Tuesday, April 23, 2024

சதம் இல்லை

 'எதுவும் சதம் இல்லை.' 

சலிப்பில் அம்மா சில வேளைகளில் உதிர்க்கும் வார்த்தைகள். யாரும் உதவி இல்லை, ஒத்தாசை இல்லை, அனுசரணை இல்லை என்ற அர்த்த தளத்தில், நான் புரிந்து கொண்டது.

அவர் அகராதியில் எண்ணற்ற சொல்லாடல்கள். அதிக படிப்பறிவு இல்லை. கையெழுத்து போடும் வரை அவருக்கு கல்வியறிவு.மற்றபடி, வாசிக்க அவருக்கு வாய்ப்பு இல்லை. அவரது வாசிப்பு யாவும், ஆய கலைகள் அறுபத்து நான்கில், முக்கியமான அறு சுவை அளிக்கும் சமையற்கலை எனில் அது மிகையன்று.

விருந்தோம்பல் முதல் இடம் பிடிக்கும் . விழுந்தடித்து, இருக்கிறதோ இல்லையோ எதையோ துரப்பி  அரை நூற்றாண்டுக்கு மேலாக , சமாளித்த குடும்ப மேலாண்மை, MBA க்கு சமம்.

அம்மிக் கல்லும், ஆட்டுக் கல்லும், அரிவாள் மனையும், விறகு அடுப்பும், ஊதாங்குழலும் இன்னும் அவள் கைபட்டு மேன் மை அடைந்த பழைய நாள்களை அசைபோடும். ஓரங் கட்டப்பட்ட, தொல் பொருள் வரிசையில் சேர்ந்த இவை அவளின் இணை பிரியா ஒட்டு, உறவு என்று தான் நினைக் க தோன்றும்.

அறுபதை தாண்டிய வாழ்க்கையில் அசை போடும், பண்டைய நிகழ்வுகள், பசியா ற் றும் பதார்த்தம், பண்பு உணர் யதார்த்தம்.

No comments: