Wednesday, July 27, 2011

தாய்மை

தாய்மை அடைவது ஓர் அரிய வரம். அனவருக்கும் வாய்ப்பது கடினம். இயற்கையின் தீர்மானம் எப்படி என்பதை எவரும் தீர்க்கமாக அறிந்திலர். அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் அதிகம் உள்ள இக் கால சூழ்நிலையிலும், தாய்மை அடைவதில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து, தீர்வு காண்பதில் மருத்துவம் திக்கு முக்காட வேண்டி உள்ளது.

மகப்பேறு மருத்துவத்திற்கு வரும் பெண்களுக்கு, நிறைய நலவழி தகவல்கள், அங்கன்வாடி வழியாகவும், தாய்சேய் நலத்துறை வாயிலாகவும் அளிக் கப்பட்டாலும், அனைவரும் இவ்வழி காட்டுதலின்படி நடக்கிறார்களா!
அது கேள்விக்குறிதான்.

தனியாக மருத்துவரிடம் மாதந்தோறும் ஆலோசனைகளுக்கு செல்லும் பேறுகால மகளிரும், அவரின் கணவன்மார்களும், மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்களா என்றால், அதுவும் கூட அவ்வளவாக நிறைவளிக்கும் சேதியாக இல்லை!

ஊடகத்தின் செல்வாக்கு அதிகமான சூழலில் கூட, பல்வேறு அரிய மருத்துவ கருத்துகள், ஆலோசனை இலவயமாக அளிக்கப்பட்டாலும் , காற்றில் கரையும் கானமாக,, கவனத்தில் கொள்ளாத, கடைபிடித்து ஒழுகாத போக்கு, மிகுதியாக உள்ளது.

தாய்மை அடையும் படித்த மகளிரும் கூட, உணவுப் பழக்கம்,பயிற்சி, மருந்து எடுத்துக் கொள்ளுதல், மனநிலை ஆரோக்கியம் கொள்ளுதல் ஆகிய பண்புகளை பிசகாமல், தொடர்ந்து மேற்கொள்ளும் அக்கறை செறிவாக இல்லை.

ஒரு நாள் வாசித்தால் போதும், அடுத்த நாள் அல்லது மறுமுறை பார்த்துக் கொள்ளலாம். தேர்வுக்கு முன் படித்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடும் போக்கு, அக்கறையற்ற அணுகு முறை ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும் போதுதான் மீள்பார்வை வளையத்திற்குள் வருகிறது.

மனத்தை பிழிந்து கொள்வது, கண்களை கசக்கி கொள்வது கலக்கம் அடைவது, எதற்கெடுத்தாலும் பதற்றம் அடைவது, உணர்ச்சிவயப் படுவது, உரத்தக் குரல் எழுப்புவது போன்ற எதிர்மறை போக்குகள் பற்றிய பாதிப்புகளை புரிந்து கொள்ளவேண்டும்.

தாமாக அறிந்து கொள்ளவில்லை எனினும்,பிறர் வழி அறிந்து கொள்வது, அடுத்தவர் சொல்லும் ஆதரவு எண்ணங்களை நிதானமாக எடுத்து உணர்வது மிகவும் அவசியமாகும்.

கணநேரம் தானே, என்ன நிகழப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை, தொடர்கதையாகும்போது, தொல்லைகள் எல்லைகளை தாண்டி விடுகிறது. சிக்கலும் ஆழமாகி,சிந்தனை சிதறுகிறது. விளவு மோசமாகிறது.

ஆனந்தம் காணவேண்டிய சூழல், மகிழ்சியுடன் அளவளாவும் நிலைமை, துயரம் மிகுந்ததாகிறது . இதயம் கணக்கிறது. இமைகள் சுமைகள் ஆக, உள்ளழுத்தம் அருவியாக, ஓவென்ற இரைச்சலுடன், சூறாவளி நாடகம் அரங்கேறுகிறது. .

Monday, July 25, 2011

சமாதானம் ஏற்குமா?

சொந்த நாட்டில்
சிறப்பு இல்லை
சென்ற நாட்டின் சிறப்பும்
செறிவுடன் இல்லை

எல்லை கடந்தும் தொல்லை
கருத்தும் சுதந்திரமும்
கடுகாய்ப் போன பிள்ளை

ஓவிய உலாவும்
ஓங்கி விளங்கிட தொல்லை
ஓடவைத்தார் உம்மை
வெறுங்காலுடன்
வெண் தாடியுடன்
வெம்மிய மனுதுடன்
வெளிறிய பார்வையுடன்

சிறந்த படைப்பாளன்
திறந்த ஓவியம்
ஆடை அணியாமல்
அம்மணம் தாங்காமல்
ஆண்டவனின் வாரிசுகள்

புண்பட்டனராம்
புனை உணர்வுடன்
புகைத்துக் கிளம்பினர்
பொசுக்கினர்
உம் உணர்வுகளை

கலை உனர்ச்சியினை
கொலை உணர்ச்சியின்
காலடியில் பதித்து
மிதித்து துவைத்து
நீதி மன்றம் வரை சென்று

வீதிக்கும் வெளியே நிறுத்தினர்
இந்தியக் குடிமகனின்
உன்னத மதி நுட்பம்
கலைத்தாயின் கருவூலம்

அடுத்த நாட்டுக்கும்
அடையாளம் காட்டிய தூரிகை
வண்ணம்
தூய பரிமாணம்
காயம் சுமந்தது

காவியின் நாட்டம்
காட்டம்
சிறுபான்மை வேறு

சேர்ந்திரைக்க கூடிடும்
சேறு மனப்பான்மை மாற்றிட
மையத்தில் இல்லை
விளிம்பில் நிற்கும் வீணர்

இறந்த பின்
ஊதும் புகழாரம்
இந்தியக் குடிமகனாம்
நீதிமன்ற உத்தரவு நீங்கவில்லை

தாண்டி இங்கிதம் சேர்க்கும்
இந்திய அரசியல்
இங்கிலாந்து சென்று
மாண்ட உசேனிடம்
மன்னிப்பு கோறுகிறது

சமாதி
மேதகு மனிதரின்
சமாதானம் ஏற்குமா?
இறந்தவருக் காவது
கருத்து சுதந்திரம் கிடைக்குமா?

அடிப்படை உரிமை நிற்குமா?

Monday, July 18, 2011

மையம் விலக்கி

பழையன கழிதல்
போகியில் பார்க்கலாம்
புதியன புகுத்தி
அடுத்த போகியில்

புகையில் போக்கி
கழித்தும் சேர்த்தும்
போக்கியும் புதுக்கியும்

சுழற்சியின் அயர்ச்சியில்
சுழன்றிடும் வாழ்க்கை
சுற்றுப் புறத்தில்
சுழலும்

மையம் விலக்கி
ஐயம் சேர்த்து

மூடகம்

சென்ற ஆட்சியில், இலவச வண்ண தொலைக் காட்சி பெட்டிகள் வழங்குவதற்காக இருப்பு வைத்திடபள்ளிக் கூடம் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து, நண்பர் ஒருவர், இப்படி சொன்னார். கேளுங்கள்.

தொலைக் காட்சிக்கு உள்ளது
இடம்
தொலைவில் உள்ளது
பள்ளிக் கூடம்

மற்றொரு நண்பர்,

ஊடக பெட்டிகள் உள்ளே
மூடகம் விரட்டும் வகுப்பறை
வெளியே

மேலும் ஒருவர்,

பெட்டிகளுக்கு இடம்
சுட்டிகளுக்கு இல்லை

Sunday, July 17, 2011

17,ஏப்ரல்,2011 இராசசுத்தான் மாநிலத்தில், தவுசா மாவட்டத்தில்,
மூன்று தனியார் மருத்துவமனையில், சென்ற ஆண்டில் மட்டும்(மார்ச்- செப்டம்பர்,2010), 385 பெண் நோயாளிகள் மருத்துவத்திற்காக சேர்ந்ததில்,
226 மகளிர் கருப்பைகள், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

உருவா 12000 முதல் 14000 வரை இதன் மூலம் அறுவை சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப் பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், "அகில பாரதிய கிரகக் பஞ்சாயத்து", என்ற தொண்டு நிறுவனம் சேகரித்த செய்தியாகும்.

இச் செய்தியை வாசித்தவுடன் தோன்றிய உணர்வுகள், ஒரு கவிதையாக,

கருவறையும் கூட
கழித்துக் கட்டப்படும்
சில்லறைக்காக.....

சிகிச்சையில்

மனிதம் மறந்த
மருத்துவம்!
நான் முந்த
அவன் முந்த
இவர் முந்த
அவர் முந்த
அவரவர் முந்த

உந்த விசை முடுக்கம்
ஊர்திகள் ஒலி எழுப்பும்
உணர்வுகள்
வலி ஏற்கும்

ஊருக்குள் கார் பறக்கும்
பயணிகள் பாதை
பந்தயமாகும்

பந்தயவாதிகள் பரபரப்பு
சனநாயக
தோல் உரிப்பு
விழாக் காலம்
விடிவு காலமா?

