Saturday, November 29, 2025

நேற்றிரவு கோழிக் குஞ்சுகள்

 ("சேக் பிரிளுட்சுகி" ஆங்கில கவிதை 

 "Last Night I Dreamed of Chickens"

மொழியாக்கம்)


நேற்றிரவு  

கனாக் கண்டேன்  

எங்கெங்கு காணினும்

கோழிக் குஞ்சுகள் 

 வயிற்றின் மீது 

தலை முடி கூடாக

தலையணை மீதமர்ந்து

 தத்தி, தத்தி , தலை மேல்

சிறகுகள் கோதி 

 படுக்கை அருகே

 ஓடியாடி


நாற்காலிகள், மேசை மேல் ,

தொங்கும் சர விளக்கில்,

மூலைகளில் ஓய்வாய் குந்தி ,

என்  செவிகளில்

மென் குரல் எழுப்பி,

கோழிக் குஞ்சுகள், கோழிக் குஞ்சுகள்,

 கோழிக் குஞ்சுகள் , எங்கெங்கும் .......

நான் காணும்  தொலைவு வரை 

துயில் எழுந்து கண்டேன்

 இன்று 

என் மீது முட்டைகள் 


Monday, November 24, 2025

வெட்கமில்லையா நமக்கு?

 Isn't that shameful for us ?

Ayyappa Paniker,  கவிதை 

 மொழியாக்கம்


இரவில் அடுக்களையில்

வைத்திருப்பாய் சிறிதளவு

உணவு


ஒரு வேளை

அக் கள்வன் வந்திருந்தால்

பசியுடன்

உணவு காணாது

சினம் கொள்வான்

கடந்திருப்பான்

களவாடாது


அது நமக்கு வெட்கமில்லையா?

Thursday, November 20, 2025

நாங்கள் அகதிகள்



(" We Refugees" , பெஞ்சமின் செபெனியா,

மொழியாக்கம்)

இசை ஊரில் இருந்து

 நான்

 பாடல் நிகழ்ச்சி

 படப்பிடிப்பில்

உடன் பிறப்பு  

வ தையின் பிடியில்

ஆயினும்  அவர் 

எம் நிலத்தில்


எழில் கொஞ்சும் ஊரில் இருந்து

 நான் 

மேனியின் நிறம் வெறுக்கும்

 மக்கள் 

அங்கே

நான் வழிபடும் முறை

 விரும்பார் 

விடுதலைக் கவிதை

 தடை செய்வார்

Sunday, November 16, 2025

இன்றிரவு உறங்கும் யாவரும்

 "All you who sleep tonight", Vikram Seth 

கவிதையின் மொழியாக்கம்.


இன்றிரவு உறங்கும் யாவரும் 

விரும்பியவரை விட்டு விலகி 

வெகு தொலைவில்

இடமோ, வலமோ யாரும் இல்லை 

வெறுமை மேலே _


அறிவீர் நீங்கள் யாரும் தனியே இல்லை 

இவ்வுலகு  உம் துக்கத்தை பகிர்ந்து

 கொள்ளும்

சிலர் ஓர் இரவு அன்றி ஈர் இரவு

மேற் சிலர் காலம் முழுவதும் 

Thursday, November 13, 2025

மூவுலகிலும்....

 

இருப்பதை இடி !

பறப்பதை பிடி!


நினைத்ததை முடி!

மறந்ததை படி!


சொன்னதை மற !

மறந்ததை நினை!


பிறந்தது மறை !

சேர்ந்தது திரை !


பிடிப்பது உரை !

முடிப்பது சிறை!


முன்னேற்ற

 தடை!

மூவுலகிலும் கறை......



Tuesday, November 4, 2025

நீயும் வந்தாய்

 

நிக்கி ஜியோவென்னி

"You came,too"- மொழியாக்கம்.


நண்பர்களைத் தேடி  கும்பலில் நான்

அன்பைத் தேடி கும்பலில் நான் 

புரிதலுக்காக கும்பலில் நான் 


கண்டேன் உன்னை


அழுவதற்காய் கும்பலில் நான் 

நகைப்பதற்காய் கும்பலில் நான் 


என் கண்ணீரை வற்ற வைத்தாய் நீ

Tuesday, October 28, 2025

அடி

 


எழுது,எழுது

எழுத, எழுத நீங்கும் 

பழுது 


படி, படி

படியாய் படி

படிப்படி விலகும்

மடி 

Monday, October 27, 2025

முதுமையில் காதலர்

 (Lovers in old age, கவிதை, 

காலின் அயன் செப்ரி , 

மொழியாக்கம்)



முதுமை ,  உணர்ச்சி ஓட்டம் குறைக்கும்

குருதி சூடாவதில்லை

நினைவும், கனவும் ஏங்கி  காத்திருக்கும் பொழுது 

அம்மண உடல்கள் ஒன்றாய் இணை பொற்காலம் அவை

அன்பு, முத்தம், தழுவல், உணர்ச்சி, எழுச்சி , விருந்தில் புலப்படும் பொழுது

பருவ நிலை இன்பங்கள் பகிர்ந்து உம்மோடு ,

என் அன்பே!

காலங்கள்  விஞ்சவில்லை ,உணர்ச்சி ஆளுமை நாட்களில்

காதல் செய்தோம், சமயம் நேரும் போதெல்லாம், தனிமையில்

ஒன்றிணைய தேவையற்ற இப்பொழுது, குருதி பந்தய விசையில் இல்லை

இரவு வணக்கம் முத்தத்துடன் முடியும், விருப்ப வெளிப்பாட்டுடன்

இரவின் அமைதியில் துயில்வோம்

காலை விழிப்பில் முத்தத்துடன் மீண்டு.


Saturday, October 25, 2025

அது !

 

படிப்பது, நடிப்பது 

நடிப்பது, படிப்பது

துடிப்பது, துவல்வது 

முடிப்பது, முயல்வது

வெடிப்பது, வெம்புவது 

தொடுப்பது, தோற்பது

கொடுப்பது, எடுப்பது

எடுப்பது, ஏற்பது

விடுப்பது, வீழ்வது 

Friday, October 24, 2025

காமமும், ஞானமும்


(முனைவர்.அந்தோணி தியோடர்.

மொழி பெயர்ப்பு கவிதை.)


பாலியல் அம்ச இ யங்கா நிலை 

என்றாகிலும்  சிந்தித்தது உண்டா?

 நீ

பாலியல் காதல் 

ஆன்மிக புலம்,

விந்தை வசீகரம்

  புத்தொளி

அளி

 ஆய்வு செய்

Thursday, October 16, 2025

ஈடு உண்டா?

 

மருந்து உற்பத்தி

மனசாட்சி விற்பனை

இருமல் மருந்து 

பிஞ்சுகளின்

இறுதி மருந்தானேதே!

 மத்திய பகுதியில் 

இராசசுத்தானில் 

அறம் பிறழ் வணிகம்

பொருள் குவி வேகம்

ஆய்வு எங்கே?

சாய்ந்ததா?

தரம், கட்டுப்பாடு 

சமரசம் ஆனதா?

உயிர் இழப்பிற்கு

ஈடு 

உண்டா?



Tuesday, October 14, 2025

இன்றிரவு உறங்கும் அனைவருக்கும்

 (விக்ரம் சேத் கவிதை , "All you who sleep tonight", மொழி பெயர்ப்பு)


நீங்கள் அனைவரும் உ றங்குங்கள்

விரும்பியவரை விட்டு விலகி வெகு தொலைவில்

இடது பக்கமோ , வலது பக்கமோ யாரும் இல்லை 

வெறுமை மேலே


நீங்கள் யாரும் தனியாக இல்லை அறிவீர்

முழு உலகும் உமது கண்ணீரில் பங்கு கொள்ளும்

சிலர் இரண்டு இரவுகள் ,அன்றி ஓர் இரவு 

சிலர் அவர்கள் காலம் முழுவதும் 

Monday, October 13, 2025

வாழும் நரகம்



 ( டோர் சே பேக்கர்,  Living Hell,  மொழி பெயர்ப்பு)

உலகம்

 ஒரு கொடுங் கனவு ஆயின்

அது 

ஒரு வாழும் நரகம் ஆகும் 

உலகம் 

கொடுங் கனவு ஆயின் 

உனக்கு 

நன்கு விளங்கும்

அது ஒரு நரகம் 

உம் முகத்தின் 

மீது தவழும் 

நகையாகும் 

Friday, October 10, 2025

எவர்க்கும்

 

வகுப்பும் வாதமும்

தொகுப்பு வேதமும்

தொடர் பேதமும்

வளர்ந்தான் இல்லை

வளைந்தான் இல்லை

உணர்ந்தான் இல்லை

உயர்ந்தான் இல்லை

உள் அளவில்

உள் உணர்வில்

சேர்ந்தான் இல்லை

வாழ்ந்தான் இல்லை

பிரிப்பது இயற்கை இல்லை 

சேர்ப்பதே இயற்கை

பிரிப்பது பிளப்பது

ஒழிப்பது உடைப்பது

வெளியில் இல்லை 

ஒளியே எல்லை 

உணர்ந்தால் இல்லை

எவர்க்கும் தொல்லை

Thursday, October 9, 2025

புலம்பல்

 (வில்லியம் என்றி துருமாண்டு 

"A Lament "ன் மொழி பெயர்ப்பு.)


எம் சிந்தனைகள் தேக்கும்

 தார்மீக போராட்டம்

நானும் வாழ்க்கை வெறுப்பிலே

புலம்பல் , அழுகையில்

ஆன்ம அமைதி அடைந்திட

முடியாட்சி புரியும் அந்த இளவரசனை அடிக்கடி அழை:

ஆயினும் அவன், கடுகடுப்புடன் இளிக்கும்

அரசன்,

 இழி ஏளனம், எதிர்பாரா வரம் உடையவன்

கல்லறையில் கிளைத்துள்ள ரோசாக்கள்

அலங்கரிப்பில் அழகாய் தாமதித்து 

மீளும்  களை பயிர் செய்ய வெறுப்பு 

Tuesday, October 7, 2025

உப்பிசம்

 

விழுமியங்களைத் தேடும் விழுது

விலகிய வெளிச்சம் இருண் மை கவியும்

இன்னதென்று விளங்கா இன்னல் சேரும்

சன்னல் கதவு மூடினாலும்  இண்டு இடுக்கின் வழி

சடக்கென பாயும் சந்தடி சேர்க்கும்

சொல்லில் நிற்பார் தொகை குறையும்

மணல் வீடு கதை சேர்க்கும்

ஓடோடி வந்தார் உதவி செய்தார்

பதவி காத்தார் பக்குவமாய் பல

பொருள் சேர்த்தார் உதவி ஏற்றார் 

  உதறி ஓய்ந்தார் திருப்பம் காணா

வாங்கியபோது வளைந்தார்

நெளிந்தார் சாங்கியம் போல்

வீங்கினார் விடைபெற்றார்

செய்நன்றி மறந்து செப்பமாய்

அப்பமாய் உயர்ந்தார்

உப்பிச உணர்வில் கரைந்தார்

Sunday, October 5, 2025

கன்று

 இன்று விடியல் நிலைக்குமா

நீயா? நானா?

