Thursday, September 6, 2007

"நிறுவனமாக்கப்படும் வதை மற்றும் மோதலுக்கு பிந்திய சூழ்நிலை- பஞ்சாப் படிப்பினைகள்"-1

இந்தியா, காவல்துறை, மக்கள்:
*****************************************
காலனியாதிக்க ஆங்கிலேய அரசு, இந்திய மக்களை ஒடுக்குவதற்கு வசதியாக, சட்டத்தின் வழி, எழுத்திலும் உணர்விலும் நியாயப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்திய காவல் துறை சட்டம் 1861 ஐ, இந்நாடு மரபுரிமையாக பெற்றுள்ளது.

60 ஆண்டு விடுதலைக்குப் பின்னும், இந்திய காவல்துறைச் சட்டம் ஊழல்மிக்க, திறமையற்ற, உணர்வற்ற, அதிகார பசி அடங்காத, அரசியல் வாதிகள், சட்டம் இயற்றுபவர்கள், அதிகாரிகள் ஆகியோர் செல்வாக்கின் கீழ், பெரும்பாலும் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

வெகுமக்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் மீது, ஒடுக்குமுறை வடிவமான காவல்துறையை பயன்படுத்த வாய்ப்பு அளித்து வருகிறது. இதன் வழி, இந்திய சனநாயகத்தின் குறைபாடுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. பொதுமக்கள், காவல்துறை ஆகியோருக்கிடையில் இடையில் ஓர் இணக்கமான, ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த முடியவில்லை.

காவல்துறையானது, தொடர்ச்சியாக தனது செயல்பாட்டில் பாகுபாடு காட்டுதல்; ஊழல் செய்தல்; அரசியல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது; ஏதும் அறியாதவர்களை துன்புறுத்துவது; ஏழைகள், கல்வி அறிவில்லாதவர்கள் மற்றும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரை துன்புறுத்தியும் வருகிறது.

காலனியாதிக்கத்திற்கு பிந்தைய இந்திய காவல் துறையானது; வளர்ந்துவரும் சனநாயகத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும்; பொதுமக்கள் விழிப்புணர்விற்கு; மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய கேட்புகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நிலையை இழந்துள்ளது.

காவல்துறையின் இரக்கமின்மை; முன் முயற்சியின்மை மற்றும் பொதுமக்கள் நல்வாழ்வு; பொதுமக்கள் கருத்து ஆகியவற்றிற்கு மதிப்பளிக்காத போக்கு; கொடுங்கொன்மை; சித்ரவதை; மேலதிகார போக்கு; மனித உரிமை மீறல்கள்; காவல் சாவுகள் ஆகியவை அரசாங்கத்திடமிருந்து எவ்வித துலக்க உணர்வையும் அளிக்கவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை மூன்று கால கட்டமாக பகுத்து விவாதிக்கலாம்:

*இந்திய விடுதலைக்கு பிந்தைய கால கட்டம்
*தீவிரவாதத்திற்கு முந்தைய நிலைமை
*தீவிரவாத கால கட்டம்
*தீவிரவாதத்திற்கு பிந்தைய கால கட்டம்

இந்திய விடுதலைக்குப் பிந்தைய கால கட்டத்தில், மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் சித்ரவதை, காவல் சாவுகள் குறைவாகவே இருந்தன. அந்த காலக் கட்டத்தில் நேர்மையான, அர்பணிப்பான, ஈடுபாடு உள்ள அரசியல் வாதிகள், அதிகாரிகள் இருந்தனர். மேலும் அவர்கள் பிரிட்டிசு ஆட்சியின் கீழ் கொடுமைகளை சந்தித்தவர்கள்.

தீவிரவாதத்திற்கு முந்தைய நிலைமையில், சித்ரவதை, காவல் சாவுகள் படிப்படியாக, நக்சல்பாரிகளை ஒடுக்கும் பெயரில் அதிகரித்தது. பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் சம்பவமாக ஆகியது.

தீவிரவாத காலக்கட்டம் ஆன 1980 லிருந்து 90 வரை, மனித உரிமை மீறல்கள் அதிகரித்தன. காவல்துறையின் கொடூரமும், காவல் சாவுகள், போலி மோதல் அதிகரிப்பு நீதிமன்றத்திற்கு புறம்பான கொலைகள், குற்றம் சாற்றப்பட்டவர்கள் காணாமல் போவது, ஆகியவை மிகவும் அதிகரித்தன.

காரணம், இவ்வகையான மீறல்களுக்கு பொறுப்பான காவல் துறையினர் எவரும் நீதியின் ஆளுகைக்குள் கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாக, காவல் துறை அதிகாரிகள், எவ்வித பாதிப்பும் அடையாமல் மனித உரிமை மீறல்களை தாங்கள் செய்ய முடியும் என நம்பினார்கள்.

அடுத்த முக்கியமான காரணம் குற்றவியல் நீதி அமைப்பு நொறுங்கிப் போனதும் ஆகும். காவல் சாவுகள் சம்பந்தமாக உடல் பரிசோதனை சுயேச்சையான விசாரணைக்குப் பின் செய்வதை விடுத்து, காவல் துறையே அதனை ஏற்பாடு செய்தது. தகனம் செய்வது உட்பட காவல் துறையே மேற்கொண்டது அடுத்த காரணங்கள் ஆகும். காணாமல் போவது என்பதும் அதிகரித்தது.

பத்தாண்டுகளில், வன்முறையில் 10000, பொது மக்கள் காணாமல் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் எவ்வித விசாரணையும் இல்லாமல் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமலும், விசாரணை நடத்தப்படாமலும் துன்புறுத்தப் பட்டனர். வதையானது எவ்வித தடையும் இல்லாமல், காவல் துறையால் மேற்கொள்ளப் பட்டது. அதன் காரணமாக, காவல் துறை உத்தியோக மற்றும் விசாரணை ஆற்றல் கரைந்து போனது.

தீவிரவாதத்திற்கு பிந்தைய காலக் கட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. பஞ்சாப் காவல்துறை, தீவிரவாதத்தை எதிர்த்த காலக் கட்டத்தில் மீறல்கள் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, அந்த போக்கிலேயே, தனது காவல் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியது.இதன் காரணமாக, தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஊழலுக்கு ஆட்பட்டு திளைத்து வந்துள்ளனர்.

2002, பிப்ரவரி மாநிலத் தேர்தலுக்கு பிறகு, நீதித்துறை பற்றிய உரையாடல், மனித உரிமைகள் மற்றும் காவல்துறை மீறல்கள், காவல் துறையின் பொறுப்பு, குறித்த விவாதங்கள் அரசியல் அரங்கில் இருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.

மார்ச்1, 2002ல், 'ட்ரிபியுன்' இதழில், மாநிலத்தின் முதல்வர், "கடந்த கால நிகழ்வை மறப்போம், எதிர் காலத்தை நினைப்போம்" என்றும், "அரசு, காவல்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை சந்திக்கும், தீவிரவாதத்தை எதிர்த்து போராடிய அவர்களை குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுவிக்கும்" என்றும் கூறினார்.

இத்தகைய அரசின் போக்குகள், "காவல் சக்தியின்" மீது, அரசாங்கத்திற்கு உள்ள செல்வாக்கை வலுவாக எண்பிக்கிறது. கட்சி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியல் எதிரிகளை இனங் கண்டு, ஒடுக்குவதற்கு உதவியாக செயல்படுகிறது. மட்டுமின்றி, காவல்துறையின் மூர்க்கத்தனத்தை ஒரு நிறுவனமாக்கி உள்ளது.

2 comments:

மாசிலா said...

சமுதாய நலன் மீது அக்கறை கொண்ட ஒரு மிக நல்ல விழிப்புணர்வு பதிவு முத்துக்கண்ணு.

இவர்கள் படிக்கும் பயிற்சி எடுக்கும் பாடசாலைகள் பல்கலைகழகங்களில் இவர்களுக்கு என்ன சொல்லி கற்றுத் தருகிறார்களோ!

200 வருட அடிமைத்தனம் இரத்தத்தின் கடைசி அணு வரை ஊறிவிட்டதால், அதில் இருந்து மீண்டவர தெரியாமல் இந்திய முழு சமுதாயமும் திண்டாடுகின்றது.

காவல்துறை என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு, மக்களை துன்புறுத்துவதிலும் அநியாயம் அட்டூழியம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

மக்களிடம் நெருங்கிய உறவினர்களைப்போல் இருந்து ஆபத்து அவசர காலங்களில் உதவ வேண்டிய காவல்துறை எல்லாவற்றையும் தலைகீழாகவே செய்கிறது.

அனைத்து காவல்துறையினரும் கெட்டவர்கள் இல்லைதான். இதிலும் சில நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால், இந்த துணிச்சலான சில நல்லவர்களை ஏனைய காழ்ப்புணர்ச்சி, சூழ்ச்சிகார கூட்டங்கள் விட்டுவைப்பதில்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை.

சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆகியும் காவல்துறை மாறாமல் இருப்பது சரியல்ல. ஆதி அந்தம் முதல் இன்றைய நவீன புதிய ஜனநாயக முறைக்கேற்ப அனைத்து மட்டத்திலும் முழு சீர்திருத்தங்கள் தேவை.

நடுவன், மாநில அரசுகள் உடனடியாக இதற்கு ஆவன செய்தல் அவசியம்.

பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

முத்துக்கண்ணு said...

அன்புள்ளத் தோழருக்கு, தங்கள் கருத்துரைக்கு நன்றி.

மேலும் சில செய்திகள், இடுகையில் இடம் பெறும்.

முத்துக்கண்ணு