கல்வி முறையும்
சரியில்லை !
கலவி முறையும்
சரியில்லை
மையம்
விலகிய
வாழ்க்கை
'சதம் இல்லை.' யாருமே சதம் இல்லை! என்பார் அம்மா.
பேச்சிலே, அவர் மூச்சிலே,மிக இலகுவாய் வந்து விழும் சலிப்புக் கோர்வை.
உதவி இல்லை! ஒத்தாசை இல்லை! ஓரியாய் வாழும் நிலை !
நலிவுற்ற வாழ்வில் , ஒண்டி குடித்தனம். ஓட்டாண்டியாய்!
கொண்டவன் கொட்டம் அடிக்க , கொழுமதி கண்ணை மறைக்க.
தனி வாழ்க்கை!
பொது வாழ்க்கை !
போக்கில் வாழ்க்கை
முன்னது சரிவாய்
பின் அது
செறி வாய்
மண் அது
மறந்தாய் !
மனம் இதில்
தொ லைந்தாய்!
ஒட்டி இருந்தோம்
ஓராயிரம் இரவுகள்
எட்டி இருந்தோம்
ஈராயிரம் இரவுகள்
கட்டி இருந்தோம்
காலத்தின் மடியில்
கழன்று போவோம்
தாயின் மடியில்
தா ளத்தின் பிடியில்
உன் இடம்
உன்னிடம்
என் இடம்
என்னிடம்
அவன் இடம்
அவனிடம்
நில அளவா?
நீர் அளவா?
எவ்வளவு?
நம் அளவு!
நகரத்தின் ஓரம்.நெடுஞ்சாலையை ஏகடியம் செய்யும் வாகனங்கள்.எவ் விதியும் ஏற்க மாட்டோம் என்ற கதியில் விரைந்திடும், இரைந்திடும், நாள் தோறும், ஓய்வு, ஒ ழிச்சல் இன்றி
பொருந்திய இல்லம் கழன்று பெயர்ச்சியில் , அயர்ச்சி நீக்கி, ஆழ்ந்த இல்லில் பொழுதுகள் கரையும்.
வடக்கில், தானாக முளைத்து , கிளைத்து நிழற் பரப்பிடும் மரங்கள். தேன் சிட்டு, சிர்ப், சிர்ப் என்ற அசை, மரங் கொத்தியின் டக் டக்...தாளவரிசை, கோகிலத்தின், ஓயாமல், சாயாமல் தொண்டை வற்றி, வரண்டு போகுமோ? என்று எண்ண தோன்றும் குரல் சூழல். திடீரென தென்படும் மயிலும்,பிற உயிரினங்களின் வதிவிடமாகவும் நிலவும், நீளும்........
தார்ச்சாலை உமிழும் வெப்பம், வாகனங்கள் வெளியிடும் மாசு, செவிப்பறைக்கு கேடு கூட்டும் ஒலி மாசு, தூசு , தும்புகளை வடி கட்டி, சுத்திகரிப்பு சுருதியில், நொடிப்பொழுதும் சலிப்பின்றி வாழும் செடி, கொடிகள், மரங்கள் இயல்பாய் தம் வினையில் ...
இது எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும், 'பொலிவுறு பேரிடரில்', ' சுற்றுலா கிறக்கத்தில் '. மர மட்டைகள், செடி, செட்டுகள் வளர்ச்சி யின் எதிரியாய் கான்கிரீட் கட்டமைப்புகள், தார் உருகும் சாலையில், வெப்பம் கூட்டும், வேதனை சேர்க்கும் ' முன்னேற்ற பதாகை' ஏற்றும்.....
தற்கொலை மனம்
வன்ம குணம்
வகை அறியா
வாழ்க்கை
தொகை அறியா
சினம்
மற்கொலை
உணர்ச்சி
மிகை எழுச்சி
பகை கூட்டும்
பகடை உருட்டும்
பாழ் வெளியாகும்
அங்கே தொலைவு என்றேன்
இங்கே தொலைவில் தொலைவு
என்கிறேன்
ஆட்டோவின் ஆட்டம்
இருப்பைக் கரைக்கும்
தொலைவைக் குறைக்கும்
பேருந்து பயணம்
யாத்திரை போல்
பத்து ரூபாயில்
அகவை முதிர்வில்
ஆட்டம் காட்டும்
நெடுஞ்சாலைகள்
நடைப்பயணம்
சாத்தியம் இழந்து
குடிமைச் சமூகம்
சுற்றுலா போதையில்
சிந்தனைக்கு
பஞ்சமில்லை
பஞ்சமும் சிந்தைக்கு
இல்லை
எல்லை முடிவு
இல்லை
முடிவு ம் இறுதி
இல்லை
பிரதிநிதித்துவ மக்களாட்சி எங்கே செல்கிறது? எப்படி செல்கிறது?
பண பலம், ஆள் பலம், குறிப்பாக சாதிய பின்புல வலிமை, ஆகிய கூறுகள், கட்சியில், தேர்தல் அரசியலில் தீர்மானிக்கும் காரணிகளாக, இன்றைய சமூகச் சூழ்நிலை இருக்கிறது.
கட்சிகள், போட்டியாளரை தேர்வு செய்யும் விதமும் இந்த தகுதிகள் அடிப்படையில்தான்.
நேற்று மனை வியாபாரம், இன்று அரசியல் வியாபாரம்.அறக்கட்டளை பதாகை, மதிய இலவச உணவு. பிற உதவிகள், " நல உதவி" அடையாளத்தில். சர்க்கரை தொடங்கி, சட்டை துணி வரையில். அ ச்சார உடன்படிக்கை அக்கறையுடன்!
முதுமை பயணத்தில் பொழுது, காலம்அதன் ஒழுங்கில், அதன் விசையில், தளர்வின்றி, தொய்வின்றி நகர்கிறது. அதன் உலகில் ஒன்றிய ஒரு சமயம் , ஓய்வில், இப்படியாக எண்ணம், எழுத்தில் நிலை கொண்டது.
"எப்படியோ கழிகிறது காலம்.
இப்படித்தான் என்றில்லாமல். திட்டமிடாத திட்டமாக, தெவிட்டாத கட்டமாக. ....
பட்டமாய் இருந்தால் பறந்திருப்பேன்.வானில் திரிந்திருப்பேன் . நூல் பிடித்தவன் திறமையில் வாலு டன், வண்ணத்தில் மிதந்து மின்னியிருப்பேன்.என்னை மறந்திருப்பேன்.
எண்ண ஓட்டத்தில், நீல வானத்தில், காற்றின் கலகலப் பில் கரைந்திருப்பேன். உன்னத உயரத்தில் ஏறி இருப்பேன்.அசைந்து, அசைந்து ஆட்டம் போட்டு, ஆனந்த இராகம் இசைத்து, அலுப்பு நீங்கி, சலிப்பு போக்கி.....
எனக்கும் கிடைத்தது
எவர்க்கும்
இன்று
தேக்கரண்டி
உமையின்
வடிவில்
பக்தர்கள்
நேர்த்தி
ஞானம்
அடைந்தேன்!
அப்பா அப்பா
நான்
சொன்னது
தப்பா தப்பா
உப்பா சப்பா
உணவே
இல்லாத போது
தனியே நின்ற போது
தவிப்பே நின்ற போது
காயம் பட்ட முதுகு
மாயமான கனவு
தாயம் போட்ட
உணர்வு
தடம் புரண்ட
நினைவு
யுத்த வெறி
ரத்த வெறி
உயிர் பலி
கேட்கும்
ஈழமாயினும்
ஈரான் ஆயினும்
போர்க் குதிரைகள்
குழந்தைகள்
கொலை
கொண்டாட்டம்!
வல்லாதிக்க
வெறி
பெருகிடும்
ஆயுத வணிகம்
கல்லறை கதறும்
சில்லறை குவிக்கும்
உலக அரசியல்
ஊமையாய்!
செவிடாய்!
குருடாய்!
புறம் கூறும்
பொழுது போக்கும்
பிறன் வாழ்க்கை
விளையாட்டாய்
நோர் நொட்டும்
நொடிப் பொழுதும்
நோகாமல்
இழுவை வாய்
இளைப்பின்றி
'ஒழுங்கு ஊர் ஆளும் '
உன்னை ஆண்டதா?
அமைதியைத் தேடி
போர்
அல்லல் உறும்
ஆயுதங்கள் ஓய்வு
கேட்கும்
சவப் பெட்டிகள்
சந்தையில்
விலை ஏற்றத்தில்
வீங்கி நிற்கும்
மாயா அஞ்சலோ, " Passing Time" கவிதை
மொழியாக்கம்.
உம் தோற்றம்
விடியல்
எம் ' கத்தூரி' போல்
நிச்சயமற்ற முடிவின் தொடக்கம்
வரைந்திடும் ஒன்று
நிச்சயமான தொடக்கத்தின்
முடிவு பிறிதொன்று
அருண் கோலாட்கர் , " The Indicator", கவிதையின் மொழியாக்கம்.
ஒரு துறவிக்கு
தேவை வண்ணம்
பதின் முறைக்கு மேல்
உள் திரும்பிய
கை காட்டி மரம்
அறிந்த தொடர்வண்டி நிலைய
பெயர்கள் யாவும் விழுங்கி
முகத்தின் கைகள் நீக்கி
பைக்குள் திணித்து
அடுத்த தொடர்வண்டி
எப்போ?
குறிப்பு அளித்திடாது
எண் கள் கூட்டும்
கடிகார முகம்
கூடுதல் சுழியமே !
பியாட்ரிக்சு பாட்டர், "Three Blind Mice",
கவிதை மொழியாக்கம்.
சுண்டெலிகள் ,
கண் ணொளி இழந்த
மூன்று
ஓடுது பார்
உழவன் மனைவியைத்
தொடர்ந்து ,
இறைச்சி வெட்டு கத்தி
வாலை பதம் பார்க்க
வாழ்க்கையில் கண்டது
உண்டா
குருட்டு சுண்டெலிகள்
போக்கு சரியில்லை
நோக்கும் சரியில்லை
அதிகார ஆணவம்
ஆளுக்கும் சரியில்லை
ஆள்பவர்கட்கும்
உனக்கு இறையாண்மை
எனில்
அவர்கட்கு?
படை பலம் எல்லைகளை
தாண்டுமாயின்
போர்வை சனநாயகம்
பார்வை பண நாயகம்
சட்டமும், திட்டமும்
யாருக்கு?
ஊருக்கு உலை
உனக்கு சிலை
பகல் கொள்ளை
அல்ல
பெரு வணிக
பேராசையின் பிள்ளை
மனித வளம், மண் வளம்
இயற்கை வளம் யாவும்
கொள்ளை கொள்ளும்
வல்லரசியம்
ஒடுக்கப்படும் தேசங்கள்
ஓரணியில் திரள
ஒட்டுண்ணி
"ஆழ் அரசின்" ஆட்ட
கடையாணி கழலும்