Wednesday, December 10, 2025

வாழைக் கன்று

 

இன்று விடியல் நிலைக்குமா ?

நீயா ? நானா?

முதிர்வு 

முன்னுரிமை 

வாழ்வில், இழவில் 


குலுங்கிய குலையுடன் 

சிலையாய்

தனியாள் துணை

தவிப்பில் 

சந்ததி உருவாக்கி 

 சலிப்பின் பயணம் 

சகடையில்


இம்முறை ,  

பகடை இலக்கில் 

கன்றுகள் 

ஆயுத சுரம்    

அரிவாள் ஆட்டம்

 

அணி அணியாய்

வீழும் 

உறவில் 

உழன்ற 

 கனவின் 

கன்றுகள் 

கடைகளில் காட்சியாய்

உயிரிழந்த ஊஞ்சலில் 

கொலையுண்ட

 குழவியாய் 


கொண்டாட்டத்தில்

 மனிதம்

பூசையில் 

புளகாங்கிதம் 

பொல்லாத சடங்கின்

சதி

ஆண்டு தோறும் 

கல்லா கவர்ச்சியில்

No comments: