Wednesday, February 14, 2007

மீறல்...

நரிமேடு!
நல்லமேடு!
நம்மவரின்
சுடுகாடு.

ஊருக்குபக்கமாக,
மரங்கள்,வாய்க்கால்,
கழனிகளுக்கு
மத்தியில்
உயரமான மேடு.


கோழி 'கொம்பா',
கத்திகட்டி,

கட்சிகட்டி,
வாரத்தில்
கண்கொள்ளாக் காட்சி,
பொழுது போக்கு

மறைந்த காட்சி.

மேடும் இல்லை
கோடும் இல்லை
மரங்களும்,
கழனிகளும்,
வாய்க்காலும்,வரப்பும்
இல்லை.


நரியும் நாயும்,
ஊர்வ்ன, பரப்பன ,
சுவடு இல்லை,
சுறு சுறுப்பான
மனித முயற்சியில்.


வீதிகளூம் வீடுகளும்
கழிவு நீர் வாய்க்கால்களும்
எச்சமாய்


மீறல்
அழுத்தமாக
....

1 comment:

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்புத் தோழருக்கு,

தங்களின் நரிமேடு பற்றிய மீறல் கவிதைப் படித்தேன்.

பழைய நினைவு திரும்பியது.

கழனியாக இருந்த காலம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் அம்மாவுடன் பிறந்த தாய் மாமா அங்கு ஒரு வீடு கட்டினார். எனக்கு அப்போது வயது 12-க்கும் குறைவாக இருக்கும். சுற்றிலும் பசுமையான வயல். கிராமத்திலிருந்து வந்து, அங்கு வீடு கட்டுவதை பெருமையாகவே நினைத்தேன். இப்போது எண்ணினால் மனது பதறுகிறது.

காலம் கடந்த பதற்றம்.

போனது போகட்டும். இருப்பதையாவது காப்பாற்றுவோம்.