ஒன்றும் சொல்லாதே !
அவரிடம்
நன்றும் செல்லாதே !
மறுத்து ப் பேசுவதே
வளர்ச்சி !
அவ்விடம்
ம டக்கிப் பேசுவதே
முதிர்ச்சி !
அடக்கிப் பேசி
அடங்கிப் போ
இவ்விடம்
அமைதி யாய்
அகன்று போ
ஒன்றும் சொல்லாதே !
அவரிடம்
நன்றும் செல்லாதே !
மறுத்து ப் பேசுவதே
வளர்ச்சி !
அவ்விடம்
ம டக்கிப் பேசுவதே
முதிர்ச்சி !
அடக்கிப் பேசி
அடங்கிப் போ
இவ்விடம்
அமைதி யாய்
அகன்று போ
அரிப்பு சுகமே
அளவுக்குள் தினமே
கரிப்பும் இதுவே
செரிப்பு முறையே
உணவுக்கு அளவே
சேர்ந்திடும் அறிவே
செப்பிடு உணர் வே
இங்கு இருக்கும்
அங்கு இருக்கும்
எங்கும் இருக்கும்
தங்கும் இறுக்கம்
தளர்வில் நெருக்கம்
உணர்வில் உருக்கம்
உண்மை பிறக்கும்
"அறுத்துகிச்சாம். கழுதை, எடுத்துகிச்சாம் ஓட்டம்"
வெய்யில் காலங்களில் அப்போதெல்லாம் இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடுவது வழக்கம்.
பெரும்பாலும் தார்சாலைகள் போடாத வீதிகள். இருபுறமும் வீடுகள் அமைந்த அமைப்பு. திண்ணைகள் கொண்ட இல்லங்கள்.புறக்கடையில் கிணறு, தொட்டி கக்கூஸ், வேப்ப மரம், செடி செட்டுகள் கிணற்று நீரே குடிக்க, கொப்பளிக்க என அனைத்து உபயோகமும்.. மின்சார இணைப்பு ஒன்றிரண்டு வீடுகளில்தான்.பெரும்பாலான இல்லங்கள் கா விளக்கு, அரி க்கன் விள க்குகளில் இராப் பொழுதைக் கழிக்கும்.
தெரு சாக்கடைகள் தேக்கம் இல்லாது ஓட்டத்தில், தவளைகள் வாழும் இடமாகவும் விளங்கியது.கொசுத் தொல்லைகள் அற்ற ஊராகவம் இருந்தது.மணற்பாங்கான இடங்களில் வீட்டுக்கு வீடு, முன் கட்டில் முருங்கை மரங்களை பார்க்கலாம். தெரு முனையில் இருந்த கோவில் மதிற் சுவர் ஒட்டிய பகுதியில் தென்னை மரங்கள் அலங்கரிக்கும். அடுத்து, தண்ணீர் குழாய். பொதுமக்கள் தேவைக்கு இருக்கும். பக்கத்தில் பன்னீர் பூ மரம் வெள்ளை பூக்களுடன் வாசனை பரப்பும்.
வீதிக்கு வடக்கில் விட்டு ,விட்டு பூவரச மரங்கள் அணி வகுக்கும். வரிசையாய் கூரை வீடுகள் நேர்க்கோட்டில் தெற்கு பார்த்த அமைப்பில். புறக்கடை இறக்கம் தனுசு பிள்ளை தோப்பு. மிகப்பெரிய தென்னந்தோப்பு பெருவாரியான மக்களுக்கு இயற்கை உபாதை கழிக்கும் வாய்ப்பாக அமைந்தது.
இத்தகைய புற சூழலில், கோடைக்கால சிறார்கள் மாணவப் பருவம் விளையாடி, பொழுது போக உகந்ததாக இருந்தது.வீட்டில் உள்ள பாட்டிகள் கதை சொல்ல, விடுகதை போட ,ஒரே ஆரவாரமாக , ஆரோக்கியமாய் பொழுதுகள் புலரும்.
வீட்டில் கொழுக்கட்டை, கடலை அவித்து தருவது. எள் அடை, வெள்ளை முறுக்கு, கடல்பாசி, கமர்கட்டு, கசகசா மிட்டாய் என பலவகை தின்பண்டங்கள் தெருவில் விற்கும், வாட்ச் மிட்டாய் பாட்டுப்பாடி, பிள்ளைகள் கையில் கட்டி, தாடையில் கொசிரு ஒட்டி செல்லும் வியாபாரி.இவையாவும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
நுங்கு, பலாச் சுளை, மாம்பழம், மல்லாக் கொட்டை, கொண்டைக் கடலை போன்ற பண்டங்களும் நாவின் சுவை தணிக்க பட்டியலில்.இல்லங்களில் சுட்டு அளிக்கும் முறுக்கு, கொழுக்கட்டை வகைகள் கூடுதல் தீனி என்றால் மிகையாகாது.
சொந்த, பந்தங்கள் வீட்டிற்கு விடுமுறை காலப் பயணம் செல்வதும் உண்டு.அதில் வீட்டு சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பல நிகழ்ச்சிகள் இணைவது உண்டு.
சலிக்க வெய்யிலில் ஆடுவது, பம்பு செட்டுகளி ல் குளிப்பது, உண்டி வில் அடிப்பது, மீன் பிடிப்பது, நீச்சல் பழகுவது ஆகியவை களும் அடங்கும்.வீட்டுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, ஆட்டம் போட்டு அலு த்து , திரும்பி கண்டிப்பும், தண்டனையும் அடைவதும் உண்டு.
அம்மை நோய் வாரி கொட்டி அவதி படுவது, கை கால்களில் சிரங்கு வந்து, நீல மருந்து, மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் எஸ் பவுடர் தேங்காய் எண்ணெய் குழைத்து, பூசுவதும் வழக்கம்.
கோடை விடுமுறை முடிந்து பிள்ளைகள் எப்போது பள்ளிகளுக்கு ச் செல்லும் என்று பெற்றோர் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் உண்டு. அத்தகைய சூழல் குறித்து அண்டை வீட்டாருடன் வாடிக்கையாக பேசும்போது உதிர்க்கும் சொற்றொடர், " அறுத்துகிச்சான் கழுதை, எடுத்த்துகிச்சாம் ஓட்டம்", என்பது.
அம்மா எங்களிடமும் , நாங்கள் அடங்காமல் ஆட்டம் போடும்போது, இவ்வாறு கூறியது உண்டு.
உண்மையில் , குதிரையைக் கண்டதை விட கழுதையைப் பார்த்ததே அதிகம். அதிலும் அதன் குட்டி ,அவிழ்த்து விட்ட சமயத்தில் அதம் பறக்கும் விதமாய் அயராது ஓடி, புழுதி கிளப்பும். அவ்வளவு எளிதில் அதை மடக்கி பிடித்து விட முடியாது.
கதை தந்தேன்
கனிவுடன்
உதை தந்தாய்.
விதை பந்தாய்
விளையாட்டு
பருவ
விருந்தாய்
அன்பின் கொழு ந்தாய்
அரு மருந்தாய்
உடன் பிறந்தாய்
ஒன்றாக வளர்ந்தாய்
ஒரே தட்டில் உண்டாய்
உறங்கி னாய்
ஒரே பாயில்
ஓயாமல் கேட்பாய்
கதை
பறந்தாய் பிழைக்க
அயன் மனை
அரவணைப்பில்
மறந்தாய்
பிறந்தகம்
தேடி வந்த உறவை
நிற்க வைத்தாய்
தெருவில்
உருவில் மாற்றமில்லை
உள்ளத்தில்?
கண்ணீர் வரவழைக்கும்
தண்ணீர் பஞ்சம்
தலைநகரில்
தவித்த வாய்க்கு
தகிக்கும் மெய்க்கு
நீர் தருவார்
யார்?
நீர் லாரிகள்
பிடிக்க
முட்டி மோதும்
மக்கள்
இயற்கையின் கொடை
எட்டிடும் நடை
எவர் பொறுப்பு
இதுவெல்லாம்
உயிர் பிரச்னை அன்று
உயர் பிரச்னை அல்ல
இன்று
ஆளும் வர்க்கம்
மேட்டுக்குடி மேய்ச்சலுக்கு
தாரை வார்க்கும்
நீர், நிலம், வளம்
யாவும்
நிர்க்கதியாய்
வயதான காலத்தில், மகன் வீடோ, மகள் வீடோ சென்று, தங்கி ஒத்தாசையாக இருக்க முடிவு செய்து புறப்புடும் பெற்றோர். அழைப்பின் பேரில் அனுமதி கிடைக்க மகிழ்ச்சியுடன் பயணம்.
ஆரம்பம் உற்சாகம், வரவேற்பு. பே ரக் குழந்தைகள் பிரியம் ஈர்த்திட பொழுதுகள் விரையும். பெரியவர்களின் பேறு கால ஒத்துழைப்பு தனிக் குடும்ப சூழ் நிலையில் , அனைவருக்கும் வாய்க்கும் என்று கூற முடியாது.
அயல் தேசத்தில், எந்த சேவைக்கும் விலை உண்டு. பெறும் சம்பளத்தில் வரி, வாய்தா செலவுகள் போக, இழுத்து பிடித்து வாழ்க்கை, வசதி யாவும்.
இதில் காலஞ் செல்ல, செல்ல முதுமையின் காரணமாக நலிவுற்ற பெற்றோர் நோய்,வாய் பட்டால் உதவிக்கு வந்தவர்களுக்கு, மருத்துவ உதவி அளிப்பது கூடுதல், பெருஞ் சுமையாகி விடுகிறது.
பொருளாதார சக்தி வாய்ப்பு உடையவர்கள் ஆயின் சமாளிக்க இயலும். இதில் கூட நாணய மதிப்பு வித்தியாசத்தில் அனைவராலும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்வதில் சிரமம் இருக்கும்.
அயல் நாட்டு குடி மக்களுக்கு காப்பீடு, அரசாங்கத்தின் சமூக பாதுகாப்பு சலுகைகள் போதிய அளவில் கை கொடுக்கின்றன. ஆகவே அவர்களுக்கு இதில் சிரமம் இல்லை.
வருகை தரும் உறவுகளுக்கு கூடுதல் துயரம் இவ்வகையில் என்று கூறினால் அது மிகையாகாது.
சொன்னேன் மறந்தாய்
பதில்
சொல்லாமல் கிடந்தாய்
மீண்டும்
நினைவுப்படுத்த
விருப்பில்லை
நீண்ட இருப்பில்
கசந்தாய்
மீண்ட இருப்பின் உணர்வாய்
இருந்தேன் விருந்தாய்
கள்ள சாராயம்
நச்சு சாராயம்
யாவும் நாசம்
விளைவிக்கும்
நாசகாரிகள்
எதிலும் பணம் பார்க்கும்
வியாபாரம்
இவர், அவர் என்ற பேதமில்லை
அனைத்து வண்ணங்களும்
அடித்தள மக்களை
இலக்கு வைக்கும்
உழைத்து,உழைத்து
உருக்குலையும்
வாழ்க்கை
ஊதியம் போதாமை
மயக்கத்தில் ஆழ்த்தும்
ஆளும் வர்க்கம்
கள்ளக்குறிச்சி தரும்
பாடம்
உடன் மதுவிலக்கு
கட்சி அரசியல் தாண்டி
மக்கள் அரசாய்
அரசியல் பிழை அகற்றி
அறம் காத்திட வேணும்
கொடுஞ்செயல் இழைத்த
கொடி யவர் கொடி
அறுத்து
கோ லோ ச்ச வேண்டும்
இருப்புப் பாதை விலகி
இடித்து ஏறி
அந்தரத்தில் தொங்கும்
பெட்டிகள்
உயிர் களுடன்
சமிக்ஞை மறந்தார்
சனங்களை யும் மறந்தார்
மேற்கு வங்கத்தில்
உயிர்கள் பலி
இயல்பாய்
அடுத்தடுத்து மாநிலங்களில்
சிக்கன பயணம்
நாட்டை இணைக்கும்
நெடிய போக்குவரத்து
பாதுகாப்பு அம்சத்தில்
கும்ப கர்ண பருவம்
இதில் புதுமை என்ன?
