Sunday, May 12, 2024

குடும்பம்

 தனி மனித சுதந்திரம்,  ஒரு கோணத்தில் பார்த்தால் ,குடும்ப அளவிலேயே முதலில் அடி வாங்குகிறது, கட்டுப் படுத்தப் படுகிறது என்று கூறலாம்.

இதை செய்யாதே, அதை செய்யாதே; இங்கு செல்லாதே,; அங்கு செல்லாதே. நாங்கள் விரும்புவதை  நிறைவேற்று என்று குழந்தைப் பருவம்  முதல் ,குமரப் பருவம் வரை திணிக்கப்படும்  நெருக்கடி. திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது  என நீண்டு இந்தப் பட்டியலில் சேரும் கூடுதல் அம்சம். 

கூட்டுக் குடும்பத்தில்  , பிரதமர் போல சர்வ வல்லமை அதிகாரம் செலுத்தும் தந்தை, எதையும் செயல் படுத்த,முடிவு செய்ய முடியும். குழந்தைகள் உரிமை, பெண்ணுரிமை இவையாவும், , இழந்து விட்டதைப் பிடிக்கும் , சலுகை வேண்டும் முயற்சியே ஆகும்.

  அரசாங்கம் நிபந்தனைகள் போடுவது ஒரு புறம் இருக்க, . குடும்ப உறவின் உளவியல் என்பதே விருப்பத்தை இழப்பது, விட்டுக் கொடுப்பது என்னும் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு. அதை மதிப்பீடாக தொகுத்து நிலை நிறுத்தி விட்டது.

இதில் பல எதிர்ப்புக் குரல் சனநாயகம் வேண்டி,குடும்ப அமைப்பிற்குள் பன்னெடுங்காலமாக, தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருப்பதைஅறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு கட்டத்தில் அவை கலகக் குரலாக, அதிகாரத்தை எதிர்க்கும் சக்தி யாக,               ஒடு க்கப்பட வேண்டிய, கட்டுக்குள் வைக்க வேண்டியதாக இனம் காணப்படுகிறது.

விதிமுறைகள், ஒழுங்கு இயக்க முறைமை குடும்ப  நிர்வாகத்தில் பொதுவாக கையாளப்படும் என்றாலும், நுட்பமாக அதிகாரம் செலுத்தும் முறை சனநாயக த் தன்மையில் இருந்து விலகி, ஆளுமை அதிகாரம் செலுத்தும் ஏற்பாடாக விளங்கி வருகிறது.

ஒரு வேளை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின்

நுண்ணியல் கூறாக குடும்ப அமைப்பை புரிந்து கொள்ள முடிகிறது .


No comments: