Friday, July 5, 2019

சனநாயகம்






கவிஞர்.லியோனார்ட் கோகன்

அது காற்றின் துளை ஊடாய்
தியானன்மென் சதுக்க இரவுகளில்
உணர்ச்சியின் வெளிப்பாடாய் சரியாய் உண்மையற்று.
அன்றி அது உண்மையாய் அங்கு சரியற்று.
ஒழுங்கின்மைக்கு எதிரான போர்களில்,
பகல் இரவு உரத்தொலிப்பான்களில்,
இல்லமற்றவர் தீ மூட்டத்தில்,
ஓரினப் புணர்ச்சியினர் சாம்பலில்
சனநாயகம் ஐக்கிய அமெரிக்காவிற்கு வருகை.

Friday, May 24, 2019

தேர்தல்: பணம் பறிமுதல்









வந்தது கொஞ்சம்
வராதது மிஞ்சும்
அவரும் இவரும்
தஞ்சம்
அனைத்தும் வஞ்சம்
அகக் காரணம் பஞ்சம்

அதிகாரப் போட்டியில் அழியும் புதுச்சேரி



போட்டியில் பலவகை கண்டீர்!
புதுவையில் இது புதுவகை என்பீர்!
உன்னைக் காட்டி
என்னைக் காட்டி
ஒடுங்கிடும் சனநாயகம்
வலிவிழந்த பட்டமாய்
அரசியல் வானில்

ஓட்டுரிமை அளித்தார்
ஒதுங்கி நிற்பார்
ஒய்யார அரசியல்
ஓங்கி விற்பார்
எதிரும் புதிருமாய் அதிகார
காட்சிகள்
எட்டிப் போகும் நிர்வாக மாட்சிகள்
இழுபறி அதிகாரக் கயிற்றில்
இடுப்பு சுற்றி இறுகிட: மக்கள்

கல்விக்கு கால்வாசி
நலத்திற்கு காலரை
உழவுக்கு அரைக்கால்
உருப்படா ஆட்சியில்
விலைவாசி
ஓங்கிடும் அன்றாடம்
உடன் யோசி

நொறுக்கிடும் வரிகள்
நெறி பிறழ்ந்து
வேலை வாய்ப்புகள்
சுரம் இழந்து
கூடிடும் கடன்கள்
தலை இறங்கும்
இடியாய்
கருகும் வாழ்வாதாரம்

வகுத்தான் வல்லான்
அதிகார வெறி
அழித்திடும் நலம்
தலைவிதி
ஏற்றத்தாழ்வின் இடைவெளி
இணைகோடாய்
தொடரும்
நிர்வாக மொழி


தன்னழுத்த தற்பெருமை துருவங்களாய்
அகமும், பாவமும் விசைக் கூட்டி
அரசியல் சொக்கட்டான் அலுப்பின்றி
அதிகாரப் போட்டி ஆட்சியில்
அடையாளம் இழந்திடும் வாக்கு வங்கி

("புதிய உறவு" இலக்கிய இதழ் கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை)

Wednesday, March 27, 2019

இரவின் அமைதி






கவிஞர்..ஆர்தர் பேல்டன்

அமைதி தாரகைகள் பெரிதாக, தெளிவாக மின்னிடும்,
பிறை நிலா, கவிழ் கிண்ணம் போல் தொங்கி;
அலைவற்று, அசைவற்று,
என்னால்  கேட்டிட இயலும்
கிளர்ந்திடும் சிந்தனைகளை
என் ஆன்ம அறைகளில்.

(மொழியாக்கம்)

Saturday, March 23, 2019

உண்ட பின்



கவிஞர்.பை ஜீயி

உண்ட பின் உறக்க உணர்வு எமக்குக் கூடிடும்,
காலம் கடந்து விழித்து இரு குவளைத் தேநீர் பருகி,

பின் அறிவேன் சாய் நிழல்கள், சூரியன்
தென்மேற்கில்  கீழ் மீண்டும் செல்ல.

மகிழ்வுறு மக்கள் கடந்திடும் நாட்கள் எண்ணி சினத்தில்.
துயருறுவர் மெல்லக் கடந்திடும் ஆண்டுகள் பொறுத்திலர்.


துன்பமும் மகிழ்ச்சியும் கொள்ளாத எவரும்
எதையும் அளித்திடும்   இவ் வாழ்க்கையை நம்பி.

