Wednesday, August 21, 2024

தீது

 

என்ன செய்தேன் ? 

என்ன அளித்தேன் ?

காலம் கடந்து 

கணக்கு 

மதிப்பெண் போடுவார்

உறவில் 

உரிமையில் 

ஒன்றிய கடமையில்

கணிப்பு ஏது?

பண்ட மதிப்பு 

தீது 

Monday, August 19, 2024

எவருக்கு?

 தட்டாதே 

குதிக்காதே !

சத்தமிடாதே !

சந்தடி கூடாதே !

வந்த அடி 

தேயாதே !


நடுத்தர வயது

பெண்மணி 


கண்மணிகள் 

விளையாட்டு 

சகியாமல் 


நடுத்தள நாயகி 

நர்த்தனம்

உல்லாச விடுதி

 ஓய்வில்


வண்ணம் காரணமா?

எண்ணம் காரணமா?


இயற்கைச் சூழலில் 

கரைந்திட 

கலந்திட 

எவருக்கு

உரிமை .....?

Wednesday, August 14, 2024

நகைத்தார்

 

மாற்றம் என்றார் 

எவருக்கு என்றேன் ?


அரசியலில் என்றார் 


ஏமாற்றம் தான் 

அவர் மாற்றமா? 

என்றேன்


நகை த்தார் 

நளினமாய் !

நெறி

 

தினம் கூடிடும் 

நில வெறி 

நிற வெறி


இன வெறி 

மொழி வெறி 


ஆதிக்க வெறி 

ஆயுத வெறி 


அனைத்தும் 

அழிக்கும்

அகிம்சை நெறி 

Tuesday, August 6, 2024

தொடுவதில்லை



தனியார்  கல்வி நிறுவனங்களில், பள்ளிக்கூடம் தொடங்கி கல்லூரி வரை ஆசிரியப் பணியில், அலுவல் பணியில் சேர்ந்திடும் ஊழியர்கள் பணிநிலைமைகள் குறித்து பெறப்படும் தகவல்கள் நிறைவளிப்பதாக இல்லை.

குறிப்பாக,பெண் ஊழியர்/ஆசிரியர்களின் நிலை மோசமாக உள்ளது.நாள்தோறும் பாலியல் கொடுமைகள்,தொல்லைகளுக்கு உள்ளாகும் ஆசிரியைகள் பலர் தம் இன்னல்களை வெளிப்படுத்த முடியாத அவலம்.

அப்படியே, சில சந்தர்ப்பங்களில், சகிக்க முடியாமல் வெளிப்படுத்திடும் சம்பவங்கள் புகார் அளவில் காவல் நிலையத்தின் இரும்புக் கதவைக் கூட  தொடுவதில்லை.

ஏற்று



உடற்கட்டு 
மறந்த
மடற்கட்டு 
சரிக்கட்டு
கலை 
தேர்
நெறி
 கெட்டு
இடர்  கட்டு
துயர்
கூ ட்டு
அயர்வு 
ஏற்று

சுழி

 


ஆயுத வெறி

எம் அரசியல் நெறி

ஆயிரம் அழி

அடுத்தவர் மேல் 

பழி 

ஆயுள் வழி

அதுவே உம் சுழி

விலகி...

 


அதி அறிவு

மிகை உனா 

செரிப் பு  கெஞ்சும்

விலகி நில் 

விளக்கம் முள் 

Sunday, August 4, 2024

வெள்ளைக் கொடி

 

பயணம் தொடர்கிறது. பரிவுடை உள்ளம் ஓய்வு கொள்ள பயணமே இடைத் தங்கல்.

கால வெளியில் கனிவுடன் கடமை. சுமை என்பது ஏதுமில்லை. சுகமே யாவும்.இன்றே எதார்த்தம். நாளை என்பது இன்றைய தொடர்ச்சி யே.

ஒரே சூழலில், முடக்கம் , இயக்கம் அன்று .

 கரையும் கால வெளியில் சகிப்புடன் கலந்து, அன்பெனும் போரில் உள்ளங்களை வென்று அமைதியை நிலை நிறுத்துவோம். 

வெள்ளை க் கொடி வேதனை தீர்க்கும் கொடி, வெறுப்பின் வேர் அறுக்கும் வெடி.

உலகம் முழுவதும் அமைதிக்கு அல்லாடும் கொடுமை, சொல்லி மாளா து.

வெள்ளைக் கொடி  ஏந் தும் காலம் இது. உலகெங்கும்  சகிப்பின்மை, வெறுப்பு, வன்முறை, பரவலாகி மனித உயிர்கள் கொத்து, கொத்தாய் சாய்கின்றன.

அமைதி வேண்டும் காலம் இது. அன்பு, அறம் தழைக்க, அனைவரும் ஒருங்கிணைந்து வெள்ளைக் கொடி உயர்த்தி உலகை காக்க வேண்டும்.

காலம்

 


காலம் தன் விசையில் நகர்ந்து செல்லும். ஆயினும், காலம் ஓடுகிறது. விரைவாக செல்கிறது என்றெல்லாம் நாம் நடைமுறையில் சொல்வது உண்டு. சார்ந்துள்ள சூழல். வாழும் வாழ்க்கை ஆகிய சந்தர்ப்பங்கள் இவ்வாறு கூற வைக்கிறது.

பிடித்தமான நேர்வு கள் காலம் போதவில்லை என்றும், சங்கடமான போக்குகள் காலம் ஏன் நீண்டு செல்கிறது எனவும் நம்முள் பல வினாக்கள் எழுப்பிக் கொண்டே இருக்கும்.விடை அறிந்தும், வினா எழுப்பும்!

இப்படியும் , அப்படியும் அலைக்  கழியும், அல்லல்படும் அனாவசியமாக. என்ன புரிதல் இருந்தும் கூட, சரியும் உணர்வுகள் நமக்குள் சந்தடி சாக்கில்,  கிளர்ச்சிகள் நிகழ்த்தும்.

Wednesday, July 31, 2024

வயநாடு

 

வய நாடு உயரம் 

சந்தித்த துயரம் 

சரிந்த முகடுகள்

புதைந்த சுவடுகள் 

சூழல் அழிவை

மெல்ல மெல்ல 

நகர்த்திய வளர்ச்சி

மேற்கு தொடர் மலையை

குடைந்து 

வணிகப் பெரும்பசியில் 

உல்லாசம், கட்டடங்கள்

காடுகள் அழித்து 

கான் உயிர்கள்

மாய்த்து 

பேரழிவுக்கு வாசல் வைத்த 

பேராசை 

காவு கொண்டது 

மாந்த உயிர்களை 

இதுவே பாடம் 

தேசத்திற்கு 

கற்குமா?

நிவாரணத்துடன் 

நிரல்களில் வழக்கமாய்

முழக்கத்தில் 

அஞ்சலியுடன் 

அடுத்த 

தேர்தலில் 

கவனம் 

செல்லுமா?

உண்டு!

 

கோடையில் தவிக்கும் வாய்

தகிக்கும் மெய்

வரிசைக் கட்டும் 

நீர்க் குடங்கள்

நெருக்கித் தள்ளும் 

கூட்டம் 

விசும்பின் பொழிவில் 

விக்கி நிற்கும்  

சிக்கி தவிக்கும்

உபரி நீர் உருப்படியாய் 

தேக்கி வைக்க 

ஆறு இல்லை

ஏரி இல்லை

குளம் இல்லை

வாய்க்கால் வரப்பு இல்லை

தார்ச் சாலைகள் உண்டு 

பாலங்கள் உண்டு

கழிவு நீர் கால்வாய் உண்டு


Sunday, July 28, 2024

முதுமை

 

உனக்கென இடம் உண்டு 

உணர்ந்து கொள் 

ஒதுக்கி நில் 

 அடுத்த வருக்கே 

முன்னுரிமை காட்டி  நீ 

 தனியேயாயினும்

தவிக்காதே, தவிர்க்காதே 

சோர்ந்து போகாதே. 

சார்ந்து

 செல்லாதே 

தூர்ந்து போகாதே 

துயரம்   பொல்லா தே 

Monday, July 22, 2024

நிலை

 


கரை சேர்க்கும் கலம்

கறை கூட்டும் புலம்

நுரை சேர்க்கும் அலை 

நூல் சேர்க்கும் கலை

புகை கோர்க்கும் பகை 

அ னல் தணிக்கும் வகை 

புனல் விளக்கும் நிலை

கூடாது

 உயர்த்திச் செல்ல முடியாது 

உருட்டி ச் செல்ல முடியும் 


துரத்திச் செல்ல முடியாது 

தொடர்ந்து செல்ல முடியும் 


விரட்டிச் செல்ல இயலாது 

விலகிச் செல்ல இயலும் 


தடுத்து நிறுத்தக் கூடாது 

தாங்கி ச் செல்லக் கூடாது


படித்துக் கெடுக் க கூடாது 

படியாமல் வாழக் கூடாது 

Sunday, July 21, 2024

சொல்லாதே

ஒன்றும் சொல்லாதே !

அவரிடம்

நன்றும் செல்லாதே !


மறுத்து ப் பேசுவதே 

வளர்ச்சி !

அவ்விடம்

ம டக்கிப் பேசுவதே 

முதிர்ச்சி !


அடக்கிப் பேசி 

அடங்கிப் போ 

இவ்விடம்

அமைதி யாய் 

அகன்று போ 


Friday, July 19, 2024

அரிப்பு

 

அரிப்பு சுகமே 

அளவுக்குள் தினமே 

கரிப்பும் இதுவே 

செரிப்பு முறையே 

உணவுக்கு அளவே 

சேர்ந்திடும் அறிவே 

செப்பிடு உணர் வே 

Monday, July 15, 2024

மனம்

 


இங்கு இருக்கும் 

அங்கு இருக்கும் 

எங்கும் இருக்கும்

தங்கும் இறுக்கம் 

தளர்வில் நெருக்கம் 

உணர்வில் உருக்கம் 

உண்மை பிறக்கும் 

Tuesday, July 9, 2024

"அறு த்துகிச்சாம் கழுதை எடுத்துகிச்சாம் ஓட்டம்"

 


"அறுத்துகிச்சாம். கழுதை, எடுத்துகிச்சாம் ஓட்டம்"

வெய்யில் காலங்களில் அப்போதெல்லாம் இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடுவது வழக்கம். 

பெரும்பாலும் தார்சாலைகள் போடாத வீதிகள். இருபுறமும் வீடுகள் அமைந்த அமைப்பு. திண்ணைகள் கொண்ட இல்லங்கள்.புறக்கடையில் கிணறு, தொட்டி கக்கூஸ், வேப்ப மரம், செடி செட்டுகள் கிணற்று நீரே குடிக்க, கொப்பளிக்க என அனைத்து உபயோகமும்.. மின்சார இணைப்பு ஒன்றிரண்டு வீடுகளில்தான்.பெரும்பாலான இல்லங்கள் கா விளக்கு, அரி க்கன்             விள க்குகளில்  இராப் பொழுதைக் கழிக்கும்.

தெரு சாக்கடைகள் தேக்கம் இல்லாது ஓட்டத்தில், தவளைகள் வாழும் இடமாகவும் விளங்கியது.கொசுத் தொல்லைகள் அற்ற ஊராகவம் இருந்தது.மணற்பாங்கான இடங்களில் வீட்டுக்கு வீடு, முன் கட்டில் முருங்கை மரங்களை பார்க்கலாம். தெரு முனையில் இருந்த கோவில் மதிற் சுவர் ஒட்டிய பகுதியில் தென்னை மரங்கள் அலங்கரிக்கும். அடுத்து, தண்ணீர்  குழாய்.  பொதுமக்கள் தேவைக்கு இருக்கும். பக்கத்தில் பன்னீர் பூ  மரம்  வெள்ளை பூக்களுடன் வாசனை பரப்பும்.

