படைப்பின் தவறல்ல
தவறி ன் படைப்பு
வளர்ப்பின் தவறல்ல
தவறின் வளர்ப்பு
முன்னங் கால்
இரண்டு தூக்கி
கங்காரு போல்
இரு கைகள் சேர்த்து
விழிகள்
முன் நிறுத்தி
வால் ஆட்டி,
அசைத்து
விசில் ஒலி
எழுப்பி
விசை ஒலி
மாந்தர்
சிந்திய, சிதறிய
பருக்கைகள்
சேகரித்து
உண்ணும் பிள்ளை
உன்னால் இல்லை
தொல்லை
ஒடுக்குவது , ஒழிப்பது
செல்வம் கொழிப்பது
வே லிக்குள் அடைப்பது
கூலியாக காலியாக்குவது
குடி நீர், மின்சாரம்
தன் அதிகாரத்தில்
வழியும், பாதையும்
கண்காணிப்பில்
நொடியும் துடிமத்தில்
நோஞ்சான் சமூகமாக
நுண்ணறிவு தொழில்நுட்பம்
ஓங்கியவன் ஆயுதமாய்
நியாயம் பேசுவார்
வாழ்விடத் தை விட்டு போ
நிவாரண வண்டிகள் அணி
ஆராதிக்கும் உம்மை
சவப்பெட்டி தொடக்கமாக
சன நாயக கோமான்
சமரசம் ஆயுத முனையில்
சந்ததி அழித்து
நீ சுட்டால் பாதுகாப்பு
உனக்கு விடுதலை
அவன் தடுத்தால்
தறுதலை
தீவிரவாதி
அளவுகோல் அளிப் பான்
ஆயுத முனையில்
வியாபாரி
அமைதி கெடுப்பேன்
அடுத்த வீட்டு
கொள்ளி யாய்
அடுத்து கெ டுப்பே ன்
கடனில் தருவேன்
உடன் அளிப்பேன்
உன் நிலம் எனக்கு
உன் வளம் எனக்கு
ஆயுதம் கொடுப்பேன்
அழகாய் விளக்கம்
அளிப்பேன்
பகை சேர்ப்பேன்
புகை மூட்டுவேன்
அடித்து சாக
சவப்பெட்டி தருவேன்
கடனில்
அமைதி எமக்கு
அமை தீ
உனக்கு
பஞ்சாயத்து
எம் பார்வையில்
பஞ்ச தாயத்து
உம் கழுத்தில்
'பஞ்ச தந்திர
நாயகன்'
உன்னை அடித்தால்
அவனுக்கு வலிக்கும்!
நீ அடித்தால்
பிறருக்கு
வலிக்காதா?
அடிபட்ட வன், மிதி பட்டவன்
அடிமையாய்
ஆயிரம் ஆண்டுகளாய்
நிலம் இழந்து , நீர் இழந்து
ஏதிலியாய்
உரிமை வேட்கை
உனக்கு மட்டும்
சொந்தமா?
பூர்வீக குடிகளை
கொன்று குவித்த
மென்று தின்ற
வல்லதிகாரம்
உலகைச் சுற்றி
வலம்
இரத்த வாடையில்
ஆயுதம் தரித்து
எல்லை தாண்டி
கொள்ளிவாய்
சனநாயக
' நரிதாரத்தில் '
கருடனை மிஞ்சும்
திருடன்
நீர் அணிந்தால்
என்ன?
ஊர் அலைந்தால்
என்ன?
சீர் நின்றாள் !
சரி
சீறி நின்றாள் !
வெறி
உணர்ச்சிவய ஊர்வலம்
உள்ளது காணார்
உண்மை உணரார்
உள்ளத்தில் உள்ளதை
அறியோம்
ஊரில் உள்ளதை
அறிவோம்
நேரில் பேச
நெருடும்
மறைவில் மணிக்கணக்கில்
சனநாயக பாடம்
பெற்றது நீயா?
பிறந்தது நானா?
உற்றது நீயா ?
உணர்ந்தது
நானா?
கற்றது நானா?
கற்பித்தது
நீயா?
