நியாயம் கேட்கும் உலகம் இல்லை
நியாயப் படுத்தும் உலகம்
பகை நீக்கும் உலகம் இல்லை
புகை மூட்டும் உலகம்
வலி தீர்க்கும் உலகம் இல்லை
கிலி சேர்க்கும் உலகம்
சினம் தணிக்கும் உலகம் இல்லை
சீற்றம் கூட்டும் உலகம்
நியாயம் கேட்கும் உலகம் இல்லை
நியாயப் படுத்தும் உலகம்
பகை நீக்கும் உலகம் இல்லை
புகை மூட்டும் உலகம்
வலி தீர்க்கும் உலகம் இல்லை
கிலி சேர்க்கும் உலகம்
சினம் தணிக்கும் உலகம் இல்லை
சீற்றம் கூட்டும் உலகம்
ஒரு பழம் கூட இல்ல
உறு பசி தீரவில்லை
பல நாட்கள்
பட்டினியில்
சாக்கு மூட்டை
பிதுங்கும் சரக்கு
விழாவிற்கு விருந்தாகி
"மீண்ட சொர்க்கம்"
புழுங்கியது உள்வாங்கி
ஒவ்வொன்றாய்
தீனி ப் பை தாண்டி
கோணிப்பைக்குள்
எருவாய்
மறு நாள்
சேகரிப்பில்
வருவார் என்றேன்
வரவில்லை
வாரார் என்றேன்
வந்தார்
தருவார் என்றேன்
தரவில்லை
வருகையும்
இன் மையும்
குறையில்லை
என்ன சொன்னாலும்
நான்
நானே தான்
மாற்றம் எனக்கில்லை
ஏமாற்றம் உன்
எல்லை
எனக்கு அதில் பஞ்சம்
இல்லை
இப்படியாக ஒரு பொழுது உதிர்த்தது. தன் நிலை தள்ளாட , உள் ஓட்டத்தில், உணர்வூட்டத்தில்.
தடுமாறு
தடம் மாறு
தகராறு
தனி ஆறு
தம்மின்
வரலாறு
இடம் தேடு
இல்லம் கூடு
இன்பம் நாடு
வரும் பாடு
மடம் கேடு
மானிடம் வீடு
மக்களைப் பாடு
பொய்யில் புரளும் உலகம்
தனி ஆள் ஆயினும்
தலைவன் ஆயினும்
ஏராளம்
எகத்தாளம்
எதையும்
நியாயப்படுத்தும்
நம்பிக்கையை
நக்கல் செய்யும்
நாகரிக சமூகத்தை
வெட்கப் பட வைக்கும்
வேட்டை
நர வேட்டையாடும்
பணப் பெட்டி
பத்திரம் கட்டி
பாத்திரம் மாற்றி
மக்களைப் பிரிக்கும்
நாடுகளை ப்பிளக்கும்
நாசங்கள் விளைவிக்கும்
நாணய அரசியல்
ஒற்றைப் புள்ளி
மையம்
நூற்றாண்டை
கடக்கும்
விற்றாலும்
பெற்றாலும்
எம் பணமே
இருப்பில்
எம்மிடம்
சந்தைப் பங்கில்
பத்திரங்களில்
பதுங்கி
பாயும்
பரவலாக மேயும்
மேட்டுக்குடி
தரித்த
புது அவதாரம்
பூவுலகை
வேட்டையாடும்
பல பரிமாணங்களில்
பெரு வணிக ப் பசியில்
அமுத சுரபியும் செயல்
இழக்கும்
எல்லைகள் இல்லை
போரும் பெருந் தீனியாக
கண்டங்கள் தாண்டும்
கண்டனங்கள்
பின் வாங்கும்
கொடையாளி கையில்
கொலை வாள்
நீளும் நாக்கு
நிலம் நடுங்கும்
வளம் ஒடுங்கும்
பெரும்பான்மை
மக்கள் திரள்
பிளவு அரசியலில்
சார்பாய் முழங்கும்
நிதி மூல தனத்தில்
முடங்கிடும் அடங்கிடும்
சுய நல வெறியில்
சூம்பிடும்
எல்லாருக்கும் சொன்னேன்
நம்பிக்கை
என்னை மறந்தேன்
உறவுக்கும், கரவுக் கும்
வித்தியாசம் பாராது
உரிமையுணர்வுடன்
உற்சாகம் சேர்த்தேன்
இடம் இல்லை ஆயினும்
கடன் இது என்றெண்ணி
பயணம் ஆனேன்
நேர்மறை அக்கறை அடுத்தடுத்து
அணி சேர்க்க
நேரிய மனம் நினைவில்
நலம் சேர்த்திட
நீளும் கரம் நேசம் வளர்த்திட
நெடுநாள் பகை ஒதுக்கி
காலி செய்யும் மாணவர்களை
போட்டு
" கோச்சிங்" வியாபாரம்
கோலோச்சும்
தடுக்கி விழுந்தால்
தனிப்பாடம்
வண்ணப் பெயர்ப் பலகை
அணிவகுப்பில்
அங்கி அணிந்த மங்கையர்
வரவேற்பில்
ஆங்கில உச்சாடனத்தில்
ஆளைக் கவரும்
உடனடிக் கடன் வசதி தரும்
அசதி சேர்க்கும் ஆட்டம்
கல்வி கடைச் சரக்காய்
கடைந்தெடுக்கும் அதிகாரம்
உடைந்த வாழ்க்கை
உருத்தெரிய உயர்வு
உருக்குலையும் மாணவம்
உயிரிழக்கும் அழுத்தம் கூடி
ஆண்டுதோறும் மாண்டு போகும்
ஆருயிர் ச் செல்வங்கள்
அசையாத ஆர்ப்பரிப்பில்
ஆளும் வர்க்கம்
பெரு வணிக ப் பசி தீரா
பட்டியிலிடும் சாதனை
பரவிடும் வேதனை
எட்டடி உரிமை என்றார்
அந்தக் காலம்
எடுத்த அடியும் உரிமை இல்லை
இந்தக் காலம்
வழி தேடி
குழி தோண்டுவார்
அந்தக் காலம்
வண்டி, வண்டியா விறகு
அடுக்குவார்
அந்தக் காலம்
படி சாம்பல் இல்லை
பிடி சாம்பல் இதோ
இந்தக் காலம்
ஓர் உண்மைச் சம்பவம். குடும்ப அமைப்பில் நிகழ்ந்த துயரம்.உள்ளூற குமைந்து உண்டான வலி.
இறக்கி வைத்தது இப்படி....
காலை திருகினாய்
காது போல்
கிள்ளினாய் கிள்ளை யை
சல்லை கொண்டு இழுத்தாய்
கையை
இறக்கினாய் மூட்டை
மலைவாசன் மகிமைப்
பயணம்
மண் வாசம் கூட
மறந்து போக
பெண் வாசப் பெருமை
பெயர்ந்து போக
"மை " செருக்கு
ஆளுமை !
நோட்டு கொடுத்தார்
நோட்டம் பார்த்தார்
ஓட்டு கேட்டார்
உட்கார்ந்தார்
அடுத்தடுத்து
ஆட்டம் வைத்தார்
ஆடிப்போன மக்கள்
ஆயிரத்தில் சிக்கல்
ஐந்தாண்டு முக்கல்
தெரிந்தது போல்
தெரியாத நான்
அறிந்தது போல்
அறியாத நான்
இழந்தது போல்
இழக்காத நான்
இடிந்தது போல்
இடியாத நான்
விடிந்தது போல்
விடியாத நான்
முடிந்தது போல்
முடியாத நான்
கண்களின் ஏக்கம்
ஏக்கத்தின் வீக்கம்
எட்டிய வாழ்க்கை
கிட்டிய விருந்து
தட்டிய கோணல்
தளர்ந்த நாணல்
என்ன செய்தேன் ?
என்ன அளித்தேன் ?
காலம் கடந்து
கணக்கு
மதிப்பெண் போடுவார்
உறவில்
உரிமையில்
ஒன்றிய கடமையில்
கணிப்பு ஏது?
பண்ட மதிப்பு
தீது
தட்டாதே
குதிக்காதே !
சத்தமிடாதே !
சந்தடி கூடாதே !
வந்த அடி
தேயாதே !
நடுத்தர வயது
பெண்மணி
கண்மணிகள்
விளையாட்டு
சகியாமல்
நடுத்தள நாயகி
நர்த்தனம்
உல்லாச விடுதி
ஓய்வில்
வண்ணம் காரணமா?
எண்ணம் காரணமா?
இயற்கைச் சூழலில்
கரைந்திட
கலந்திட
எவருக்கு
உரிமை .....?
பயணம் தொடர்கிறது. பரிவுடை உள்ளம் ஓய்வு கொள்ள பயணமே இடைத் தங்கல்.
கால வெளியில் கனிவுடன் கடமை. சுமை என்பது ஏதுமில்லை. சுகமே யாவும்.இன்றே எதார்த்தம். நாளை என்பது இன்றைய தொடர்ச்சி யே.
ஒரே சூழலில், முடக்கம் , இயக்கம் அன்று .
கரையும் கால வெளியில் சகிப்புடன் கலந்து, அன்பெனும் போரில் உள்ளங்களை வென்று அமைதியை நிலை நிறுத்துவோம்.
வெள்ளை க் கொடி வேதனை தீர்க்கும் கொடி, வெறுப்பின் வேர் அறுக்கும் வெடி.
உலகம் முழுவதும் அமைதிக்கு அல்லாடும் கொடுமை, சொல்லி மாளா து.
வெள்ளைக் கொடி ஏந் தும் காலம் இது. உலகெங்கும் சகிப்பின்மை, வெறுப்பு, வன்முறை, பரவலாகி மனித உயிர்கள் கொத்து, கொத்தாய் சாய்கின்றன.
அமைதி வேண்டும் காலம் இது. அன்பு, அறம் தழைக்க, அனைவரும் ஒருங்கிணைந்து வெள்ளைக் கொடி உயர்த்தி உலகை காக்க வேண்டும்.