Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, July 5, 2019

சனநாயகம்






கவிஞர்.லியோனார்ட் கோகன்

அது காற்றின் துளை ஊடாய்
தியானன்மென் சதுக்க இரவுகளில்
உணர்ச்சியின் வெளிப்பாடாய் சரியாய் உண்மையற்று.
அன்றி அது உண்மையாய் அங்கு சரியற்று.
ஒழுங்கின்மைக்கு எதிரான போர்களில்,
பகல் இரவு உரத்தொலிப்பான்களில்,
இல்லமற்றவர் தீ மூட்டத்தில்,
ஓரினப் புணர்ச்சியினர் சாம்பலில்
சனநாயகம் ஐக்கிய அமெரிக்காவிற்கு வருகை.

Friday, May 24, 2019

தேர்தல்: பணம் பறிமுதல்









வந்தது கொஞ்சம்
வராதது மிஞ்சும்
அவரும் இவரும்
தஞ்சம்
அனைத்தும் வஞ்சம்
அகக் காரணம் பஞ்சம்

அதிகாரப் போட்டியில் அழியும் புதுச்சேரி



போட்டியில் பலவகை கண்டீர்!
புதுவையில் இது புதுவகை என்பீர்!
உன்னைக் காட்டி
என்னைக் காட்டி
ஒடுங்கிடும் சனநாயகம்
வலிவிழந்த பட்டமாய்
அரசியல் வானில்

ஓட்டுரிமை அளித்தார்
ஒதுங்கி நிற்பார்
ஒய்யார அரசியல்
ஓங்கி விற்பார்
எதிரும் புதிருமாய் அதிகார
காட்சிகள்
எட்டிப் போகும் நிர்வாக மாட்சிகள்
இழுபறி அதிகாரக் கயிற்றில்
இடுப்பு சுற்றி இறுகிட: மக்கள்

கல்விக்கு கால்வாசி
நலத்திற்கு காலரை
உழவுக்கு அரைக்கால்
உருப்படா ஆட்சியில்
விலைவாசி
ஓங்கிடும் அன்றாடம்
உடன் யோசி

நொறுக்கிடும் வரிகள்
நெறி பிறழ்ந்து
வேலை வாய்ப்புகள்
சுரம் இழந்து
கூடிடும் கடன்கள்
தலை இறங்கும்
இடியாய்
கருகும் வாழ்வாதாரம்

வகுத்தான் வல்லான்
அதிகார வெறி
அழித்திடும் நலம்
தலைவிதி
ஏற்றத்தாழ்வின் இடைவெளி
இணைகோடாய்
தொடரும்
நிர்வாக மொழி


தன்னழுத்த தற்பெருமை துருவங்களாய்
அகமும், பாவமும் விசைக் கூட்டி
அரசியல் சொக்கட்டான் அலுப்பின்றி
அதிகாரப் போட்டி ஆட்சியில்
அடையாளம் இழந்திடும் வாக்கு வங்கி

("புதிய உறவு" இலக்கிய இதழ் கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை)

Wednesday, March 27, 2019

இரவின் அமைதி






கவிஞர்..ஆர்தர் பேல்டன்

அமைதி தாரகைகள் பெரிதாக, தெளிவாக மின்னிடும்,
பிறை நிலா, கவிழ் கிண்ணம் போல் தொங்கி;
அலைவற்று, அசைவற்று,
என்னால்  கேட்டிட இயலும்
கிளர்ந்திடும் சிந்தனைகளை
என் ஆன்ம அறைகளில்.

(மொழியாக்கம்)

Saturday, March 23, 2019

உண்ட பின்



கவிஞர்.பை ஜீயி

உண்ட பின் உறக்க உணர்வு எமக்குக் கூடிடும்,
காலம் கடந்து விழித்து இரு குவளைத் தேநீர் பருகி,

பின் அறிவேன் சாய் நிழல்கள், சூரியன்
தென்மேற்கில்  கீழ் மீண்டும் செல்ல.

மகிழ்வுறு மக்கள் கடந்திடும் நாட்கள் எண்ணி சினத்தில்.
துயருறுவர் மெல்லக் கடந்திடும் ஆண்டுகள் பொறுத்திலர்.


துன்பமும் மகிழ்ச்சியும் கொள்ளாத எவரும்
எதையும் அளித்திடும்   இவ் வாழ்க்கையை நம்பி.

(மொழியாக்கம்)

Wednesday, March 13, 2019

செல், காதலே


கவிஞர்.ராபர்ட் செளதே

செல், காதலே,
அந்த அழகிய பணிப்பெண்ணிடம் கூறு,
அவள் அழகின் நயம் என் பார்வையில்
இன்னும் சித்தரிக்கும் படமாய்,
சோக நிழலில் நான் நீடித்து இங்கே, எப்படி?,
மந்த துறவு- இரவின் இந்த இருண்ட
மனச்சோர்வு;
சொல்,வாழ்வின் மகிழ்ச்சி யாவும்
தொலைவில் விலகி
வீழும் மாலைப் பொழுதில் நான்,
கூட்டத்தை விட்டுச் செல்ல,
மோதிர-குவிமாட பாடல்
தனிமையில் கேட்டு,
என்னைப் போல் அவள்
தனிமைப் பா பொழிந்து;
சொல்,அவள் இன்மை ,
துயரக்காட்சி அழைப்பில்;
சொல்,அவள் வசீகரிப்பு அனைத்தும் பேசிட,
நான் விழைகிறேன்,
நயத்தில், அவள் மந்திரக்கண் உணர்வேன்
நயத்தில், நகை ஒளியூட்டும்
அவள் கன்னத்தை காண்பேன்,
மெளனம் அசைவற்ற நிலைப்பாய்
தோப்பில் தனித்தியானத்தில்,
காதல், நினைவின் பெருமூச்சு பிளவில்

(மொழியாக்கம்)

Sunday, March 10, 2019

ஓ காதலே! நீ அனைத்தையும் சமமாக்குகிறாய்




கவிஞர். சாரா பிளவர் ஆடம்ஸ்

ஓ காதலே! நீ அனைத்தையும் சமமாக்குகிறாய்
பூமியிலும் அன்றி சுவர்க்கத்திலும்:
சிறைக்கம்பிகள் ஊடாய்  விண்மீன்கள் வரை
உமது வழி காண்கிறேன்;
அன்றி, சர்வ வல்லமை பொருந்தியவன்
திட்டத்திற்கு உண்மையாய்,
தூசியிலிருந்து படைத்தான் மனிதனை,
இடுகாட்டைப் பார்க்கிறாய் நீ,-உமது
இறவாத்தன்மை கண்டிட!

(மொழியாக்கம்)

வண்ணம் தொடக்கமாக










அமெரிக்க கவிஞர்.ரிச்சார்ட் பிராட்டிகன்

காதலை மறந்திடு
நான் இறக்க விழைகிறேன்
உன் மஞ்சள் கூந்தலில்

(மொழியாக்கம்)

உலக மகளிர் உரிமை

உலக மகளிர் உரிமை நாள் விழா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை இயக்கம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி, 09.03.2019ல் கொண்டாடியது. அப்போது வாசித்த கவிதை.


அமெரிக்க சமதர்மக் கட்சி அளித்த
கொண்டாட்டம்,
ஒரு நூற்றுப் பத்து ஆண்டுகள் கடந்தும்- அவர் உரிமை
திண்டாட்டம்.

"வன்முறை முடிவுக்கு வரும் காலம்"
ஐக்கிய நாடுகள் அவை அறைந்திடும்
"சத்தியம், இது சத்தியம்"

தரவுகள் தரும் பாடம்:16 அகவைக் கீழ்
பாலியல் வன்முறை
50 விழுக்காடு;
குடும்ப வன்முறை
603 மில்லியன்;
ஒருகட்ட வன்முறைக்கு பலி
70 விழுக்காடு;
18 அகவைக் கீழ் மணம்,
60 மில்லியனுக்கு மேல்

ஒடுக்குமுறையின் தொடக்க வடிவம்,
குடும்பம்,
அதன் உச்ச வடிவம் அரசாங்கம்.

உடல் மீதான வன்மம்,
ஒருக்கலித்த பார்வை
பண்பாட்டு மெருகில்,
பட்டியல் பெருமையில்.

கொட்டி முழக்கும் சமூகம், சாங்கியமாய்
பரிகாரப் பார்வையில்.,
அங்கொன்றும் இங்கொன்றும்
ஒதுக்கீடுகள் உலா

தடி, உதை உண்டு, தாழ்நிலை மொண்டு
தவிப்பினில் மகளிர்,
தரணியெங்கும்
ஒடுக்கிடும் ஆணாதிக்கம், ஒய்யாரமாய்
ஓங்கிடும் ஒவ்வொரு நாளும்.

மகளே! தலைமை ஏற்றிடு!
மானிடப் பெருமை கூட்டிடு!
சரித்திரத்தின் சக்கரங்களை
சுழற்றிடு!
சரிநிகர் உரிமை மீட்டிடு!
மிடுக்குடன் மின்னலாய்!
கேள்பகை வென்றிடு!

Thursday, March 7, 2019

நான் வாழ்கிறேன், நான் இறக்கிறேன், நான் எரிகிறேன், நான் மூழ்குகிறேன்






கவிஞர்.டெல்மிட்ரா அகஸ்ட்டினி

நான் வாழ்கிறேன், நான் இறக்கிறேன்,
நான் எரிகிறேன், நான் மூழ்குகிறேன்
கடுங்குளிர், சிலுசிலுப்பைத் தாங்குகிறேன்
வாழ்க்கை மிக மென்மையாக,மிக வன்மையாக
வலி தொல்லை, இன்பங்களில் சங்கமித்து,
நான்.

எதிர்பாரா  நகையில், அதே வேளை அழுகையில்
பிரியத்தில், பல துயரங்கள் சகிப்பேன்
என் மகிழ்ச்சி தேயும், எனினும் அது மாறாமல் நீடிக்கும்
ஒரே தருணம் நான் முழுமையாய் உலர்வேன்,
பசுமையாய் வளர்வேன்

இவ்வாறு, அன்பின் நிலையற்றவைகளில்
பாடாய்ப் படுகிறேன்
 மிகக் கடுமையான வலி  என,
 நான் எண்ணும் சமயம்
அறியாது அது கடந்து விட்டிருக்கும்,
மீண்டும்.

பிறகு , என் மகிழ்ச்சி நிச்சயம்
எனது பெருமகிழ்ச்சி நேரம் வாய்த்தது
என உணரும்சமயம்
காண்கிறேன் நான்,  எனது வலி திரும்பிடும்
மறுபடியும்.

(மொழியாக்கம்)






Sunday, March 3, 2019

ஒரு பண்ணை- காட்சி







கவிஞர். வால்ட் விட்மன்
போதிய திறந்த கதவின் ஊடாக 
அமைதியான கிராமப்புற களஞ்சியம்,
கதிர் ஒளி ஏற்கும் பசும்புல் நிலம்,
கால்நடைகள், குதிரைகள் மேய்ச்சலில்;
மூடுபனி, காட்சி வரிசை, தொலை அடிவானம்
யாவும் மங்கலாய் தேய்வுறும்.

(மொழியாக்கம்)

Thursday, February 28, 2019

போரும் அமைதியும்


டாக்டர்.மதன் காந்தி

போர், 
மனிதனின் படைப்பு
கலவரம், போர்......
 யாவும்
மனிதன் ஊன்றிய விதைகள்
அறுவடை ?
இறப்பு

இக் காலம்,
அமைதி பாலங்கள்
கட்டி எழுப்பும்
முதலீட்டுக் காலம்!
போர் ஆயுதங்கள் வடிக்க
 அன்று !
அமைதிப் புன்னகை 
பரவல் 
ஆக்கும் காலமே!


போர், 
மனித இரத்த வெள்ளத்தை
கட்டவிழ்க்கும்
அமைதி, பாரிய
 நன்றாற்றல்
வெளிக் கொணரும்

போர், மனதில் தோன்றும்,
 நிலத்தில் முடியும்

அமைதி, 
நெஞ்சத்தில் தோன்றும்,
சுற்றிலும் அன்பை 
விதைத்திடும்

போர், 
வெறுப்பு நெடி விளை
மரண நஞ்சாம்
அமைதி, 
உமது தலைவிதி மாற்றும்
சஞ்சீவி
போர், மனிதனின் மிகப் பெரிய
முட்டாள்தனம்
அமைதி, மனிதனின் மிக உயர்
 வாழ்நலம்,

ஆம்.

(மொழியாக்கம்)

Tuesday, February 26, 2019

வஞ்சித்தல்




கவிஞர்.ரோஜர் மெக்கெள. இவர் பிரித்தானியக் கவிஞர்.அதிகம் விரும்பப்படும் கவிஞர். 'எளிமையாக தோன்றினாலும், இவர் அசாதாரண ஆற்றல் மிக்கவர்', என 'கார்டியன்' பத்திரிக்கை மதிப்புரை வழங்கியுள்ளது.கவிதை உலகில் நன்கு அறியப்படுபவர். நிறைய இலக்கியங்கள் படைத்துள்ளார். அவர் கவிதையில் ஒன்று, மொழியாக்க முனைப்பில்.



ஒருவித வஞ்சிப்பில் அவள்
ஊமைச் சைகை அளிப்பில்
கடப்பேன் கல் தொலை நான்
இருபது நொடிகளில்.

Sunday, February 24, 2019

ஐம்புலன்கள்



கவிஞர்.ஜீடித் ரயிட், ஆசுத்திரேலிய பெண் கவிஞர். பூர்விகக் குடிகள் மீது கரிசனம் கொண்டு பல கவிதைகளை இயற்றியவர்.இயற்கை, வாழ்க்கை என பல வடிவங்கள் குறித்தும், ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படித்தி; புலம் ஏறி பழங்குடிகளை விளிம்பிற்குத் தள்ளிய சோகம்; அவலங்கள் பற்றியும் எழுதி, மற்றவரை திரும்பிப் பார்க்க வைத்த, ஆளுமை.

மறைந்தாலும், தம் படைப்பிலக்கிய ஆன்மாவில் வாழ்ந்து வருகிறார்.
அவர் கவிதையில் ஒன்று ,எமது மொழியாக்க முயற்சியில்.

ஐம்புலன்களும் இக்கணம் 
அர்த்தம் சேர்த்திடும்
அனைத்து செய்கையும், வருகையும்:
அல்லி சேகரிப்பைப் போல்
கூறுகள் ஒன்றாக என்னுள்
இருளும், ஒளியுமாக,
அந்த அமைதியும்
அந்த காலைப் பொழுதும்,
இவ் வடிவங்கள் அற்றதில் தோன்றி,
ஓர் இலயமாகி ஆட்டங்களில்,
கபடமற்ற அடவில்.

 ஐம்புலன்களில் நானாக
அவை எம்மை சுழற்றிட
அனைத்து ஒலிகளும், மெளனங்களும்,
வடிவங்களும், வண்ணங்களும் அந்த
நெசவாளியின் நூலாக,
அவர் வலை என்னுள் வளர்ந்திட,
நான்அறியாது என்னைக் கடந்து 
தொடர்ந்து செல்ல
சில வடிவம், இல்லாததிலிருந்து 
தோன்றி-
ஆடிடும் ஓர் இலயம்
அது எம்முடையதன்று
  

Tuesday, February 12, 2019

தலைக் கவசம்



போடு என்பார் நாளை முதல்
தேடு என்பார் இன்று முதல்
கோடு போடுவார் ஒருவர்
போடலாம் பிறகென்பார் மற்றொருவர்

தலைக் கவசம் தடுமாறும்
ஓராண்டுக்கு மேல் இடம் மாறும்
இங்கே அங்கே என்று

விபத்து கூடுது தடுக்க வேண்டும்
என்பார்
கவசம் அவசியம் என்பார்
விழிப்புணர்வு அளித்து அணிவிப்போம்
என்பார்

 அதுவரை இருந்தால் ஆதாயம்
அல்லாது போனால் அனுதாபம்
மக்கள் தொகை அதிகம் இல்லையா?

எதைச் செய்வது காவல்!
எதை விடுவது காவல்!
அதைச் செய்வதா?
இதைச் செய்வதா?
அலட்சியம் கொள்வதா?

தடுமாறும் அதிகாரம்
இழு கயிறு போட்டியில்
இடுப்பு இறுக்கும்

தானாகக் கனியும் என்பார்!
தடிகொண்டு அடிப்பேன் என்பார்!


ஈடுபாடு






கவிஞர். ராபர்ட் பிரோஸ்ட்

நெஞ்சம் வேறேந்த ஈடுபாடும்
கொள்ளாது
கடலுக்கு கரையாய் இருப்பதைக்
காட்டிலும்
பெரிதொன்றும் இல்லை-
ஒரு நிலை வலைவைப் பற்றி,
அறா மறுநிலை எண்ணி.

