ஓடு, ஓடு
உறவைத் தேடு
ஓடு, ஓடு
உரிமை நாடு
பீடு, பீடு
பிற பெருமைக் கேடு
மூடு, மூடு
மூடத்தனம் பேடு
நாடு, நாடு
நன்னெறி கோடு
வீடு, வீடு
விண்ணவர் மேடு
கேடு, கேடு
கண்டிலர்
அகக் கூடு
ஓடு, ஓடு
உறவைத் தேடு
ஓடு, ஓடு
உரிமை நாடு
பீடு, பீடு
பிற பெருமைக் கேடு
மூடு, மூடு
மூடத்தனம் பேடு
நாடு, நாடு
நன்னெறி கோடு
வீடு, வீடு
விண்ணவர் மேடு
கேடு, கேடு
கண்டிலர்
அகக் கூடு
உள் நோக்க ஊர்வலம்
உலா வரும் தலைகள்
உண்மை பிரச்சினை
என்று அணு க
பின் வாங்கிச் செல்வார்
காரணம் பல கூறி
கழன்று விடுவார்
கழனி சேர்ப்பார்
பழனி உயரத்தில்
கொள்கை க் குன்றம்
தாண்டி
நிறைந்த உண்டி
வண்டிகள் அணி வகுப்பில்
வகை வகையாய்
வள மனை
கள முனை கண்டவர்!
ஓராயிரம் உணவுக் கடைகள்
ஒளி உமிழ் விளக்கொளியில்
ஒய்யாரமாய் வியாபாரம்
உள்ளேயும் வெளியேயும்
மிளகாய் பொடி நெடியில்
எண்ணெய் வாசத்தில்
பொரிப்பதும்
வறுப் பதும்
பையில் அடைத்து
தட்டில் இட்டு
இர ப்பைக்கு இலக்கு வைக்கும்
இழப்பிற்கு உலை வைக்கும்
நலம் நசிந்து உல்லாசம்
பயணிகள் ஊர் தாண்டி
காசு கொடுத்து சூன்யம்
கொள்ளை அடி
கொழிக்கும் பணத்தை
வெள்ளை அடி
கருப்பு என்ன?
வெள்ளை என்ன?
ஏன் இந்த வேறுபாடு?
ஏக்கம் தீர
கூறு போடு
விளை ந்தது
என்னால்
விழைவில்லை
செருக்கில்
உழைத்தே ன்
களித் தேன்
உழைப்பில்
நாளும்
திளை த்தேன்
திண்ணம்
ஒருங் கி ணை ப்பில்
உணர்ந்தே!
விலகிய உறவு
வீங்கிய கனவு
தேங்கிய எண்ணம்
தேடிய வண்ணம்
தாங்கிய பழக்கம்
தடுமாறிய முழக்கம்
தன்னாலே
வெளிச்சம்
ஒதுக்கிய நட்பு
ஓ ங்கிய உணர்வு
மாறிய வேடம்
ஏ றிய ஓடம்
எப்படியும் வியாபாரம்
இப்படியும் அப்படியும்
தப்படியும் தம்பிடி யும்
தனி அடியில்
உரிமைக் கள த்தில்
நுகர்வோர் பக்கம்
நூல் பிடிப்பேன்
நுழைபுலத் தில்
தேவை என்றால்
அழைப்பாய்
செழிப்பாய்
தேவை நின்றால்
இளிப்பாய்
களிப்பாய்
சேவை என்று
ஒலிப்பாய்
ஒளிப்பாய்
உன்னைப் போல் நானும்
ஒரு நாள்
உருமாற்றம் கொள்வேன்
அந்நாள்
இந்நாள் போல்
உன் இருத் தலில்
உண்மை உணர்த்தும்
உலகியல்
சொல்லிக் கொண்டே
இருக்கிறாய்
சோதனையில்
நிற்கிறாய்
சாதனை மனிதர் தான்
வேதனை
சேர்க் கிறாய்
வெற்று உறுதி
கோர்க்கிறாய்
நிலவரம் மோசமாயின்
கலவரம்
கையில் எடு
அரசியல் இருப்பை
உறுதி செய்ய
கலவரம்
உமக்கு
கை கண்ட
ஆயுதம்
கண் கண்ட
தெய்வம்
கடந்த கால
வரலாறு
கை கொடுக்காமல்
போகுமா?
