கொஞ்சுவாய்
கெஞ்சு வாய் ஆசையுடன்
அஞ்சுவாய்
அடக்குவாய் அன்புடன்
கண்டிப்பாய்
தண்டிப்பாய் பொறுப்புடன்
வெறுப்பை விலக்கி
விருப்பு துலக்கி
விளங்கிடுவாய்
கொஞ்சுவாய்
கெஞ்சு வாய் ஆசையுடன்
அஞ்சுவாய்
அடக்குவாய் அன்புடன்
கண்டிப்பாய்
தண்டிப்பாய் பொறுப்புடன்
வெறுப்பை விலக்கி
விருப்பு துலக்கி
விளங்கிடுவாய்
நினைவுகளின் சு மையில்
நெடும் பயணம்
இமைகள் கன த்திடும்
தேடும் வானம்
தொலைவில்
எல்லை இல்லை
இலக்கு
தொ லைந்து போகவில்லை
உம் நிழல்
உணர்ச்சிப் பெருக்கில்
ஊன்றி
புணர்ச்சி ப்பிழிவில்
புல ர்ந்தவன்
நீ
தளர்ச்சி இழையில்
தறி யாடி
வளர்ச்சி குன்றி
மலர்ச்சி இழந்தவன்
முயற்ச்சி உணர்வில்
உள் வாங்கி
முண கல் போக்கு
பின் வாங்கி
பூத்திடுவாய், காய்த்திடுவாய்,
கனி ந்திடுவாய்
இப் பிறவியிலேயே
ஒரு
மறு பிறப்பாய்
எல்லா கொடுமையும் இழைப்பார்
ஏதும் அறியாதது போல முழிப்பார்
நாள் தோறும் வேடம் எடுப்பார்
நாடக நடிகர் இவரிடம் தோற்றார்
மக்கள் அளித்திடும் வாக்கு வாங்கி
அளி த்தவருக்கே அழிவைச் சேர்ப்பார்
அதற்கும் ஒரு நியாயம் தருவா ர்
எதற்கும் பிழியும் சாயம்
இதற்கும்
வாயடி, கை அடி
வலசை முழக்குவார்
வக்கிரம் மறைய
விக்கிரகம் நாடுவார்
இதற்கும் பழகிடுவாய்
நீ
எதற்கும் வளைந்த மெய்
ஏன் என்று கேளாத வாய்
உண்பதற்கே மட்டும்
உணர்ந்த பொறி
பழக்கம் விலகி
இயக்கம் ஏற்குமா
இன்
செவி உணர்வு
இழக்குமா
துடுக்கு
துன்பத்தை
அடுக்கு
ஒடுக்கு
ஓங்கிய மிடுக்கு
உரிமை அடக்கு
உள்ளத்தில் கிறுக்கு
ஓராயிரம் கொடுக்கு
உன்னிடத்தில் இருக்கு
வண்டுகளின் காலம் போய்
குண்டுகளின் காலம் !
குவலய நீலம் போய்
குருதியின் நீலம்!
வறண்ட பாலையில்
வளம் சேர்க்கும் !
வளம் மிக்க பூமியில்
குளம் சேர்க்கும் !
இழப்பை எண்ணிக்கையில்
ஏற்கும்
புள்ளி விவரம் அள்ளித் தரும்
புது உலகம் இதுவென்று ஓதும் !
ஏதம் இழைத்திடும்
பெரு வணிக வேதம்
வெட்டியான் வேலை கூட்டும்
ஆயுத பேரம்
அமைதியை தூக்கிலிடும்
அணு தினமும்
அடுத்தவன் நாட்டில்
எதற்கும் கை தட்டும்
ஆதிக்க கை கள்
சரவெடியாய்
சந்தோசம் கூட்டும் !
அவன் ஏ ன் இப்படி?
எப்படி?
தப்படி
தம்பிடி தளர்ந்த
தாழ் படி
வரும்படி இழந்த
உருப்படி
இவன் படி !
இப்படி!
