Saturday, January 26, 2019

மன நோயாளிகள்-மனித உரிமை

ஐ.நா. மன்றத்தின், உலக நல அமைப்பு, இந்தியவில் உள்ள மன நோயாளிகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் சில.உச்ச நீதி மன்றத்தின் வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உலக அளவில், அதிக எண்ணிக்கையில் மன நல பாதிப்பு உடையவர்கள் இந்தியாவில் அதிகம் என்கிறது.தேசிய மன நல கணக்கெடுப்பு- 2016 புள்ளி விவரம்.
 மக்கள் தொகையில் ஏறக்குறைய 14% விழுக்காட்டினர் ஆக்கபூர்வ மனநல மருத்துவம் தேவைப் படுபவர்களாக உள்ளனர் என்கிறது. மேலும், 2% விழுக்காட்டினர் தீவிரமான பாதிப்பில் உள்ளனர் என்கிற தரவும் அளிக்கிறது.

மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் மனநல மருத்துவச் சட்டம் 2017ன் படி, மாநில மனநல அதிகார அமைப்பு மற்றும் மனநல மீள்பார்வை வாரியம் அமைத்திடாமல் உள்ளன என்கின்ற செய்தியும், மனநல காப்பங்கள் குறித்த ஒரு வழக்கில்- உத்தரபிரதேச பதயூம் மாவட்டத்தில் உள்ள மனநோயாளிகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கொடுமை சம்பந்தமாகவும் உச்சநீதி மன்றத்தின் கவனத்திற்கு சுட்டிகாட்டப்பட்டது.

சங்கிலியால் கட்டி வைப்பது மனித உரிமை மீறிய செயலாகும், மனித கண்ணியத்திற்கு எதிரான நடவடிக்கையாகும் எனவும், கெளரவ் பன்சால் என்கின்ற வழக்கறிஞர்  மனநல நோயாளிகள் பிரச்னை தொடர்பாக  உச்சநீதி மன்றத்தில்தொடர்ந்த பொதுநல வழக்கில், உச்சநீதி மன்ற நீதிபதிகள் மாண்பமை. ஏ.கே.சிக்ரி, மற்றும் எஸ். அப்துல் நாசீர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments: