(மார்கரெட் அட்வுட், Is/Not, கவிதையின் மொழியாக்கம்)
காதல்
ஒரு தொழில் இல்லை
நேர்த்தியானதோ இல்லை
வேறொன்றும் இல்லை
பாலியல்
பல் மருத்துவம் இல்லை
வலி , குழி மென்மையாய்
அடைப்பது போல்
நீ என் மருத்துவன் இல்லை
நீ என் பிணி நீக்கி இல்லை
எவருக்கும் இல்லை அவ்வாற்றல்
நீ வெறும் உடன் பயணி
மருத்துவ அக்கறை விட்டு விடு
இருக்கமுறும் , கவனம் குவிக்கும்
உன் சினம், என் சினம்
உன் இசைவு , உன் வியப்பு
தேவையில்லை
சட்டப்படி ஆக்கிட அவசியமில்லை
நோய்க்கு எதிரானது அல்ல
உனக்கு எதிரானது
அதை புரிந்து கொள்ள
அவசியமில்லை
மாறாக துப்புரவு செய்திட அல்லது
கொதிக்க வைத்திட
மாறாக நிகழ்காலத்தில்
நின்றிடு
என்று கூறு, கூறிடு