விடியல் சேர்க்குமா?

அவியல் அணிகள்
ஆட்சி சேர்க்குமா?

குவியல் பணம்
குண்டி நனைக்குமா?

கும்மிருட்டு வாழ்க்கை
வெளிச்சம் காணுமா?

"கல்விக் கண் கொடுத்த காமராசர்"

"கல்விக் கண் கொடுத்த காமராசர்"

ஐயா!
கொடுத்த கண் படுத்துக் கொண்டது,
பஞ்சடைந்து விட்டது
பழுதடைந்து விட்டது.

'ஆடி' கொடு
ஆடியில்!
அணிந்து கொள்ள!

ஒளி மங்கிய கல்வி
கோருகிறது உம்மிடம்
பார்வை!

சோடா புட்டியானாலும்
பராவாயில்லை!
சோதனை தீர!

உம் பிறந்த நாளில்
பெருமை கூற!

கல்விக் கண்ணா?

குருடாயிருந்த கல்வி
குவலை விழி
குவலயம் நோக்கி!
பெற்றது உம்மால்!

நெருடான எண்ணம்
நேரிய வழி சென்றது!

உடல் பசி தீர உணவு!
உடுக்க சீருடை!
புத்தகம் இலவசம்!

இன்றும் தொடர்கிறது
இத்யாதி!

இருப்பினும்
இரு விழிகளில் பிறை நோய்!
அறுவை சிகிச்சை அவசியம்!


இப் பிறந்த நாளில்
பரிசோதனை தேவை
உடனடியாக விழிகளைக் காத்திட!
பார்வையை சேர்த்திட!

Saturday, July 16, 2011

கோபம் குறைத்திடு
வேகம் தவிர்த்திடு

தாகம் போக்கிடு
தவிப்பு நீக்கிடு

உள்ள நிலை உணர்ந்திடு
உலகியல் புரிந்திடு

உன்னைப் பற்றி
உலவும் சேதி

உதறி நின்றிடு
உண்மை புரிந்திடு

காலம் வென்றிட
கவனமுடன் நடந்திடு

கரைந்திடும் புற்றென
இரைந்திடும் மனிதர்

இளிமுகம் தெளிந்திடு

குறைந்திடும் வளம்
காத்திடு
குணத்தில் சென்றிடு

கோணல் நிமிர்த்திடு
குவலயம் கண்டிடு

இலவம்!

பூத்தேன்,
பூத்து காய்த்தேன்,
காய்த்து குலுங்கினேன்
மகிழ்ச்சியாக.

என் உடலெல்லாம்உற்சாகம்!
முதிர்ந்தேன்!
அறுவடைக்கு தயாராக
ஆள் இல்லை!

வெம்பினேன்,
வெடித்தேன்!
வெறுப்புடன்! பொறுப்புடன்!

வெள்ளுடை தரித்தேன்!
வெளிக் கிளம்பினேன்!
வானத்தின்
வெண் பனியாக!

ஊரெங்கும்பறந்தேன்!
சிறுவர் விளையாட்டு
குமிழியாக!

செய்யிழை வேண்டுபவர்
மெய்யிழை மறந்ததால்!

Friday, July 15, 2011

உறங்கிய பொழுது
யாவும்
இறங்கிய பொழுது
ஒத்திகையில்
பல காலம்
ஒத்தாசை இன்றி
பத்தாசையுடன்

மொத்தாசையும்
சித்தமாக சென்றிடும்
காலம்செருவுடன்

நேரடிக்கு நேரடியாக
பருவும் சேர்த்து
பண்ணிடை இசையாக

பல்லாண்டு
பருவம் கழிந்து
உருவம் ஒடுங்கி
உள்ளம் நடுங்கி

ஊர் பயணம்

Thursday, July 14, 2011

"அண்ணா நிலை"

ஊழல் ஒழிக்க ஊர்வலம்
உண்ணா நிலை
"அண்ணா நிலை"

அதிசயம்
அரசாங்க அழைப்பு
ஆலோசனைக் குழு
அமைப்பு

சட்டவரைவு
திட்டம் விரைவு
சாதனைப் பட்டியல் நீளும்
வேதனைப் பட்டியல்
விலைவாசியைப்போல்

அன்றாடப் பிரச்சனை
அவசியம் என்றாகி
பழகிய மக்களுக்கு
பஞ்சு மிட்டாய் வண்ணத்தில்
வகையாக அளித்திடும் திட்டம்

ஊழல், கறுப்புப் பணம்,
வெள்ளைப் பணமே!
வெறும் வாய் மெல்லும்.

மக்கள் கருத்த மேனியாய்
சுட்டெரிக்கும் கோடையாய்
சுருண்டு வாழும்
வெளி அக்கினியில்
வேக்காட்டில்
சாக்காடு

அன்றாடம்சரிந்த வாழ்க்கையில்
சப்பைக் கட்டும்
நிவாரண அரசியல்
நீளும் பட்டியல்

நிர்வாணம் மட்டுமே
உரிமையாக, கடமையாக,
ஊழல், ஊதல்,
கறுப்பு,செருப்பு

யதார்த்தம் விலக்கி
எக்கிடும் காட்சிகள்
கட்சிகள்

பதார்த்த விலை குறைத்திட
பக்குவம் இல்லை
ஏறும் விலை வாசி
எங்கும் நிலவும் யோசி

வாதத் திறமை
வழக்கறிஞர் வாழ்வியல்
அரசியல் அரங்கில் ஆனந்தம்
அன்றாடம்

வாதத் திறமை
வாய் பிளந்து மெச்சிடும்
'மெய்ஞான ஊட்டம்'

அடுக்கு மாடி

சாடியில் முளைத்த
செடி

அழுத நிலை!

ஆய்விற்கு அளிப்போம்
வீட்டிற்கு ஏன்
எடுத்துச் செல்ல வேண்டும்!

இப்படியே விட்டுச் செல்வாயா!
இறுதிச் சடங்கும்
இல்லை என்று
செல்வாயா!

ஈர்ப்பில் எங்களை இழுத்து
புது வார்ப்பில்
சென்றாயே!

பிறப்பின் வயதும்
இறப்பின் வயதும் ஒன்றாக
தாய்ப்பால் குடித்திட
தவித்த
உம் வாய்!

தளிர் உடல் நசுங்கிட
இடுகாட்டு
இல்லத்தில்
பசும்பால் வாங்கிச் சென்றாய்!

பரிதவித்தோம் நாங்கள்!
அழுத்தம் யாவும் பீறிட
அழுகையாய்
நீர் வழிந்திட
தேம்பி அழுத நிலை!

Wednesday, July 13, 2011

மூச்சும் பேச்சும்
முணகலும்
முழிப்பும்

வேகமும் சோகமும்
தாகமும் தவிப்பும்

தகிப்பும்சகிப்பும்
சமாதானம் ஏற்குமா!

இவ்வளவும் புரியவில்லை
என்றாய்
எவ்வளவுதான் புரிந்தாய்!

எள்ளளவு என்றாலும்
எண்ணெய் ஆக
வேண்டாமா!

எழில் தீபம்
ஏற்ற வேண்டாமா!

வெண்ணெய் திரளும்
தாழியாய்
மண் கலம் நிறைய
வேண்டாமா!

மனசு குளிர
வேண்டாமா!

சின்ன ஆசை என்றயே!
பெரிய ஆசை ஏற்பாயோ!

அரிய ஆசை
இதுவன்றி
பெரிய ஆசை
பிற ஏது?

பொய்யாமோ

உனர்த்தினேன் உம்மிடம்
பலமுறை
உள்ளன்பை
உளறல் என்று நினைத்தாய்
போலும்
மெய்யன்பை
பொய்யுரை
என்றாயோ!
பேச மறந்தாய்
ஏசவும் மறந்தாய்
கூசவில்லையா
மனம்!
கூறவில்லையா
தினம்!
பாசம் என்பதும்
பொய்யாமோ
தேசம் என்பதும்
பொய்யாமோ

Wednesday, July 6, 2011

சாதனை செல்வர்

உழைப்பைக் கருதாமல்
பிழைப்பை கருதி
பிழை ஏற்கும் உள்ளம்
பெருமை கொள்ள துள்ளும்
அருமை விலக்கிச் செல்லும்

அக்கறை இல்லை
அவரிடம் சொன்னேன்
இவரிடம் இல்லை
குறையுடன் தந்துவிட்டார்
குடி மூழ்கி விடவில்லை

அடுத்த முறை சரியாகும்
அவர் உறுதி
ஒவ்வொரு முறை சமாதானம்
சமாளிக்க தெரிந்தவர்
சந்தடி வென்றவர்
சாதனை செல்வர்