Tuesday, November 3, 2026

காப்பேன்



ஒரு பிரச்னை. இருவருக்கும் இடையில். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது. அடுத்தவர் கருத்தை ஏற்பது, சகித்துக் கொள்வது போன்ற குடும்ப நிர்வாக சுழலில்,பல குடும்பங்களில் , தீர்வின்  திசை மாறி, நீண்டு செல்லும் . இச் சந்தர்ப்பத்தில், மூன்றாம் நபர் சமரச நுழைவு  பெரும்பாலும் சிக்கலை தீர்க்க உதவாது. மாறாக சிக்கலின் போக்கை மாற்றி விடும்.

அமைதியான ,சுய வாழ்க்கை அனுபவ அடிப்படையில்  , தன் உணர்வை புரிய வைக்கும், உரையாடல் இரு பக்கமும் வேண்டும். அதிகார தொனி எவர்க்கும் நிலைமையை சீராக்காது.


சொரிந்து, சொரிந்து 

இதம் காண்பேன் 

காயம் சேர்ப்பேன் 

கவலை காப்பேன்

Monday, November 2, 2026

அக்கரை

 


நம் கட்டுக்குள் எதுவும் 

இல்லை 

அதன் கட்டளைக்கு எல்லை

 இல்லை 

வளர்த்தது நீயாயின் 

வளர்ந்தது அதுவாய்  

மெதுவாய்

உணர்வாய்

அறிவாய் 

அக்கரை

Saturday, October 17, 2026

ஊடாட்டம்

 


ஒப்பிடும் உலகம் 

உப்பிடாது

உப்பி டும் உலகம் 

ஒப்பிடாது

தப்பிடா வாழ்க்கை 

உப்புக்கும், ஒப்புக்கும் 

இடையில் 

ஊடாட்டம் 

Tuesday, October 13, 2026

வேண்டும்

 

உடைப்பு அரசியல் வேண்டாம்!

படைப்பு அரசியல் வேண்டும்!

கடுப்பு அரசியல் 

வெறுப்பு அரசியல் 

வேதனை சேர்க்கும்

யாவர்க்கும் 


அறிவாய் 

அன்பின் வலிமை 

அரவணைப்பின் மென்மை 

செல்வாய்

அனைவரையும் 

சிறப்பாய் 


Monday, August 31, 2026

செலவு

 

ஒரு படமும் 

எடுக்கவில்லை

ஒரு பொருளும்

வாங்கவில்லை

உரிய 

பொருளுணர்ந்ததால் 


Monday, July 27, 2026

விலகிய

 

கல்வி முறையும் 

சரியில்லை !

கலவி முறையும் 

சரியில்லை !

மையம் 

 விலகிய 

வாழ்க்கை !





Sunday, July 19, 2026

'சதம் இல்லை '


 'சதம் இல்லை.' யாருமே சதம் இல்லை! என்பார் அம்மா.

பேச்சிலே, அவர் மூச்சிலே,மிக இலகுவாய் வந்து விழும் சலிப்புக் கோர்வை.

உதவி இல்லை! ஒத்தாசை இல்லை! ஓரியாய் வாழும் நிலை ! 

நலிவுற்ற வாழ்வில் , ஒண்டி குடித்தனம். ஓட்டாண்டியாய்! 

கொண்டவன் கொட்டம் அடிக்க , கொழுமதி கண்ணை மறைக்க.



Thursday, July 16, 2026

புரிதல்

 

தனி வாழ்க்கை!

பொது வாழ்க்கை !

போக்கில் வாழ்க்கை 

முன்னது சரிவாய் 

பின் அது 

செறி வாய் 

மண் அது 

மறந்தாய் !

மனம் இதில்

தொ லைந்தாய்!




Wednesday, July 15, 2026

செப்படி !

 


என்னவோ 

நினைக்க

எப்படியோ நடக்க

இப்படியா ?

அப்படியா?

தப்படி

தவறி

இப்படி

செப்படி !

Thursday, July 2, 2026

பிடியில்



 ஒட்டி இருந்தோம் 

ஓராயிரம் இரவுகள்

எட்டி இருந்தோம்

ஈராயிரம் இரவுகள்

கட்டி இருந்தோம்

காலத்தின் மடியில்

கழன்று போவோம் 

தாயின் மடியில் 

தா ளத்தின் பிடியில் 

Friday, June 26, 2026

தாயம்

 


அடுத்தவன் பணம் எள்ளு !

தம் பணம் கொள்ளு !

என்ன? இதில் நியாயம் 

எல்லாமே இங்கு 

தாயம்!

Sunday, June 21, 2026

நம் அளவு!

 


உன் இடம் 

உன்னிடம் 

என் இடம் 

என்னிடம் 

அவன் இடம் 

அவனிடம் 

நில அளவா?

நீர் அளவா?

எவ்வளவு?

நம் அளவு!

Saturday, June 20, 2026

ஏற்றும்!

 

நகரத்தின் ஓரம்.நெடுஞ்சாலையை ஏகடியம் செய்யும் வாகனங்கள்.எவ் விதியும் ஏற்க மாட்டோம் என்ற கதியில் விரைந்திடும், இரைந்திடும்,  நாள் தோறும், ஓய்வு, ஒ ழிச்சல் இன்றி

பொருந்திய இல்லம் கழன்று பெயர்ச்சியில் , அயர்ச்சி நீக்கி, ஆழ்ந்த இல்லில் பொழுதுகள் கரையும்.

வடக்கில், தானாக முளைத்து , கிளைத்து  நிழற் பரப்பிடும் மரங்கள். தேன் சிட்டு, சிர்ப், சிர்ப் என்ற அசை, மரங் கொத்தியின் டக் டக்...தாளவரிசை, கோகிலத்தின், ஓயாமல், சாயாமல் தொண்டை வற்றி, வரண்டு போகுமோ? என்று எண்ண தோன்றும் குரல் சூழல்.  திடீரென தென்படும் மயிலும்,பிற உயிரினங்களின் வதிவிடமாகவும் நிலவும், நீளும்........

தார்ச்சாலை உமிழும் வெப்பம், வாகனங்கள் வெளியிடும் மாசு, செவிப்பறைக்கு கேடு கூட்டும் ஒலி மாசு, தூசு , தும்புகளை வடி கட்டி, சுத்திகரிப்பு சுருதியில், நொடிப்பொழுதும் சலிப்பின்றி வாழும் செடி, கொடிகள், மரங்கள் இயல்பாய் தம் வினையில் ...

இது எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும், 'பொலிவுறு பேரிடரில்', ' சுற்றுலா கிறக்கத்தில் '. மர‌ மட்டைகள், செடி, செட்டுகள் வளர்ச்சி யின் எதிரியாய் கான்கிரீட் கட்டமைப்புகள், தார் உருகும் சாலையில், வெப்பம் கூட்டும், வேதனை சேர்க்கும்  ' முன்னேற்ற பதாகை'   ஏற்றும்.....

Thursday, June 18, 2026

பாழ் வெளி

 


தற்கொலை மனம் 

வன்ம குணம் 

வகை அறியா

 வாழ்க்கை 

தொகை அறியா

சினம் 

மற்கொலை 

உணர்ச்சி 

மிகை எழுச்சி 

பகை கூட்டும் 

பகடை உருட்டும் 

பாழ் வெளியாகும் 

Sunday, June 14, 2026

இருக்கத்தான் செய்கின்றன!!




இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய துறைகள் என்ன செய்கின்றன? விடியற்காலையில் ஒரு லாரியில்
 ஏற்றப்பட்டு, எவருக்கும் தெரியாமல், 
அறுவை சிகிச்சையின், 'மிச்ச சொச்ச' 
மனித உறுப்புகள், கொடுமையான மருத்துவக் கழிவுகள், உபயோகிக்கப்பட்ட ஊசிகள் போன்ற சராசரி மனிதனுக்கு புலப்படாத , பல நோய்களை பரப்பக்கூடிய மோசமான கழிவுளை, பல ஆண்டுகாலமாக நீர் நிலைகளுக்கு அருகிலும், நிலத்தடியிலும் கொட்டி  வருகின்றனர்.

மாட்டுக் கழிவுகளைக்கொட்டுவது.  மரங்களில் வைக்கோல் பிரியில் கட்டிவைப்பது ,போன்ற இன்ன பிற ஒவ்வா செயல்களயும் செய்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் துறை, மாசு தடுப்புக்குழு , நலவழித்துறை போன்ற எண்ணற்ற அரசாங்க அமைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன? 