இப்படியே கழியுமா?
பொழுது
அப்படியே ஒழியுமா?
உணர்வு
எப்படியே இருந்த மனசு
இப்படி ஆனதென்ன?
புதுசு
எப்படியும் வாழ்வது ஒரு
தினுசு
எண்ணற்ற நூல்கள்
எண்ணத்தின் கால்கள்
ஏற்றிடும் கருத்துகள்
மாற்றி டும் மருந்துகள்
மண நலத்தின் வேர்கள்
மனிதத்தின் மாண்பு கள்
குண்டுகள்
வண்டுகள் அல்ல
மகரந்தம் சேர்க்க
உயிரினங்கள் தழைக்க
அமைதிக்காக
அளிப்பவர் அர்த்தம்
இலாபத் தில்
கெத் தில்
கொத்து
எவர் அளித்தாலும்
எவர் பாவித்தாலும்
உயிர் வதை
வியாபாரிக்கு அல்ல
உனக்கும், எனக்கும் தான்
உண்மை அறிவாய்
"ஆயுத எழுத்தை"
கொடுத்தவன் நீ
எடுத்தவன் நீ
முடிவை
பிறர் மீது
திணிப்பு
உமது தீனிப் பை
உள்ளீடு உலகத்தில்
உம் பயணம்
உள் நோக்கில்
பச்சைக் குதிரை
உம் இச்சை
குதிரை
காயும் இல்லை
கறியும் இல்லை
கவலை இல்லை
உனக்கு
கவலை இல்லை
காசும் இல்லை
பணமும் இல்லை
கவனம் இல்லை
உனக்கு
கவனம் இல்லை
கவளம் தொல்லை
உனக்கு விசனம் இல்லை
உன்னிடம் ஒன்று!
அவனிடம் ஒன்று!
இதில் எது
நன்று ?
அவரவருக்கு ஏற்றாற்போல்
ஆக்கினை சேர்த்திட
புளுகும்
கெட்டியாகும்
இதில் என்ன ?
பகுத்தறிவு !
மார்க்சிய அறிவு !
நம்பி கை வைப்பான்
நடக்கும் காலத்தில்
ஓடினேன்
ஓடும் காலத்தில்
நடக்கிறேன்
ஓடும் காலத்தில்
நடந்தேன்
நடக்கும் காலத்தில்
ஓடுகிறேன்
இப்படியா?
அப்படியா?
எப்படி
தெரியவில்லை?
செப்படி
என்றேன்
அவள் யோசித்தாள்!
எங்கே ?
உம்மை காணவில்லை
கண்டபோது கேட்டார் ,
காணாத போது !
தற்பெருமை
ஓயவில்லை
தனிப்பெருமை
சாயவில்லை
வசதியான சூழலுக்கு அழைப்பில் செல்லும் போது ,உனக்கும் அது போன்ற நிலைக்கு செல்ல ,ஆர்வம் கூடும்.
ஆர, அமர யோசித்தால் புரியும்.உள்ள நிலையே , நல்ல நிலை, உணரும் நிலை. வாய்த்த வசதியை வசப்படுத்தி, இருக்கும் நிலையை செப்பம் செய்தாலே போதும் என்ற வெளிச்சம் கிடைக்கும் .ஆழ்ந்து யோசனை செய்தால் அதனதன் அருமை, பெருமை விளங்கும்.
நண்பர் ஒருவர், அவருக்கு வேண்டிய மனை வணிகர் குறித்து, " அவன் எல்லாம் அலசிப் பார்த்து, ஆய்ந்து பார்த்து செய்வான் " என்று பெருமைாகச் சொல்லியிருந்தார். அளவற்ற நம்பிக்கை உடையவராக இருந்தார்.
ஆவணத்தில் பிழை உள்ளது என்பதை சுட்டியும் ஏற்க மனம் இல்லை. பிற தரப்பின் கருத்தினை உள் வாங்கிட ஊக்கம் இல்லை.ஒரு அமைப்பின் தலைவராகவும் இருக்கும் அவர் நடுநிலை நோக்கில் நிற்க தடுமாற்றம்.
எது காரணம்?
சொத்து மீ தான பற்றா?
அதிகார ஆளுமையா?
அலசிப் பார்ப்பான்
ஆய்ந்து பார்ப்பான்
நுழைந்து வருவான்
மீண்டு வருவான்
பணத்தை போட்டு
பணத்தை எடுப்பான்
கொடுப்பவரும் எடுப்பார்
கணிசமாக
வாங்கியவர்
கண் வீங்கியவராய்
காலம் கடக்கும்
அணி சேர்க்கையில்
'ஆயுதக் கூட்டம்'
அறிவிழக்கும்
அடி பணி கோட்டம்
வளமிக்க பூமி
வாழ்வளிக்கும்
சாமி
அண்டை வீட்டார்
சண்டை
அகலப் படுத்தும் சந்தை
இவர், அவர் ,
பேதம் அதற்கில்லை
'சமம் யாவரும் '
அதன் வேதம்
சந்தை நிதி பெருகிட
யாவும் -
நீரும், ஊரும்
மண்ணும் , மலையும்
மரஞ்செடி, கொடியும்
விண்ணும் .......
அங்கேயும் இருப்பான்
இங்கேயும் இருப்பான்
எங்கே யும் இருப்பான்
எதிலும் பார்ப்பான்
எப்படியும் சேர்ப்பான்
கொள்கை முழங்கி
கோட்பாடு வழங்கி
எவன் செத்தால் என்ன?
எவை அழிந்தால் என்ன?
எங்கள் வியாபாரம்
செழித்தால் போதும்
எங்கள் கருவூலம்
நிறை ந்தால் போதும்
கொல்லும் வணிகம்
வன்மம் கொண்டு
வெறி யாட்டு
ஒற்றைத் துருவ அதிகாரம்
சுரண்டிய தேசங்களின் கூட்டில்
வளங்களை கொள்ளை கொள்ளும்
அறியாமையில் அடுத்த வீட்டுக்காரன்
எதிரியாய், பகைவனாய்
வீ ழ்ந்திடும்
ஆயுதங்களின் அரசியலில்
அமைதியும் அச்சத்தில்
அச்சு கழன்று
மச்சி நாடுகளின்
எடு பிடியாய்
ஏதிலியாய்
பிறந்தகம் துறந்து
எ வரை மதித்தான்
உம்மை மதிக்க
எவரையும் மிதித்தான்
விருப்பப்படி
தொட்டால்
தோ ண்டுவான்
விட்டால்
சீண்டுவான்
பட்டால்
வாடுவான்
பட்டாம் பூச்சியாய்
உணர்ந்தேன்
உழைத்தேன்
நலிவிலும்
சோர்ந்தே ன்
அல்லன்
சன்மானம் பெரிதென்று
எண்ணவில்லை
தன் மான உயரத்தில்
நின்றதால்
ஏமாற்ற தெரியாது
ஏமாற்றம் தெரியாது
உன் மாற்றம் அறியாது
உள் மாற்றம் புரியாது
புறம் அறிந்தேன்
அகமும் அப்படியே
என்றிருந்தேன்
இரு வேறு உலகம்
வாசித்தேன்
யோசித்தேன் அல்ல
அல்லல் நீக்கும்
எல்லப்பன் அன்று
வெள்ளையப்பன்
குவிக்கும்
எல்லையப்பன்