Sunday, March 10, 2019

உலக மகளிர் உரிமை

உலக மகளிர் உரிமை நாள் விழா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை இயக்கம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி, 09.03.2019ல் கொண்டாடியது. அப்போது வாசித்த கவிதை.


அமெரிக்க சமதர்மக் கட்சி அளித்த
கொண்டாட்டம்,
ஒரு நூற்றுப் பத்து ஆண்டுகள் கடந்தும்- அவர் உரிமை
திண்டாட்டம்.

"வன்முறை முடிவுக்கு வரும் காலம்"
ஐக்கிய நாடுகள் அவை அறைந்திடும்
"சத்தியம், இது சத்தியம்"

தரவுகள் தரும் பாடம்:16 அகவைக் கீழ்
பாலியல் வன்முறை
50 விழுக்காடு;
குடும்ப வன்முறை
603 மில்லியன்;
ஒருகட்ட வன்முறைக்கு பலி
70 விழுக்காடு;
18 அகவைக் கீழ் மணம்,
60 மில்லியனுக்கு மேல்

ஒடுக்குமுறையின் தொடக்க வடிவம்,
குடும்பம்,
அதன் உச்ச வடிவம் அரசாங்கம்.

உடல் மீதான வன்மம்,
ஒருக்கலித்த பார்வை
பண்பாட்டு மெருகில்,
பட்டியல் பெருமையில்.

கொட்டி முழக்கும் சமூகம், சாங்கியமாய்
பரிகாரப் பார்வையில்.,
அங்கொன்றும் இங்கொன்றும்
ஒதுக்கீடுகள் உலா

தடி, உதை உண்டு, தாழ்நிலை மொண்டு
தவிப்பினில் மகளிர்,
தரணியெங்கும்
ஒடுக்கிடும் ஆணாதிக்கம், ஒய்யாரமாய்
ஓங்கிடும் ஒவ்வொரு நாளும்.

மகளே! தலைமை ஏற்றிடு!
மானிடப் பெருமை கூட்டிடு!
சரித்திரத்தின் சக்கரங்களை
சுழற்றிடு!
சரிநிகர் உரிமை மீட்டிடு!
மிடுக்குடன் மின்னலாய்!
கேள்பகை வென்றிடு!

No comments: