம்மாவிடமும் ,வீட்டுக் கதைகள் சன்னமான குரலில் பேசிக் கொண்டிருப்பார்
இந்த உரையாடலில் , குடும்ப பிரச்னை உள்ளிட்ட அம்சங்கள் வந்து இறங்கும்.சுமை இறக்கி வைத்தாற்போல. இதன் மத்தியில் எங்கள் காதில் வாங்கிய வரிதான் இது.
வெய்யிலில் வேலை செய்யும் மேஸ்திரி,சித்தாள் குறித்து, அவர் வேலையின் கீர்த்தி , அல்லது நேர்த்தி சம்பந்தப்பட்டது என்ற புரிதலில் மட்டும் அப்போதைக்கு அறியப் பட்டது.
சில காலம் கழித்து, கடுமையான காற்று, மழையில் ,மோட்டு வலை பிய்ந்து பறந்த கூரை வீட்டில், உள்ளே மழை கொட்ட, இருக்கும் சட்டி, பானைகள், பண்ட பாத்திரங்கள் நீர் பிடிக்க, சிறு,குட்டைகளாக நனைந்தது.
கேஸ் பலகைப் பெட்டிக்குள் கொம்மை வைத்த அடுப்பு வைத்து , பொங்கி சாப்பிட்டு,மழைக் காலத் தை சமாளித்த பிறகு, வானம் வெளுத்த பின், தென்னை ஓலைக் கீற்று , தேங்காய்த் திட்டில், தோப்பு கீற்று, பார்த்து வாங்கி வந்து ,மீண்டும் கூரை போடும் வேலை எங்கள் வீட்டில் நடந்தது.
கீழிருந்து மேலே ,வரிசையாக ஓலைகளை அடுக்கி ,தென்னை பாலை நாரில் , ஒன்றோடு ஒன்று பிணைத்து, அட்டி, அட்டியாய் வேலை நடக்கும். மூங்கில் கழியில் சொருகி மேலே உயர்த்தி கொடுப்பார்கள்.உயரம் போகப் போக ஏணியில் ஏறி நின்று, ஒத்தாடையுடன் பணி நடக்கும்.
முகடு எட்டியதும், மறு பக்கம் இருந்து கூரை வேயப்பட, படிப்படியாக, மோ ட்டு வலை மூடுவதுதான் உச்ச கட்டம். பொதுவாக,மழைக் காலங்களில், சூறைக் காற்று ,கூரை வீட்டில் வசிப்பவர் வயிற்றில் புளியைக் கரைத்து விடும். மேட்டு வலையை பதம் பார்த்து விடும்.
வெய்யில் காலங்களில் குளு, குளு என்று இருக்கும்.அதன் அனுபவமே அலாதியானது. தென்னை நார் கயிற்றுக் கட்டிலில் சொகுசாக அப்பா உறங்க, அவர் சென்ற பின், இடத்தைப் பிடிக்க போட்டியில் நாங்கள் முந்துவோம்.
கோடையில், அவ்வாறு படுத்துக் கொண்டு மோட்டு வலையைப் பார்க்க, சூரிய ஒளிக் கற்றை ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் போல வீட்டினுள் பிரகாசித்தது. இதைப் பார்த்து பரவசப் பட்டு அம்மாவிடம் தகவல் சொல்ல அவரும், "அடடா, மழைக்குப் பின் , மப்பும், மந்தாரமாக இருக்கும் போது கூரை அவசர கதியில் போட்டது. இப்பத்தான் புரியுது, பொன்னி ஆயா சொன்னது. "வேலைக்காரன் திறமையை வெய்யிலில் பாரு" , அர்த்தம் "
அட, பேச்சு வழக்கில் நம் முன்னோர்கள் எவ்வளவு அழகாக, ஒரு வேலையைப் பற்றிய கணிப்பை, மதிப்பை, மிக எளிமையாக நமக்கு விளக்கி உள்ளார் என்று உணர முடி.கிறது.
கண்டிப்பாய்
கண்டிப்பு தண்டிப்பில்
முடிந்தால்
கழுவாய் உண்டா
சூடு காட்டினாய்
சுடும் என்றறிய
அறியா குழந்தை
கை பிடித்து
நடத்திய நீ
புகட்டினாய் பாடம்
என்றாய்
கேட்ட பாட்டியிடம்
எனக்குத் தெரியாதா
என்றாய்
எட்டி நில்
தொனியில்
கட்டிப் பிடித்தக் கை
கழன்று கொண்டது
உறவு அழுத்தம்
உறக்கம் தொலைத்து
எனக்கு வெற்றி
உனக்கு வெற்றி
கணக்கு சரி
பிணக்கு சரி
அதிகார மையம் நோக்கி
அரசியல் ஆட்டம் ஆரம்பம்
வாக்களித்த மக்கள் அணி
அணியாய் ஆரவாரம்
அடுத்தது என்ன?
அன்றாடம் திண்டாட்டம்
வாழ்க்கையில் விலகும்
கொண்டாட்டம்
எப்படி நடக்க ?
இப்படி நடக்கும் என்று அறியாத போது
அப்படி நடந்தது சரியா?
உரிமை உள்ள கை
ஓங்கும்
அருமை அறிந்த மெய்
நடுங்கும்
பெருமை பேசிய வாய்
மூடும்
உனக்கென்ன வருத்தம்
பெற்றவர் அறியா பொருத்தம்
உன் கடமை கவனித்துக் கொள்வதே
உழைப்பு நல்குவதே
உரிமை அதிகம் ஆகாதே
உறவு அழுத்தம் கூடாதே
வந்தோம் இருந்தோம்
வரம்பில் நில்
தாண்டி வராதே
தூண்டில் இடாதே
துயரம் கொள்ளாதே
கொஞ்சுவாய்
கெஞ்சு வாய் ஆசையுடன்
அஞ்சுவாய்
அடக்குவாய் அன்புடன்
கண்டிப்பாய்
தண்டிப்பாய் பொறுப்புடன்
வெறுப்பை விலக்கி
விருப்பு துலக்கி
விளங்கிடுவாய்
நினைவுகளின் சு மையில்
நெடும் பயணம்
இமைகள் கன த்திடும்
தேடும் வானம்
தொலைவில்
எல்லை இல்லை
இலக்கு
தொ லைந்து போகவில்லை
உம் நிழல்
உணர்ச்சிப் பெருக்கில்
ஊன்றி
புணர்ச்சி ப்பிழிவில்
புல ர்ந்தவன்
நீ
தளர்ச்சி இழையில்
தறி யாடி
வளர்ச்சி குன்றி
மலர்ச்சி இழந்தவன்
முயற்ச்சி உணர்வில்
உள் வாங்கி
முண கல் போக்கு
பின் வாங்கி
பூத்திடுவாய், காய்த்திடுவாய்,
கனி ந்திடுவாய்
இப் பிறவியிலேயே
ஒரு
மறு பிறப்பாய்