Tuesday, November 21, 2023

என்ன?

 ஓடிக் கொண்டே இரு

ஓட்டிக் கொண்டே இரு

உருண்டு கொண்டே இரு

உருட்டிக் கொண்டே இரு

இருத்தல் தேவையில்

இருள் என்ன ?

பகல் என்ன ?

முதல் என்ன ?

முடிவு என்ன ?

Sunday, November 19, 2023

இலையுதிர் காலம்

 அடை மழை ஐப்பசி

கழிந்தது

கார் கால கார்த்திகை

புலர்ந்தது

உறவு அழைக்க

வானூர்தி பயணம்

இலையுதிர் காலம்

வரவேற்பில்

இனிமை சேர்ந்த்திட்

குளுமை கூடிட

Sunday, November 12, 2023

செம்புலம்!

 சிந்தும் குருதி-

சிவப்புதான்

எவருக்கும் !


குழந்தைகளை கொல்வது

உயிர்த்திடும் குழவிகளை

மருத்துவ 

மனைகளில் 

சிதைப்பது


காக்கும் மருத்துவன் -

பொதுவானவன் 

புரிபவனுக்கும் 

 படுபவனுக்கும் 


அவனையும்

ஒழிப்பது  சரியா ?

நெறியா?


அறம் -

மனிதத்தின் அடிப்படை ப் 

பண்பு

மார்க்கத்திற்கு  மார்க்கம் 

மாறும் விழுமியமன்று !


" மற த்திற்கும் 

அன்பே துணை" 


கொல்லும் சினம்

 கொள்கையாக 

 கோலோச் சும்

 அதிகாரம்   !


சகிப்பின்மை சக்கரத்தில்

 திசை திருப்பும் 

ஆயுத பலத்தில்

 நியாயம் பேசும்


 உலகம் 

பேச்சளவில் 

உதட்டளவில்


உண்மை தடுமாறும் 

மன்றங்களில் 

மல்லாடும் 


அடுக்கடுக்காய் 

உயிர்கள்

பலியாகும்


வறண்ட தேசம்

நிறம் மாறும்

செம்புலம் சேர்க்கும்


நொடி தோறும் 

வெறி

வெடியில் 

நெறி பிறழும்.........


Friday, November 10, 2023

நியாயம்

 கற்பி

நியாயம் ?

அடிக்க, அழிக்க....

ஒடுக்க, ஒழிக்க.....

நசுக்க, பொசு க்க ....

நாளெல்லாம் வெடிக்க.......

நாகரிக  சமூகம் 

நகாசு வேலை

போரின் சித்தரிப்பு

அழிப்பு வேலை

உயிர் உற்பத்தி

 விஞ்சும்

எல்லை கடந்து 

தொல்லை சேர்க்கும்


பக்கம்

 ஒரு பக்கம்

மறு பக்கம்

எத்தனை பக்கம் ?

உந்தன் பக்கம்

எந்தன் பக்கம் 

Thursday, November 9, 2023

 மனிதம் இருக்கிறதா?

கேள்வி எழும்

ஒவ்வொரு முறையும்

பிஞ்சுகள்

உதிரும் போது

கந்தக நெடியில்

கால வெளியில் 

கரை கடந்து

நுரை பொங்கிடும்

பகை யுணர்ச்சி! 

நெருக்கிடும் போராட்டம்

எல்லைச் சிறைகள்

தாண்டி

உலுக்கிடும் 

ஆதிக்க சக்திகளை 

மார்க்கம் யாவும்  நேயமே ?

Saturday, November 4, 2023

ஊர்வலம்

 நியதி, நீதி

எ வருக்கு ?

அடிப்பவனுக்கு 

இல்லை

பட்டவனுக்கே 

சொந்தம்

வலியும், கிலியும்

துன்பமும், துயரமும்

இருந்த இடம் இழந்த போதும்

இருக்கும் இடம் போதும் போதும்

மறைந்த இடம்  மறந்த போதும்

மக்கள் வாழ்வில் இருந்தால் போதும்

காலியான வாழ்க்கையில் கூலியாக

குண் டி நனைந்தால் போதும் போதும்

துரத்தும் துயரம் நூறாண்டு சந்ததிகள்

சகதியில் சதி வலையில் ஆதிக்க சக்திகள்

அடிமைப்படுத்தும் வாழ்க்கை எம்மிடம்

இல்லை

ஒருக்களித்தே  ஒண்டி வாழும்

புலமும் புழுதியாயிற்றே!

போரின் பிடியில்

ஊரும் உறவும்  சிதைந்து

இயற்கையின் இறக்கமும்

எட்டிப் போக

வன்மம்  கோ லோ ச்ச

வக்கிரம் உக்கிரம் அடைய

வாய்மூடிடும் உலகம் 

வாய்க்கரிசி வண்டி, வண்டியாய்

நிவாரண பதாகை  ஏ ந்தி 

நித்தில ஊர்வலம் 

தவறல்ல

 படைப்பின் தவறல்ல

தவறி ன் படைப்பு

வளர்ப்பின் தவறல்ல

தவறின்  வளர்ப்பு