(மொழியாக்கம்)

Wednesday, March 13, 2019

செல், காதலே


கவிஞர்.ராபர்ட் செளதே

செல், காதலே,
அந்த அழகிய பணிப்பெண்ணிடம் கூறு,
அவள் அழகின் நயம் என் பார்வையில்
இன்னும் சித்தரிக்கும் படமாய்,
சோக நிழலில் நான் நீடித்து இங்கே, எப்படி?,
மந்த துறவு- இரவின் இந்த இருண்ட
மனச்சோர்வு;
சொல்,வாழ்வின் மகிழ்ச்சி யாவும்
தொலைவில் விலகி
வீழும் மாலைப் பொழுதில் நான்,
கூட்டத்தை விட்டுச் செல்ல,
மோதிர-குவிமாட பாடல்
தனிமையில் கேட்டு,
என்னைப் போல் அவள்
தனிமைப் பா பொழிந்து;
சொல்,அவள் இன்மை ,
துயரக்காட்சி அழைப்பில்;
சொல்,அவள் வசீகரிப்பு அனைத்தும் பேசிட,
நான் விழைகிறேன்,
நயத்தில், அவள் மந்திரக்கண் உணர்வேன்
நயத்தில், நகை ஒளியூட்டும்
அவள் கன்னத்தை காண்பேன்,
மெளனம் அசைவற்ற நிலைப்பாய்
தோப்பில் தனித்தியானத்தில்,
காதல், நினைவின் பெருமூச்சு பிளவில்

(மொழியாக்கம்)

Sunday, March 10, 2019

ஓ காதலே! நீ அனைத்தையும் சமமாக்குகிறாய்




கவிஞர். சாரா பிளவர் ஆடம்ஸ்

ஓ காதலே! நீ அனைத்தையும் சமமாக்குகிறாய்
பூமியிலும் அன்றி சுவர்க்கத்திலும்:
சிறைக்கம்பிகள் ஊடாய்  விண்மீன்கள் வரை
உமது வழி காண்கிறேன்;
அன்றி, சர்வ வல்லமை பொருந்தியவன்
திட்டத்திற்கு உண்மையாய்,
தூசியிலிருந்து படைத்தான் மனிதனை,
இடுகாட்டைப் பார்க்கிறாய் நீ,-உமது
இறவாத்தன்மை கண்டிட!

(மொழியாக்கம்)

வண்ணம் தொடக்கமாக










அமெரிக்க கவிஞர்.ரிச்சார்ட் பிராட்டிகன்

காதலை மறந்திடு
நான் இறக்க விழைகிறேன்
உன் மஞ்சள் கூந்தலில்

(மொழியாக்கம்)

உலக மகளிர் உரிமை

உலக மகளிர் உரிமை நாள் விழா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை இயக்கம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி, 09.03.2019ல் கொண்டாடியது. அப்போது வாசித்த கவிதை.


அமெரிக்க சமதர்மக் கட்சி அளித்த
கொண்டாட்டம்,
ஒரு நூற்றுப் பத்து ஆண்டுகள் கடந்தும்- அவர் உரிமை
திண்டாட்டம்.

"வன்முறை முடிவுக்கு வரும் காலம்"
ஐக்கிய நாடுகள் அவை அறைந்திடும்
"சத்தியம், இது சத்தியம்"

தரவுகள் தரும் பாடம்:16 அகவைக் கீழ்
பாலியல் வன்முறை
50 விழுக்காடு;
குடும்ப வன்முறை
603 மில்லியன்;
ஒருகட்ட வன்முறைக்கு பலி
70 விழுக்காடு;
18 அகவைக் கீழ் மணம்,
60 மில்லியனுக்கு மேல்

ஒடுக்குமுறையின் தொடக்க வடிவம்,
குடும்பம்,
அதன் உச்ச வடிவம் அரசாங்கம்.

உடல் மீதான வன்மம்,
ஒருக்கலித்த பார்வை
பண்பாட்டு மெருகில்,
பட்டியல் பெருமையில்.

கொட்டி முழக்கும் சமூகம், சாங்கியமாய்
பரிகாரப் பார்வையில்.,
அங்கொன்றும் இங்கொன்றும்
ஒதுக்கீடுகள் உலா

தடி, உதை உண்டு, தாழ்நிலை மொண்டு
தவிப்பினில் மகளிர்,
தரணியெங்கும்
ஒடுக்கிடும் ஆணாதிக்கம், ஒய்யாரமாய்
ஓங்கிடும் ஒவ்வொரு நாளும்.