விட்டது நீயா?
பிடித்தது
நானா?
தென்னை இருந்தது
திண்ணை இருந்தது
கிணறு இருந்தது
மழை நீர் சேர்ந்தது
மரம் இருந்தது
நிழல் சேர்ந்தது
தொட்டி கழிவறை
அடுப்பு எரிக்கும்
சாம்பலில் நிறைந்தது
பருவ முறையில்
விளை நில
எருவுக்கு சென்றது
சாலவம் தவளைகள்
இருப்பிடம் ஆனாது
கொசு என்பதே
அறியாமல்
ஈக்கள் மட்டும்
வீடுகளில், வீதிகளில்
உலா வந்தது
தெருவெங்கும்
குழந்தைகள்
விளையாட்டு
குதூகலம் சேர்த்தது
மின் வசதி ,
எங்கோ ஒன்று
புழுக்கம்
இரைச்சல்
அருகி நின்றது
சாணம் மெழுகிய
இல்லம்
சந்ததி சேர்த்தது.
யார் குற்றம்
போர் குற்றம்
ஊர் குற்றமா?
உன் குற்றமா?
அனைத்தும் செய்வாய்
அக்கிரம அரவணைப்பில்
வெல்வாய்
அன்றும் , இன்றும்
அணி சேர்ப்பாய்
உலகின் மன சாட்சி
உண்மையின் காட்சி
சப்பான், கொரியா,
வியட்நாம், ஆப்கான்
ஈராக், லிபியா,
யூகோஸ்லாவிய..........
சுத்தம் செய்வோம்
சத்தம் செய்யோ ம்
மொட் டை மாடியிலும்
காற்றோடு
பே ரிரைச் சல்
இசையாயினும்
வசையாயினும்
அளவே
நம்பிக்கை பேரில்
செவிப்பறை
கெஞ்சும்
அலப்பறை
ஆதிக்கத்தில்
மின்சார மேளம்
ஆலய மணி
ஓய்வில்
நில நடுக்கம்
குலை நடுக்கம்
உயிர் எடுக்கும்
உடமை அழிக்கும்
தகடுகள் நகர்வில்
நாடுகள் நகரும்
நகரங்கள் தகரும்
ஊர்கள் உள்வாங்கும்
உடைவுகள் அடவு காட்டும்
செப்பனிடும் பூமி
சேதம் விளைவிக்கும்
சாமி
நீர் வளம், உறிஞ்சும்
கனிம வளம் சுரண்டும்
அளவற்ற ஆசையில்
ஆளை க் கொல்லும்
போதையில்
வியாபாரத்தின் எல்லை
பூமிக்குள்ளும்
ஆழம் பார்க்கும்
அகல, நீள ம்
நோக்கும்
ஆறாவது இழந்து.
மொரோக்கோ
துயரம்
பேரழிவின்
உயரம்
ஒன்று கூடும்
இருபதும்
ஓயாமல்
முதலீடு சேர்க்கும்
ஓட்டை, உடைசல்
வணிகம் சேர்க்கும்
ஓயாமல் சிண்டு முடியும்
கருவிகள் விற்று
உயிர்கள் உருவும்
ஒழியும் மனிதம்
கொழிக்கும் செல்வம்
வெறி ஆள் கையில்
விருப்பமில்லை
நெறி ஆள் கையில்
நின்றேன்
சரி ஆள் கை கருத்தில்
சறுக்கல் இல்லை
கலைந்த பின்
கலந்தாடல்
கருத்தாடல்
விளைந்த பின்
விதைக்கும்
முயற்சியே
அகதிகளில் கூட
நிறம், நிலம்
இனம்,
இவர்,
அவர்
வேண்டியவர்,
வேண்டாத வர்
இந்த அணி
அந்த அணி
வாழ்விடத்தை
வதையிடமாய்
வளங்களை
வசப்படுத்தி
ஆயுதங்களை
விதைகளாய்
மனங்களில்
ஊன்றி
போர்ப் பயிர்
வளர்த்து
சக மனிதரிடம்
சகிப்பை பறித்து
சந்ததி அழிக்கும்
சதுரங்க வேட்டை
"மனிதம் "
எல்லைக்
கோடுகளை
தாண்டி
அல்லாடும், தள்ளாடும்
அனாதையாய்
ஓடு, ஓடு
உறவைத் தேடு
ஓடு, ஓடு
உரிமை நாடு
பீடு, பீடு
பிற பெருமைக் கேடு
மூடு, மூடு
மூடத்தனம் பேடு
நாடு, நாடு
நன்னெறி கோடு
வீடு, வீடு
விண்ணவர் மேடு
கேடு, கேடு
கண்டிலர்
அகக் கூடு
உள் நோக்க ஊர்வலம்
உலா வரும் தலைகள்
உண்மை பிரச்சினை
என்று அணு க
பின் வாங்கிச் செல்வார்
காரணம் பல கூறி
கழன்று விடுவார்
கழனி சேர்ப்பார்
பழனி உயரத்தில்
கொள்கை க் குன்றம்
தாண்டி
நிறைந்த உண்டி
வண்டிகள் அணி வகுப்பில்
வகை வகையாய்
வள மனை
கள முனை கண்டவர்!
