Sunday, March 18, 2018

காடழியின் நாடழியும்!

(இலக்கியச் சோலை இலக்கிய மன்ற கவியரங்கம், 17.03.2018ல் 'செகா' கலைக் கூடத்தில் நடைபெற்றது. அப்போது அளித்த கவிதை.)

காடழியின் நாடழியும்!

காடை அழித்தான்! கழனி அளித்தான்!
மேட்டை அழித்தான்! தோட்டம் அமைத்தான்!
நோட்டம் பார்த்தான்! அணைகள் எழுப்பினான்!
அழிவின் தொடர் அயராது நீட்டினான்!

பசி அடங்கா பெருவணிகக் காலடியில்;
கான் நலன்கள்,கனிம வளங்கள், உயிரினங்கள்.
தோண்டியதைத் தாண்டியும் துடைத்தெடுத்தான்,
துரித உணவு அங்காடி போல்;
துயரம் சேர்த்தான்.

மலைமக்கள் ஆதாரம் அழித்தான்,
அவரின் அடையாளம் சிதைத்தான்;
நவீன 'தலிபான்' ஆக.

நீண்டிடும், 'தேரி', 'நர்மதை', வரிசை
நித்திலத்தில் இறக்கி, அதிர்ந்திடும்;
சூழல் பன்மயக் கேடுகள்.
சூழ்ந்திடும் அழிவின் கோடுகள்!

1 comment:

Neechalkaran said...

உங்களது பக்கத்தைத் திறந்தால் http://neocounter.neoworx-blog-tools.net என்ற தளத்திற்கு வழிமாற்றப்படுகிறது. இதனால் உங்களைத் தளத்தை மற்றவர்கள் படிப்பதில் சிக்கல் நிலவும்.


உங்களது Blog Archive பகுதிக்கு அடுத்ததாக உள்ள counter விஜெட்டை நீக்கினால் இந்தச் சிக்கல் தீரும்.