Thursday, March 30, 2023

சேர்வதில்லை

 என்னை 

ஏன் அழைக்கவில்லை ?

என்ன நான் 

உழைக்கவில்லை ? 

உன்னை உயர்த்திக்கொள் 

தாழ்வில்லை. 

பிறரை தாழ்த்துவதில் 

உயர்வில்லை 

பெருமை அதில்

சேர்வதில்லை 

Wednesday, March 29, 2023

சித்தி ரவதை

 குற்றம் இழைத்தார் 

தளை செய்தார் 

தண்டனை பெற்றார் 

தனிமையில் உள்ளார்

பல் உடைப்பு 

ஏன்?

சொல் உடைப்பு

 சோர் ந்ததா ?

கல் உடைப்பு 

கழன்றதா? 

சீர் திருத்த க் கூடமா?

சித்திரவதை மாடமா?

Sunday, March 26, 2023

போன்றே

எக்காலமும் 

பொற்காலம் அன்று 

கற்காலம்

அதன் முற்காலம் 

இக் காலம்

போன்றே 

 

Friday, March 24, 2023

அடிவாரம்

 அதிக அதிகாரம்

அழிவிற்கு அடிவாரம்

அளவற்ற செல்வம் 

முடிவற்ற துயரம் 


Thursday, March 23, 2023

பாடு!

 குத்தினான் இங்கே!

குத்தவில்லை அங்கே !

குத்தமெ ல்லாம் எங்கே ?


இயலாமை உளவியல் 

இருவர் அறிவர்  


 அறிவான் அவன்

தவறிய இலக்கை 

 அறிவாள் அவள் 

தகு இலக்கை 


பட்ட வள் மனம் விட்டவள் 

அறி வாள் 

படுத்தியவன் குணம் கெட்டவன்

 அறிவான்

பாடு!


முள் சுமை

 உன் சுமை

உள் சுமை

முள் சுமை

கல் சுமை கன க்கும் 

கன த்துடன் கவனம்

கேட்கும்  

காயம் சேர்க்கும் 

பின் சுமை

இறக்கி வைக்க

இடமா இல்லை 

இயலாதது என்று

எதுவும் இல்லை

சுருக்கி நின்று

வாழும் எல்லை

சுடர் முகம் தந்தால்

விலகாதது இல்லை

இதம்

 அரிப்பும் அளவோடு 

இருப்பின்.........

உன் மேல்

 உன்னை நான் வாசித்தேன் 

ஓராயிரம் யோசித்தேன் 

என்னை நான் வாசித்தேன் 

இப்போதே யோசித்தேன்

தப் பேதும் ஏற்றாமல்

எப்போதும் உன் மேல் 

Thursday, March 16, 2023

பிணக்கு

 ஒரு நூல் வாசிப்பில் உள் வாங்கி வெளிப்பட்ட வரிகள்

இவ்வாறு,

விருப்பமில்லா  விருப்பங்கள்

திருப்பமில்லா திருப்பங்கள் 

அழுத்தமில்லா ஆசை கள்

பிடித்த மில்லா பிணக்குகள் 

சேர்ப்பாய்

 எதை நீ கே ட்டாய் 

இதை நீ கேட்பாய்

கருத்து கேட்பாய்

காதில் சேர்க்காய் 

விருப்பத்தில் வாழ்வாய்

விரும்பியதை சேர்ப்பாய் 

Wednesday, March 15, 2023

மப்பில்

 ஒப்புக்கு அழைத்தாய்

உப்புக்கு உழைத்தாய் 

தப்புக்கு பதித் தாய் 

தடம் 

மப்பில் மிதந்தாய் 

தவம்

 சூழலில் விலகி இருக்க

தேடினேன் காரணம்

அடுத்தவர் நலக் குறைவு

உதவுமா?

எண்ணினேன் 

எடுத்த அடி

பின் வாங்கினேன்

என் நோய்

ஏற்றினேன்

அமைதி உற்றேன்

தன் நோய் அறிவது

தவம் என்றறிந்தேன் 

Tuesday, March 14, 2023

விலகி நில்

 எந்த பொறுப்பும் வேண்டாம் 

சொந்த பொறுப்பு போதும் 

வந்த பொறுப்பு ஏ தும்

சொந்த பொறுப்பு ஆகா

வெறுப்பை உமிழும் அதிகாரம்

பொறுப்பில் அரங்கேறும்

அடையாளம்

ஒதுங்கி நில் ஓயும்

விலகி நில் வீ ழும்  

பார்வை

 தட்டில் 

உம் பார்வை

துட்டில் 

உம் சேவை 

கொட்டிக் கொடுத்தும்

கோணல்  நிமிரா

ஆலயம் 

உம் லாயம் 

வெல்வாய்

 பத்தாசையுடன் ஒத்தாசை

  கோருவாய் 

பணிவுடன் சே ருவாய் 

பணி முடிந்ததும் 

உதறிச் செவ்வாய் 

உளறி வெல்வாய் 


'மட்டிக் கள் '

 கிட்ட இருந்தேன்

தள்ளி நின்றாய்

தனியாய் சென்றாய்

தன்னதிகாரத்தில் நன்றாய்

எட்டினேன் 

முட்டி நிற்க ஆசையில்லை 

'மட்டிக் கள் ' மனிதர்

மனம் ஒப்பவில்லை 

Friday, March 10, 2023

ஊட்டம்

 உன்னை அறியார்

உண்மை புரியார்

தன்னை அறிந்தாரா?

தரவு இல்லை

வரவில் மட்டும் நாட்டம்

மற்றவர் மீது காட்டம் 

அச்சத்தில் ஆட்டம்

அரவணைப்பில் கூட்டம்

ஆளுமை என்று ஊட்டம் 

தரை க்கும்.......

 நிழலில் வில்லன் 

நிசத் தில் நாயகன் 

நிழலில் நாயகன்

நிசத்தில் வில்லன் 

திரைக்கு மட்டுமா?

இல்லை! இல்லை!

தரைக்கும் தான் 


Thursday, March 9, 2023

செழிப்பாய்

 அடுத்தவன் ,உழைப்பை 

உன தாக்காதே 

கொடுத்தவன்

 பொதுவிற்காய் 

உள்ளது யாவும் 

ஊரு க் காய்

உனக்கோ 

எனக்கோ 

அன்று

உணர்வாய்

உளறல்

விட்டொழிப்பாய் 

உள்ளதில் நில் 

செழிப் பாய் 

Tuesday, March 7, 2023

கூட்டி

 ஆய்வு செய்ய பணியா இல்லை ?

"மறந்த கடை", பல இருக்க 

மருந்து கடை 

விருந்து கடையாய் 

காட்சி ஊர்வலம் 

செய்தி சாளரம்

கைதி மனப்பான்மை 

கை தட்டல் பெருமை கூட்டி 

Friday, March 3, 2023

சே மமுற .

 அடிக்கடி வருவார்

அடுக்களை மே ய்வார். 

பருக்கையும் பழுதின்றி.

செருக்கின் சரக்கே ற்றி

சேம முற. வாழ்வார் 

பார்க்கலாம்

 வரும்போது பார்க்கலாம் 

வரிசையாய் கோர்க்கலாம்

தரும்போது கேட்கலாம் 

தம்பிடி சேர்க்கலாம் 

பரிமாணம்

 ஆணவமே ஆவணமாய்

அவிழ்  கோவணமாய்  

பேணவும் 

பெருமை வெறி 

நெறி யாய் 

காணவும் கூசும் 

கசடாய் 

பகட்டாய் 

பரிமாணம் 

சின்னம்.......

 "சின்னம் கெட்டுடும் "

சீற்றத்தின் குரல் 

சிறு வயதின் 

கேள்வி ச் செல்வம் 

பாரம்பரிய சின்னம்

எ துவாகும் ?

மனித சின்னமா?

வசிக்கும் கட்டட மா?

பாதுகாப்பு எதற்கு?

அங்கீகாரம் 

யாருக்கு?

புறமா? 

அகமா?

புதுக்கிடும் புகழ் மாலை 

பதுக்கிடும் பண்பலை



Thursday, March 2, 2023

ஒன்னு இருந்தா......

 "ஒன்னு இருந்தா ஒன்னு இல்ல"

 அம்மா சொல்லுவாங்க!

எது இருந்தா, எது இல்ல ?

நேற்றி ருந்தா, இன்றில்லை!

இன்றிருந்தா, நாளை இல்லை! 


இப்படி இருக்குமா?


மண்ணிருக்கு, மரமில்லை 

குளம் இருக்கு நீரில்லை


ஏரி  இருக்கு

மாரி இல்லை 


வயல் இருக்கு

பயிர் இல்லை 


மனிதன் இருக்கு

மனிதம் இல்லை