Thursday, December 25, 2025

நன்று

 

அதில் இல்லை 

இதில் இல்லை 

அதில் உண்டு 

இதில் உண்டு 

எதிலும் இல்லை 

என்றில்லை 

இரண்டும் ஒன்று 

இரண்டும் நன்று 

புலம்பல்

வில்லியம் என்ரி  டி ருமாண்ட் 
"A Lament" , கவிதையின் மொழியாக்கம்


எம் சிந்தை ஏ ற்கும் தார்மீக
போராட்டம்
நானும் வாழ்வை வெறுப்பவனே
புலம்பிடும் அழு கையுடன்
ஆன்ம அமைதி அடைந்திட
இங்கே அழை அந்த இளவரசனை
அடிக்கடி
முடியாட்சி ஆயின் அவன்
கடு கடுப்பில் 
இ ளிக்கும் அரசன்.
இழி ஏளனம் எதிர்பாரா வரம் 
கல்லறை கிளைத்திடும் 
ரோசா அலங்கரிப்பில் அழகாய் 
தாமதித்து
மீளும்  களை பயிர் செய் 
வெறுப்பு 

Monday, December 22, 2025

அன்றும், இன்றும்

 


மின் விசிறி

குளிரூட்டி விட்டகலா 

வாழ்க்கை

இங்கே!

கை விசிறி எங்கே ?

தேடிய வாழ்க்கை 

அங்கே!

சாரம் நிறை காலம் 

மின்சாரம் குறை 

அன்று !

Wednesday, December 17, 2025

வலங்கை!

 


நோய் தீர்க்கும் மருந்தா?

பணம் கொழிக்கும்

 விருந்தா?


'போக்கிலி ஆட்ட'

புதுச்சேரியில் 

போலியின்‌ ஆட்டம்‌ 

உச்சம் !

மச்சியில் உள்ளவன்

 ஏட்டில்!


'மக்கள்  நலத்தில் '

'ஒன்றுக்கு ‌மூன்று'

சீட்டாட்டம் !

உற்பத்தி !

இசைவில்லா

உருவாக்க

அதிகாரம் 

சதிகார கூட்டில் !


எல்லைகளை க் கடந்து 

எக்கிய

 தனியார் வணிகம் 

வாழ்க!

உலகளாவியம்!


குடித்த உயிர்கள் 

எத்தனை?

துடித்த உடல்கள்

 அத்தனை 


மாத்திரை தந்த 

நித்திரை !

மாநிலத்தில் 

இரும்பு த் திரை!


மருந்துக்கு விருந்தாகும் 

 வாழ்க்கை!


எதுவும் வழக்கம் போல் 

ஊடக உரலில் 


உலக்கை உடைந்து!

வலக்கை ஆட்சியில்!


இழக்காதே

 


குறை சொல்லாதே - உன் 

 கறை செல்லாதே

பொறை இழக்காதே - வளர் 

பிறை தேயாதே 

வம்பளக்காதே -உள் 

தெம்பு இழக்காதே 

Friday, December 12, 2025

கோலம்!

 


தண்ணீர்! தண்ணீர்!

தவிக்கும் மக்கள் 

கண்ணீர்!

தாகம் தீர்த்த கிணறு

மேகம் கொண்ட உறவு 

இல்லந் தோறும் வளம் 

நன்னீர் நல்கிய குளம் 

நழுவிப் போன வளம் 

நன்னீர் மையம் 

உப்பு த் தண்ணீர் கலந்தே

உவப்புடன் குடி நீர் என் றே 

குழப்பம் இன்றி கூறும்

கூடுதல் காசும் கேட்கும் 

வரி ஏற்றும் கோடுகள் 

பெற இடமில்லா வரிகள் 

தேகத்தில், தேசத்தில் 

நெறிகள் யாவும் மீறும் 

நேரிய பாதை சாயும் 

நேசம் மாறிய காலம் 

தேசம் மேலவர் 

கோலம் 

என்ன?

 


என்ன படிச்சி என்ன?

உன்ன படிச்சியா?

உள்ளத படிச்சி என்ன?

உண்மைய படிச்சியா?

சொன்னத மறந்தியா?

சொக்கித்தான் போனியா?

சொக்கட்டான் போட்டியா?

வந்தத புடிச்சியா?

வைக்கப் போரில் 

கட்டினயா?

Wednesday, December 10, 2025

வாழைக் கன்று

 

இன்று விடியல் நிலைக்குமா ?

நீயா ? நானா?

முதிர்வு 

முன்னுரிமை 

வாழ்வில், இழவில் 


குலுங்கிய குலையுடன் 

சிலையாய்

தனியாள் துணை

தவிப்பில் 

சந்ததி உருவாக்கி 

 சலிப்பின் பயணம் 

சகடையில்


இம்முறை ,  

பகடை இலக்கில் 

கன்றுகள் 

ஆயுத சுரம்    

அரிவாள் ஆட்டம்

 

அணி அணியாய்

வீழும் 

உறவில் 

உழன்ற 

 கனவின் 

கன்றுகள் 

கடைகளில் காட்சியாய்

உயிரிழந்த ஊஞ்சலில் 

கொலையுண்ட

 குழவியாய் 


கொண்டாட்டத்தில்

 மனிதம்

பூசையில் 

புளகாங்கிதம் 

பொல்லாத சடங்கின்

சதி

ஆண்டு தோறும் 

கல்லா கவர்ச்சியில்

Saturday, November 29, 2025

நேற்றிரவு கோழிக் குஞ்சுகள்

 ("சேக் பிரிளுட்சுகி" ஆங்கில கவிதை 

 "Last Night I Dreamed of Chickens"

மொழியாக்கம்)


நேற்றிரவு  

கனாக் கண்டேன்  

எங்கெங்கு காணினும்

கோழிக் குஞ்சுகள் 

 வயிற்றின் மீது 

தலை முடி கூடாக

தலையணை மீதமர்ந்து

 தத்தி, தத்தி , தலை மேல்

சிறகுகள் கோதி 

 படுக்கை அருகே

 ஓடியாடி


நாற்காலிகள், மேசை மேல் ,

தொங்கும் சர விளக்கில்,

மூலைகளில் ஓய்வாய் குந்தி ,

என்  செவிகளில்

மென் குரல் எழுப்பி,

கோழிக் குஞ்சுகள், கோழிக் குஞ்சுகள்,

 கோழிக் குஞ்சுகள் , எங்கெங்கும் .......

நான் காணும்  தொலைவு வரை 

துயில் எழுந்து கண்டேன்

 இன்று 

என் மீது முட்டைகள் 


Monday, November 24, 2025

வெட்கமில்லையா நமக்கு?

 Isn't that shameful for us ?

Ayyappa Paniker,  கவிதை 

 மொழியாக்கம்


இரவில் அடுக்களையில்

வைத்திருப்பாய் சிறிதளவு

உணவு


ஒரு வேளை

அக் கள்வன் வந்திருந்தால்

பசியுடன்

உணவு காணாது

சினம் கொள்வான்

கடந்திருப்பான்

களவாடாது


அது நமக்கு வெட்கமில்லையா?

Thursday, November 20, 2025

நாங்கள் அகதிகள்



(" We Refugees" , பெஞ்சமின் செபெனியா,

மொழியாக்கம்)

இசை ஊரில் இருந்து

 நான்

 பாடல் நிகழ்ச்சி

 படப்பிடிப்பில்

உடன் பிறப்பு  

வ தையின் பிடியில்

ஆயினும்  அவர் 

எம் நிலத்தில்


எழில் கொஞ்சும் ஊரில் இருந்து

 நான் 

மேனியின் நிறம் வெறுக்கும்

 மக்கள் 

அங்கே

நான் வழிபடும் முறை

 விரும்பார் 

விடுதலைக் கவிதை

 தடை செய்வார்

Sunday, November 16, 2025

இன்றிரவு உறங்கும் யாவரும்

 "All you who sleep tonight", Vikram Seth 

கவிதையின் மொழியாக்கம்.


இன்றிரவு உறங்கும் யாவரும் 

விரும்பியவரை விட்டு விலகி 

வெகு தொலைவில்

இடமோ, வலமோ யாரும் இல்லை 

வெறுமை மேலே _


அறிவீர் நீங்கள் யாரும் தனியே இல்லை 

இவ்வுலகு  உம் துக்கத்தை பகிர்ந்து

 கொள்ளும்

சிலர் ஓர் இரவு அன்றி ஈர் இரவு

மேற் சிலர் காலம் முழுவதும் 

Thursday, November 13, 2025

மூவுலகிலும்....

 

இருப்பதை இடி !

பறப்பதை பிடி!


நினைத்ததை முடி!

மறந்ததை படி!


சொன்னதை மற !

மறந்ததை நினை!


பிறந்தது மறை !

சேர்ந்தது திரை !


பிடிப்பது உரை !

முடிப்பது சிறை!


முன்னேற்ற

 தடை!

மூவுலகிலும் கறை......



Tuesday, November 4, 2025

நீயும் வந்தாய்

 

நிக்கி ஜியோவென்னி

"You came,too"- மொழியாக்கம்.


நண்பர்களைத் தேடி  கும்பலில் நான்

அன்பைத் தேடி கும்பலில் நான் 

புரிதலுக்காக கும்பலில் நான் 


கண்டேன் உன்னை


அழுவதற்காய் கும்பலில் நான் 

நகைப்பதற்காய் கும்பலில் நான் 


என் கண்ணீரை வற்ற வைத்தாய் நீ

Tuesday, October 28, 2025

அடி

 


எழுது,எழுது

எழுத, எழுத நீங்கும் 

பழுது 


படி, படி

படியாய் படி

படிப்படி விலகும்

மடி 

Monday, October 27, 2025

முதுமையில் காதலர்

 (Lovers in old age, கவிதை, 

காலின் அயன் செப்ரி , 

மொழியாக்கம்)



முதுமை ,  உணர்ச்சி ஓட்டம் குறைக்கும்

குருதி சூடாவதில்லை

நினைவும், கனவும் ஏங்கி  காத்திருக்கும் பொழுது 

அம்மண உடல்கள் ஒன்றாய் இணை பொற்காலம் அவை

அன்பு, முத்தம், தழுவல், உணர்ச்சி, எழுச்சி , விருந்தில் புலப்படும் பொழுது

பருவ நிலை இன்பங்கள் பகிர்ந்து உம்மோடு ,

என் அன்பே!

காலங்கள்  விஞ்சவில்லை ,உணர்ச்சி ஆளுமை நாட்களில்

காதல் செய்தோம், சமயம் நேரும் போதெல்லாம், தனிமையில்

ஒன்றிணைய தேவையற்ற இப்பொழுது, குருதி பந்தய விசையில் இல்லை

இரவு வணக்கம் முத்தத்துடன் முடியும், விருப்ப வெளிப்பாட்டுடன்

இரவின் அமைதியில் துயில்வோம்

காலை விழிப்பில் முத்தத்துடன் மீண்டு.


Saturday, October 25, 2025

அது !

 

படிப்பது, நடிப்பது 

நடிப்பது, படிப்பது

துடிப்பது, துவல்வது 

முடிப்பது, முயல்வது

வெடிப்பது, வெம்புவது 

தொடுப்பது, தோற்பது

கொடுப்பது, எடுப்பது

எடுப்பது, ஏற்பது

விடுப்பது, வீழ்வது 

Friday, October 24, 2025

காமமும், ஞானமும்


(முனைவர்.அந்தோணி தியோடர்.

மொழி பெயர்ப்பு கவிதை.)


பாலியல் அம்ச இ யங்கா நிலை 

என்றாகிலும்  சிந்தித்தது உண்டா?

 நீ

பாலியல் காதல் 

ஆன்மிக புலம்,

விந்தை வசீகரம்

  புத்தொளி

அளி

 ஆய்வு செய்

Thursday, October 16, 2025

ஈடு உண்டா?