Saturday, June 13, 2026

ஆட்டம்!

 

அங்கே தொலைவு என்றேன்

இங்கே தொலைவில் தொலைவு

என்கிறேன்

ஆட்டோவின் ஆட்டம் 

இருப்பைக் கரைக்கும்

தொலைவைக் குறைக்கும்

பேருந்து பயணம் 

யாத்திரை போல் 

பத்து ரூபாயில்

அகவை முதிர்வில்

ஆட்டம் காட்டும் 

நெடுஞ்சாலைகள்

நடைப்பயணம் 

சாத்தியம் இழந்து

குடிமைச் சமூகம் 

சுற்றுலா போதையில்

Thursday, June 11, 2026

வேடிக்கை



பகத் சிங்கின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் சூழலில், லாலா லசபதி ராய் ,ஆங்கிலேய காவல் துறையின் அடக்குமுறைக்கு ஆளாகி, தியாகி ஆனா சூழலில், மகாத்மா காந்தி, சைமன் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து'பந்த்' திற்கு அழைப்பு விட்ட வரலாற்று  நிலை மற்றும் பகத் சிங் தியாகி ஆனா வரலாற்று தியாக நினைவு கூறும் காலக்கட்டத்தில் 'பந்த்' 'அழைப்பு ' என்பது   அரசியல் அரங்கில், அரசாங்கத்தால் தடை செய்யப்படும் பொருளாக தற்போது  மாறியுள்ளது, விந்தையாக, வேடிக்கையாக உள்ளது.

நீர் வளம்

12 வது நீர் வள மாநாடு புதுவையில் மூன்று நாள் நடை பெற்றது. தேசிய நீர் வள வளர்ச்சி முகவாண்மை, புதுவை அரசுடன் சேர்ந்து நடத்தியது.கோதவரி ஆறு, கிருசுணா ஆறு ஆகியவற்றை தமிழ்நாட்டு பாலாறு, பெண்ணையாறு ஆகியவற்றுடன் இணைப்பது வழியாக் நீர் ஆதார கட்டமைப்பை வலுவூட்டுவது,மாநிலங்களில் உபரியாக உள்ள நீரை, பற்றாக்குறை மாநிலங்களுக்கு பயனுள்ள வகையில் அளிப்பது ஆகிய திட்டமிடுதலுக்கான, செயல்படுத்துவதற்கான வழி வகைகளை பகிர்ந்து கொள்வதற்கான பேரவையாக இது அமைந்தது.
மாநாட்டில் மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சர், மாநில முதல்வர் , மத்திய அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்த அளவில்,செஞ்சியாற்று நீரை பெரிதும் நம்பி உள்ளது புதுவையின் வராக நதி எனும் சங்கராபரணி ஆறு. தமிழ் நாட்டு பங்காரு வாய்க்காலை முழுமையாகச் சார்ந்து நிற்கிறது பாகூர் கடம்பை ஏரி

பஞ்சமில்லை

 


சிந்தனைக்கு 

பஞ்சமில்லை 

பஞ்சமும் சிந்தைக்கு 

 இல்லை 

எல்லை முடிவு 

இல்லை 

முடிவு ம் இறுதி 

இல்லை 

Monday, June 8, 2026

எங்கு செல்கிறது

 

பிரதிநிதித்துவ மக்களாட்சி எங்கே செல்கிறது? எப்படி செல்கிறது?

பண பலம், ஆள் பலம், குறிப்பாக சாதிய பின்புல வலிமை, ஆகிய கூறுகள், கட்சியில், தேர்தல் அரசியலில் தீர்மானிக்கும் காரணிகளாக, இன்றைய சமூகச் சூழ்நிலை இருக்கிறது.

கட்சிகள், போட்டியாளரை தேர்வு செய்யும் விதமும் இந்த தகுதிகள் அடிப்படையில்தான்.

நேற்று மனை வியாபாரம், இன்று அரசியல் வியாபாரம்.அறக்கட்டளை பதாகை, மதிய இலவச உணவு. பிற உதவிகள், " நல உதவி" அடையாளத்தில். சர்க்கரை தொடங்கி, சட்டை துணி வரையில். அ ச்சார  உடன்படிக்கை அக்கறையுடன்!