சுனில் கங்கோபாத்யாய்,
"Ephemeral", கவிதை - மொழியாக்கம்.
நீரா, சில வேளை , தோன்றும்
நீ வெகு தொலைவில்
நான் பிறந்த நாளை விட
நீ தனியாய் நடந்திடுவாய்-
இளவேனிற் காட்டில்.
உதிர் இலைகள் ஒலி
உம் இளைய கால்களின் கீழ்
காற்றில் கரையும்
மலைகள் காளையின் சரிந்த
கழுத்தை ஒக்கும்
தொடுவான் சந்திப்பில்
விழு ஞாயிறு
தம் வெற்றிக்
கிரணங்கள்
மலைகளுக்கு ப் பின்
அழுத்தமாய்
யாவும், நீரா, வெகு தொலைவில்
தோன்றும்
நான் பிறந்த நாளை விட
சில வேளைகள் வானத்தை கண்ணுறும்
சமயம்
இறந்த விண் மீன் காணும் போது
எம் நெஞ்சில் ஒரு நடுக்கம்
கண்கள் பூமி நோக்கி
சூழ் உலகை திருப்பிடும்
அந்த தருணங்களில், நீரா,
இறக்க பிறந்த அனைத்தையும்!
எதிர்த்து போரிட
உறுதி விருப்பம் உண்டாகும்
சுவர்க்கத்தின் கொடியை
உம்
பாதாம் வெண்மை ஒத்த
கரங்களில்
வைத்திட விருப்பம்
உலகம் அனைத்திற்கும்
வசீகர
வெளிச்ச கீற்று
உம் முகவாய்க் கட்டில்
என்றென்றும் நிலைத்திடும்
என்று கூறிட
திகைத்த தருணம்
இலைகள் போர்த்தி
இலங்கும் காட்டின் தொலைவில்
உம் புதிர் நகை
காண்கிறேன்!
நீ அறிவாய் நீரா,
அந்தி வானத்தின்
வெண் புறா
வலசை, மங்கி
இருள் மறைத்த போதும்
நம் கண்ணொளி போன்று.
உலகியல் துன்பங்கள் !
அனைத்தும் போல்
மனித துயரம் மட்டுமே
அவன் வாழ்நாளை
தாண்டியும்
நீடித்திருக்கும்