வரும் படி
உயர்ந்த
வாழ் படி
வளர் படி
ஒரு சுண்டு விரல் முனை நசுங்கி, வளைவாக இருப்பது , அவள் கவனத்தை, வெகு காலம் கழித்து இப்போது தான் ஈர்த்தது.
பள்ளி செல்லும் பருவம், தனியார் பள்ளியில் ஆங்கில பயிற்று மொழியில், அப்பாவின் ஆசைக்கு இணங்க, சேர்ந்து பயின்று வந்த சமயம் .கிளிப் பிள்ளை போல் ஆங்கில மொழி பாடல்கள், தத்து பித்து என்று, வயது ஒத்த பிள்ளைகளுடன் பாடி, ஆடி திரிந்த பொழுது.
கோடை விடுமுறை சற்று ஏ றக்குறைய இரண்டு மாதம். சலிக்க வெய்யிலில் விளையாடுவது.பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப் புல், கபடி, கண்டேன்,கண்ணாமூச்சி, தாழ்வான பூவரச மரங்களில் ஏறுவது, அதன் இலைகளில் பீ ப்பி ச செய்து ஊதுவது, குச்சியில் வில், அம்பு செய்து மர த்தி ல் எய்து விளையாடுவது ,இப்படி எண்ணற்ற ஆட்டங்கள்.
இவைகளுக்கு மத்தியில், நண்பர்கள் வீட்டில் பல்லாங்குழி, தாய கட்டை விளையாட்டு. பெரியவர்கள் ஆட வேடிக்கை பார்ப்பது, சந்தர்ப்பங்களில் ஆள் இல்லாத நிலையில், உதிரியாக ,அணியில் இடம் பெறும் வாய்ப்பும் உண்டு.
சில நேர்வுகளில் அவரவர் பள்ளியில் கற்ற பாடல்களை பாடி, ஆடுவதும் உண்டு. இந்த வாய்ப்பு எனக்கும் நாய்க்கர் வீட்டு பிள்ளைகளுடன் பாட வாய்த்தது.
மர சாய்வு நாற்காலியில் சாய்ந்து, தன்னை மறந்து , குரல் எடுத்து பாடுவது அலாதியானது. நாய்க்க ர் இல்லாத போது அதில் அமர்வதே தனி அந்தஸ்து தான்.
ஒரு மே மாத பிற்பகலில் எங்கள் கச்சேரி அரங்கேற சில மணி நேரத்தில் ஓய்ந்து முடிவுக்கு வந்தது.
அது சமயம், நான் எழுந்திருக்க, வலது கையை கத்தரி போன்ற சாய்வு நாற்காலியில் இருந்து எடுப்பதற்குள் ,அவசர அவசரமாக ,முத்து,. சுறு,சுறுப்புடன், சுணடு விரலுடன் சேர்த்து அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை மடக்கி விட்டான்.
என்ன சோதனை இது. உடல் எழுந்து விட, வலது கை தொங்கிய நிலையில் மேலே எடுக்க முடியாமல், மாட்டிக் கொண்டது. கிடுக்கியில் மாட்டிய பாக்கு போன்று நசுங்கிய விரல் தசை பிய்ந்து, இரத்தம் பீச்சிட, வலியால் துடித்த அலறல் சத்தம் உடன் இருந்தவர்கள் பயத்தில் பட படக்க, தெருக் கதவைத் தாண்டியது என் ஓட்டம். அரைக்கால் சட்டையும் ஆங்காங்கே நனைந்தது.
இரண்டு வீடு தள்ளி இருக்கும் என் வீட்டிற்கும் என் ஓலம் கேட்டது. மதிய உறக்கத்தில் இருந்த என் தந்தை என்னை நோக்கி ஓடி வந்து வசவுடன் முதுகில் இரண்டு சாத்து சாத்தி, ரிக் ஷா வாண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
உயர்ந்த சீலிங் உள்ள, பெரிய மண்டை கொண்ட மின் விசிறி காற்றை வாரித் தள்ள, உயரமான மேசை மீது மல்லாந்து படுக்க வைத்தனர்.ஆபரேசன் செய்வார்கள் என பயத்தில் என் அழுகை மேலிட. கட்டு மட்டும் போட்டு தைக்காமல் வைத்தியம் செய்து அனுப்பினர்.
அன்றிரவு முழுவதும் வலி. தூங்க முடிாமல் துடித்துக் கொண்டிருந்த என்னை, பாட்டி, வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்தில் அவர் மடி மீது சாய்த்து,கதை சொல்லி, பாட்டுப் பாடி மெல்ல தூங்க வைத்தார். ஆற டிக்கு துடிக்க உயரம், மாநிறம். உலக்கை பிடித்த கை, கூழ் துழாவிய, நெல் அவித்து ஊட்டம் தரும் தோற்றம்.
பம்பை, உடுக்கை சத்தம் கேட்டால் மருள் வந்து குல தெய்வம் -மதுரை வீரன் - குறி சொல்லும். மலையேற கற்பூரம் ஏற்றி அவர் கையில் அம்மா கொடுக்க, அதற்கு முன்பாக சொல் என்று வாக்கு கேட்டு, சாந்தி அடைவார்.
சில நிமிடங்கள் கழித்து, முகத்தில் தண்ணீர் தெளிக்க, தூ க்க கலக்கத்தில் இருந்து எழுவார் போல் விழிப்பார்.
ஆறு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அனுபவித்த வாழ்க்கை கதை, மனதின் பெட்டகத்தில் இருந்து நிகழ் காலச் சக்கர ஆரத்தில், இணை யாள் சுண்டு விரலைப் பார்த்து வினவிய போது தற்போது பதிவேற்றம் காண்கிறது.
பொறுத்துக் கொள்
எதையும்
புரிந்து கொள்
சகித்துக் கொள்
எதையும் சமாளித்து
நில்
சரிந்து விடாதே
சந்தி சிரிக்க விடாதே
வரிந்து கட்டி
வம்பு அளக்காதே
வாங்கி கட்டி
வழிந்து
நிற்காதே
இறப்பு
இரங்கலு க்கு உரியதே!
போர் ஆயினும்
விபத்து ஆயினும்
பொல்லாங்கிற்கு
இடமில்லை !
ஓர் உயிர் உருவாக்கிய
படைப்பின் உழைப்பை
இயற்கையின் ஏற்பாட்டை
உடைக்கும் உரு குலைக்கும்
அதிகாரம் இல்லை
எவருக்கும்!
அவர் இவர்
என்ற பேதம்
இசம்
தேசம்
சமயம்
மதம் இதில்
நேயம் அற்றதே !
பிறர் இறப்பில்
களி கொள்வது
வாய் மெல்வது
விலங்கு ஒப்பா செயல்!
" ஓர் ரூ பா கொடுப்பானாம் ஓயாம அடிப்பானாம்"
அம்மா சில சந்தர்ப்பங்களில் உதிர்க்கும் சொற்றொடர். அவரது அகராதியில் வந்து விழும் பல மொழிகள், அவை பழமொழியா? மரபுச் சொல்லா? அப்போது புரியாது.
குடும்ப பாரத்தை சுமக்கும் அவளுக்கு, போதாமை, துயரத்தின் வெளிப்பாடாக அப்பாவிடம் குமுறும் போதும், வார சம்பளத்தை சரிவர செலவுக்கு தராத நல்லுவன்( நடுப் பிள்ளை)ஆகியோரிடையே மல்லுக் கட்டும் போதும் இந்த சொலவடை இயல்பாய் வந்து விழும்.
ஓரிரு சமயங்களில் இதற்குரிய அர்த்தத்தை கேட்கும்போது கோபக் குறி தளர்ந்து. " அதுவா, அது ஒண்ணும் அசிங்கமான வார்த்தைகள் இல்லயப்பா" என்று ஆரம்பித்து, கிராமத்தில் சாவு சேதி சொல்லும் பறை சாற்றி க் கு , ஊர் சொல்ல, சாவு விழுந்த பொழுதிலிருந்து, சவ அடக்கம் செய்யும் வரையிலும் வாங்கிடும் உழைப்பிற்கு ஏற்ற கூ லி தராமல், எட்டும் எட்டாமல் கொடுக்கும் பணம் குறித்த , பழமொழியே என்று விளக்கி டுவார்.
எனக்கு, தாய் மொழி அகராதியை திறந்து வைத்தவர் " அம்மா மொழி" ,அத்தியாயத்தை ஆரம்பித்து சிந்திக்க வைத்தவர் என்று கூறினால் அது மிகையாகாது.
தொண்ணூறு ஆண்டுகளில் பயணிக்கும் அவளிடம் நமது மொழியின் மரபுச் சொற்கள், சிறந்த சொல்லாடல்கள் யாவும் அருகி வரும் மரபுச் செல்வங்களே!
அவர் நிலைதான்
உம் நிலையும்
இவர் நிலையும்
முதுமையில்
கவனிப்பார் அற்ற
தனியனாய்
இல்லம் பெரிதாயினும்
உள்ளம் கடுகு அளவே
தள்ளாடும் பருவம்
தளர்ச்சி அடைந்த உருவம்
பல வேளை பங்கிட்ட நீ
ஒரு வேளை உணவுக்கு
ஏக்கம்
இமைகள் வீங்கி
ஏங்கிடும் தூக்கம்
இங்கிருந்தால் அங்கிருக்கும்
அங்கிருந்தால் இங்கிருக்கும்
எங்கிருந்தாலும்
ஏ க்கம்
கூ டியிருக்கும்
தூக்கம் தொலைந்து
இருக்கும்
துன்பம் சூழ்ந்திருக்கும்
இன்பம் இடையிடையே
மின்னல் போல்
சன்னல் திறக்கும்
இன்னல் இருள் போக்கும்
இயல் வாழ்க்கை
இதுவென காட்டும்.
தெரிந்தும் பலன் இல்லை
தெரியாமல் முடிவு இல்லை
அறிந்தும் அறிவில்லை
அறியாமல் ஆவதில்லை
உணர்ந்தும் உயரவில்லை
உணர்ச்சியில் புரியவில்லை
ஏமாந்தும் புரியவில்லை
ஏ ன் என்று விளங்கவில்லை
பகையும் வெளியில் இல்லை
புகையும் நெருப்பும் வேறில்லை
தெரியாமல் விளைவு இல்லை
தெரிவதும் தொலைவில் இல்லை
என்னை புரிந்து கொள்
உன்னை புரிந்து கொள்
உள்ளதை புரிந்து கொள்
உண்மையை புரிந்து கொள்
இருப்பதை ஏற்று
இருப்பை வைத்து
பொறுப்பை சுமத்தி
தனி மனித சுதந்திரம், ஒரு கோணத்தில் பார்த்தால் ,குடும்ப அளவிலேயே முதலில் அடி வாங்குகிறது, கட்டுப் படுத்தப் படுகிறது என்று கூறலாம்.
இதை செய்யாதே, அதை செய்யாதே; இங்கு செல்லாதே,; அங்கு செல்லாதே. நாங்கள் விரும்புவதை நிறைவேற்று என்று குழந்தைப் பருவம் முதல் ,குமரப் பருவம் வரை திணிக்கப்படும் நெருக்கடி. திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது என நீண்டு இந்தப் பட்டியலில் சேரும் கூடுதல் அம்சம்.
கூட்டுக் குடும்பத்தில் , பிரதமர் போல சர்வ வல்லமை அதிகாரம் செலுத்தும் தந்தை, எதையும் செயல் படுத்த,முடிவு செய்ய முடியும். குழந்தைகள் உரிமை, பெண்ணுரிமை இவையாவும், , இழந்து விட்டதைப் பிடிக்கும் , சலுகை வேண்டும் முயற்சியே ஆகும்.
அரசாங்கம் நிபந்தனைகள் போடுவது ஒரு புறம் இருக்க, . குடும்ப உறவின் உளவியல் என்பதே விருப்பத்தை இழப்பது, விட்டுக் கொடுப்பது என்னும் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு. அதை மதிப்பீடாக தொகுத்து நிலை நிறுத்தி விட்டது.
இதில் பல எதிர்ப்புக் குரல் சனநாயகம் வேண்டி,குடும்ப அமைப்பிற்குள் பன்னெடுங்காலமாக, தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருப்பதைஅறிந்து கொள்ள முடிகிறது.
ஒரு கட்டத்தில் அவை கலகக் குரலாக, அதிகாரத்தை எதிர்க்கும் சக்தி யாக, ஒடு க்கப்பட வேண்டிய, கட்டுக்குள் வைக்க வேண்டியதாக இனம் காணப்படுகிறது.
விதிமுறைகள், ஒழுங்கு இயக்க முறைமை குடும்ப நிர்வாகத்தில் பொதுவாக கையாளப்படும் என்றாலும், நுட்பமாக அதிகாரம் செலுத்தும் முறை சனநாயக த் தன்மையில் இருந்து விலகி, ஆளுமை அதிகாரம் செலுத்தும் ஏற்பாடாக விளங்கி வருகிறது.
ஒரு வேளை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின்
நுண்ணியல் கூறாக குடும்ப அமைப்பை புரிந்து கொள்ள முடிகிறது .
பேச தெரிந்தவன் நீ !
பேசாமல் இரு
கூசாமல் சேரும்
குறை
பேசுவது பிழையே
சில நேர்வில்
படும் பொருள்
உடன்பாட்டில் ஏற்பு
ஈர்ப்பு
முரண்பாட்டில்
முட்டல்.
முனகல்
பொத்திய வாயாக
கத்திய வாய்.
கதவடைக்கும்
கலங்கி விக்கும்
ஊடும் ,உறவும்
பாவும் ,கரவும்
தறியாடும்
வாழ்க்கை நெசவில்

இழந்து
சருகும் சுள்ளி
காய்ந்து உலர்
கிளை
கொத்தும், கொம்புமாக
உடைத்தால்
ஒடியும் நிலை
பரிதாபமாய்
நவம்பர் குளிரில்
தாக்கு பிடித்து
சில மாதங்களில்
முதிர் அரு ம்பாய்
கிளைகள் தோறும்
முளைத்து
கிளைத்து
வெண் பூக்கள்
பூத்து குலுங்க
தேனீ க்கள்
குடும்பம்
குடும்பமாய்
கும்மாளம் போட
தளிர் இலை கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தலையெடுக்க
பருத்தி ஆடை போர்த்திய
மரம்
வெடித்து சிதறாமல்
வெம்பி உதிராமல்
வெண் புறா சிறகு
இழைகள் கழன்று
சுழன்று புல் தரையில்
பொருந்திடும்
அரத் த வண்ண
பழங்களின் வரவின்
முன்னோட்ட காய்கள்
இலைகளுடன்
கொத்து கொத்தாய்
சத்தான , முத்தான
பழங்களின் வரவை
உறுதி செய்து
புறாக்கள் கொரித்திட
கரு நிற
நீள் வால் குருவி
மஞ்சள் அலகில்
சிட்டுக்கள் போட்டியில்
விருந்தாகும்
செர்ரி
எதையும் கூற முடியவில்லை
ஏ ன் என்று கேட்கவும் இயலவில்லை
எங்கள் சூழல் இதுவே
உங்கள் இருப்பும் அதுவே
கண்கள் பார்த்தும்
கருத்து இருந்தும்
வாய்கள் திறக்க தோ தில்லை
வாய்ப்பும்
வசம் சேர்வதில்லை
பார்க்கும் போது ஒன்று
பார்க்காத போது ஒன்று
கேட்கும்போது ஒன்று
கேளாத போது ஒன்று
வாய்க்கும் மெய்க்கும்
தொடர்பில்லை
வசதிக்கும் அசதிக்கும்
தொடர்பில்லை
புதை குழிகள்
புகட்டும்
வதை மொழிகள்
பொல்லாங்கு இழைத்திடும்
ஆயுத பலம்
தன்னுரிமை காத்திட
தன்னகம் காத்திட
எதிர் குரல்
எழுப்பியவர்
எவராயினும்
சித்தரிக்க இயலா
சித்ரவதை யில்
நொடி பொழுதில்
உயிர் இழந்து
குப்பைகள் திணிக்கும்
பைக்குள்
குழிக்குள் இறக்கிய
பயங்கரம்
எந்த வாதம்?
என்ன இசம் ?
பதில் அளிக்குமா ?
பன்னாட்டு சபைகள்
சகிப்பு இழந்த மனிதம்
சதிராடும் தினம்
நேயம் மறந்த தேயம்
வீட்டில் சிக்கல்
விலகி நிற்கும்
அண்டை இல்ல
சிக்கல் ஆர்வம்
தூக்கும்
காகித விற்பனை போன்ற
ஆயுத விற்பனை
காயலாங்கடை வியாபாரம்
பங்குச் சந்தை பல் இளிக்கும்
பல்லாயிரம் கோடி குவிக்கும்
கிழக்கென்ன , மேற்கென்ன
தனி மனித வன் மம்
தாராள மயம்
நர வேட்டையாடும்
வே ட்டகம் தூக்கி
வெட்டியான் வேலை பார்க்கும்
இரட்டை நாக்கு தலைமை
எங்கெங்கு காணினும்
சனநாயக குல்லாய் அணிந்து
தேசியம், வாதம், பெரும்பான்மை
அரிதாரம் தரித்து
உள்ளூர் அரங்கம்
உலக அரங்கம் யாவிலும்
உரத்த குரல் எழுப்பும்
நலிந்தவர், நாடற்றவர்
செல்வம் யாவும் சுரண்டும்
ஆதிக்க அதிகாரம்
பல பரிமாணங்களில்
மி டுக்காய்
பவனி வரும்
'எதுவும் சதம் இல்லை.'
சலிப்பில் அம்மா சில வேளைகளில் உதிர்க்கும் வார்த்தைகள். யாரும் உதவி இல்லை, ஒத்தாசை இல்லை, அனுசரணை இல்லை என்ற அர்த்த தளத்தில், நான் புரிந்து கொண்டது.
அவர் அகராதியில் எண்ணற்ற சொல்லாடல்கள். அதிக படிப்பறிவு இல்லை. கையெழுத்து போடும் வரை அவருக்கு கல்வியறிவு.மற்றபடி, வாசிக்க அவருக்கு வாய்ப்பு இல்லை. அவரது வாசிப்பு யாவும், ஆய கலைகள் அறுபத்து நான்கில், முக்கியமான அறு சுவை அளிக்கும் சமையற்கலை எனில் அது மிகையன்று.
விருந்தோம்பல் முதல் இடம் பிடிக்கும் . விழுந்தடித்து, இருக்கிறதோ இல்லையோ எதையோ துரப்பி அரை நூற்றாண்டுக்கு மேலாக , சமாளித்த குடும்ப மேலாண்மை, MBA க்கு சமம்.
அம்மிக் கல்லும், ஆட்டுக் கல்லும், அரிவாள் மனையும், விறகு அடுப்பும், ஊதாங்குழலும் இன்னும் அவள் கைபட்டு மேன் மை அடைந்த பழைய நாள்களை அசைபோடும். ஓரங் கட்டப்பட்ட, தொல் பொருள் வரிசையில் சேர்ந்த இவை அவளின் இணை பிரியா ஒட்டு, உறவு என்று தான் நினைக் க தோன்றும்.
அறுபதை தாண்டிய வாழ்க்கையில் அசை போடும், பண்டைய நிகழ்வுகள், பசியா ற் றும் பதார்த்தம், பண்பு உணர் யதார்த்தம்.
வெட்டிய மின்னல்
கொட்டிய மழை
பா ளை நிலம்
பயம் கொள்ளும்
பெருக்கெடுத்த ஆறு
பெரு நிலத்தில் ஊறு!
கட்டிய கடை
முட்டிய விடை
முடிந்ததா கதை?
முடிவில்லா வதை
புவி வெப்ப நாசம்
இழப்பை
ஈடு செய்யும்
இயற்கை !
புரிந்து கொண்டோமா ?
பொல்லாங்கு
இழை மனிதம்
பொருள் வெறியில்
போட்டி நெறியில்
ஐம் பூதங்களை
அச்சுறுத்தும்
பெரு வணிகம்