மகளே! தலைமை ஏற்றிடு!
மானிடப் பெருமை கூட்டிடு!
சரித்திரத்தின் சக்கரங்களை
சுழற்றிடு!
சரிநிகர் உரிமை மீட்டிடு!
மிடுக்குடன் மின்னலாய்!
கேள்பகை வென்றிடு!

Thursday, March 7, 2019

நான் வாழ்கிறேன், நான் இறக்கிறேன், நான் எரிகிறேன், நான் மூழ்குகிறேன்






கவிஞர்.டெல்மிட்ரா அகஸ்ட்டினி

நான் வாழ்கிறேன், நான் இறக்கிறேன்,
நான் எரிகிறேன், நான் மூழ்குகிறேன்
கடுங்குளிர், சிலுசிலுப்பைத் தாங்குகிறேன்
வாழ்க்கை மிக மென்மையாக,மிக வன்மையாக
வலி தொல்லை, இன்பங்களில் சங்கமித்து,
நான்.

எதிர்பாரா  நகையில், அதே வேளை அழுகையில்
பிரியத்தில், பல துயரங்கள் சகிப்பேன்
என் மகிழ்ச்சி தேயும், எனினும் அது மாறாமல் நீடிக்கும்
ஒரே தருணம் நான் முழுமையாய் உலர்வேன்,
பசுமையாய் வளர்வேன்

இவ்வாறு, அன்பின் நிலையற்றவைகளில்
பாடாய்ப் படுகிறேன்
 மிகக் கடுமையான வலி  என,
 நான் எண்ணும் சமயம்
அறியாது அது கடந்து விட்டிருக்கும்,
மீண்டும்.

பிறகு , என் மகிழ்ச்சி நிச்சயம்
எனது பெருமகிழ்ச்சி நேரம் வாய்த்தது
என உணரும்சமயம்
காண்கிறேன் நான்,  எனது வலி திரும்பிடும்
மறுபடியும்.

(மொழியாக்கம்)






Sunday, March 3, 2019

ஒரு பண்ணை- காட்சி







கவிஞர். வால்ட் விட்மன்
போதிய திறந்த கதவின் ஊடாக 
அமைதியான கிராமப்புற களஞ்சியம்,
கதிர் ஒளி ஏற்கும் பசும்புல் நிலம்,
கால்நடைகள், குதிரைகள் மேய்ச்சலில்;
மூடுபனி, காட்சி வரிசை, தொலை அடிவானம்
யாவும் மங்கலாய் தேய்வுறும்.

(மொழியாக்கம்)

Thursday, February 28, 2019

போரும் அமைதியும்


டாக்டர்.மதன் காந்தி

போர், 
மனிதனின் படைப்பு
கலவரம், போர்......
 யாவும்
மனிதன் ஊன்றிய விதைகள்
அறுவடை ?
இறப்பு

இக் காலம்,
அமைதி பாலங்கள்
கட்டி எழுப்பும்
முதலீட்டுக் காலம்!
போர் ஆயுதங்கள் வடிக்க
 அன்று !
அமைதிப் புன்னகை 
பரவல் 
ஆக்கும் காலமே!


போர், 
மனித இரத்த வெள்ளத்தை
கட்டவிழ்க்கும்
அமைதி, பாரிய
 நன்றாற்றல்
வெளிக் கொணரும்

போர், மனதில் தோன்றும்,
 நிலத்தில் முடியும்

அமைதி, 
நெஞ்சத்தில் தோன்றும்,
சுற்றிலும் அன்பை 
விதைத்திடும்

போர், 
வெறுப்பு நெடி விளை
மரண நஞ்சாம்
அமைதி, 
உமது தலைவிதி மாற்றும்
சஞ்சீவி
போர், மனிதனின் மிகப் பெரிய
முட்டாள்தனம்
அமைதி, மனிதனின் மிக உயர்
 வாழ்நலம்,

ஆம்.

(மொழியாக்கம்)

Tuesday, February 26, 2019

வஞ்சித்தல்




கவிஞர்.ரோஜர் மெக்கெள. இவர் பிரித்தானியக் கவிஞர்.அதிகம் விரும்பப்படும் கவிஞர். 'எளிமையாக தோன்றினாலும், இவர் அசாதாரண ஆற்றல் மிக்கவர்', என 'கார்டியன்' பத்திரிக்கை மதிப்புரை வழங்கியுள்ளது.கவிதை உலகில் நன்கு அறியப்படுபவர். நிறைய இலக்கியங்கள் படைத்துள்ளார். அவர் கவிதையில் ஒன்று, மொழியாக்க முனைப்பில்.



ஒருவித வஞ்சிப்பில் அவள்
ஊமைச் சைகை அளிப்பில்
கடப்பேன் கல் தொலை நான்
இருபது நொடிகளில்.

Sunday, February 24, 2019

ஐம்புலன்கள்



கவிஞர்.ஜீடித் ரயிட், ஆசுத்திரேலிய பெண் கவிஞர். பூர்விகக் குடிகள் மீது கரிசனம் கொண்டு பல கவிதைகளை இயற்றியவர்.இயற்கை, வாழ்க்கை என பல வடிவங்கள் குறித்தும், ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படித்தி; புலம் ஏறி பழங்குடிகளை விளிம்பிற்குத் தள்ளிய சோகம்; அவலங்கள் பற்றியும் எழுதி, மற்றவரை திரும்பிப் பார்க்க வைத்த, ஆளுமை.

மறைந்தாலும், தம் படைப்பிலக்கிய ஆன்மாவில் வாழ்ந்து வருகிறார்.
அவர் கவிதையில் ஒன்று ,எமது மொழியாக்க முயற்சியில்.

ஐம்புலன்களும் இக்கணம் 
அர்த்தம் சேர்த்திடும்
அனைத்து செய்கையும், வருகையும்:
அல்லி சேகரிப்பைப் போல்
கூறுகள் ஒன்றாக என்னுள்
இருளும், ஒளியுமாக,
அந்த அமைதியும்
அந்த காலைப் பொழுதும்,
இவ் வடிவங்கள் அற்றதில் தோன்றி,
ஓர் இலயமாகி ஆட்டங்களில்,
கபடமற்ற அடவில்.

 ஐம்புலன்களில் நானாக
அவை எம்மை சுழற்றிட
அனைத்து ஒலிகளும், மெளனங்களும்,
வடிவங்களும், வண்ணங்களும் அந்த
நெசவாளியின் நூலாக,
அவர் வலை என்னுள் வளர்ந்திட,
நான்அறியாது என்னைக் கடந்து 
தொடர்ந்து செல்ல
சில வடிவம், இல்லாததிலிருந்து 
தோன்றி-
ஆடிடும் ஓர் இலயம்
அது எம்முடையதன்று
  

Tuesday, February 12, 2019

தலைக் கவசம்



போடு என்பார் நாளை முதல்
தேடு என்பார் இன்று முதல்
கோடு போடுவார் ஒருவர்
போடலாம் பிறகென்பார் மற்றொருவர்

தலைக் கவசம் தடுமாறும்
ஓராண்டுக்கு மேல் இடம் மாறும்
இங்கே அங்கே என்று

விபத்து கூடுது தடுக்க வேண்டும்
என்பார்
கவசம் அவசியம் என்பார்
விழிப்புணர்வு அளித்து அணிவிப்போம்
என்பார்

 அதுவரை இருந்தால் ஆதாயம்
அல்லாது போனால் அனுதாபம்
மக்கள் தொகை அதிகம் இல்லையா?

எதைச் செய்வது காவல்!
எதை விடுவது காவல்!
அதைச் செய்வதா?
இதைச் செய்வதா?
அலட்சியம் கொள்வதா?

தடுமாறும் அதிகாரம்
இழு கயிறு போட்டியில்
இடுப்பு இறுக்கும்

தானாகக் கனியும் என்பார்!
தடிகொண்டு அடிப்பேன் என்பார்!


ஈடுபாடு






கவிஞர். ராபர்ட் பிரோஸ்ட்

நெஞ்சம் வேறேந்த ஈடுபாடும்
கொள்ளாது
கடலுக்கு கரையாய் இருப்பதைக்
காட்டிலும்
பெரிதொன்றும் இல்லை-
ஒரு நிலை வலைவைப் பற்றி,
அறா மறுநிலை எண்ணி.

(மொழியாக்கம்)


Saturday, February 9, 2019

'அமில மனிதன்'.

