Saturday, February 25, 2023

பேசுவார்

 பெருமை பேசுவார்

நாளும் 

அருமை ஏசுவார்

சிறுமை உணரா 

சிந்தனை மேல்

செல்வார்

நிந்தனை கொள்வார்

நித்தம் சத்தம் செய்வார் 

எழலாமா

 எதிர்ப்புணர்வு

எதிரி உணர்வாகுமா ?

விருப்புணர்வு உதிரி

உணர்வா?

சகிப்புணர்வு சமாதான 

உணர்வாயின்

சரி சமம்

எவருக்கும் 

சந்தேகம் எழலாமா?

Friday, February 17, 2023

நில நடுக்கம்

 பிளந்த நிலம் 

குலைந்த கட்டடங்கள் 

தவித்த உயிர்கள் 

நொடியில் பொடியாகி 

வெடிப்பில் புதைந்தன 

அரசும் அதிகாரமும் 

ஆளாய்ப் பறக்க

ஆ க்கினை செய்திட

அணுகவும் அச்ச த்தில்

திகைப்பில், 

திகிலின் பிடியில்

ஆயிரக்கணக்கில் 

" தாயின் மடியில்"

குழந்தையாய். 

நிலத்தாய்  கரம் நீட்டி

தன்னுடல் சேர்த்தது 

குற்றுயிரும் , குலை உயிருமாய் 

சிரியாவில், துருக்கியில்

மனித சோகம்

மலை உயரமாய் 

நினைவும் , கன வாய் 

கை நழுவி 

இதுவும் செய்தியாய் 

வழக்கமான 

ஏற்பாடுகளில் 

கற்ற பாடம் 

கற்கும் பாடம் 

கால வெளியில் 

கானல் வரியாய் ........





Thursday, February 9, 2023

".......... பிழைத்திருக்கட்டும்

 ஓடாத சாக்கடை 

கூட்டாத குப்பை 

கூட்டல் பெருக்கல் 

குலவிடும்

கொசுக்கள் 

ஒடுக்கு வீழ்ந்த   

பாத்திரமும் 

ஓரம் ஒதுங்கிடும் 

குறுக்கு ,நெடுக்கு 

சாலைகள் 

புழுதி ஆ லைகள் 

சுவாசக் குழாயை

சூ டாக்கிடும் தினம்

நுகர்ச்சி நரம்புகள்

சுரம் இழக்கும் 

தந்திக் கம்பி அறு ந்த 

தாள மாய் 

"தடுப்பு சமூக மருத்துவம்"

தனியாரிடம் 

சந்தை விரிக்கும் 

பொறுப்பு எனக்கில்லை 

"தகுதியான வை பிழைத்திருக்கட்டும்"

Tuesday, February 7, 2023

முட்டுக்கட்டை

 முட்டுக் கொடுத்தேன் 

முட்டி  தே ய்ந்தே ன் 

முடக்கு கட்டை யல்ல

இடக்கு கட்டையுமல்ல

ஆட்டம்

அடக்கு கட்டை 


Sunday, February 5, 2023

தூக்கம் கலைத்து

 விழுந்தாய்  விழுந்தேன் 

தடுக்கினாய் தளர்ந்தேன்

சறுக் கினாய் இறுக்கமானே ன் 


குளிக்க வைத்தேன்

களிக்க நடந்தேன் 

சிறு நடை லயிப்பில்

பிஞ்சு கைப் பிடித்து 

பள்ளிக்குச் செல்லும் பாதை 

நெடு கில் 

பல கதை பேசி

 இணையாய் 

எம் பாலப் பருவ நினைவுகளில் 

கரைந்து 


பல பழைய விளையாட்டுகள் 

நானும், அவளும்

 நாள் தோறும்

மொட்டை மாடிக்கும் 

சிறகு முளைத்து

ஓடியாடி காலம் 

கழித்தோம் 


நினைவில் நிறுத்தி தொலைவில் 

சென்றாய் 

தேங்கிய நினைவுகள் மனதில் 

எம்மைத்தேட 

விலகிய வெளி நீண்டு 

ஏக்கம் சேர்த்து

தூக்கம் கலைத்து 




வேட்கை

 எண்ணம் ஆயிரம்

ஓட்டத்தில் 

எழுத்தில் விலகி 

தோன்றும், மறையும் 

சுழல் 

தொடங்கிய இடத்திலே

மீண்டும்

நாள், பகல், இரவு

நகரும், விரையும் 

வேட்கையில் 

Saturday, February 4, 2023

விலகும்

 புரியா கலகம்

புதிர் போடு

விலகும் 

சிறக்கும்

 எதற்கோ அச்சம்

என்ன அதில் 

மிச்சம் 

தொடர்பில்லை 

அதற்கும்

இதற்கும் 

என்றாலும்

நிற்கும் 

என்னவாகும், ஏ தாகும்

என்கின்ற கிறக்கம்

இப்படியே காலம் 

சிறக்கும் 

நீ யும்....

 நீயும்

பாடப் பொருளாய்

மனதின் பகுதியாய்

மயக்கும் பொழுதாய் 

மையம் சேர்க்கும்

மாயம் விலக்கும் 

அழுத்தம்

 தாளிட்ட கதவு 

இருக்கிறேன் உள்ளே

அறிந்தும் அவசரம்

தட்டினாய்  

தவித்தாய்

ஆட்டினாய் தாழ்ப்பாள்

அவசரம் கூட்டினாய்

இருந்தும் இருக்காமல் 

அழுத்தம் எம்மீது 

ஏற்றினாய் 

இலயம்

 தட்ப வெப்ப வீழ் ச்சி 

மூடணி, குளிராடை

பூட்டி 

கையுறை சேர்த்து 

குல்லா மனிதராய் 

இன்னியங்கிகளில் 

இளி முகத்துடன்

வாழ்க்கை ப் பயணம் 

நீளும் 

நாளும் 

சுருதி சேர் 

இலயத்துடன் 


தி டமா

 உன்னைச் சுற்றி ஊர்

வலம் வா 

இடம் வா 

தினம் வா 

திடமா 


வேண்டிய வரம்

 மாறிய சூழல்

தேறிய நலம் 

கோரிய பலம் 

கூடிடும் வளம்

அயலகச் செலவில் 

ஆனந்தம்

ஆண்டுகள் மூன்று 

கழிந்த பின்

வேண்டிய வரம்

சுகமாய்

உன்னை சுமந்தேன் 

அவளை சுமந்தேன்

திண் தோ ள் வசமாய் 

உன் மகளை சுமந்தே ன் 

அவள் மகனையும்

' திணை த்தோ ள் ' 

சுகமாய்


Friday, February 3, 2023

இல்லை

 படித்தேன் ஆயினும்

பிடித்தேன் இல்லை 

பிடித்தேன் ஆயினும்

வைத்தேன் இல்லை 

வைத்தேன் ஆயினும்

உணர்ந்தேன் இல்லை 

அங்கும் இங்கும்

 அங்கிருந் தால் இங்கிருக்கும் 

இங்கிருந் தால் அங்கிருக்கும் 

இருண்ட அகம் 

இரண்டகம் 

மிரண்ட அகம் 

மிரண்டகம்  

Thursday, February 2, 2023

எது ?

 கொடுப்பது அரிது

எடுப்பது  எளி து

எவர் கொடுப்பார் ?

எவர் பெறுவார் ?


உடுப்பது, உண்பது 

இருப்பது , இயல்வது 

தடுப்பது எவர்?

தடந்தோள் செய் 

சமர்

விடுப்பது, வீழ்வ து

மடுப்பது யார்? 

கடுப்பெது, கன வெது?

கனவின் பொருள் 

எது?


Wednesday, February 1, 2023

குளிர்

 ஏக்கங்களின்   பிடியில்

தூக்கம் 

ஏதேதோ கேட்கும் 

நோக்கம் 

புரியாமல் விழிக்கும் 

முழிக்கும் 

வைகறை க் குளிரில் 

வண்டு

 நிரப்பிட பக்கம் உண்டு

நீன்டிடும் எண்ணம் கொண்டு

பரப்பினுள் படரும் வண்டு 

பரவசம் தன்னகம் கொண்டு 

தொடர்ந்திடும் 

தோட்டம் கண்டு 

தோதான மலர்கள் 

மொண்டு