Tuesday, January 24, 2023

இல்லை

 கொடுப்பார்

என்று எண்ணினேன் 

கொடுப்பார் இல்லை 

அறிவார் 

என்று எண்ணினேன்

அறிவார் இல்லை 

தொடர்வார் 

என்று எண்ணினேன்

தொடர்பில்லை 

முடிப்பார் 

என்று எண்ணினேன்

முடிப்பார் இல்லை 

விடுவார் 

 என்று எண்ணினேன் 

விடவில்லை

விடியல் வந்தும் 

வெளிச்சம் இல்லை 


"சண்முகம்"

 உன் முகம்

பன் முகமா 

சொல் 

"சண்முகம்"

சுழற்சி

இறப்பு - 

பிறப்பின் முடிவு,

அல்ல , அல்ல 

இறப்பின் பிறப்பு 

பிறப்பின் 

மறு சுழற்சி 




மனப்பான்மை

நன்றாய் எழுது வோரும், நாட்டு நடப்பு, உலக நடப்பு குறித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யும் எண்ணங்கள், சரியான கண்ணோட்டத்தில் அமைவதில்லை.

படைப்பிலக்கியம் குறித்த புது உத்திகள், புனைவுகள் புதுக்கிடும் பேனா முனைகளும் சறுக்கி சாளர காட்சி களாய்.

அறிவியல் பார்வை ,சமூக இயக்க நிகழ்வுகள் அலசலுக்கு அந்நி யமில்லை, அயன்மை இல்லை என்று அறியாதவர்கள் அல்ல.

 ஆயினும், நாட்டிடை அரசியல் நகர்வுகள், பூகோள போக்குகள் குறித்த ஆய்வுணர்வு, ஆழமற்ற அங்கலா ய்ப்புடன், ஒரு சார்பில் வெளியேற்றம் .

வெகு மக்கள் ஊடக காட்சியிலும், கருத் திலும் உள் நோக்கில், தீர்மானிக்கப்பட்ட நிரல் ஏற்பாட்டில் .நிமிட ந் தோறும் நிகழ்ச்சிகள் அலைவரிசை யாய்.

ஆட்சியதிகார ஆதரவு பிரச்சார பீ ரங்கிகளாய், மென் குண்டுகள் கருத் தேற்ற மாய் ;சமூகத்தின் உளவியல் கட்டமைப்பில்; ஓய்வின்றி கடிகார முள் போன்று, இயங்கும்.

புற நிலை செல்வாக்கில் பொழுதுகள் புலரும்.பொய் , புனைவுகள் பிடியில் பிரியத்துடன் கடந்திடும் காலம். 

அக நிலை ஆய்வு ஒத்தி வைத்து, அர்த்தம் தேடும் வெளியில், செல்வாக்கில் சாய்ந்து .



இப்படியாக...........


இறங்கி ஏறி

ஏறி இறங்கி

ஏமாற்றி ஏமாந்து 

ஏமாந்து ஏமாற்றி 

பிரிந்து சேர்ந்து 

சேர்ந்து பிரிந்து

சோர்ந்து எழுந்து 

வாழ்ந்து கெட்டு

கெட்டு வாழ்ந்து ..........




Sunday, January 22, 2023

கணக்கு

 தப்பேதும்  இல்லை 

தனிக் கணக்கு

தவித்திடும் வாழ்க்கையின் 

உந்தன் 

பொதுக் கணக்கு 

பதிந்தாய்

 அவன் சரியில்லை 

இவன் சரியில்லை 

எவனும் சரியில்லை 


அவனை விட

 இவன் மேல் 

இவனை விட 

அவன் மேல் 

எவனை விட 

எவன் மேல் 


ஒப்பீட்டில் 

உனை மறந்தாய் 

செப்பேட்டில் 

தனை பதிந்தாய் 

வாசிப்பு

 புரிந்தது போல் இருக்கிறது

புரியாதது போலும் 

அறிந்தது போல் இருக்கிறது

அறியாதது போலும் 

தெரிந்தது போல் இருக்கிறது

தெரியாதது போலும் 

Saturday, January 21, 2023

செலவு

 பரந்த சிந்தனை

திரண்ட எண்ணங்கள் 

வரலாற்று ஆர்வம்

வகை வகையாய்ச் சேர 

உருண்ட உலகின் உன்னதம் 

உணர்ந்திட ஓடிய செலவு 


தரை மீது கடந்த நாள்கள்

சலிப்பில் 

விண்ணில் கடக்கும் வாய்ப்பு 

பகல் இரவு கலந்து

நாடுகளைக் கடந்து 

உறவிடம் சேர்ந்து

ஓய்வு கொள்ளும்

மனம்


இரைச்சல் குறைந்து

இறுக்கம் தளர்ந்து

விளக்கம் சேர்க்கும்


பொழுதுகள் போக்கு அறியும் 

காலச் சக்கர  சுழற்சியின்

திசை வேகம் 

நிதான நிலையில்

நின்றிலங்க 



மரம் , செடி , கொடிகள் 

மாண் பறியும் 

பறவைகள் பக்குவ ஒலி

கேட்கும்


மழை, இருட்டு,வெய்யில் மாறிடும்

வாடை கூடிடும் 

சில்லிடும் சூழல், சிவந்திடும் மேனி  


உண்பதற்கு ஓரு நூறு வகைகள் 

அடுக்களையில் 

அடுக்கம் காணும்

முடுக்காய் உண்ணும் வேளை


அணி அணியாய் பணியாற்ற 

விரைந்திடும் 

வாகன மனிதர் 

அதிகாலை தொடங்கி

நடுநிசி வரை 

அக்கறை உழைப்பில் 


ஆற்றலுடன் அன்றாடம் 

கிழமை நாள் ஒன்றிரண்டு 

ஒழிவில் 


துப்புரவு பணி சேர்த்திடுவர்

ஒப்புரவில்








Friday, January 20, 2023

தேடி

 ஓடிடும் ஓய்ந்திடும் 

ஓயாமல் கூடி 

வாடிடு ம் வதங்கிடும் 

காணாமல் தேடி 

வீக்கம்

 வீங்கிடும்  வாங்கிடும் 

வீ ங்காமல் வீங்கி 

தேங்கி டும் வடிந்தி டும் 

தேங்காமல் தேங்கி 


இல்லை

 கரைகின்ற காலம் 

நி றை வில்லை 

கன க்கின்ற நெஞ்சம்

 உறக்கம்  இல்லை



Tuesday, December 6, 2022

சுமக்கும்

 பல முனைகள்

கள முனைகள் 

கவலை வினைகள் 

கலங்கிடும் மனிதம் 

எல்லைகள் கடக்கும் 

தொல்லைகள் சுமக்கும் 

கற்பதில்லை

 தினசரி படித்தும் புரியவில்லை

திசை வழி ஏதும் வெளிச்சம் இல்லை 

உள்ளதைச் சொல்லியும் ஏற்பில்லை 

உண்மை  என்றும் கற்பதில்லை 

Monday, November 14, 2022

சிக்கி

 யாரிடம் சொல்வேன் ?

ஊரிடமா ?உறவிடமா? 

நேரிடும் நெருடல் 

நாள்தோறும்

நெஞ்சறை யில் நெக்கி

நினை வறை யில் சிக்கி

செல்வார்

 செய்தி சொல்வார்

சேகரித்துக் கொள்வார் 

சேர்த்து மெல்வார் 

சேம முற செல்வார் 

மொழி

 எந்தன் மொழி 

எந்தன் விழி 

உந்தன் மொழி 

உந்தன் விழி 

எவரின் மொழியும் 

அவரின் விழியாம் 

தவரெது இதில் 

தாக்குதல் பழியாம் 

திண்ணம்

 அன்னத்தில் வின்னம் 

ஆசையில் கன்னம் 

இதயத்தில் சுன்னம் 

ஈவதில்லை திண்ணம் 

Friday, November 11, 2022

சலிப்பு

 நாட்டமில்லை வாசிப்பில் 

நாள் ஓடும் 

நம்பிக்கை வாடும் 

நசிந்த உணர்வு மேலிட

தொடங்கிய இடத்தில்

மீண்டும் 

அடங்கிடும் ஆர்வம் 

சிறு பொழுதுகள் 

கழன்றிடும் 

சேர்த்தது அறியா 

சலிப்பில்  

எவருக்கெ ன்று

 பேசும் போது

பேசட்டும்

பேசாமல் போனாலும் 

போகட்டும்

ஏங்கிடும் மனம் உங்களுக்காக 

அல்ல 

அது அறியும் 

எவருக்கென்று 

மனம்

 அங்கும் இங்கும்

தங்கிடும் 

எங்கும் எதிலும்

திடுக்கிடும் 

Thursday, November 10, 2022

மழை

 வரும் மழை 

தரும் மழை 

அரு மழை

பெரு மழை  

இயற்கை கொடை

இற ங்கிடும் மடை

ஏ ற்ற மிகு நடை 


அலுவல் செய்

 அழைத்தார் அணியமாய் 

அழைத்துச் செல்பவர் 

அந் நி யமாய் 

அலுப்பை அயன்மையில் வை 

அடுத்த அலுவல் செய் 


Wednesday, November 9, 2022

வசம்

 யாசிக்கிறா ய்  

யோ சிக்கிறா ர் 

பூசிக்கிறா ய் 

பொறு மை காக்கிறார்

வாசிக்கிறாய்

வசம் அறிகிறா ய்

Tuesday, November 8, 2022

சாந்தமில்லை

 பேசத் தெரியவில்லை 

உறவைப் பேண

தெரியவில்லை 

ஏனோ புரியவில்லை 

எப்போதும் சாந்தமில்லை 

Saturday, November 5, 2022

தேடு ....

 ஓடுறான் ஓடுறான்

தே டுறான்   தேடுறான் 


உரு பொருளை

ஒரு பொருளை தொலைத்து 


 இலகுவில் கிடைத்தல் 

அருமை அறியான் 


வலுவில் உறவை 

இடைக் கண்  முரி த்தான்

Thursday, November 3, 2022

முரண்

 எனக்கே நான் எதிராக 

என் புரிதலுக்கு புதிராக 


சரியா ? தவறா ?

உள்ளதா? உண்மையா? 

மெய்யா?  பொய்யா ? 


மன அலையின் ஆர்ப்பரிப்பு 

அன்றாடம் மெய்  சிலிர்ப்பு 


ஆழ்ந்த யோசிப்பு 

தாழ்ந்த வாசிப்பு 


பருவ மழை

 பருவ மழை பலமாய் 

வளம் அளிக்க வகையாய்

தவிக்கும் சாலைகள்  

தடுமாறும் சாக்கடைகள் 

படகாகும் வாகன ங்கள் 

குள ங்களைத் தேடும் நீரோட்டம் 

தேம்பி அழும் குழந்தை போல் 

தெருவில்

வாய்க்கால்கள் கால்வாசி 

முகவரி  இழந்த அஞ்சலாய்  

கண்மாய்கள் மனைகளாய்

இழந்த தேசமாய் ஏரிகள்

 உறவைத் தொலைத்து 

கழிந்த ஒற்றைப் பனை யாய் 

தாங்கும் திறன் குறைந்து 

தவிப்பில்  தள்ளாடும் 

துணை தேடி ஊருக்குள் 

வழமையாக ஆலோசனை

தயாரிப்புகள்  தேர்விற்கு

முதல் நாள் முடுக்கமாய் 

முணகிடும் மக்கள்

 முடக்கத்தில் 

Wednesday, November 2, 2022

கவடு

 ஏமாற்றி ஏமாந்து 

ஏமாற்றாமல் ஏமாந்து

ஆள் மாற்றி ,

ஆள் மாற்றி

 ஆடை மாற்றி 

 மாற்ற டை 

இழ 


மண் ஆடை ஏற்றி 

மன ஆடை  களை

பன்னாடை

பண்பாய்

 கசடு ஏற்றி

கவடுடன்

 சுவடு இழ.........

இப்படி....

 உதவி என்று வருகிறார் 

பெறுகிறார் 

சிக்கல் தீர்த்துக் கொள்கிறார் 


கோருகிறார் பெறுகிறார்

சிரமம் தீர 

சில காலம் முன்னோட்டம் 


அடிக்கடி வருகிறார் 

ஒத்தாசை நல்கி 

ஒட்டி விடுகிறார் 


வேலை முடிந்தது

இனி என்ன என்று 

எட்டி விடுகிறார்


கரடி விடுகிறார்

காரணம் அடுக்கி


நலக் கேடு என்பார்

யாத்திரை என்பார்


வேண்டுதல் என்பார் 

திரள் கிறது என்பார்

தீர்ந்தது என்பார் 


கெடுவில் வாழ்வார் 


கேடு மனிதர் பாடே

இப்படி.........