Sunday, April 28, 2024

செர்ரி

 இலைகள்

இழந்து

சருகும் சுள்ளி

காய்ந்து உலர்

கிளை

கொத்தும், கொம்புமாக

உடைத்தால் 

ஒடியும் நிலை

பரிதாபமாய்

நவம்பர் குளிரில் 

தாக்கு பிடித்து

சில மாதங்களில்

முதிர் அரு ம்பாய் 

கிளைகள் தோறும் 

முளைத்து

கிளைத்து 

வெண் பூக்கள்

பூத்து குலுங்க

தேனீ க்கள் 

குடும்பம்

குடும்பமாய்

கும்மாளம் போட 

தளிர் இலை கள் 

அங்கொன்றும் இங்கொன்றுமாய் 

தலையெடுக்க

பருத்தி ஆடை போர்த்திய 

மரம் 

வெடித்து சிதறாமல்

வெம்பி உதிராமல் 

வெண் புறா சிறகு

இழைகள்   கழன்று

சுழன்று புல் தரையில்

பொருந்திடும் 

அரத் த வண்ண 

பழங்களின் வரவின் 

முன்னோட்ட காய்கள் 

இலைகளுடன்

கொத்து கொத்தாய்

சத்தான , முத்தான 

பழங்களின் வரவை 

உறுதி செய்து 

புறாக்கள் கொரித்திட 

கரு நிற

 நீள் வால் குருவி

மஞ்சள் அலகில் 

சிட்டுக்கள் போட்டியில்

விருந்தாகும்

செர்ரி 


Saturday, April 27, 2024

முடியவில்லை

 எதையும் கூற முடியவில்லை 

ஏ ன்  என்று கேட்கவும் இயலவில்லை 

எங்கள் சூழல் இதுவே 

உங்கள் இருப்பும் அதுவே

கண்கள் பார்த்தும்

கருத்து இருந்தும்

வாய்கள் திறக்க தோ தில்லை 

வாய்ப்பும் 

வசம் சேர்வதில்லை

பார்க்கும் போது ஒன்று

பார்க்காத போது ஒன்று 

கேட்கும்போது ஒன்று 

கேளாத போது ஒன்று 

வாய்க்கும் மெய்க்கும் 

தொடர்பில்லை

வசதிக்கும் அசதிக்கும்

தொடர்பில்லை 


Friday, April 26, 2024

பதில் அளிக்குமா?

 புதை குழிகள் 

புகட்டும் 

வதை மொழிகள்

பொல்லாங்கு இழைத்திடும்

ஆயுத பலம் 

தன்னுரிமை காத்திட 

தன்னகம் காத்திட 

எதிர் குரல்

எழுப்பியவர் 

எவராயினும் 

சித்தரிக்க இயலா 

சித்ரவதை யில் 

நொடி பொழுதில் 

உயிர் இழந்து 

குப்பைகள் திணிக்கும்

பைக்குள் 

குழிக்குள் இறக்கிய 

பயங்கரம் 

எந்த வாதம்?

என்ன இசம் ?

பதில் அளிக்குமா ?

பன்னாட்டு சபைகள்


பவனி வரும்

 சகிப்பு இழந்த மனிதம்

சதிராடும் தினம்           

நேயம்  மறந்த தேயம் 

வீட்டில் சிக்கல் 

விலகி நிற்கும்

அண்டை இல்ல

சிக்கல் ஆர்வம் 

தூக்கும் 

காகித விற்பனை  போன்ற 

ஆயுத விற்பனை 

காயலாங்கடை வியாபாரம்

பங்குச் சந்தை பல் இளிக்கும் 

பல்லாயிரம் கோடி குவிக்கும்

கிழக்கென்ன , மேற்கென்ன 

தனி மனித வன் மம் 

தாராள மயம் 

நர வேட்டையாடும்

வே ட்டகம் தூக்கி 

வெட்டியான் வேலை பார்க்கும் 

இரட்டை நாக்கு தலைமை 

எங்கெங்கு காணினும் 

சனநாயக  குல்லாய் அணிந்து

தேசியம், வாதம், பெரும்பான்மை

அரிதாரம் தரித்து 

உள்ளூர் அரங்கம் 

உலக அரங்கம் யாவிலும்

உரத்த குரல் எழுப்பும் 

நலிந்தவர், நாடற்றவர்

செல்வம் யாவும் சுரண்டும்

ஆதிக்க அதிகாரம்

பல பரிமாணங்களில்

மி டுக்காய் 

பவனி வரும்


Tuesday, April 23, 2024

சதம் இல்லை

 'எதுவும் சதம் இல்லை.' 

சலிப்பில் அம்மா சில வேளைகளில் உதிர்க்கும் வார்த்தைகள். யாரும் உதவி இல்லை, ஒத்தாசை இல்லை, அனுசரணை இல்லை என்ற அர்த்த தளத்தில், நான் புரிந்து கொண்டது.

அவர் அகராதியில் எண்ணற்ற சொல்லாடல்கள். அதிக படிப்பறிவு இல்லை. கையெழுத்து போடும் வரை அவருக்கு கல்வியறிவு.மற்றபடி, வாசிக்க அவருக்கு வாய்ப்பு இல்லை. அவரது வாசிப்பு யாவும், ஆய கலைகள் அறுபத்து நான்கில், முக்கியமான அறு சுவை அளிக்கும் சமையற்கலை எனில் அது மிகையன்று.

விருந்தோம்பல் முதல் இடம் பிடிக்கும் . விழுந்தடித்து, இருக்கிறதோ இல்லையோ எதையோ துரப்பி  அரை நூற்றாண்டுக்கு மேலாக , சமாளித்த குடும்ப மேலாண்மை, MBA க்கு சமம்.

அம்மிக் கல்லும், ஆட்டுக் கல்லும், அரிவாள் மனையும், விறகு அடுப்பும், ஊதாங்குழலும் இன்னும் அவள் கைபட்டு மேன் மை அடைந்த பழைய நாள்களை அசைபோடும். ஓரங் கட்டப்பட்ட, தொல் பொருள் வரிசையில் சேர்ந்த இவை அவளின் இணை பிரியா ஒட்டு, உறவு என்று தான் நினைக் க தோன்றும்.

அறுபதை தாண்டிய வாழ்க்கையில் அசை போடும், பண்டைய நிகழ்வுகள், பசியா ற் றும் பதார்த்தம், பண்பு உணர் யதார்த்தம்.

Monday, April 22, 2024

முடிந்ததா?

 வெட்டிய மின்னல்

கொட்டிய மழை

 பா ளை நிலம்

 பயம் கொள்ளும் 

பெருக்கெடுத்த ஆறு 

பெரு நிலத்தில் ஊறு!

கட்டிய கடை 

முட்டிய விடை

முடிந்ததா கதை?

முடிவில்லா வதை 

புவி வெப்ப நாசம் 

இழப்பை 

ஈடு செய்யும் 

இயற்கை ! 

புரிந்து கொண்டோமா ?

பொல்லாங்கு 

இழை மனிதம் 

பொருள் வெறியில் 

போட்டி நெறியில்

ஐம் பூதங்களை 

அச்சுறுத்தும்

பெரு வணிகம் 

Thursday, April 18, 2024

சுயம்

 குரங்கு   மன ம் 

சிரங்கு குணம் 

தேயுது தினம்

தேடுது சுயம்