புதுச்சேரி, குயவர்பாளையம், லெனின் வீதியில், போக்குவரத்து சமிக்ஞை அருகில், இடது பக்கத்தில் சாலையோரம். ஓங்கி நின்று, உயிர்வளி அளித்த அரச மரம், இன்று உயிர் இழந்து. பார்த்ததும் பதைத்த உள்ளம், இப்படி வடிகால் தேடியது.


நீ பிறக்கும் முன்
 பிறந்த மரம்
நீ உதிக்கும் முன்
உயர்ந்த மரம்
எவர் வைத்தார் என்றறியேன்
எவர் உடைத்தார்
என்றறிவேன்.

கிளைகள் கழித்த
மின் துறை அறிவேன்.
ஒழிப்பதற்கு முன்னோட்டம்
என்றறியேன்.
செழிப்பை,
கழிப்பில் வைத்த அரசியல்,
மின்மாற்றிக்கு வாழ்வளித்து,

தலைமுறைகள் தழைத்திட,
 ஓங்கி, உயர்ந்து,
ஓய்வின்றி,உயிர்வளி அளித்த
 'அரசின்'
கதை முடித்தான்,
'அமில மனிதன்'.

'சந்தேக மரணம்'
 சட்டம்
 'முதல் தகவல் அறிக்கை'?

குறும்பாடல்




கவிஞர். டொரோதி பார்கர்

ஒரு காலத்தில் நான் இளமையாக உண்மையாய் இருந்தபோது,
யாரோ என்னை சோகத்தில் ஆழ்த்தினர்-
நொறுங்குமை எம் நெஞ்சம் இரண்டாக்கி;
அது, மிகவும் மோசமானது.

பொசுப்பற்றவருக்கு காதல்,
காதல் ஒரு சாபம்.
ஒரு காலத்தில் உடைத்தேன் ஓர் இதயத்தை;
அது, எண்ணுகிறேன், மிக மோசமானது.

(மொழியாக்கம்)

Saturday, January 26, 2019

மன நோயாளிகள்-மனித உரிமை

ஐ.நா. மன்றத்தின், உலக நல அமைப்பு, இந்தியவில் உள்ள மன நோயாளிகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் சில.உச்ச நீதி மன்றத்தின் வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உலக அளவில், அதிக எண்ணிக்கையில் மன நல பாதிப்பு உடையவர்கள் இந்தியாவில் அதிகம் என்கிறது.தேசிய மன நல கணக்கெடுப்பு- 2016 புள்ளி விவரம்.
 மக்கள் தொகையில் ஏறக்குறைய 14% விழுக்காட்டினர் ஆக்கபூர்வ மனநல மருத்துவம் தேவைப் படுபவர்களாக உள்ளனர் என்கிறது. மேலும், 2% விழுக்காட்டினர் தீவிரமான பாதிப்பில் உள்ளனர் என்கிற தரவும் அளிக்கிறது.

மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் மனநல மருத்துவச் சட்டம் 2017ன் படி, மாநில மனநல அதிகார அமைப்பு மற்றும் மனநல மீள்பார்வை வாரியம் அமைத்திடாமல் உள்ளன என்கின்ற செய்தியும், மனநல காப்பங்கள் குறித்த ஒரு வழக்கில்- உத்தரபிரதேச பதயூம் மாவட்டத்தில் உள்ள மனநோயாளிகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கொடுமை சம்பந்தமாகவும் உச்சநீதி மன்றத்தின் கவனத்திற்கு சுட்டிகாட்டப்பட்டது.

சங்கிலியால் கட்டி வைப்பது மனித உரிமை மீறிய செயலாகும், மனித கண்ணியத்திற்கு எதிரான நடவடிக்கையாகும் எனவும், கெளரவ் பன்சால் என்கின்ற வழக்கறிஞர்  மனநல நோயாளிகள் பிரச்னை தொடர்பாக  உச்சநீதி மன்றத்தில்தொடர்ந்த பொதுநல வழக்கில், உச்சநீதி மன்ற நீதிபதிகள் மாண்பமை. ஏ.கே.சிக்ரி, மற்றும் எஸ். அப்துல் நாசீர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பறவைப் பாடல்







மேவ்லானா சலாலுதீன் ரூமி

பறவைப் பாடல் ஏக்கம் தணித்திடும்
அவைபோல் மிகு களிப்பில் நான்,
சொல்வதற்கு ஏதுமின்றி!
உலகளாவிய ஆன்மாவே சில பாடல் பழகிடு
அன்றி என்னூடாக விரும்பிடு!

(மொழியாக்கம்)

Monday, January 21, 2019

"வாழ்க வள்ளுவம்"

புதுச்சேரி சிந்தனையாளர்கள் அரங்கம், 20.01. 2019 கவியரங்கம்

வாழ்க வள்ளுவம் என்போம்
வளமான வாழ்வு அதன் வழி நிற்போம்
வாழ்வின் அடிப்படை அறம் என்பார்
வாழ்ந்திடும் வாழ்க்கைக்கு பொருள் என்பார்
இன்பம் எய்திட அன்பென்பார்
அறமும் அன்பும் பிணை என்பார்
மறத்திற்கும் மாண்பு சேர்த்திடுவார்
துணை அன்பென்று காட்டிடுவார்
இறையியலில் அறிவியல் பாய்ச்சிடுவார்
இருட்டறை மதங்களை விரட்டிடுவார்
வான் சிறப்பை வகையாய் விளக்கிடுவார்
வாழுவு அதுவே என்று ஊட்டிடுவார்
நீத்தார் பெருமை நீட்டிடுவார்
நித்தில உண்மை நாட்டிடுவார்
கல்விச் சிறப்பை கண்ணென்பார்
கல்லாமை நிலையை விலங்கென்பார்
ஏழைக்கு இரங்கிடும் வள்ளுவம்
ஏற்றமிகு சிந்தனைக் கருவூலம்
பிறப்பொக்கும் சம உரிமை என்றிடுவார்
பிற பிரிவு தொழில் வகைதான் என்றறைவார்
அறிவுச் சமூகத்தின் வடவையாம்
ஆண்ட தமிழினத்தின் செவ் வரியாம்
உலகை உய்விக்கும் உயிர் மறையாம்
உண்மை இது நேர் மறையாம்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்!

இலக்கியச் சோலை கவியரங்கம், 19.01.2019, "செகா கலை"க் கூடத்தில்.

உழவின் வாழ்வே வாழ்வு
உழவற்ற வாழ்வு தாழ்வே
அச்சாணி உலகு அதுவே
அரசாட்சி இருப்பும் உழவே
அகலாது நிற்பின் அழகே.


வாழ்வார் உழுதுண்போரே
வீழ்வார் தொழுதுண்போரே
வள்ளுவம் பகர்வது மேலும் கேட்பாய்
கைம் மடங்கின் துறவும் நிற்காதே
கழனி விலகிடும் சமூகம் வெல்லாதே


சுழலும் ஏர்ப்பின் எட்டி நிற்காதே
சுறு சுறுப்பேற்றிட தயங்காதே
உறுபசி ஒழியும் கலங்காதே
ஓவாப் பிணி குறையும் உணர்வாயே
செறுபகை விலகும் அறிவாயே

தொல் தமிழர் பண்பாண்மை தேக்குவாயே
தொல்லறிவு இது ஏற்பாயே!

"வேதனைப் பொங்கல்"

17.01 2019 காணும் பொங்கலை முன்னிட்டு,புதுவை, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில்,இந்தியக் கலைப் பண்பாட்டுப் பேரவை சார்பில் நடந்த, கவியரங்கில், வாசிக்கப்பட்ட கவிதை.


எங்கள் விழா! பொங்கல் விழா!
ஏரின் பெருமை ஏற்றிய விழா!
அறுவடை விழா! ஆதவன் விழா!

வெடியில்லை! வெறுப்பில்லை!
வேதனை இல்லை! தீவாளியில்லை!
கிழக்கின் வெளி உழைப்பில் தேக்கி,

கதிர் வணங்கி கலத்தில் சேர்க்கும்
வேளாண்மை விழா!
விருந்தோம்பி விடியல் கூட்டும்
உழவின் விழா!

இன்று,
மரபின் பெருமை! மங்கிடும் உரிமை!
நீரும், நிலமும், நின்னை விட்டு நீங்கிட
திண்ணை இழந்த வீடாய், தெருவில்.
உருக்குலையும் உழவு!

சந்தைப் பச்சையில்
வறுமை வெல்லம் சேர்த்து,
சம்பிரதாயப் பொங்கல்!
இயலாமை விறகெரியும்
அடையாளம் இழந்து!