வீதிக்கு வடக்கில் விட்டு ,விட்டு பூவரச மரங்கள் அணி வகுக்கும். வரிசையாய் கூரை வீடுகள் நேர்க்கோட்டில் தெற்கு பார்த்த அமைப்பில். புறக்கடை இறக்கம் தனுசு பிள்ளை தோப்பு. மிகப்பெரிய தென்னந்தோப்பு பெருவாரியான மக்களுக்கு இயற்கை உபாதை கழிக்கும் வாய்ப்பாக அமைந்தது.

இத்தகைய புற சூழலில், கோடைக்கால சிறார்கள் மாணவப் பருவம் விளையாடி, பொழுது போக உகந்ததாக இருந்தது.வீட்டில் உள்ள பாட்டிகள் கதை சொல்ல, விடுகதை போட ,ஒரே ஆரவாரமாக , ஆரோக்கியமாய் பொழுதுகள் புலரும்.

வீட்டில் கொழுக்கட்டை, கடலை அவித்து தருவது. எள் அடை, வெள்ளை முறுக்கு, கடல்பாசி, கமர்கட்டு, கசகசா மிட்டாய் என பலவகை தின்பண்டங்கள் தெருவில் விற்கும், வாட்ச் மிட்டாய் பாட்டுப்பாடி, பிள்ளைகள் கையில் கட்டி, தாடையில் கொசிரு ஒட்டி செல்லும் வியாபாரி.இவையாவும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

நுங்கு, பலாச் சுளை, மாம்பழம், மல்லாக்  கொட்டை, கொண்டைக் கடலை போன்ற பண்டங்களும் நாவின் சுவை தணிக்க பட்டியலில்.இல்லங்களில் சுட்டு அளிக்கும் முறுக்கு, கொழுக்கட்டை வகைகள் கூடுதல் தீனி என்றால் மிகையாகாது.

சொந்த, பந்தங்கள் வீட்டிற்கு விடுமுறை காலப் பயணம் செல்வதும் உண்டு.அதில் வீட்டு சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பல நிகழ்ச்சிகள் இணைவது உண்டு.

சலிக்க வெய்யிலில் ஆடுவது, பம்பு செட்டுகளி ல் குளிப்பது, உண்டி வில் அடிப்பது, மீன் பிடிப்பது, நீச்சல் பழகுவது ஆகியவை களும் அடங்கும்.வீட்டுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, ஆட்டம் போட்டு அலு த்து , திரும்பி கண்டிப்பும், தண்டனையும் அடைவதும் உண்டு.

அம்மை நோய் வாரி கொட்டி அவதி படுவது, கை கால்களில் சிரங்கு வந்து, நீல மருந்து, மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் எஸ் பவுடர் தேங்காய் எண்ணெய் குழைத்து, பூசுவதும்  வழக்கம்.

கோடை விடுமுறை முடிந்து பிள்ளைகள் எப்போது பள்ளிகளுக்கு ச் செல்லும் என்று பெற்றோர் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் உண்டு. அத்தகைய சூழல் குறித்து அண்டை வீட்டாருடன் வாடிக்கையாக பேசும்போது உதிர்க்கும் சொற்றொடர், " அறுத்துகிச்சான் கழுதை, எடுத்த்துகிச்சாம் ஓட்டம்", என்பது.

அம்மா எங்களிடமும் , நாங்கள் அடங்காமல் ஆட்டம் போடும்போது, இவ்வாறு கூறியது உண்டு.

உண்மையில் , குதிரையைக் கண்டதை விட  கழுதையைப் பார்த்ததே அதிகம். அதிலும் அதன் குட்டி ,அவிழ்த்து விட்ட சமயத்தில் அதம் பறக்கும் விதமாய் அயராது ஓடி, புழுதி கிளப்பும். அவ்வளவு எளிதில் அதை மடக்கி பிடித்து விட முடியாது.



Wednesday, July 3, 2024

குழந்தாய்

 


கதை தந்தேன்     

கனிவுடன் 

உதை தந்தாய்.

விதை பந்தாய் 

விளையாட்டு 

பருவ 

விருந்தாய்

அன்பின் கொழு ந்தாய் 

அரு மருந்தாய்


Friday, June 28, 2024

உள்ளத்தில்

 உடன் பிறந்தாய்

ஒன்றாக வளர்ந்தாய் 

ஒரே தட்டில் உண்டாய் 

உறங்கி னாய் 

ஒரே பாயில் 

ஓயாமல் கேட்பாய்

கதை

பறந்தாய் பிழைக்க 

அயன் மனை

 அரவணைப்பில்

மறந்தாய்

பிறந்தகம் 

தேடி வந்த உறவை

நிற்க வைத்தாய் 

தெருவில்

உருவில் மாற்றமில்லை

உள்ளத்தில்?

Tuesday, June 25, 2024

பஞ்சம்

 கண்ணீர் வரவழைக்கும்

தண்ணீர் பஞ்சம் 

தலைநகரில் 

தவித்த வாய்க்கு

தகிக்கும் மெய்க்கு 

நீர் தருவார்

யார்?

நீர் லாரிகள் 

பிடிக்க 

முட்டி மோதும்

மக்கள் 

இயற்கையின் கொடை

எட்டிடும் நடை

எவர் பொறுப்பு 

இதுவெல்லாம் 

உயிர் பிரச்னை அன்று

உயர் பிரச்னை அல்ல

இன்று 

ஆளும் வர்க்கம் 

மேட்டுக்குடி மேய்ச்சலுக்கு 

தாரை வார்க்கும் 

நீர், நிலம், வளம் 

யாவும் 

நிர்க்கதியாய் 

Monday, June 24, 2024

துயரம்

 வயதான காலத்தில்,  மகன் வீடோ, மகள் வீடோ சென்று, தங்கி ஒத்தாசையாக இருக்க முடிவு செய்து புறப்புடும் பெற்றோர். அழைப்பின் பேரில் அனுமதி கிடைக்க மகிழ்ச்சியுடன் பயணம்.

ஆரம்பம் உற்சாகம், வரவேற்பு. பே ரக் குழந்தைகள் பிரியம் ஈர்த்திட  பொழுதுகள் விரையும். பெரியவர்களின் பேறு கால ஒத்துழைப்பு தனிக் குடும்ப சூழ் நிலையில் , அனைவருக்கும் வாய்க்கும் என்று கூற முடியாது.

அயல் தேசத்தில், எந்த சேவைக்கும் விலை உண்டு. பெறும் சம்பளத்தில் வரி, வாய்தா செலவுகள் போக, இழுத்து பிடித்து வாழ்க்கை, வசதி யாவும்.

இதில் காலஞ் செல்ல, செல்ல முதுமையின் காரணமாக நலிவுற்ற பெற்றோர் நோய்,வாய் பட்டால் உதவிக்கு வந்தவர்களுக்கு, மருத்துவ உதவி அளிப்பது கூடுதல், பெருஞ் சுமையாகி விடுகிறது.

பொருளாதார சக்தி வாய்ப்பு உடையவர்கள் ஆயின் சமாளிக்க இயலும். இதில் கூட நாணய மதிப்பு வித்தியாசத்தில் அனைவராலும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்வதில் சிரமம் இருக்கும்.

அயல் நாட்டு குடி மக்களுக்கு காப்பீடு, அரசாங்கத்தின் சமூக பாதுகாப்பு சலுகைகள் போதிய அளவில் கை கொடுக்கின்றன. ஆகவே அவர்களுக்கு இதில் சிரமம் இல்லை.

வருகை தரும் உறவுகளுக்கு கூடுதல் துயரம் இவ்வகையில் என்று கூறினால் அது மிகையாகாது.


Sunday, June 23, 2024

விருந்தாய்

 


சொன்னேன் மறந்தாய் 

பதில்

சொல்லாமல் கிடந்தாய் 

மீண்டும்

நினைவுப்படுத்த 

விருப்பில்லை 

நீண்ட இருப்பில் 

கசந்தாய் 

மீண்ட இருப்பின் உணர்வாய் 

இருந்தேன் விருந்தாய் 

Saturday, June 22, 2024

சீற்றம்

 பதிவைப் பார்ப்பார் 

பரிதவிப்பார் 

 சார்பு நிலை 

எடுப்பார்

தடுமாறுவார் 

உலக சித்தாந்த

போக்கு அறியார்

உள்ளூர் அளவிலே 

ஒன்றி,  

சிதறிடுவார் 

சீர் தூக்கி பார்க்கும்

நோக்கம் 

உடையார்

சீற்றம்  அடைவார்

உலகம்

 அந்த உலகம் 

சொந்த உலகம் !


இந்த உலகம்

 வந்த உலகம் !


எந்த உலகம் 

பந்த உலகம் ?

Friday, June 21, 2024

நாசகாரி

 கள்ள சாராயம் 

நச்சு சாராயம் 

யாவும் நாசம்

விளைவிக்கும் 

நாசகாரிகள் 

எதிலும் பணம் பார்க்கும்

வியாபாரம் 

இவர், அவர் என்ற பேதமில்லை 

அனைத்து வண்ணங்களும்

அடித்தள மக்களை 

இலக்கு வைக்கும் 

உழைத்து,உழைத்து

உருக்குலையும் 

வாழ்க்கை 

ஊதியம் போதாமை 

மயக்கத்தில் ஆழ்த்தும்

ஆளும் வர்க்கம் 

கள்ளக்குறிச்சி தரும் 

பாடம் 

உடன் மதுவிலக்கு 

கட்சி அரசியல் தாண்டி 

மக்கள் அரசாய் 

அரசியல் பிழை அகற்றி

அறம்  காத்திட வேணும் 

கொடுஞ்செயல் இழைத்த 

கொடி யவர் கொடி 

அறுத்து 

கோ லோ ச்ச வேண்டும்

Tuesday, June 18, 2024

விளங்க வேண்டும்!

 இருப்புப் பாதை விலகி 

இடித்து  ஏறி 

அந்தரத்தில் தொங்கும் 

பெட்டிகள் 

உயிர் களுடன் 

சமிக்ஞை மறந்தார் 

சனங்களை யும் மறந்தார் 

மேற்கு வங்கத்தில் 

உயிர்கள் பலி 

இயல்பாய் 

அடுத்தடுத்து மாநிலங்களில்

சிக்கன பயணம் 

நாட்டை இணைக்கும் 

நெடிய போக்குவரத்து

பாதுகாப்பு அம்சத்தில் 

கும்ப கர்ண பருவம் 

இதில் புதுமை என்ன?

சாதனை என்ன?

சரிந்த வாழ்க்கை 

பிரிந்த உயிர்கள் 

பொறுப்பு ஏற்பு 

எவர்?

இழப்பீடு ஈடாகுமா ?

இனியொரு விதி செய்வோமா? 

விபத்தில்லா தொடர் வண்டி 

விளங்க வைப்போமா?

விளங்கவில்லை

 ஏன் அடித்தாய். ?

கேட்க முடியவில்லை !

உன் பிள்ளை என்பதால் 

உரிமை

உண்மைதான் 


சண்டிக்கு 

கண்டிப்பு தேவைதான் 

அடியும், இடியும் 

அவசியமா?


எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்!

பதிலுக்காக அல்ல 

பதிவுக்காக 


இறுக்கத்தை தளர்த்தி விட்டேன் 

நெருக்கத்தைக் குறைத்து விட்டேன் 


புழுக்கம் போகவில்லை 

புன் சிரிப்பும் ஏறவில்லை


உள் சிரிப்பும் கூடவில்லை 

உண்மை விளங்கவில்லை

Sunday, June 16, 2024

சிந்திக்காதே

ரொம்பவும்  சிந்திக்காதே 

  ரொம்பவும் நிந்திக்காதே

 வருந்தாதே 

வருத்தாதே  

தள்ளாதே  

மகிழ்வை கொல் லாதே 

முறிவு கொள்ளாதே

செறிவு நில்லாதே