Saturday, May 18, 2024

சொல்

 சொல் 

அதன்படி நில்

 செல்

அதன் அடி  சொல் 


அடி மேல் அடி

செயல்

ஆழ்ந்து அறிந்து

முயல் 

அனுபவத்தின்

இயல்

நாசம்

 யானையைப் பிடித்த மதம்

யாரைப் பிடித்தாலும் ......

Thursday, May 16, 2024

இதுவென....

 இங்கிருந்தால் அங்கிருக்கும்

அங்கிருந்தால் இங்கிருக்கும்

எங்கிருந்தாலும் 

ஏ க்கம்

 கூ டியிருக்கும்

தூக்கம் தொலைந்து 

இருக்கும்

துன்பம் சூழ்ந்திருக்கும்

இன்பம் இடையிடையே

மின்னல் போல் 

சன்னல் திறக்கும்

இன்னல் இருள் போக்கும்

இயல் வாழ்க்கை 

இதுவென காட்டும்.

Monday, May 13, 2024

இல்லை

 தெரிந்தும் பலன் இல்லை

தெரியாமல் முடிவு இல்லை 


அறிந்தும் அறிவில்லை

அறியாமல் ஆவதில்லை


உணர்ந்தும்  உயரவில்லை

உணர்ச்சியில் புரியவில்லை 


ஏமாந்தும் புரியவில்லை 

ஏ ன் என்று விளங்கவில்லை 


பகையும் வெளியில் இல்லை

புகையும் நெருப்பும் வேறில்லை


தெரியாமல் விளைவு இல்லை 

தெரிவதும் தொலைவில்  இல்லை 


என்னை புரிந்து கொள்

உன்னை புரிந்து கொள் 

உள்ளதை புரிந்து கொள்

உண்மையை புரிந்து கொள்


இருப்பதை ஏற்று

இருப்பை வைத்து

பொறுப்பை சுமத்தி


Sunday, May 12, 2024

குடும்பம்

 தனி மனித சுதந்திரம்,  ஒரு கோணத்தில் பார்த்தால் ,குடும்ப அளவிலேயே முதலில் அடி வாங்குகிறது, கட்டுப் படுத்தப் படுகிறது என்று கூறலாம்.

இதை செய்யாதே, அதை செய்யாதே; இங்கு செல்லாதே,; அங்கு செல்லாதே. நாங்கள் விரும்புவதை  நிறைவேற்று என்று குழந்தைப் பருவம்  முதல் ,குமரப் பருவம் வரை திணிக்கப்படும்  நெருக்கடி. திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது  என நீண்டு இந்தப் பட்டியலில் சேரும் கூடுதல் அம்சம். 

கூட்டுக் குடும்பத்தில்  , பிரதமர் போல சர்வ வல்லமை அதிகாரம் செலுத்தும் தந்தை, எதையும் செயல் படுத்த,முடிவு செய்ய முடியும். குழந்தைகள் உரிமை, பெண்ணுரிமை இவையாவும், , இழந்து விட்டதைப் பிடிக்கும் , சலுகை வேண்டும் முயற்சியே ஆகும்.

  அரசாங்கம் நிபந்தனைகள் போடுவது ஒரு புறம் இருக்க, . குடும்ப உறவின் உளவியல் என்பதே விருப்பத்தை இழப்பது, விட்டுக் கொடுப்பது என்னும் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு. அதை மதிப்பீடாக தொகுத்து நிலை நிறுத்தி விட்டது.

இதில் பல எதிர்ப்புக் குரல் சனநாயகம் வேண்டி,குடும்ப அமைப்பிற்குள் பன்னெடுங்காலமாக, தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருப்பதைஅறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு கட்டத்தில் அவை கலகக் குரலாக, அதிகாரத்தை எதிர்க்கும் சக்தி யாக,               ஒடு க்கப்பட வேண்டிய, கட்டுக்குள் வைக்க வேண்டியதாக இனம் காணப்படுகிறது.

விதிமுறைகள், ஒழுங்கு இயக்க முறைமை குடும்ப  நிர்வாகத்தில் பொதுவாக கையாளப்படும் என்றாலும், நுட்பமாக அதிகாரம் செலுத்தும் முறை சனநாயக த் தன்மையில் இருந்து விலகி, ஆளுமை அதிகாரம் செலுத்தும் ஏற்பாடாக விளங்கி வருகிறது.

ஒரு வேளை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின்

நுண்ணியல் கூறாக குடும்ப அமைப்பை புரிந்து கொள்ள முடிகிறது .


Thursday, May 9, 2024

ஆடும்

"நீ!  ரொம்ப கெட்டு விட்டாய்"

 விழும் சவுக்கு 
சண்டி குழந்தைக்கு

ஒண்டிக் குழந்தையை 
உயர்த்திய வாய் 
ஒய்யாரமாய் குலவிய 
வாய்

கண்டிப்பில் 
களம் ஆடும்

கலங்கி நிற்கும்
பாட்டி  மனம்

பிடி

 குரங்கு பிடி என்பார்

குழந்தை பிடி 

எப்படி?

விரல் சப்பும் பருவம்

பிடிக்குள் நம் விரல்

அவர் துணி யாவும்

குழவியிடம் 

பிந்தும் 

மந்தி 

Tuesday, May 7, 2024

விக்கும்

 பேச தெரிந்தவன் நீ !

பேசாமல் இரு

கூசாமல் சேரும் 

குறை


பேசுவது பிழையே

சில  நேர்வில் 

படும் பொருள்

உடன்பாட்டில் ஏற்பு

ஈர்ப்பு

முரண்பாட்டில்

முட்டல்.  

முனகல் 


பொத்திய வாயாக

கத்திய வாய்.

கதவடைக்கும் 

கலங்கி விக்கும்



ஊடும் ,உறவும்  

பாவும் ,கரவும் 

தறியாடும்

வாழ்க்கை நெசவில் 



கணக்கன்

 கணக்கில் சுழி

கல்வியில் கழி

தே றா  மொழி 

பிறன் பயன் 

கொள்வதில்

  கொழி