பெருவணிகப் பசிக்கு அன்னமிட
இயலா அட்சயப் பாத்திரம்!
அசந்து போகும் ஆதிரையாய்!
தஞ்சைக் கழனிகள்
அந்நியமாதல் நிரலில்.

கரும்பாய் இனித்த வாழ்வும் கசப்பாய்!
இயற்கைப் பேரிடர், சூழல் அழிவில்
டெல்டா மாவட்டங்கள், பொட்டல் காடாய்!
சுருண்டிடும் தமிழகம் சுரும்பாய்!

Monday, January 14, 2019

வண்ணங்கள்



கவிஞர். ஷெல் சில்வர்ஸ்டெயின்

என் தோல் ஒரு வகை பழுப்பு
இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை
என் கண்கள் சாம்பல், நீல, பச்சையாகும்
எனக்கு சொல்லப்பட்டது 
அவை இரவில் செம்மஞ்சள் நிறத்தில்
என் முடி சிவப்பு, இளம்பொன், பழுப்பு நிறம்
ஈரத்தில் அது வெள்ளி நிறத்தில்
அனைத்து வண்ணங்களும்
கண்டுபிடிக்கவில்லை 
இன்னும் நான் உள்ளே.

(மொழியாக்கம்)


Saturday, January 12, 2019

பேரார்வம் ஈர்த்திடும் உண்ணி


கவிஞர்.பாப்லோ நெருடா

என் பேரார்வம் ஈர்த்திடும் உண்ணி
மணிக்கணக்கில் என்னைக் கடிக்கட்டும்,
அவை நிறைவான, தொன்மையான, 
சமஸ்கிருதம் போன்றவை,
அவை முறையீடு ஏற்கா பொறிகள்.
உண்பதற்காக கடிப்பவை அன்று,
துள்ளலுக்கு மட்டும் குதிப்பவை ;
விண்கோள நடனமாடிகள் அவை,
நுண்ணிய கழைக் கூத்தாடிகள்,
மிக மென்மையான,
மிகவும் ஆழமான ஆட்ட வட்டரங்கில்;
என் தோல் மீதில் பாய்ச்சலோட்டம்,
உளக் கிளர்ச்சியை வெளிப்படுத்தட்டும்,
பொழுது போக்கட்டும் என் குருதியில்,
எவராகிலும் அவற்றை அறிமுகம்
எனக்கு செய்திட வேண்டும்.
உன்னிப்பாக, அவற்றை நான் 
அறிந்திட விழைவேன் ,
எதைச் சார்ந்திருக்க நான் அறிந்திடட்டும்.

(மொழியாக்கம்)

Thursday, January 3, 2019

கடந்திடும் ஆண்டு கனிவானதே


கவிஞர்.வால்டர் சேவேஜ் லாண்டர்.

விடைபெறும் ஆண்டு கனிவாய்,சுவையாய்
விழும் தெளிப்பின் நறுமணம்;
வாழ்க்கை கடந்திடும் இன்னும்
மோசமான படை நடப்பில்,
களிம்பற்ற அதன் இறுதி நாளில்.

அதன் முடிவுக்கு நான் காத்திருக்கிறேன்,
அதன் துயரம் வழி நடத்துகிறேன்,
ஆனால்,
அதன் துக்கம் என் நெஞ்சத்திலோ,
அன்றி
என் கல்லறையிலோ விழவேண்டாம்.
வீழும் கண்ணீர்,
அனைத்திற்கும் ஆறுதல் அளித்திருக்கும்.

(மொழியாக்கம்)

Wednesday, January 2, 2019

நான் சோமாலி


சோமாலிய நாட்டுக் கவிஞர். அப்துல் காதிர் எர்சி
சோமாலி-ஆங்கில கவிதை தொகுப்பினர் மொழிபெயர்ப்பில்

அயராத இந்நாட்களில்,
நீ மெய்யாக உயிருடன் இருப்பின்.
கடந்த காலங்கள் எதிரொளிப்பாய்.
சுவடுகளைத் தேடு.
உம்மிடம் கேள்:
யார் சோமாலி?

உயிருடன் இருப்பவர் எவரும்
எம்மை ஒடுக்கவில்லை.
அனைவரும் சமம் நான் நம்புகிறேன்.
எம்மைக் காண வருகை தருகையில்
அரை மன விருந்தோம்பல் இல்லை,
காண்பாய்:
நான் சோமாலி

அக்கறை உள்ளவர் என்போரே
சங்கிலியால்  எம்மை அச்சுறுத்தும் சமயம்,
ஓட்டைகள் நிரம்பிய கலமாக நீங்கள்.
உமது இருமுக துரோகம் ஒழுகிக் கொண்டிருக்க.
என்னைக் காட்டிக் கொடுக்கும் முயற்சிகள்
தாக்கம் உண்டாக்காது,
நான் சோமாலி.

எம்மிடம் ஏதும் இல்லை என்றாலும்,
என் தலை நிமிர்ந்து நிற்கிறது,
நான் பிச்சை எடுக்கவில்லை,
அகத்தில்
நான் செல்வந்தன், சுயமரியாதை,
கண்ணியம் மற்றும் பெருமையில்.
நீ என் எதிரியாயின்,
என்னை வெல்ல முடியாது,
நீ என் நண்பனாயின்,
எனது இதயம் முழுதும் உனக்காக.
நான் சோமாலி.

நம் முன்னால்  உள்ள பாதை
கடுமையானது,
ஆனால் தெளிவானது,
எனது பயணம் வேதனை மிக்கது
எனது எல்லைகள் மிகத் தெளிவாயினும்
எனது வாள் இடர், துயர் தரும்,
என் ஆன்மா முன்பே மரத்தில் தொங்கிடும்.
நான் சோமாலி.

எனக்கு  தீங்கிழைக்க கூடியவர்
எவரும் இல்லை,
என்னிடம் நெருங்கினால்,
நான் எதிர்ப்பேன் என்றறிவார்.
வெற்றி என்னுடையதாயினும்,
நான் ஒடுக்க மாட்டேன்
தவறிழைப்பேற்றவர் எவரும்
தம் உரிமைகள் மீண்டும் அடைவார்,
எனது எதிரிகள் கூட நியாயமாக நடத்தினர்.
நான் சோமாலி.

போர் அச்சத்தில் நான்,
எப்போதும் அமைதியைத் தேடி,
எதிரிகளிடம் நான் பின்வாங்க மாட்டேன்,
அவர்கள் நெருங்கினால்,
என்னை தற்காத்துக் கொள்வேன்,
பகையிடமிருந்து என் முகத்தை திருப்பிடேன்,
கோழையல்ல நான்-
நான் சோமாலி.

காற்றுபோல் விசையாக ஆயினும்
உந்துணர்வு மனிதன் அல்ல,
நஞ்சு போல் வெறி ஆயினும்
சகிப்பில் போர்த்தி,
எங்கெங்கு தேவைப் படினும்
நல்லதைக் கொணர விருப்பமிக்கேன்.
நான் சோமாலி.

என் கண்ணோட்டம் எண்ணாத மனிதனிடம்,
நான் ஒத்துப்போக வலியுறுத்தம்
ஏற்க மாட்டேன்,
உலகின் பிறரிடம் இணைந்து
எனது ஒடுக்கு முறையாளர்களின்
பிணை சங்கிலிகளை அறுத்தெறிவேன்.
எவருக்கும் ஊழியன் அல்லன்,
சுமை அகன்று, சுதந்திரமாய்,
நான் சோமாலி.

என்னை விட மிகுதியான செல்வம்
உடையவனாய் இருப்பினும்,
ஆதரித்து தொண்டாற்ற வராதே,
 உமது பொய் புகழ் எமக்கு விழைவன்று,
அடங்கா ஆசையன்று,
நான் உறங்கேன், நான் பெருவிழிப்பில்.
உமது ஆழமற்ற வாக்குறுதிகள்
இணங்கச் செய்யாது.
நான் சோமாலி.

என் கால் நடைகளை மேய்க்கும்போது,
சமயத்தில் நீ பிரித்திட வந்தாய்,
வீட்டு விலங்குகளை விரட்டுவதுபோல்
என்னை தொலைவாக, பரந்த வெளியில்
பிரித்து விட்டாய்,
ஆனால் எனது இலச்சினையை
நீ மறைத்திட இயலாது;
எனது பணி தற்போது-
எது சரியோ அதைச் செய்வது
எனது கடமை தெளிவாய்-
மீண்டும் எழுதுவது
நான் சோமாலி.

(தமிழ் வடிவத்தில்)