ஓராயிரம் உணவுக் கடைகள்
ஒளி உமிழ் விளக்கொளியில்
ஒய்யாரமாய் வியாபாரம்
உள்ளேயும் வெளியேயும்
மிளகாய் பொடி நெடியில்
எண்ணெய் வாசத்தில்
பொரிப்பதும்
வறுப் பதும்
பையில் அடைத்து
தட்டில் இட்டு
இர ப்பைக்கு இலக்கு வைக்கும்
இழப்பிற்கு உலை வைக்கும்
நலம் நசிந்து உல்லாசம்
பயணிகள் ஊர் தாண்டி
காசு கொடுத்து சூன்யம்
கொள்ளை அடி
கொழிக்கும் பணத்தை
வெள்ளை அடி
கருப்பு என்ன?
வெள்ளை என்ன?
ஏன் இந்த வேறுபாடு?
ஏக்கம் தீர
கூறு போடு
விளை ந்தது
என்னால்
விழைவில்லை
செருக்கில்
உழைத்தே ன்
களித் தேன்
உழைப்பில்
நாளும்
திளை த்தேன்
திண்ணம்
ஒருங் கி ணை ப்பில்
உணர்ந்தே!
விலகிய உறவு
வீங்கிய கனவு
தேங்கிய எண்ணம்
தேடிய வண்ணம்
தாங்கிய பழக்கம்
தடுமாறிய முழக்கம்
தன்னாலே
வெளிச்சம்
ஒதுக்கிய நட்பு
ஓ ங்கிய உணர்வு
மாறிய வேடம்
ஏ றிய ஓடம்
எப்படியும் வியாபாரம்
இப்படியும் அப்படியும்
தப்படியும் தம்பிடி யும்
தனி அடியில்
உரிமைக் கள த்தில்
நுகர்வோர் பக்கம்
நூல் பிடிப்பேன்
நுழைபுலத் தில்
தேவை என்றால்
அழைப்பாய்
செழிப்பாய்
தேவை நின்றால்
இளிப்பாய்
களிப்பாய்
சேவை என்று
ஒலிப்பாய்
ஒளிப்பாய்
உன்னைப் போல் நானும்
ஒரு நாள்
உருமாற்றம் கொள்வேன்
அந்நாள்
இந்நாள் போல்
உன் இருத் தலில்
உண்மை உணர்த்தும்
உலகியல்
சொல்லிக் கொண்டே
இருக்கிறாய்
சோதனையில்
நிற்கிறாய்
சாதனை மனிதர் தான்
வேதனை
சேர்க் கிறாய்
வெற்று உறுதி
கோர்க்கிறாய்
நிலவரம் மோசமாயின்
கலவரம்
கையில் எடு
அரசியல் இருப்பை
உறுதி செய்ய
கலவரம்
உமக்கு
கை கண்ட
ஆயுதம்
கண் கண்ட
தெய்வம்
கடந்த கால
வரலாறு
கை கொடுக்காமல்
போகுமா?