(மொழியாக்கம்)


Saturday, February 9, 2019

'அமில மனிதன்'.

புதுச்சேரி, குயவர்பாளையம், லெனின் வீதியில், போக்குவரத்து சமிக்ஞை அருகில், இடது பக்கத்தில் சாலையோரம். ஓங்கி நின்று, உயிர்வளி அளித்த அரச மரம், இன்று உயிர் இழந்து. பார்த்ததும் பதைத்த உள்ளம், இப்படி வடிகால் தேடியது.


நீ பிறக்கும் முன்
 பிறந்த மரம்
நீ உதிக்கும் முன்
உயர்ந்த மரம்
எவர் வைத்தார் என்றறியேன்
எவர் உடைத்தார்
என்றறிவேன்.

கிளைகள் கழித்த
மின் துறை அறிவேன்.
ஒழிப்பதற்கு முன்னோட்டம்
என்றறியேன்.
செழிப்பை,
கழிப்பில் வைத்த அரசியல்,
மின்மாற்றிக்கு வாழ்வளித்து,

தலைமுறைகள் தழைத்திட,
 ஓங்கி, உயர்ந்து,
ஓய்வின்றி,உயிர்வளி அளித்த
 'அரசின்'
கதை முடித்தான்,
'அமில மனிதன்'.

'சந்தேக மரணம்'
 சட்டம்
 'முதல் தகவல் அறிக்கை'?

குறும்பாடல்




கவிஞர். டொரோதி பார்கர்

ஒரு காலத்தில் நான் இளமையாக உண்மையாய் இருந்தபோது,
யாரோ என்னை சோகத்தில் ஆழ்த்தினர்-
நொறுங்குமை எம் நெஞ்சம் இரண்டாக்கி;
அது, மிகவும் மோசமானது.

பொசுப்பற்றவருக்கு காதல்,
காதல் ஒரு சாபம்.
ஒரு காலத்தில் உடைத்தேன் ஓர் இதயத்தை;
அது, எண்ணுகிறேன், மிக மோசமானது.

(மொழியாக்கம்)

Saturday, January 26, 2019

பறவைப் பாடல்







மேவ்லானா சலாலுதீன் ரூமி

பறவைப் பாடல் ஏக்கம் தணித்திடும்
அவைபோல் மிகு களிப்பில் நான்,
சொல்வதற்கு ஏதுமின்றி!
உலகளாவிய ஆன்மாவே சில பாடல் பழகிடு
அன்றி என்னூடாக விரும்பிடு!

(மொழியாக்கம்)

Monday, January 21, 2019

"வாழ்க வள்ளுவம்"

புதுச்சேரி சிந்தனையாளர்கள் அரங்கம், 20.01. 2019 கவியரங்கம்

வாழ்க வள்ளுவம் என்போம்
வளமான வாழ்வு அதன் வழி நிற்போம்
வாழ்வின் அடிப்படை அறம் என்பார்
வாழ்ந்திடும் வாழ்க்கைக்கு பொருள் என்பார்
இன்பம் எய்திட அன்பென்பார்
அறமும் அன்பும் பிணை என்பார்
மறத்திற்கும் மாண்பு சேர்த்திடுவார்
துணை அன்பென்று காட்டிடுவார்
இறையியலில் அறிவியல் பாய்ச்சிடுவார்
இருட்டறை மதங்களை விரட்டிடுவார்
வான் சிறப்பை வகையாய் விளக்கிடுவார்
வாழுவு அதுவே என்று ஊட்டிடுவார்
நீத்தார் பெருமை நீட்டிடுவார்
நித்தில உண்மை நாட்டிடுவார்
கல்விச் சிறப்பை கண்ணென்பார்
கல்லாமை நிலையை விலங்கென்பார்
ஏழைக்கு இரங்கிடும் வள்ளுவம்
ஏற்றமிகு சிந்தனைக் கருவூலம்
பிறப்பொக்கும் சம உரிமை என்றிடுவார்
பிற பிரிவு தொழில் வகைதான் என்றறைவார்
அறிவுச் சமூகத்தின் வடவையாம்
ஆண்ட தமிழினத்தின் செவ் வரியாம்
உலகை உய்விக்கும் உயிர் மறையாம்
உண்மை இது நேர் மறையாம்