வதங்கிய முகம்
வாட்டம் தேங்கிய
உளம்
விசும்பின் துளி காண்
பயிர் போல்
உம்மைக் கண்டபின்
துளிர்த்தது!
துடித்தது !
உயிர்த்தது!
வதங்கிய முகம்
வாட்டம் தேங்கிய
உளம்
விசும்பின் துளி காண்
பயிர் போல்
உம்மைக் கண்டபின்
துளிர்த்தது!
துடித்தது !
உயிர்த்தது!
ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வீசிய பழமைவாத நெடி.
மரபில்லாமல் புனையும் பாடலை ,கவிதை என்றோ!, படைப் ப வரை கவிஞர் என்றோ! தம்மால் ஏ ற்க முடியாது என்று மிகக் கடுமையாக சாடி, மேடையின் காலத்தை தம் வசப்படுத்தி, ஓய்ந்தார்.
அதைக் கண்ட பின் , கொண்ட கருத்து.
இதோ
தவிப்பா! தகிப்பா !
தகுதியின் குதிப்பா !
விடுப்பா கடுப்பை
விரும்பி படிப்பா !
ஏறாதே மேடை கடுப்பா !
பொறுப்பா! விருப்பை குறிப்பா!
சொல் எடுப்பா! விடுப்பா.......
புரிந்தது போல் இருக்கும்
புரியாதது போலும் கடக்கும்
அறிந்தது போல் இருக்கும்
அறியாதது போலும் கிடக்கும்
தெரிந்தது போல் இருக்கும்
தெரியாதது போலும் கடக்கும்
இப்படியாக ...........
உல்லாசத்திற்கான பயணம் அன்று!
உலகம் அறியும் முயற்சியின் தொடக்கம்
இன்று!
உள்ளூர் செலவு என்றாலே , ஓராயிரம்
விவரம் கேட்கும் மனம். நூறா யிரம்
கேள்விகள் சுமந்தது இறக்கியது விடைகள்
தேடி.
அவளும், என்னுடன் ஆச்சரியத்தில். கூடிடும்
ஆவல் , மிகுதியில்
புதுவையிலிருந்து.சென்னை தொட்டு
விமான பயணம், விநோ த
அனுபவம்.உணர்ந்து ஏற்றிடும் பட்டறிவு .
எல்லைகள் தொலைவில் இல்லை!
எண்ணங்களின் விசையில், பயண
முனைப்பில்.
எந்த ஊர்தியும் தோ ற்கு ம் மன ஊர்தி. மன
உறுதி. மட்டற்ற மகிழ்ச்சி யில், பெற்ற மகள்,
பெறாத மருகன்.
உற்ற உறவின் உசாவல், வரவேற்பில்,
விமான நிலையத்தில்.
அசதியும் தோற்கு ம் அற்புத மகிழ்ச்சி!
அரிசி அரித்து, உலையிலிட்டு , ஆவலுடன்
பசி தீர சாப்பிட முனைந்த சமயம்,
நெல் மணி ஒன்று கண்டாள்!
உணவைத் தாண்டியது ஆய்வுணர்வு.
எண்ணாயிரம் மைல் களைக் கடந்து
பயணித்தோம்.உறவைக் காண, ஓய்வு ஏற்க!
எம்மையும் தாண்டி வணிகத்தில்
பயணித்த ' மணி ' .
'உம்முடைய , பசிப்பிணி தீர்க்கும் நீண்ட
பயணம், தியாகம். '
எல்லைகளைக் கடந்து,
அதிகார மையங்க ளைத் தாண்டி.ஐயங்கள்
நீக்கி!
மக்கள் பசி, பட்டினி போக்குவதில் .
மட்டில்லா மகிழ்வில்,பொறுப்புடன் பூத்து
பூரிப்புடன்.....
பொழுதுகளின் போக்கு
அறியும்
காலச் சக்கர சுழற்சியின்
திசை வேகம்
நிதான நிலையில்
நின்று விளங்கும்
மரம், செடி, கொடிகள்
மாண்பறி
பறவைகள்
பக்குவ ஒலி கேட்கும்
மழை, இருட்டு, வெய்யில்
மாறிடும்
வாடைக் காற்று
கூடிடும்
சில்லிடும் சூழல்
சிவந்திடும் மேனி
உண்பதற்கு ஒரு நூறு
வகைகள்
அடுக்களையில்
அடுக்கம் காணும்
முடுக்காய் உண்ணும்
வேளை சேர்க்கும்
அணி அணியாய்
பணியாற்ற விரைந்திடும்
வாகன மனிதர் அதிகாலை
தொடங்கி
நடுநிசி வரை அக்கறை(ரை)
உழைப் பில்
ஆற்றலுடன் அன்றாடம்
கிழமை நாள்களில்
ஒன்றிரண்டு ஒழிவில்
துப்புரவு பணி சேர்த்திடுவர்
ஒப்புரவு சிரமேற் கொள்வர்.........
பரந்த சிந்தனை
திரண்ட எண்ணங்கள்
வரலாற்று ஆர்வம்
வகை வகையாய் சேரும்
உருண்ட உலகின் உன்னதம்
உணர்ந்திட ஓடிய செலவு
தரை மீது கடந்த நாள்கள்
சலிப்பில்
வின்ணிடை கடக்கும்
வாய்ப்பு
பகல் இரவு கலந்து
கலம்
நாடுகளைக் கடந்து
உறவிட ம் சேர்ந்து
ஓய்வு கொள்ளும்
மனம்
இரைச்சல் குறைந்து
இறுக்கம் தளர்ந்து ......
விளக்கம் சேர்க்கும்
(2018 சூன் பிரா ன்சு பயண அனுபவம்)
வாழ்க்கையின் பல பக்கங்கள்.
ஓடியது, ஆடியது.உல்லாசம் கூட்டியது.
ஒழிவின்றி உத்தியோகம் பார்த்தது.
இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.......
மண வாழ்க்கை, குழந்தைகள் வளர்ப்பு என்ற வரிசையில் பல பத்தாண்டுகள்.
உதை பந்து ஒப்பில் .இப்படியும், அப்படியும் ' கோல் ' நுழைவு ஆட்டம்.
ஆடும் களம்.அனைவரின் ஒத்துழைப்பும் அலாதியானது.
என்றாலும், பரிசு, சிறப்பு, முன்னணி ஆட்டக்காரருக்கே!
ஊடகப் பெருமையும் சேர.
ஆயினும், எதிர் வரும் ஆட்டங்களில் தனியனாய் விளையாட இயலுமா?
ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லா அணி.
ஒன்றிரண்டு ,' கோல் ', போட்டாலும் வெற்றி வசமாகுமா?
இவ்வாறே, பல குடும்பங்கள் விளையாட்டில் வெகு காலமாக......
பட்டும் விளங்கவில்லை
பாடம் தெளிவில்லை
விட்டும் விலகவில்லை
விடிவும் தோன்றவில்லை
கெட்டும் அறிவில்லை
கேடும் புரியவில்லை
தொட்டும் துலங்கவில்லை
தோல்வியும் நிலையில்லை
கட்டும் பிரியவில்லை
காலமும் கரையவில்லை
தினம் எழுத முடியவில்லை. ஏதோ
வேலைகள் பின்னிழுக்க, கட்டிப்போட,
உந்தன் பக்கம் திரும்பவில்லை ! திருப்பம்
இல்லை! அலைமோதும்
உள்ளம்.எண்ணங்கள் ஏ ராளம் .
அவ்வளவும் நாட் குறிப்பில் இறக்கிட ஆவல்
மிகவே!
ஆயினும், அது சல்லிசு இல்லை என்று எமக்கு
தெரியும்.
நிறை பார்க்க, நிறுத்துப் பார்க்க, சலித்துப்
பார்க்க வேண்டியவை, தொகையாய் உம்முன்
தோற்றமளிக்கும்.
சில நேர்வில் முந்தி நிற்கும்.முட்டிப்
பார்க்கும்.எட்டிப் போகும்.சில வேளை தட்டிப்
பார்க்கும், திறக்காத கதவுகள், தாழ் க் கோல்
தொலைந்து.
படிப்பாய் துடிப்பாய்
முடிப்பாய் எடுப்பாய்
களிப்பாய் சிரிப்பாய்
கல்வியில் கரைவாய்
உழைப் பாய் உயர்வாய்
உள்ளது சிறப்பாய்
என்றோ ஒரு நாள் , பேச்சு வாக்கில் பழமொழியை, புரட்டிப் போட்டேன் இப்படி.
பானை பிடித்தவள் பாக்கிய சாலி
பானை உடைத்தவள் ?
தைரியசாலி
பால் வழங்கும் பாட்டி இன்றும் காலதாமதம்.காலை மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அதன் விசையில் அலு ப்பின்றி. அமைதியாய்.
எரியும் வயிறு தேநீர் வாசம் தேடியது. எச்சில் ஊற எட்டிப் பார்த்தது.விளைவாய் சுறு, சுறுப்பான மூளையும், கற்பனையில் களம் நிறைத்தது. இப்படியாக.........
எட்டு மணி ஆகிறது
எட்டி ஏ ன் போகிறது
இதைச் சற்று நீடிக்கலாமா !
ஓசித்தென் .உருண்டோடி விழுந்த சீர் கள்
பத்து மணி ஆகிறது
பத்தாமல் போகிறது.
அழ வேண்டும் அழ வேண்டும்
அழுக்கு கரைய
அழுத்தம் குறைய
சிரிக்க வேண்டும் சிரிக்க வேண்டும்
சிந்தனை விரிய
நிந்தனை சரிய
என்னை மாற்றிக் கொள்ளவில்லை
ஏன் என்றும் தெரியவில்லை
முன்னே வந்தது நினைவில்லை
பின்னே வருவது புரியவில்லை
முதலும் முடிவும் பிடியில்லை
மூன்று காலமும் நிலையில்லை
எழுத வேண்டும் எழுத வேண்டும்
நிறைய நிறைய
பக்கங்கள்
தூக்கங்கள் களைய களைய
துக்கங் கள் கரைய கரைய
களை எடுத்தேன்
களைப்பாய்
நீயும் வந்தாய்
வெறுப்பாய்
சிலை எடுக்கும் மாந்தர்
களை எடுத்தால்
விருப்பாய்
சமூகக் கழனி வளரும்
செழிப்பாய்
ஓடினாள் ஓடினாள்
ஓய்வின்றி
உழைப்பில் கூடினா ள்
ஒத்தாசை தேடி
பத்தாசை மூ டி
ஓய்ந்தாள்
ஓர் இரவு
ஓய்வின் உதவி நாடி
சுரம் இழந்த கணம்
திடம் தடம் மாறி
படுக்கைத் துணை யாய்
மறு நாளும்
துன்பம் தொடர .....
கற்றுக் கொடுக்கவில்லை என்றாய்
கற்கவில்லை என்றார்
நிற்கவில்லை என்றார்
நிற்க முடியவில்லை என்றாய்
கற்பதும் நிற்பதும்
கன வாமோ ?
முக்க வேண்டாம்.
முக்கி
சிக்க வேண்டாம்
சிக்கி
முணக வேண்டாம்
இள க வேண்டும்
இயல்பு வேண்டும்
இறங்க வேண்டும்
சாக்கடை அள்ளு வார்
பூ க்கடை வாசம் போல்
' சந்தனக் குழம்பென '
சகதியில்
ஆள் உயர புதை குழியில்
ஆரவார இரை ச் சலில்
ஆயுட்கால இழப்பில்
ஆதவன் ஆவேசத்தில்
கையுறை, கால் உறை
யாவும் மெய்யுறை
75ன் ஏ ற்றல் தேசத்தில்
மாற்றம் இலா
மனிதம்