 

மருந்து உற்பத்தி

மனசாட்சி விற்பனை

இருமல் மருந்து 

பிஞ்சுகளின்

இறுதி மருந்தானேதே!

 மத்திய பகுதியில் 

இராசசுத்தானில் 

அறம் பிறழ் வணிகம்

பொருள் குவி வேகம்

ஆய்வு எங்கே?

சாய்ந்ததா?

தரம், கட்டுப்பாடு 

சமரசம் ஆனதா?

உயிர் இழப்பிற்கு

ஈடு 

உண்டா?



Tuesday, October 14, 2025

இன்றிரவு உறங்கும் அனைவருக்கும்

 (விக்ரம் சேத் கவிதை , "All you who sleep tonight", மொழி பெயர்ப்பு)


நீங்கள் அனைவரும் உ றங்குங்கள்

விரும்பியவரை விட்டு விலகி வெகு தொலைவில்

இடது பக்கமோ , வலது பக்கமோ யாரும் இல்லை 

வெறுமை மேலே


நீங்கள் யாரும் தனியாக இல்லை அறிவீர்

முழு உலகும் உமது கண்ணீரில் பங்கு கொள்ளும்

சிலர் இரண்டு இரவுகள் ,அன்றி ஓர் இரவு 

சிலர் அவர்கள் காலம் முழுவதும் 

Monday, October 13, 2025

வாழும் நரகம்



 ( டோர் சே பேக்கர்,  Living Hell,  மொழி பெயர்ப்பு)

உலகம்

 ஒரு கொடுங் கனவு ஆயின்

அது 

ஒரு வாழும் நரகம் ஆகும் 

உலகம் 

கொடுங் கனவு ஆயின் 

உனக்கு 

நன்கு விளங்கும்

அது ஒரு நரகம் 

உம் முகத்தின் 

மீது தவழும் 

நகையாகும் 

Friday, October 10, 2025

எவர்க்கும்

 

வகுப்பும் வாதமும்

தொகுப்பு வேதமும்

தொடர் பேதமும்

வளர்ந்தான் இல்லை

வளைந்தான் இல்லை

உணர்ந்தான் இல்லை

உயர்ந்தான் இல்லை

உள் அளவில்

உள் உணர்வில்

சேர்ந்தான் இல்லை

வாழ்ந்தான் இல்லை

பிரிப்பது இயற்கை இல்லை 

சேர்ப்பதே இயற்கை

பிரிப்பது பிளப்பது

ஒழிப்பது உடைப்பது

வெளியில் இல்லை 

ஒளியே எல்லை 

உணர்ந்தால் இல்லை

எவர்க்கும் தொல்லை

Thursday, October 9, 2025

புலம்பல்

 (வில்லியம் என்றி துருமாண்டு 

"A Lament "ன் மொழி பெயர்ப்பு.)


எம் சிந்தனைகள் தேக்கும்

 தார்மீக போராட்டம்

நானும் வாழ்க்கை வெறுப்பிலே

புலம்பல் , அழுகையில்

ஆன்ம அமைதி அடைந்திட

முடியாட்சி புரியும் அந்த இளவரசனை அடிக்கடி அழை:

ஆயினும் அவன், கடுகடுப்புடன் இளிக்கும்

அரசன்,

 இழி ஏளனம், எதிர்பாரா வரம் உடையவன்

கல்லறையில் கிளைத்துள்ள ரோசாக்கள்

அலங்கரிப்பில் அழகாய் தாமதித்து 

மீளும்  களை பயிர் செய்ய வெறுப்பு 

Tuesday, October 7, 2025

உப்பிசம்

 

விழுமியங்களைத் தேடும் விழுது

விலகிய வெளிச்சம் இருண் மை கவியும்

இன்னதென்று விளங்கா இன்னல் சேரும்

சன்னல் கதவு மூடினாலும்  இண்டு இடுக்கின் வழி

சடக்கென பாயும் சந்தடி சேர்க்கும்

சொல்லில் நிற்பார் தொகை குறையும்

மணல் வீடு கதை சேர்க்கும்

ஓடோடி வந்தார் உதவி செய்தார்

பதவி காத்தார் பக்குவமாய் பல

பொருள் சேர்த்தார் உதவி ஏற்றார் 

  உதறி ஓய்ந்தார் திருப்பம் காணா

வாங்கியபோது வளைந்தார்

நெளிந்தார் சாங்கியம் போல்

வீங்கினார் விடைபெற்றார்

செய்நன்றி மறந்து செப்பமாய்

அப்பமாய் உயர்ந்தார்

உப்பிச உணர்வில் கரைந்தார்

Sunday, October 5, 2025

கன்று

 இன்று விடியல் நிலைக்குமா

நீயா? நானா?

முதிர்ந்தவர் தானே முன்னுரிமை

வாழ்வில்,  இழ வில்

குலுங்கிடும்  குலை ,சிலையாய்

தனியாள் துணையும்

தவறாமல்

சந்ததி உருவாக்கிச் செல்கிறோம்

சலிப்பின்றி சகடையில் 

இம்முறை பகடையில் 

கன்றுகள் இலக்கில்

ஆயுத அகரத்தின்  அரிவாள்

ஆட்டம் 

அணி , அணியாய் வீழும் 

உறவின்  குழவி

கண்ணீரில் கழன்று

கடைகளில் காட்சியாய்

உயிரிழந்து ஊஞ்சலில்

கொண்டாட்டத்தில் 

பூசையில் , பொல்லாத 

சடங்கில் 

அடங்கா மனிதம் ........

Saturday, October 4, 2025

இறப்பு

 

(பில் நாட்  ஆங்கிலத்தில்.

மொழியாக்கம்)


உறக்கத்தில் ஆழ்ந்திடும் பொழுது 

 மார்பில்

 குறுக்காக வைப்பேன்  எம் கைகளை

 இப்படியே வைப்பர் 

எம் கைகளை

என்னுள்ளே பறந்து செல்வது போல்

 தோன்றும்

Friday, October 3, 2025

வை

 


உற்ற வை கொற்றவை

மற்றவை கெட்டவை 

விட்ட வை பற்ற வை

கற்றவை கலக்கு வை 

 தொட்டவை துலங்குவை 

பட்டவை பார்த்தவை

பாதியில் சேர்ந்தவை

பாதையில் நீங்கிய வை 


Wednesday, October 1, 2025

அவர்களை மகிழ்விக்கிறேனா நான்?

 (ஏப்ரல் டவுன் கவிதை 

மொழியாக்கம்)


எனது புன்னகை விரிந்த தா?

எனது ஆளுமை உன் மீது 

பதிவு உண்டாக்கு மா ?.

அது நசுக்கப் பட்டாலும்


எனது பிம்பம் கிளர்ச்சியூ ட்டுமா?

அன்றி, இவை ஆய்வின் எதிர்பார்ப்பா?

என்றும் மாறக்கூடியதா

எஞ்சியவரைப் போல்  நடந்திடுவோம்

ஒருவர் முகம் அனைவரின் முகங்களாய் 


சிக்கல்

 


வெளியேறும் விழைவு 

காற்றின் இரைச்சல்

விரைந்தேன்

கதி மோட்சம் இல்லை 

இறங்கியும் இறங்காமல்

உள்ளிழுக்கும், உறுமும்

முக்கல் விசை 

வியர்வையில்

முனகல் இசை

இறங்கி விடுதலை

கெட்டு 

உள்ளிழுத்து

உறங்கும்

இருமுறை முயற்சி 

எட்டிப் போகும்

கெட்டி

சிக்கல்

மாத்திரைகளின்

கொட்டில்

மன்மதன்

 

சுடுகாடு தான் விழுங்கும்

இடுகாடு தான் அடக்கும்

சுடுகாடும் காணவில்லை

இடுகாடும் தென்படவில்லை

இரண்டும் "சாப்பிட்டான்"

 பசி அடங்கவில்லை

மனை மலைகள் 

விழுங்கிடும்

மன்மதன்