Friday, April 26, 2024

பதில் அளிக்குமா?

 புதை குழிகள் 

புகட்டும் 

வதை மொழிகள்

பொல்லாங்கு இழைத்திடும்

ஆயுத பலம் 

தன்னுரிமை காத்திட 

தன்னகம் காத்திட 

எதிர் குரல்

எழுப்பியவர் 

எவராயினும் 

சித்தரிக்க இயலா 

சித்ரவதை யில் 

நொடி பொழுதில் 

உயிர் இழந்து 

குப்பைகள் திணிக்கும்

பைக்குள் 

குழிக்குள் இறக்கிய 

பயங்கரம் 

எந்த வாதம்?

என்ன இசம் ?

பதில் அளிக்குமா ?

பன்னாட்டு சபைகள்


பவனி வரும்

 சகிப்பு இழந்த மனிதம்

சதிராடும் தினம்           

நேயம்  மறந்த தேயம் 

வீட்டில் சிக்கல் 

விலகி நிற்கும்

அண்டை இல்ல

சிக்கல் ஆர்வம் 

தூக்கும் 

காகித விற்பனை  போன்ற 

ஆயுத விற்பனை 

காயலாங்கடை வியாபாரம்

பங்குச் சந்தை பல் இளிக்கும் 

பல்லாயிரம் கோடி குவிக்கும்

கிழக்கென்ன , மேற்கென்ன 

தனி மனித வன் மம் 

தாராள மயம் 

நர வேட்டையாடும்

வே ட்டகம் தூக்கி 

வெட்டியான் வேலை பார்க்கும் 

இரட்டை நாக்கு தலைமை 

எங்கெங்கு காணினும் 

சனநாயக  குல்லாய் அணிந்து

தேசியம், வாதம், பெரும்பான்மை

அரிதாரம் தரித்து 

உள்ளூர் அரங்கம் 

உலக அரங்கம் யாவிலும்

உரத்த குரல் எழுப்பும் 

நலிந்தவர், நாடற்றவர்

செல்வம் யாவும் சுரண்டும்

ஆதிக்க அதிகாரம்

பல பரிமாணங்களில்

மி டுக்காய் 

பவனி வரும்


Tuesday, April 23, 2024

சதம் இல்லை

 'எதுவும் சதம் இல்லை.' 

சலிப்பில் அம்மா சில வேளைகளில் உதிர்க்கும் வார்த்தைகள். யாரும் உதவி இல்லை, ஒத்தாசை இல்லை, அனுசரணை இல்லை என்ற அர்த்த தளத்தில், நான் புரிந்து கொண்டது.

அவர் அகராதியில் எண்ணற்ற சொல்லாடல்கள். அதிக படிப்பறிவு இல்லை. கையெழுத்து போடும் வரை அவருக்கு கல்வியறிவு.மற்றபடி, வாசிக்க அவருக்கு வாய்ப்பு இல்லை. அவரது வாசிப்பு யாவும், ஆய கலைகள் அறுபத்து நான்கில், முக்கியமான அறு சுவை அளிக்கும் சமையற்கலை எனில் அது மிகையன்று.

விருந்தோம்பல் முதல் இடம் பிடிக்கும் . விழுந்தடித்து, இருக்கிறதோ இல்லையோ எதையோ துரப்பி  அரை நூற்றாண்டுக்கு மேலாக , சமாளித்த குடும்ப மேலாண்மை, MBA க்கு சமம்.

அம்மிக் கல்லும், ஆட்டுக் கல்லும், அரிவாள் மனையும், விறகு அடுப்பும், ஊதாங்குழலும் இன்னும் அவள் கைபட்டு மேன் மை அடைந்த பழைய நாள்களை அசைபோடும். ஓரங் கட்டப்பட்ட, தொல் பொருள் வரிசையில் சேர்ந்த இவை அவளின் இணை பிரியா ஒட்டு, உறவு என்று தான் நினைக் க தோன்றும்.

அறுபதை தாண்டிய வாழ்க்கையில் அசை போடும், பண்டைய நிகழ்வுகள், பசியா ற் றும் பதார்த்தம், பண்பு உணர் யதார்த்தம்.

Monday, April 22, 2024

முடிந்ததா?

 வெட்டிய மின்னல்

கொட்டிய மழை

 பா ளை நிலம்

 பயம் கொள்ளும் 

பெருக்கெடுத்த ஆறு 

பெரு நிலத்தில் ஊறு!

கட்டிய கடை 

முட்டிய விடை

முடிந்ததா கதை?

முடிவில்லா வதை 

புவி வெப்ப நாசம் 

இழப்பை 

ஈடு செய்யும் 

இயற்கை ! 

புரிந்து கொண்டோமா ?

பொல்லாங்கு 

இழை மனிதம் 

பொருள் வெறியில் 

போட்டி நெறியில்

ஐம் பூதங்களை 

அச்சுறுத்தும்

பெரு வணிகம் 

Thursday, April 18, 2024

சுயம்

 குரங்கு   மன ம் 

சிரங்கு குணம் 

தேயுது தினம்

தேடுது சுயம் 

Thursday, March 14, 2024

நான்

 'எதுவும் நிரந்தரம் இல்லை

என்றார் ' ,ஒருவர்

'நிரந்தரம் என்பதும்

நிரந்தரம் இல்லை'

என்றேன்,

நான் 

Thursday, February 15, 2024

தாளி

 மூக்கைத் துளைக்கும்

தாளி ப்பு

முணகல் போக்கும் 

தாளிப்பு

அடைப்பை நீக்கும்

தாளிப் பு

சமயலறை சுவாசிப்பு

Tuesday, January 30, 2024

போச்சு

கடு கடு முகம்

கனி வுடன் முரண்

சிடு சிடு முகம் 

சினத்துடன் அரண்

வெடு வெ டு பேச்சு

வெல வெலப்பு மூச்சு

வேண்டியது போச்சு

Sunday, January 28, 2024

சகிப்பு

 சகிப்பு த் தன்மை அறிந்த நாம், அதன் வழி செல்வதில் தடுமாற்றங்கள் பல. எளிதில் விலகுவது, நியாயம் கற்பிப்பது அதிகம். சற்று நிதானித்து நின்று யோ சித்தால் அதன் அர்த்தம், மதிப்பு விளங்கிடும்..

குடும்பம் தொடங்கி, சமூக வாழ்க்கை வரை ஒரு நெடிய போராட்டம் ஊடே நகர வேண்டிய அவசியம் இந்த உணர்வு மனிதர்களிடையே நிலைப்பதற்கு, அதன் படி அவர்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு அத்தியாவசியம்.சமூக நல்லிணக்கத்தை சாதிக்கும் அருங் கருவி சகிப்புத் தன்மை ஆகும்.

பொறை யுடமை குறித்து வள்ளுவம் பகர்வதும் இது குறித்து தான்.மனப்பாடம் அளவில் தேர்வோடு நின்று போன விழுமியங்களில் இதுவும் ஒன்றாகும்.

உலக அரசியல் களத்தில் கூட இது, அருகி வரும் பண்பாக நிலவுகிறது. கள முனைகள் அரங்கேறி, வளங்களை அழித்து ,உயிர்களை இலட்சக்கணக்கில் கொள்ளை கொள்ளும் அளவிற்கு கடுமையான  போக்கிற்கு விரைவாக செல்கிறது.

நியாயம் கற்பிக்கும் பாடங்கள் பல சாதி, சமய, மத, பொருளியல் கோணங்களில், பல உலக மன்றங்களில் வைக்கப்படுகின்றன.


Saturday, January 27, 2024

இல்லை!

 எட்டி இருந்தேன்

எட்டி இல்லை

சுட்டி இருந்தேன்

சூ து இல்லை

கட்டி இருந்தேன்

கவடு இல்லை

முட்டி இருந்தேன்

மூ டம் இல்லை 

வெட்டி இருந்தேன்

வெறுப்பு இல்லை