முதிர்ந்தவர் தானே முன்னுரிமை

வாழ்வில்,  இழ வில்

குலுங்கிடும்  குலை ,சிலையாய்

தனியாள் துணையும்

தவறாமல்

சந்ததி உருவாக்கிச் செல்கிறோம்

சலிப்பின்றி சகடையில் 

இம்முறை பகடையில் 

கன்றுகள் இலக்கில்

ஆயுத அகரத்தின்  அரிவாள்

ஆட்டம் 

அணி , அணியாய் வீழும் 

உறவின்  குழவி

கண்ணீரில் கழன்று

கடைகளில் காட்சியாய்

உயிரிழந்து ஊஞ்சலில்

கொண்டாட்டத்தில் 

பூசையில் , பொல்லாத 

சடங்கில் 

அடங்கா மனிதம் ........

Saturday, October 4, 2025

இறப்பு

 

(பில் நாட்  ஆங்கிலத்தில்.

மொழியாக்கம்)


உறக்கத்தில் ஆழ்ந்திடும் பொழுது 

 மார்பில்

 குறுக்காக வைப்பேன்  எம் கைகளை

 இப்படியே வைப்பர் 

எம் கைகளை

என்னுள்ளே பறந்து செல்வது போல்

 தோன்றும்

Friday, October 3, 2025

வை

 


உற்ற வை கொற்றவை

மற்றவை கெட்டவை 

விட்ட வை பற்ற வை

கற்றவை கலக்கு வை 

 தொட்டவை துலங்குவை 

பட்டவை பார்த்தவை

பாதியில் சேர்ந்தவை

பாதையில் நீங்கிய வை 


Wednesday, October 1, 2025

அவர்களை மகிழ்விக்கிறேனா நான்?

 (ஏப்ரல் டவுன் கவிதை 

மொழியாக்கம்)


எனது புன்னகை விரிந்த தா?

எனது ஆளுமை உன் மீது 

பதிவு உண்டாக்கு மா ?.

அது நசுக்கப் பட்டாலும்


எனது பிம்பம் கிளர்ச்சியூ ட்டுமா?

அன்றி, இவை ஆய்வின் எதிர்பார்ப்பா?

என்றும் மாறக்கூடியதா

எஞ்சியவரைப் போல்  நடந்திடுவோம்

ஒருவர் முகம் அனைவரின் முகங்களாய் 


சிக்கல்

 


வெளியேறும் விழைவு 

காற்றின் இரைச்சல்

விரைந்தேன்

கதி மோட்சம் இல்லை 

இறங்கியும் இறங்காமல்

உள்ளிழுக்கும், உறுமும்

முக்கல் விசை 

வியர்வையில்

முனகல் இசை

இறங்கி விடுதலை

கெட்டு 

உள்ளிழுத்து

உறங்கும்

இருமுறை முயற்சி 

எட்டிப் போகும்

கெட்டி

சிக்கல்

மாத்திரைகளின்

கொட்டில்

மன்மதன்

 

சுடுகாடு தான் விழுங்கும்

இடுகாடு தான் அடக்கும்

சுடுகாடும் காணவில்லை

இடுகாடும் தென்படவில்லை

இரண்டும் "சாப்பிட்டான்"

 பசி அடங்கவில்லை

மனை மலைகள் 

விழுங்கிடும்

மன்மதன்

Sunday, September 28, 2025

இருக்கிறது/ இல்லை

 

(மார்கரெட் அட்வுட்,  Is/Not, கவிதையின் மொழியாக்கம்)

காதல் 

ஒரு தொழில் இல்லை 

நேர்த்தியானதோ இல்லை

 வேறொன்றும் இல்லை 


பாலியல் 

பல் மருத்துவம் இல்லை

வலி , குழி மென்மையாய்

 அடைப்பது போல்


நீ என் மருத்துவன் இல்லை 

நீ என் பிணி நீக்கி இல்லை 


எவருக்கும் இல்லை அவ்வாற்றல்

நீ வெறும் உடன் பயணி


 மருத்துவ அக்கறை விட்டு விடு

இருக்கமுறும் , கவனம் குவிக்கும்


உன் சினம், என் சினம்

உன் இசைவு  , உன் வியப்பு

தேவையில்லை


சட்டப்படி ஆக்கிட அவசியமில்லை

நோய்க்கு எதிரானது அல்ல


உனக்கு எதிரானது

அதை புரிந்து கொள்ள


 அவசியமில்லை

மாறாக துப்புரவு செய்திட அல்லது 

கொதிக்க வைத்திட 


மாறாக நிகழ்காலத்தில்

நின்றிடு 

என்று கூறு,  கூறிடு 




Friday, September 26, 2025

தாக்கு

 

உலை தாக்கு 

மலை தாக்கு 

சிலை தாக்கு

ஊர் போக்கு

உலகின்

 போக்கு

யாவும் 

கொலை தாக்கு


Monday, September 22, 2025

நன்னீர்?

 

எந் நீர் 

உமக்கு ?

குழாய் நீர்

குடி நீர் 

உவர் நீர்

கட்டணம் 

குடி நீருக்கு 

கடல் நீரும் 

கலப்பில் 

காசு ஆகுது 

உடல் நலம் 

உப்பி ல் 

வேகுது 

தண்ணீருக்கே 

தாளம் 

சுத்திகரிப்பில்

சுழன்றிடும்

காலம்

கை காசும்

கழன்றிடும்

கோலம் 

கவலையற்ற 

அதிகாரம் 

கோலோச்சும் 

Saturday, September 20, 2025

விட்டார்!

 

தொடங்கியவரே விட்டு விட்டார்

தொடர்ந்தவர்  கெட்டு விட்டார்

முழங்கியவரே முடங்கி விட்டார்

இயங்கியவரே இடிந்து விட்டார்

வளை த்தவரே வளை ந்து விட்டார்

நினைத்தவ ரே நீண்டு விட்டார்

நிலைத்தவரே நின்று விட்டார் 

Thursday, September 18, 2025

நுனி உலகம்

 

மிகு காமத்தில்  

நடு சாமத்தில் 

விளை பயிர்

ஊட்டம்

உள் ஊறும்

நாட்டம்

 அகவை கடக்கும்

அறம் பிறழ்

ஆட்டம் நிகழும்

சமூகம்

விரல் நுனி

 தீனி உலகம் 

 தூபம் போடும்

கண்டதை 

 சுவை

கலவை உணவாய்

கனவே

 இரு வேளை 

காட்சியாய்

மாட்சிமை

சமம் இழக்கும்

சந்ததி முடக்கும்

Wednesday, September 17, 2025

சேதி

 

பழக்கம் மாறுவதில்லை

பாதை  தேய வில்லை 

நெருக்கம் குறைவதில்லை

நேசம் போகவில்லை 

ஆலோசனை 

ஏற்பில்லை

பார்வை சரி

உனக்கு ஒளி

அவர் சரி 

அவருக்கான வழி

ஓராயிரம் 

ஓதி

தெளிந்த தா

 சேதி

Monday, September 15, 2025

உடைப்பு


 உடைப்பின் அரசியல்

அரசியலின் உடைப்பு 

அடைப்பு வெளியில்

அந்தரங்க சதியில் 

ஆடுகளம் அணி திரளும்

காணிகள் காவு கேட்கும்

சாமிகள் 

ஆம்! சாமிகள்

ஆசாமிகள் 

ஆட்டம் பலவிதம் 

நாட்டம் நால்வகை

ஊட்டம் சேர்ப்பு

உயரத்தில் அமர்ந்து

ஊராவது

மண்ணா வது 

உணவு!

 

உள்ளதை சொன்னால்

வலி

உண்மையை சொன்னால்

கிலி

ஊருக்கும், யாருக்கும்

கசக்கும் யாவும்

கலக்கும்

விளக்கும்

உள்ளது நல்லது

உண்மை, நன்மை

என்றோ 

ஏற்றார் இலர்

கண்டதே காட்சி

கொண்டதே கோலம்

உண்டதே உணவு