பெருமை பேசுவார்
நாளும்
அருமை ஏசுவார்
சிறுமை உணரா
சிந்தனை மேல்
செல்வார்
நிந்தனை கொள்வார்
நித்தம் சத்தம் செய்வார்
பிளந்த நிலம்
குலைந்த கட்டடங்கள்
தவித்த உயிர்கள்
நொடியில் பொடியாகி
வெடிப்பில் புதைந்தன
அரசும் அதிகாரமும்
ஆளாய்ப் பறக்க
ஆ க்கினை செய்திட
அணுகவும் அச்ச த்தில்
திகைப்பில்,
திகிலின் பிடியில்
ஆயிரக்கணக்கில்
" தாயின் மடியில்"
குழந்தையாய்.
நிலத்தாய் கரம் நீட்டி
தன்னுடல் சேர்த்தது
குற்றுயிரும் , குலை உயிருமாய்
சிரியாவில், துருக்கியில்
மனித சோகம்
மலை உயரமாய்
நினைவும் , கன வாய்
கை நழுவி
இதுவும் செய்தியாய்
வழக்கமான
ஏற்பாடுகளில்
கற்ற பாடம்
கற்கும் பாடம்
கால வெளியில்
கானல் வரியாய் ........
ஓடாத சாக்கடை
கூட்டாத குப்பை
கூட்டல் பெருக்கல்
குலவிடும்
கொசுக்கள்
ஒடுக்கு வீழ்ந்த
பாத்திரமும்
ஓரம் ஒதுங்கிடும்
குறுக்கு ,நெடுக்கு
சாலைகள்
புழுதி ஆ லைகள்
சுவாசக் குழாயை
சூ டாக்கிடும் தினம்
நுகர்ச்சி நரம்புகள்
சுரம் இழக்கும்
தந்திக் கம்பி அறு ந்த
தாள மாய்
"தடுப்பு சமூக மருத்துவம்"
தனியாரிடம்
சந்தை விரிக்கும்
பொறுப்பு எனக்கில்லை
"தகுதியான வை பிழைத்திருக்கட்டும்"
முட்டுக் கொடுத்தேன்
முட்டி தே ய்ந்தே ன்
முடக்கு கட்டை யல்ல
இடக்கு கட்டையுமல்ல
ஆட்டம்
அடக்கு கட்டை
விழுந்தாய் விழுந்தேன்
தடுக்கினாய் தளர்ந்தேன்
சறுக் கினாய் இறுக்கமானே ன்
குளிக்க வைத்தேன்
களிக்க நடந்தேன்
சிறு நடை லயிப்பில்
பிஞ்சு கைப் பிடித்து
பள்ளிக்குச் செல்லும் பாதை
நெடு கில்
பல கதை பேசி
இணையாய்
எம் பாலப் பருவ நினைவுகளில்
கரைந்து
பல பழைய விளையாட்டுகள்
நானும், அவளும்
நாள் தோறும்
மொட்டை மாடிக்கும்
சிறகு முளைத்து
ஓடியாடி காலம்
கழித்தோம்
நினைவில் நிறுத்தி தொலைவில்
சென்றாய்
தேங்கிய நினைவுகள் மனதில்
எம்மைத்தேட
விலகிய வெளி நீண்டு
ஏக்கம் சேர்த்து
தூக்கம் கலைத்து
எண்ணம் ஆயிரம்
ஓட்டத்தில்
எழுத்தில் விலகி
தோன்றும், மறையும்
சுழல்
தொடங்கிய இடத்திலே
மீண்டும்
நாள், பகல், இரவு
நகரும், விரையும்
வேட்கையில்
எதற்கோ அச்சம்
என்ன அதில்
மிச்சம்
தொடர்பில்லை
அதற்கும்
இதற்கும்
என்றாலும்
நிற்கும்
என்னவாகும், ஏ தாகும்
என்கின்ற கிறக்கம்
இப்படியே காலம்
சிறக்கும்
தாளிட்ட கதவு
இருக்கிறேன் உள்ளே
அறிந்தும் அவசரம்
தட்டினாய்
தவித்தாய்
ஆட்டினாய் தாழ்ப்பாள்
அவசரம் கூட்டினாய்
இருந்தும் இருக்காமல்
அழுத்தம் எம்மீது
ஏற்றினாய்
தட்ப வெப்ப வீழ் ச்சி
மூடணி, குளிராடை
பூட்டி
கையுறை சேர்த்து
குல்லா மனிதராய்
இன்னியங்கிகளில்
இளி முகத்துடன்
வாழ்க்கை ப் பயணம்
நீளும்
நாளும்
சுருதி சேர்
இலயத்துடன்
மாறிய சூழல்
தேறிய நலம்
கோரிய பலம்
கூடிடும் வளம்
அயலகச் செலவில்
ஆனந்தம்
ஆண்டுகள் மூன்று
கழிந்த பின்
வேண்டிய வரம்
உன்னை சுமந்தேன்
அவளை சுமந்தேன்
திண் தோ ள் வசமாய்
உன் மகளை சுமந்தே ன்
அவள் மகனையும்
' திணை த்தோ ள் '
சுகமாய்
படித்தேன் ஆயினும்
பிடித்தேன் இல்லை
பிடித்தேன் ஆயினும்
வைத்தேன் இல்லை
வைத்தேன் ஆயினும்
உணர்ந்தேன் இல்லை
அங்கிருந் தால் இங்கிருக்கும்
இங்கிருந் தால் அங்கிருக்கும்
இருண்ட அகம்
இரண்டகம்
மிரண்ட அகம்
மிரண்டகம்
கொடுப்பது அரிது
எடுப்பது எளி து
எவர் கொடுப்பார் ?
எவர் பெறுவார் ?
உடுப்பது, உண்பது
இருப்பது , இயல்வது
தடுப்பது எவர்?
தடந்தோள் செய்
சமர்
விடுப்பது, வீழ்வ து
மடுப்பது யார்?
கடுப்பெது, கன வெது?
கனவின் பொருள்
எது?
உரக்கப் பேசினால்
ஓய்வு கேட்கும்
ஒ துங்கிப் போகும்
தாழ் குரல் பேச்சு
தாழ்ப்பாள் அருகே
மூச்சு
ஈ ண் டிய செ வியாய்
தாண்டிடும் கேட்பில்
ஈர்த்திடும் ஆர்வம்
சில்லென்ற காற்று
சிந்தை குளிர்
மாற்று
வைகறை துயில் எழுப்ப
நீண்டிடும் கரை இருள்
கதிரவன் காலங் கடத்தும்
விசும்பின் துளிகள்
விக்கும் விளா சும்
குளிர் காற்று
கூடிடும்
மாறா நடைமுறை
ஏற்பேன்
கூடா வர்க்கம்
என்பேன்
குலவிட சொர்க்கம்
காண்பேன்
எதற்கும் விளக்கம்
சேர்ப்பேன்
விலக்கில் விதி
கோர் ப் பேன்
தருக்கினேன்
சறுக்கினேன்
நறுக்கினேன்
துண்டானேன்
பெருக்கினேன்
கூட்டினேன்
கழித்தேன்
வகுத்த
வழியான்
எண்ண எழுதுவது?
எண்ணியதை
ஏ ந்தியதை
பண்ணியதை
பழகியதை
உள்ளபடி வைப்பது
உண்மையை உடைப்பது
உருப்படி காண் பது.
நிற்பது நிற்கும்
நிற்காதது நிற்காது
இழுத் தாலும் இடித் தாலு ம்
கற்றது நிற்கும்
அதன் வழி நிற்றலும்
பெற்றது பெருகும்
உற்றது உயரும்
உள்ளது நிலைக்கும்
உண்மை அது மிளிரும்.