சாதனை என்ன?
சரிந்த வாழ்க்கை
பிரிந்த உயிர்கள்
பொறுப்பு ஏற்பு
எவர்?
இழப்பீடு ஈடாகுமா ?
இனியொரு விதி செய்வோமா?
விபத்தில்லா தொடர் வண்டி
விளங்க வைப்போமா?
ஏன் அடித்தாய். ?
கேட்க முடியவில்லை !
உன் பிள்ளை என்பதால்
உரிமை
உண்மைதான்
சண்டிக்கு
கண்டிப்பு தேவைதான்
அடியும், இடியும்
அவசியமா?
எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்!
பதிலுக்காக அல்ல
பதிவுக்காக
இறுக்கத்தை தளர்த்தி விட்டேன்
நெருக்கத்தைக் குறைத்து விட்டேன்
புழுக்கம் போகவில்லை
புன் சிரிப்பும் ஏறவில்லை
உள் சிரிப்பும் கூடவில்லை
உண்மை விளங்கவில்லை
ரொம்பவும் சிந்திக்காதே
ரொம்பவும் நிந்திக்காதே
வருந்தாதே
வருத்தாதே
தள்ளாதே
மகிழ்வை கொல் லாதே
முறிவு கொள்ளாதே
செறிவு நில்லாதே
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.பல பத்தாண்டுகள் கடந்த பிறகும். அனுபவம் கூடுதல் என்று மிதப்பில் நடந்து கொண்டாலும், சிறிய சம்பவம் கூட நம்மை இடர வைக்கிறது, இடைஞ்சல் தருகிறது.
மனைவி, மக்களை, நாம் ஒன்று சொல்ல, அவர் ஒன்று சொல்ல, இடைவெளி,மோதல் திடீரென உருவாகிறது.
காதல் மணம் தொடங்கி, ஏ ற்பாடு திருமணம் வரை. ஏ ன்? 'ஒன்றாக வாழ்வது' என்னும் தற்கால வாழ்க்கை முறைகள் வரை. முரண்கள் எழுவது இயல்பு என்றாலும் , சில சிக்கல்கள் திவீரமாகி, மன/மண முறிவில் முடியும் போக்கு ம் பரவலாக, பட்டியலில் தினசரி நிகழ்வாய் இடம் பெறுகிறது.
நிதானம் , போதவில்லை.மேலும் கூடுதலாக அவசியம் என்று மீண்டும் நமக்கு, அனுபவம் பலமாக பாடம் கற்றுக் கொடுக்கிறது. ஏற்க வேண்டும் , ஏ ற்று அடுத்த நடை எடுக்க பழக வேண்டும் .
பதிவு செய்
உள்ளதை
உண்மையை
அடுத்த கட்டம்
தன்னை
சார்ந்த அமைப்பை
நிறுத்து
தவறில்லை
முன்னோடி யை
முடக்கி
முக்காடு இடும்
வரலாறு
முழுமையா ?
அவனுக்காக
ஏன் நீ
வருந்த வேண்டும்?
உனக்காக நீ
வருந்தாத போது!
அவனுக்காக ஏன் நீ
அழ வேண்டும்?
உனக்கே நீ
அழாதபோது !
புது சூழல்
பொல்லாத சுழல்
எதுவும் ஏற்கும்
மனம்
இரைகிறது
எரிச்சல் கூடுகிறது
கரிசல் மண் அன்று
கரிசன மண் இன்று
என்றாலும் தடுமாற்றம்
எண்ணற்ற உருமாற்றம்
முதிர்ச்சி
தளர்ச்சி
வளர்ச்சி
மலர்ச்சி
அகவை கூடும்
முதுமை சேரும்
பெருமை தேடும்
பொறுமை வாடும்
அருமை அறியும்
வெறுமை விலகும்
ஒருமை விளங்கும்
புரியாமல் வளர்த்தேன்
புரிதல் வேறாக
முந்துரிமை
அறியாமல் நழுவினேன்
முந்திய நாளில்
இந்நாளில் செய்தேன்
ஈடு
தடுமாற்றம் , தடைகள்
தாண்டி
பயிலக வாழ்க்கை
அயலக செலவில்
கேட்கிறதா?
காது
திறக்கிற தா?
கதவு
கேட்கிறது
காது
திறக்கவில்லை
கதவு
இனிக்கிறதா வரவு ?
கசக்கிறதா செலவு?
இனிப்பும், கசப்பும்
இரண்டும் ஏற்போம்
அறு சுவை
உறுப்பாய்
காதலை தொலைப்போம்
கனவில் மிதப்போம்
கனவை உணவாக்கு
உணவை கனவாக்கு
கவலை மறப்போம்
இலகுவாகும்
மனம்
மனிதம் தழைக் கச் செய்வோம்
விலகியும் அன்பு செய்வோம்
வீண் பழி விலகி நிற்போம்
விதிக்கொரு
விதி செய்வோம்
வீண் மதி வெல்வோம்
கஞ்சன் அல்ல
சிக்கனம் பிடிக்க
சிக்கென பிடித்தேன்
இக் கணம்
தலைக் கனம்
அல்ல
தனிக் குணம்
தன்னம்பிக்கை மனம்
நெருக் கடி
தெளி
நெஞ்சன்
புரியவில்லை!
தெரியவில்லை!
புரிந்தது போலவும்
தெரிந்தது போலவும்
பல காலம்
பாவனையில்
சில காலம்
சோதனையில்
சகிப்பு
நலிவில்
பொறுப்பு
சரிவில்
புறம் கூறும்
அறம் !
குதிப்பில்
என்ன எழுதுவது?
எப்படி எழுதுவது?
அப்படி எழுதிய படி
இப்படி எழுதலாமா?
இப்படி
எப்படி?
இதர படி
எப்படி ?
பிறப்பித்தாய்
பிறந்தேன்
சிறப்பித்தாயா?
நான் என்ன செய்வேன்?
முயற்சி செய்தேனா?
உயிரியல்
நேர்ச்சியில்
தரித்தே ன்
என் பிழை இல்லை
அவன் பிழையும் இல்லை
உணர்ச்சியின் தொல்லை
உள்ளபடி சொன்னேன்
தள்ளுபடி அன்று
உதித்தாய்
பிறரைப் போ ல்
இதில் ஏ து
இழிவு
பிழிந்து கொள்ளாதே
கசந்து மெல்லாதே
எண்ணத்தைப் பிளந்து
செல்லா தே
தூக்கத்தை
தொலைத்த
இரவுகள்
ஏக்கத்தை
சுமந்த
கனவுகள்
பக்கத்தை
இழந்த
நூலாய்
துக்கம் சேர்
வாழ் வாய்
அகம் அகன்று
அயலகம் செல்வார்
குண்டி நனைய
உண்டி நிறைய
உடையவன் உதாசீனம்
உதவியவன்
உறிஞ்சி ட
உழைப்பை விற்பார்
ஒரு கோடிக்கு மேல்
பெட்ரோலிய நாடுகளில்
பெற்றோர், மற்றோர்
பிரிந்து
முகவர் கொழிக்கும்
உழைப்பு ச் சுரண்டல்
கால்வாசி கையில்
அந்நிய செலாவணி ஆக
கிடை விலங்குகள் போல்
கொட்டடி வாழ்க்கை
விபத்தில் கருகினர்
குவைத்தில்
உடலைப் பெறுவதில்
உயிர்க்கும் வேகம்
உள்ளம் கருகிய
வேளையில்
உதவிக்கு இல்லை
பக்ரயின் ஆனாலும்
பரிதாபத்தில்
உழைக்கும் வர்க்கம்
பல பத்தாண்டுகளாக
ஊடகச் செய்தியாய்
உலா வரும்
உச்சு கொட்டும்
இரங்கற்பா இசைக்கும்
ஆளும் வர்க்கம்.